Posts

Showing posts from January, 2022

சிலுக்கு சுப்ரமணி

Image
 1 ஒருத்தன் எப்ப ஒரு தலைவன் / influenceசன் ஆகறான்னா, அவங்கிட்ட இருக்க டேட்டா, அவனோட techniques & strategies அப்பறம் அவன் எடுக்கற decisions, முடிவா, அவனோட அந்த மொத்தத் தெறமையினால மத்தவங்களுக்குக் கெடைக்கற பெனிஃபிட்ஸ்.   சாதா சுப்ரமணியா இருந்து, பின்னாள்ல சிலுக்கு சுப்ரமணியான என் க்லாஸ்மேட் எஸ். சுப்ரமணி, இப்ப யோசிச்சுப்பாத்தா ஒரு தலைவனா வாழ்ந்துருக்கான்னு தோணுது.   சின்ன வயசுல இருந்து ஒரே ஸ்கூல்ல ஒன்னா படிக்கறதுல நெறய நன்மைகள் இருக்குது. ஆனா அந்த நன்மைகள் என்னென்னனு எனக்குத் தெரியாது. ஏன்னா எங்கப்பாவோட வேலையின் காரணமா, ‘இதோ இந்த ஸ்கூல் தான் நம்ம வாழ்க்கையின் திருப்புமுனையாகப் போவுது, இந்த friends தான் இனி வாழ்க்க முழுக்க நம்மகூட வரப்போறவங்க’னு நான் நம்ப ஆரமிச்ச ரெண்டாவது நாள்ல (அதிக பட்சம் மூனே முக்கா நாள்) அப்பா வந்து, “ட்ரான்ஸ்ஃபர் ஆகிருச்சு, வேற ஊருக்குப் போறோம்”னுடுவார்.   ‘போறதுதான் போற நீ மட்டும் போயேன்யா, எங்களையும் ஏன் பொதிகளுதையா இழுத்துட்டுப் போற?’ என்ற கேள்விக்கு, ‘ங்கொம்மாளுக்கு எம்மேல இருக்க நம்பிக்க அப்பிடிடா’ என்று அப்பா சொல்லத் தவிர்த்த மைண்ட்வாய்ஸ இப்ப வர கேட்டதில்ல