Posts

Showing posts from February, 2020

ஒலி

ஆராய்ச்சிக்கூடத்தின் வர்ணனை, ஆராய்ச்சி செய்பவன் குறித்த வர்ணனை, அங்கிருந்த குப்பைகள், பேப்பர்கள், புத்தகங்கள், மேலும் புத்தகங்கள், அணைக்கவேபடாத mac book, விநோத முள்ளம்பன்றித் தோற்ற மெஷினையெல்லாம் கழித்துவிட்டு நேரடியாக விஷயத்துக்கு வந்தால், அது ராகவனின் ஆராய்ச்சிக்கூடம்.  "இத வெச்சு என்னண்ணே பண்ணுவீங்க?" முள்ளம்பன்றியைக் காட்டிக் கேட்டான் அச்சு.  "ஃபீலிங்ஸ மாடிஃபை பண்ணலாம்." - ராகவன்  "ஃபீலிங்ஸ்னா?"  "லைக், மனுஷனோட மூட்."  "மூடா?..ஹெஹெ… இதுல எப்பிடிண்ணே மூடு வர வெப்பீங்க?"  ஒரு workaholic ஆராய்ச்சியாளனாக இருந்தாலும், தனது atmosphereருக்கு முற்றிலும் contrastடான அச்சுவை அவன் கூடத்தினுள் அனுமதித்திருந்தான். அதற்கு முதல் காரணம், எல்லா 30k கிட்சும் அவனை அங்கில் எனக்கூப்பிடுகையில், இவன் மட்டும் அண்ணன் என அழைத்தது ஆசுவாசத்தை அளித்தது. இரண்டாவது, இரண்டாவது காரணமெல்லாம் இல்லை. முந்திய வரியில் முதல் காரணம் என்பதை ஒரே காரணம் என மாற்றி வாசித்துக்கொள்க.  "ஜஸ்ட் இந்த மிஷின வச்சு ஒருத்தரோட மூட மாத்திர முடியுமாண