Posts

Showing posts from October, 2014

ஆணென்ன பெண்ணென்ன...

கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடிக்கும் முந்தைய குடியை லைட்டாக எட்டிப்பார்த்தால் அங்கும் சிதறிக்கிடக்கும் சண்டையில் பிய்ந்த சடைமுடி. என்னதான் "அவ இல்லாம எனக்கு வாழத்தெரியாதா" எனவும், "இவனில்லாட்டி சூரியன் உதிக்காதா" எனவும் இரு சாரார்களும் விசுப்பட க்ளைமாக்ஸ் டயலாக் அடித்தாலும்  ஒரு சோம்பேறி ஞாயிறு மதியமோ, மழை நாளின் குளிர் நிறைந்த காலை ஏழு மணியோ அல்லது பின்னிரவின் பேரமைதியில் 3பாய்ண்ட் வால்யூமில் ஒலிக்கும் இளையராஜாவின் வயலினோ இவர்களின் உறுதியை, அழுத்தைத்தை டபுல் ஆம்லேட்டாக கலைத்துவிடும். பெரும்பான்மையான சண்டைகளில் திரும்பத்திரும்பப்பேசுற நீ என வருவது "என்னப்புரிஞ்சுக்கவே மாட்டியா?" முப்பது வருசம் ஒன்னாச்சேந்து குப்ப கொட்னவனும், குட்டி கொட்னவளும் அதத்தான் சொல்றாங்க, முந்தா நேத்து காதோல் மலர்ந்த கன்னிக்காதலர்களும் அதயேதான் சொல்றாங்க. இவங்க சொல்ற வார்த்ததான் ஒன்னே தவிர சொல்ல வர மேட்டர் வேற. பெண்கள் எதிர்பார்ப்பது தன்னை உணரும் ஒருவரை. ஆண்கள், தன்னைப்புரிந்துகொள்ளும் ஒருவரை. தலைபோற காரியமா இருந்தாலும் பெண்ணுக்கு பேசிட்டா போதும், அந

I Love I

           வெறுமை என்னைக்கவ்விக்கொண்டது, தனிமை என்னுள் தவ்விவிட்டதுன்னு நெறயபேரு சோக ஸ்மைலியோட ஸ்டேட்டஸ் போட்டுட்டு இருக்காங்க (சோகமா இருந்தா அது Sadlyதான? Smiley எப்டி வரும்?) கொஞ்சம் தத்துவார்த்தமா யோசிச்சுப்பார்த்தா இந்த “உன் இன்மை உணர்கிறேன்” மேட்டர் ஒரு வகைல நம் இன்மையையே உணர்வதுதான். Its like a kind of, I miss you as I miss me. எந்த ஒரு விஷயத்தோடும் நாம தொடர்ந்து புழங்க ஆரம்பிச்சுட்டா அதோடு ஒரு Bonding / பழக்கம் ஆயிடுது. கொஞ்ச நாள்ல அது நம்மள ஒரு Comfort Zoneனுக்குள்ள வசதியா உக்கார வெச்சுடுது. அப்புறம் அதை உடைச்சிட்டு வெளிய வரத்தயங்குவோம். செக்குமாடு கதைதான். 40 / 50 வருசம் ஆதர்ச தம்பதிகள்ல பலது இந்த ரகம் தான். (எங்க அப்பாம்மாக்குள்ள நடக்காத சண்டையே கிடையாது. உண்மைய சொல்லணும்னா அவங்களோட சண்டையின் உக்கிரத்தப்பார்த்து, விவாகரத்து செய்துப்பாங்கன்னு கிட்டத்தட்ட 12 வருசமா நான் வழிமேல் விழிவைத்து எதிர்பார்த்திட்டிருந்தேன். 12 வருசம் ஓடிப்போனதுதான் மிச்சம். ஒரு கட்டத்துல அவங்க சண்ட போடுறது ஒரு மாதிரி டெய்லி ரொட்டீன் ஆகிடுச்சு. சண்ட இல்லன்னா லீவு நாளுக்கப்புறம் பேப்பர் வராதப்ப ஒரு வெ

நகைத்துவை

பாஷாவுல ஆண்ட்டனியையோ இன்ப லச்சுமி நக்மாவையோ மறந்தாலும் ஒரு விஷயத்த யாராலும் மறக்கமுடியாது. அது "பீசு பீசாக் கிழியும்போதும் பச்சக்கொழந்த சிரிப்ப பாரு" காட்சி. எம்டிஎம்மின் ஜிகர்தண்டா அளவுக்கு இந்த ஒரு சீனை மட்டுமே சிலாகிக்க பல நுண் தத்துவங்கள் இருந்தாலும் கருப்பொருளை விடுத்து பருப்பொருளை மையம் கொள்ளக்கூடாது எனும் பின்நவீனத்துவ ரூல் நம்பர் எட்டு அஞ்சான் படம் ஹிட்டு ஆகிய விதிப்படி தொடர்ந்து பேசுவோம். முன்னொரு காலத்திலே ஒரு ராஜாஹ் ஒருத்தன் இருந்தானாம். அவனுக்கு வேட்டையாடுறதுன்னா உயிர். அதன் நீட்சியா கக்கா போகவந்த கரடியொன்றிடம் இவன் அம்பை நீட்ட, அதுவும் பதிலுக்கு தன் அம்பை நீட்ட (கரடிகிட்ட எப்டி அம்புன்னு கேக்கக்கூடாது. கதைக்கு காலில்ல, கரடிக்கு வாலில்ல), தோற்றுப்போன ராஜாஹ் இடுக்கணிலே வருந்திச்சொன்ன Oscaradi Wilde quote தான் 'இடுக்கண் வருங்கால் நகுக'. இப்படி நகுவதால் எனக்கென்ன நன்மை என்று கேட்டால் ஒன்றும் இல்லை என்றுதான் கூற முடியும். ஆனால் ஒரு இண்டைரக்ட் நன்மை இருப்பதை மறுக்கவியலாது. உங்கள் எதிர்த்தரப்புவாதியின் மண்டை காய வைக்கலாம். உதாரணத்திற்கு, உங்களைத்திட்டும் காதல