Posts

Showing posts from June, 2014

ரம்ஜான் நோம்பு

பாய்களின் ரெண்டே ரெண்டு விசேசத்தில் கொஞ்சம் லெந்த்தியானது ரம்ஜான் நோம்பு. நோன்புதான் சரியான பதமென்றாலும் சொல்வழக்கில் மருவி நோம்பானது. நோம்பின் குதூகலம் ஆரம்பிப்பது நோம்பு எப்போது ஆரம்பிப்பது எனும் குழப்பம் ஆரம்பிப்பதில். முதல் பிறையைப்பார்த்து நோன்பு மாதத்தை(ரம்ஜான்) துவங்க & முடிக்க வேண்டும். எலிகாப்டர் வசதி இல்லாததாலோ என்னவோ அரசியல்வாதிகள் போல ஒரே நாளில் எல்லா ஊருக்கும் விசிட் அடிக்க முடியாமல் சில ஊர்களில் பிறை ஒரு நாள் முந்திப் பிந்தி தெரியும். அதை வைத்து அவ்வூர்களில் நோன்பு துவக்கப்படும். Technology has improved so much you know என்று சொல்லப்படும் காலத்தில் இன்னும் இந்தக்குளறுபடிகள் ஏன் நீடிக்கின்றன என்பது நிலாவுக்கே வெளிச்சம். காலைலருந்து தண்ணி கூட குடிக்காம எப்டி பாஸ் இருக்கீங்க என பலர் கேட்பதுண்டு. முதல் நாள் மட்டும் லேசாகத்தலை வலிக்கும். ரெண்டாம் நாளிலிருந்து கங்காரு குதியாக கடைசி நாள் வரை ஹ்ஹுய்க் என நோன்பு ஜம்ப்பிவிடும். இந்த நாட்களில் ஒன்றுமே தெரியாது. ஒரு சிலர் கெத்தாக, "எச்சில் கூட விழுங்கமாட்டோம் தெரிமா" என சொல்வதுண்டு. எச்சில் விழுங்கவெல்லாம் அனுமதி

மெல்லிசையே...

Image
- MSVயின் Thrilling Thematic Tunes  relaunch கடந்த ஞாயிறன்று Russian Cultural Auditoriumல் நடந்தது - நிகழ்வு துவங்குமுன் MSVயின் மெல்லிசைக்கச்சேரி, ஒலிப்பதிவு வீடியோக்களும் எம்மெஸ்வியின் வெள்ளந்தித்தனம் & இசையில் அவருக்கு இருக்கும் மேதைமை குறித்து கண்ணதாசன் பூரிப்புடன் பேசிய ஒலித்துணுக்கும் போடப்பட்டது - MSVயின் உதவியாளர்களில் ஒருவரான (ஜோசப்) கிருஷ்ணா MSVயைப்போல் மிமிக்ரி & நடித்துக்காட்டியதற்கு கைதட்டலில் அரங்கு அதிர்ந்தது. எம்மெஸ்வியை அணுஅணுவாய்ப் பிரதிபலித்து பின்னியெடுத்துவிட்டார் மனுஷன். - அவரை மட்டுமின்றி, டிஎம்மெஸ், எஸ்பீபி போன்றோரையும் மிமிக் செய்து, டிஎம்மெஸ்சுக்கும் எஸ்பீபிக்கும் ஸ்டுடியோவுக்குள் நடந்த கலகல விஷயங்களை அப்படியே நடித்துக்காட்டினார் - எம்மெஸ்வி 6.30க்கு வந்ததும், கர்ணன் படப்பாட்டோடு நிகழ்வு துவங்கியது - முதலில் பேசிய இசையமைப்பாளர் ரகுநாதன் டெக்னிகலாக எம்மெஸ்வி செய்த (மோனோ - ஸ்டீரியோ போன்ற பல) புதுமைகளைப்பட்டியலிட்டார். ”எங்கே நிம்மதி” பாடலில் உள்ள Tchaikovsky நுட்பங்களை விளக்கினார். தான் இசை பயின்றது, ஒரு படத்துக்கு இசையமைத்தது,