அசஞ்சிகை4
Goals ---- தாம் படிக்கவியலாத படிப்புகளை, தாம் அடைய முடியாத பதவி, வேலைகளைத் தங்கள் பிள்ளைகள் எப்படியேனும் அடைந்தே ஆக வேண்டுமென ப்ரெஷர் போட்டது முந்திஜ ஜென் பெற்றோர்கள். தற்போது சோமீயின் தயவினால் ஒரு மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. தாம் அடைய முடியாத (15 நிமிடப்) புகழைத் தாம் பெற்றதுகள் (மூலமாக) அடைந்துவிட எல்லாக் கொரங்காட்டித் தனங்களையும் செய்ய வைக்கின்றன இந்த ஜென் பெற்றோர்கள். எங்கு போய் முட்டுமோ தெரியவில்லை. ---- அவ்ளதான் வாழ்க்க. ----- இன்றைக்கு ஒரு மீட்டிங். நாம் பணி செய்யும் கடையின் ஓனரோடு. அடுத்தடுத்த மீட்டிங்குகளால் ஒன்றை முடித்து அடுத்த ரூமுக்குச் செல்ல சில நிமிடத்தாமதங்கள் ஏற்படும். டீமாக லேட்டாக நுழைகையில் சாரி ஃபார் தி டிலே என்றோம். அதற்கு பதிலளிக்கும் வகையில் யூ கேன் சே தாங்ஸ் ஃபார் யுவர் பேஷன்ஸ் இன்ஸ்டெட் என்றார். ஏனெனக் கேட்டதற்கு, தட் சௌண்ட்ஸ் மோர் பாசிடிவ் தேன் சேயிங் சாரி என்றார். அலுவலகங்களில் பேசும்போதும் மெயில் தட்டும்போதும் கடைபிடிக்கக்கூடிய alternate phrasesகள் குறித்து என்றோ எங்கோ ஒரு ஃபார்வர்ட் போஸ்ட் படித்தது நினைவுக்கு வந்தது. ஒரு சொல், அணுகுமுறையை, சிந்தனையை, ச