பாஷாவுல ஆண்ட்டனியையோ இன்ப லச்சுமி நக்மாவையோ மறந்தாலும் ஒரு விஷயத்த யாராலும் மறக்கமுடியாது. அது "பீசு பீசாக் கிழியும்போதும் பச்சக்கொழந்த சிரிப்ப பாரு" காட்சி. எம்டிஎம்மின் ஜிகர்தண்டா அளவுக்கு இந்த ஒரு சீனை மட்டுமே சிலாகிக்க பல நுண் தத்துவங்கள் இருந்தாலும் கருப்பொருளை விடுத்து பருப்பொருளை மையம் கொள்ளக்கூடாது எனும் பின்நவீனத்துவ ரூல் நம்பர் எட்டு அஞ்சான் படம் ஹிட்டு ஆகிய விதிப்படி தொடர்ந்து பேசுவோம்.
முன்னொரு காலத்திலே ஒரு ராஜாஹ் ஒருத்தன் இருந்தானாம். அவனுக்கு வேட்டையாடுறதுன்னா உயிர். அதன் நீட்சியா கக்கா போகவந்த கரடியொன்றிடம் இவன் அம்பை நீட்ட, அதுவும் பதிலுக்கு தன் அம்பை நீட்ட (கரடிகிட்ட எப்டி அம்புன்னு கேக்கக்கூடாது. கதைக்கு காலில்ல, கரடிக்கு வாலில்ல), தோற்றுப்போன ராஜாஹ் இடுக்கணிலே வருந்திச்சொன்ன Oscaradi Wilde quote தான் 'இடுக்கண் வருங்கால் நகுக'.
இப்படி நகுவதால் எனக்கென்ன நன்மை என்று கேட்டால் ஒன்றும் இல்லை என்றுதான் கூற முடியும். ஆனால் ஒரு இண்டைரக்ட் நன்மை இருப்பதை மறுக்கவியலாது. உங்கள் எதிர்த்தரப்புவாதியின் மண்டை காய வைக்கலாம். உதாரணத்திற்கு, உங்களைத்திட்டும் காதலியிடமோ அடிக்கும் மனைவியிடமோ பன்னிக்குட்டிமேல் பனிமழை பெய்தாற்போல் ஈஈஈ என சிரித்தபடியே இருங்கள். ஒரு கட்டத்தில் உக்கிரமாகி சுடப்பட்ட டைனோசரஸ் போல் வீறிட்டுக்கத்தி போய்விடுவர். சுபம். லாபம்.
கோபமோ அழுகையோ நம் மனோநிலையின் குறுக்குவெட்டுத்தோற்றத்தை (கருமம் என்ன வார்த்தடா இது? இதுலாம் இருந்தாதான் இலக்கியத்தரமாம். அதனால வலிந்து திணித்தேன்), ஆங்.. கு.வெ தோற்றத்தை மற்றவருக்குக்காட்டிவிடும். ஆகவே நமக்கு ஆப்படிப்பவருக்கு பதில் கூறும் விதமாய் சிரியுங்கள். வெண்டக்கா, எதுக்கு சிரிக்கிறான், நாம எதுலயும் சிக்கிட்டமான்னு யோசிச்சே செத்துருவானுங்க.
நல்லா நோட் பண்ணீங்கன்னா அடி வாங்கிட்டு ஊளு ஊளுன்னு ஈரோ அழுதார்னா கடேசிவர அவர கும்மிப்புடுவாங்ய (மஹாநதி). அதுவே சிரிச்சார்னா bang bang bang ஆகப்போதுன்னு அர்த்தம் (ஐஸ் கட்டில படுத்த கேப்டன், "அடுத்து நெருப்பா"ன்னு கேப்பாரே, என்ன படம் அது?)
இதுமட்டுமில்லாம, சிரிப்பானது பல இடங்கள்ல நமக்கு ஆபத்பாந்தமாகும். மீட்டிங்ல எதுவும் புரியலன்னா மையமா ஒரு சிரிப்ப குய்க்பிக்ஸ் போட்டு ஒட்டிவெச்சுக்கறது நலம் பயக்கும். அத உட்டுட்டு உர்ர்ர்ருன்னு மூஞ்ச வெச்சிருந்தாலோ கொர்ர்ருன்னு தலைய தொங்கப்போட்டாலோ மாட்டிப்போம். அப்புறம் சக மீட்டிங் மண்டையனுங்க ப்ப்ப்ப்ர்ர்ர்ன்னு சிரிப்பானுங்க.
சிரிக்கிறவன பாத்து வயிறெரிஞ்சு அழற உலகம், அழறவனப்பாத்து சிரிக்கும். அழறவர் துக்கத்தோடு பதவியேற்கும் அமைச்சராவே இருந்தாலும் அதான் நெலம.
பின் வருவதை கவிதை பாணியில் படிக்கவும்.
சிரித்தன்ன ஆகப்போகிறது?
சரி. அழுதென்ன ஆகப்போகிறது?
மனிதனின் தனித்துவச்சொத்து நகைச்சுவைங்க. அதனால தினமும் கொஞ்சமாச்சும் நகைத்து வைங்க.
ஹா! ஹா! ஹா! சிரித்து சிரித்து வயிறு புண்ணாப்போச்சு. அடிக்கடி இந்த மாதிரி பதிவு எழுதுங்க. சூப்பரப்பு
ReplyDeleteஇடுக்கண் வருங்கால் நக்குக...அப்படி ன்னு படிச்சட்டேன்...எத நக்க சொல்றாப்ல....ன்னு கொஞ்ச நேரம் யோசிச்சட்டு திரும்ப படிச்சதுல தெளிவாச்சு....செம பதிவு பாஸ் ....
ReplyDeleteவெண்டக்கா, எதுக்கு சிரிக்கிறான், நாம எதுலயும் சிக்கிட்டமான்னு யோசிச்சே செத்துருவானுங்க.
ReplyDelete//வெண்டக்கா, எதுக்கு சிரிக்கிறான், நாம எதுலயும் சிக்கிட்டமான்னு யோசிச்சே செத்துருவானுங்க.//
ReplyDeleteஉண்மை! :)
//அழறவர் துக்கத்தோடு பதவியேற்கும் அமைச்சராவே
ReplyDeleteஇருந்தாலும் அதான் நெலம//
aam
தூள்...
ReplyDeleteசிரித்தன்ன ஆகப்போகிறது?
ReplyDeleteசரி. அழுதென்ன ஆகப்போகிறது? :-) nice
வழக்கம் போல இந்த பதிவும் அருமை
ReplyDelete