Posts

Showing posts with the label pencil

பென்சில்

டுடே டைனா டுமாரோ டெபனட்லி டைரிமில்க் போல, தீபாவளி என்றால் நிச்சயம் 'இது' இருக்கும். 95களின் ஒரு தீபாவளி. நான் 73% அகிம்சாவாதி என்பதால் நமீதாத்தன கரடு முரடு டப்பாஸ்களைத்தவிர்த்து மென்மையான, தன்மையான லஷ்மிமேன வகையறாவான மத்தாப்பு, சங்குசக்கரம், சாட்டை மற்றும் பென்சில்களை வாங்கினேன். முதலிரவு நடக்கும்போது இருப்பதை விட நாளை நமக்கு முதலிரவு நடக்கப்போகுது எனும்போது ஒரு கிளுகிளுப்பு வருமே (அதாவது... வருமாமே (எனக்குத்தெரியாது, சிலர் சொல்லக்கேட்டிருக்கிறேன்)). அதுபோன்றொரு ஜில்பான்ஸ் ஃபீல் தீபாவளி நெருங்குவதை நினைத்து எனக்கிருந்தது. தீபாவளியன்று திணறத்திணற வெடி கொளுத்தினோம். மறுநாள். அப்பா வெளியே சென்றிருக்க, தங்கை super marioவின் ராணியை காப்பாற்றிக்கொண்டிருக்க, அம்மா மதியத்தூக்கம் போட, கலாம் பிறந்த மண்ணிலிருந்து 170கிமீ தள்ளிப்பிறந்த ஒரு குலாம் ரகசிய ஆராய்ச்சியிலிருந்தார். முன்தினம் சிலபல பென்சில் வெடிகள் செல்ஃப் எடுக்காததால் வீசப்பட்டிருந்தன. அப்பாவின் காசு இப்படி கரியாய்ப்போய்விடக்கூடாதே என்ற நல்லெண்ணத்தில் பென்சில்களைப்பொறுக்கி அதிலுள்ள மருந்தை ஒரு தாளில் கொட்டினேன். கோபுரம் பூசு