அதான?

FADE IN 


Morning



ரதீஷ் கையில் க்ரீட்டிங் கார்ட். (ஃபோகஸ் கார்டில் இருக்கவேண்டும். பின்னே அஜானா நடந்து வருவது அவுட் ஆப் போகசில் மங்கலாக ஃப்ரேமில் வர வேண்டும்)


பிறகு ஃபோகஸ் அஜானாவுக்கு மாற, அஜானா கொஞ்சம் குழப்பம் & “அய்யோ மறுபடியும் இவனாலுக்கை வெளிப்படுத்தி மெதுவாக நடந்து வர வேண்டும்.


————


ரதீஷ் விறுவிறுவென அவளிடம் நடந்து கார்டை நீட்ட வேண்டும்.


ரதீஷ் முகத்துக்கு க்ளோசப் - எதிர்பார்ப்பு & ஏத்துக்கோயேன் லுக்.


————


வெடுக்கென அதைப்பிடுங்கி கிழித்துப்போட்டுவிட்டு நடந்துவிடுகிறாள்.


FADE OUT


———————————————————


FADE IN


Morning


பேப்பரில் பெரிய கவிதை ஒன்றை எழுதி அஜானா வரும் வழியில் (அதே லொகேஷன்) தயாராய் வைத்திருக்கிறான் (பேப்பரின் மேல் பக்திக்காக மஞ்சள் குங்குமம். பிள்ளையார் சுழி, சிலுவை, பிறையோடு கவிதை ஆரம்பிக்கிறது.)


பேப்பரை மடிக்க, அஜானா தூரத்தில் வருவது ஃப்ரேமில் வருகிறது.


ரதீஷைக்கண்டதும் கொஞ்சம் கோபத்தோடு சற்றே வேகமாக நடந்து வருகிறாள். 

அவளிடம் இவன் கவிதையை நீட்ட, வாங்கிப்படித்துப்பார்க்காமல் கிழித்து வீசுகிறாள். அவள் நடந்து செல்ல, சோகத்தோடு (தன்) கீழுதட்டை ரதீஷ் கடிக்க, FADE OUT

———————


FADE IN

ரதீஷின் நண்பன் என்னடா சோகமா இருக்க எனக்கேட்க, ஒரு flashல் நடந்ததைச் சொல்கிறான்.


நண்பன், “நாளைக்கு ஒன்னு பண்ணுஎன சொல்கிறான். ஆடியோ ம்யூட் செய்யப்படுகிறது.


FADE OUT


———————-

FADE IN


தூரத்தில் அஜானா நடந்து வர, ரதீஷ் முன்னே நிற்கிறான். அவளைக்கண்டதும் தாளில் எதோ எழுதுகிறான். 


எழுதி முடித்ததும், “எப்புடியும் இதையும் கிழிக்கத்தான போறஎன்ற சலிப்பு expressionனோடு பேப்பரைக்கசக்கி, கீழே போட்டு விட்டு நடந்து போய் விடுகின்றான்.


(கசங்கி விழும் பேப்பருக்கு ஒரு க்ளோசப்)


நடந்து வரும் அஜானா, அந்த பேப்பரை தயக்கத்துடன் கடக்கிறாள். நடந்தவள், பின்னே வந்து, பேப்பரை எடுக்கிறாள். (நடக்கும் கால், பேப்பர் & கைக்கு க்ளோசப்)


குழப்பத்தோடு பேப்பரைப் பிரிக்கிறாள், அந்த பேப்பரில், “அப்ப இது லவ் தான?” என எழுதியிருக்கிறது.



50கிராம் வெட்கம் + 50 கிராம் அடங்கொன்னியா + 50 கிராம் புன்முறுவல் அஜானா முகத்தில்.


FADE OUT


————


The End.



Comments