சுன்னத் கல்யாணம் ரிட்டன்ஸ்


வாழ்க்க ஒரு வட்டம்டான்னு வருங்கால முதல்வர் விஜை  ஒரு படத்துல சொல்லிருப்பாரு (CM ஆகிடுவார்ல?). அது உண்மதானோன்னு நெனைக்க வச்சிடுச்சு போன மாசத்துல ஒரு நாள். ஆமா! இருவது வருசங்கழிச்சு எஸ்டீடி ரிட்டன் ஆப் த ட்ராகனாச்சு.

அது என்னது ரிட்டன்ஸ்? அப்ப இதோட ப்ரீக்வல் என்னன்னு கேக்கறவங்க இங்க போய் பாத்துக்கங்க.

அடியேனின் மருமகனாருக்கு சுன்னத் கல்யாணம் செய்ய ஒரு டேட் பிக்ஸ் செஞ்சாங்க. மெற்றாஸ் க்ரஸண்ட் ஆஸ்பத்திரில. காலை ஏழரைக்கெல்லாம் வரச்சொன்னாங்க.

கசாப்புக்கடைக்குப் போறது தெரியாம கோழிக்குஞ்செல்லாம்… சாரி.. கோழியெல்லாம் குஷியாருக்குமே, அப்டி குதூகலமா இருந்தார் மருமகனார். அடியேய், ஒன்னோட குதூகலத்துல இன்னுங்கொகொஞ்ச நேரத்துல குச்சிய விட்டு ஆட்டப்போறாங்கடியோவ்னு நெனச்சிக்கிட்டேன். அதுவும் அவனுக்கு இருப்பதோ மிகச்சிறிய குதூகலம். கடுகு சிறுத்தாலும் அதில் உண்டாகும் காயம் பெரிதுதானே. பாவம் எப்படி சமாளிக்கப்போகிறானோ என்ற ஐயப்பாடும் இருந்தது. சொன்ன நேரத்துக்கு ஆஸ்பிட்டல் போனா அங்க ஈ காக்கா இல்ல. வெய்ட் பண்ணுங்க வருவாங்க என்று ஒரு புலூ சட்டைக்காரர் தெரிவித்தார். 

வெய்ட்டிய போது, முதன்முதலில் இந்த நுனிகழர்வுக் கலாச்சாரம் எப்படி ஆரம்பித்திருக்கும்னு யோசிச்சேன். ஆக்ச்சுவலி வெட்ட வெட்ட நகம் வளர்றதப் பாத்த ஒரு க்ராமத்து க்ரகாம்பெல், ‘சரி இதையும் பண்ணிப்பாப்போமே, சப்போஸ் வளந்தா மைனர் ***, மேஜர் *** ஆகி சுத்து வட்டாரத்துலயே ரெம்ப பேமசாயிடலாம்’னு செஞ்சிருக்கக்கூடும். மிஷன் ஃபெய்ல்டாய்ருக்கும். ப்லட் லாஸ்தான் மிச்சம்னு ஆப்ரேஷன அபார்ட் பண்ணிருப்பாப்டி. 

ஹிப்பீஸ் ஊர்ல மொட்டையடிச்சவன் வித்தியாசமாத் தெரிவான்ல, அப்டி அன்னாரின் ஆர்க்கிடெக்ச்சரல் சேஞ்ச் வாட்சாப்பில்லா வசந்தியாய் ஊர் பூராம் பரபரவென்று பார்வேடாயிருக்கும்ங்குறது அண்டர்ஸ்டாண்டபுள் தான. காமன்மேன்லாம் ‘இங்கேருடா புது பேஸன்’ என அவங்களும் பண்ணத்துவங்கி இருக்கலாம். அப்போல்லேர்ந்து தொட்டுத்தொடரும் ஒரு வெட்டுப்பாரம்பரியமா இது வந்துட்டிருக்கலாம். அதில் தடம் பதிக்கப்போகும் மருமானை வாஞ்சையோடு பார்த்தபடி இருந்தேன். (முந்தின வாக்கியத்து மொத வார்த்தைய அப்போலோலேர்ந்துன்னு படிச்சவன்லாம் கைதூக்குங்க). 

ரொம்ப போரடிச்சது. சர்கம்சிஷனுக்கு வெய்ட் செய்யும்போது கேட்க வேண்டிய Subtleலான சிக்ஸ் பாடல்கள்னு ஒரு லிஸ்ட் போட்டேன்:
  1. அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும்…
  2. சின்ன சின்ன ஆசை…
  3. சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே… சின்னஞ்சிறு சின்னஞ்சிறு அதிசயமே…
  4. சின்ன சின்ன வண்ணக்குயில் கொஞ்சிக் கொஞ்சி கூவுதம்மா…
  5. சின்னத்தம்பி படத்திலிருந்து, “குயிலப்புடிச்சி கூண்டிலடச்சி கூவச்சொல்லுகிற உலகம், மயிலப்புடிச்சு கால ஒடச்சி ஆடச்சொல்லுகிற உலகம்”
  6. கொஞ்சிக் கொஞ்சி அலைகள் ஓட… (அந்தப்பாட்ல ரஜினிசார் போட்டுருக்க செவப்பு துவாலத்துண்டுதான் ‘துண்டானவ’ங்களுக்கு பெரும்பாலும் ஒருவார யூனிஃபார்ம். அதான் இத சேத்தேன். வேற எந்த ரைமிங்குக்குமில்ல)
Last but not the least, “முக்காலா.. முக்காபுலா.. லேலா” இல்லாம எப்புடி?

டைம் ஆக ஆக, கூட்டம் வர ஆரமிச்சுது. தினுசு தினுசா மக்கள். பீப்பில் வாச்சிங் மாதிரி ஒரு சிறந்த டைம்பாஸ், விகடன் டைம்பாஸ் கூட இல்ல. 

ஒரு 5/6 வயசு பையனைத் தூக்கிட்டு ஒரு பேமிலி வந்துச்சு. அவங்க இன்னும் பழய மெத்தடுலயே இவ்வரலாற்றரிய நிகழ்வக் கொண்டாடுறவங்க போல. பையனுக்கு புது டிரெஸ்ஸு — குஞ்சம் வச்ச ஷெர்வானி, பகுடர் குல்லாயெல்லாம் போட்டு அமர்க்களப்படுத்திருந்தாங்க. ஆனா ஒன்னு, இந்த பாய்ங்க லாஜிக்க புரிஞ்சுக்கவே முடீல. தொறந்து கெடக்குற தலைக்கு தொப்பிய போட்டு மூடுறாங்க. தன்னால மூடிக்கெடக்க எடத்த வெட்டி தொறந்து உட்டுர்ராங்க. 

அப்புறம் கொஞ்ச நேரத்துல ஒரு Hindu ஃபேமிலி வந்தாங்க கைக்கொழந்தயத் தூக்கிட்டு. அதோட அப்பாட்ட பேச்சோட பேச்சா யாருக்கு சர்கம்சிஷன் ஒங்களுக்கான்னேன். அவர் சட்டுன்னு பதறிப்போய் ‘இல்லங்க பையனுக்கு’ன்னாரு . பாவம் வாய் தவறி ஆமாம்னு சொல்லிட்டா டக்குனு ஒருத்தர் வந்து இழுத்துட்டுப்போயி கபாப் போட்டு கைல குடுத்துருவார்னு பயந்துட்டார்போல. அவரோட கண்ல க்ஷண நேர மரண பயத்தப்பாத்தேன் (அந்த கொழந்தைக்கு அங்க இன்ஃபெக்‌ஷன் வராம இருக்க டாக்டர் பண்ணச்சொன்னாராம்). 

கூட்டம் சேரச்சேர கிய்யாமுய்யானு ஒரே சத்தம். ஒரு பாயம்மா அவங்க வீட்டுக்காரர்ட்ட புலம்பல். 

“மெடிக்கல் சிட்டைல புள்ள பேரு பயாஸுக்கு Fஃபு போடுறதுக்கு பதில் B போட்டுட்டாங்கங்க”

(அந்தம்மா Fayazங்குற பேரயே Bayasநு தான் சொல்லுது. அதக்கேட்டு ரசீது குடுக்குறவன் Bayasநு எழுதிருக்கான் பாவம். இந்தம்மாக்கு ழானாவும் வர்ல ஷாணாவும் வர்ல, ஆனா பேரு மட்டும் தேவேலிப்பி அரபில எழுதணுமாம்.)

அதுக்கு அந்த பாயம்மாவோட அஸ்பண்ட் பாயி, “சரி விடுடி, ஒரு எழுத்துதான மிஸ்டேக்கு”ன்னாரு.

ஆனா அந்தம்மா “அதெப்டிங்க உடமுடியும்? இதனால நாளைக்கி பையன் future பாதிச்சிருச்சுன்னா?” அப்டின்னுச்சு. அடேய்.. குஞ்ச கட் பண்ற ரசீதுல ஒங்களுக்கு என்னடா பீச்சர் இருக்குன்னு எனக்கு ஒரே கன்ப்பீசன்.

நேரம் ஆக ஆக கூட்டம் ஜாஸ்தியாச்சு. வரப்ப வெறும் வயித்தோட கொண்டு வாங்கன்னு சொல்லிருந்தாங்க. எனக்கு கபகபன்னு செம்ம பசி. டேய், வெறும் வயிறுன்னு சொன்னது ஆப்ரேசன் பண்ண வந்தவனடா, எல்ப்பரா ஆட்டோ புடிச்சுக் குடுக்க வந்தவன இல்ல.. கொழப்புறானுங்களேனு ஆகிப்போச்சு. வீட்ல யாருமே சாப்டாம வந்ததால தனியாப்போயி திங்கவும் மனசு வல்ல. சுத்துமுத்தி பாத்தேன். அங்கருந்த புள்ளைங்க ஒவ்வொன்னும் ஒவ்வொரு அக்கப்போர் பண்ணிட்டிருந்துதுங்க. எந்தக்குழந்தையாச்சும் சேட்டை பண்ணினா ‘இழுத்துட்டுப்போய் கட் பண்ணிருவேன்’னு சொல்ல லாஜிக்கலி மிகச்சரியான இடமா அது பட்டது. அப்புடி நடந்தா அந்தப் புள்ள அப்புறம் ஜென்மத்துக்கு எதும் தப்பு செய்யாது.

ஒரு ஆயம்மா வந்து, ‘கொழந்தயத் தூக்கிட்டு கொழந்தயோட அம்மா மட்டும் உள்ள வாங்க’ன்னாங்க. உடனே அங்க ஒரு பரபரப்பு. உள்ள போறப்ப கொழந்தைக்கு ப்ரேஸ்லெட் செய்ன் போட்டுருக்கக்கூடாதுன்னு சொன்னாங்க. செய்ன் போட்டுருந்த ஒரு பையன்கிட்டருந்து அவங்கம்மா கழட்ட, அவன் அழ, டொமினோஸ் எபெக்ட்டா அவனப்பாத்து எல்லா புள்ளயும் அழ, சடுதில அங்க ஒரே களேபரம். 

ஒரு பையன் ஓவரா வீலுவீலுன்னு வீறினான். சமூக சேவ செய்யலாம்னு அவங்கிட்டப்போயி, “தம்பி அழக்கூடாது. அழுதா எஸ்டா ஒன்ற இஞ்ச் கட் பண்ணிருவாங்க”ன்னு நாஞ்சொல்ல, அங்கருந்த ஒரு ஆண்ட்டிக்கு அந்த ஒன்ற இஞ்ச்சுங்குற வார்த்த என்னத்த ஞாபகப்படுத்துச்சோ, புருசனப்பாத்து பாத்து கலாய்க்குறாப்ல ஏளனமாச் சிரிச்சிது. அந்தாளு என்ன மொறைக்குறான். நல்லதுக்கே காலம் இல்லஜி.

புள்ளைங்களோட தாய்மார்ஸ் ஹாலுக்குள்ள போனாங்க.  நா ஆஸ்பத்திரில ரௌண்ட்ஸ் போனேன்.

                       
காமராஜர் காலத்துல கவர்மெண்ட் ஆஃப் மெட்ராஸ்

                       
நெருப்புல எதுடா சுத்தம் அசுத்தம்?

                       
பல் டாக்டர் வாசல்ல இந்த வெளம்பரம். யார்ராவன் சர்கம்சிஷன் டாக்டர் வாசல்ல என்ன இருந்துதுன்னு கேக்கறவன்?

                
தட் ஊருக்கெல்லாம் எஸ்டாவா துருத்திட்டிருக்குறத வெட்டுறியே செவ்வாழ, ஒங்கிட்ட இருக்குறத எப்ப திருத்தப்போற? மொமண்ட் in Name Board.

வெளிய சுத்திட்டு உள்ள வந்து பாத்தா பூரா வெய்ட்டர்ஸும் தல கவுந்து மொபைல நோண்டிட்டு இருந்தாங்க. எவ்ரிபடி. இனி வரக்கூடிய காலங்கள்ல எலும்பு தேய்மான டாக்டருக்கு நல்லா கல்லா கட்டும். மார்க் மை வேர்ட்ஸ்.

சரி மச்சான்கிட்ட எதாச்சும் மொக்க போடலாம்னு போனா அவரு கேண்டி க்ரஷ் வெளாண்டுட்டு இருந்தாரு. மச்சான், உள்ள மவனோட கேண்டியவே க்ரஷ் பண்ணப்போறாங்க, நமக்கு இப்ப இந்த ஸ்போர்ட்ஸ் ஆக்டிவிடீஸ் தேவையான்னு கேட்டா ‘போரடிக்கிது மாப்ள’ன்னு சொன்னாரு. அதுவுஞ்சரிதான்னு நா டிண்டர கிண்ட ஆரமிச்சுட்டேன்.
வீ ஆர் அத்லெடிக்ஸ் பேம்லி யூ க்நோ

திடீர்னு அங்க ஒரு சலசலப்பு. சர்கம்சிஸ ஹால தொறந்தாங்க. எல்லாப்புள்ளைகளும் அம்மா மடியில அழுதுட்டு கெடந்துதுங்க. அங்கங்க அம்மாக்களும் கூடப்போன பாட்டிகளும் ஒரே அழுக. எதோ கின்னஸ் ரெக்கார்டுக்காக வரிசையா ஒரே நேரத்துல வெட்டிப்போட்ட மாதிரி எல்லார் மடிலயும் புள்ளைங்க கெடந்துதுங்க. ஒவ்வொரு பையனோட <ஜெண்டில்மேன் பட ப்ரொட்யூசர்> மேலயும் மஞ்சக்கலர்ல சொலூஷன் ஊத்தி ஒரு ப்ரௌனிஷ் யெல்லோ ப்லாஸ்திரில சுத்தி இருந்துச்சு. பாக்கறதுக்கு Mini size ஷவர்மா மாதிரி இருந்துது. 

ஒரு பாட்டிம்மா எம்ஜார் செத்தப்ப சில லேடிஸ் அழுதாப்ல பேரனோடத பாத்துப்பாத்து ஓவர் அழுகாச்சி. நம்ம மருமகன் சிரிச்சிக்கிட்டு கெடந்தான். எனக்கு ஒரே ஆச்சரியம். வலியில்லா கழித்தல்ல மெடிக்கல்ஸ் டெக்நால்ஜி இம்ப்ரூட் சோ மச் போலன்னு, "மகிழ்ச்சி" மோட்ல இருந்த அவன முன்னுதாரணமா வச்சு மத்த அழுதிட்டிருக்க கொழந்தைங்கள ஆற்றுப்படுத்துனேன். 'கு'றிப்பிட்ட ஸ்தலத்துல அவ்ளோ பெரிய களேபரம் நடந்திருந்தாலும் எந்தப்புள்ளைக்கும் நிலவியல் ரீதியிலான மாற்றம் எதுவுமே கண்ணுக்கு தெரியல. ஏதோ ஒன்னு மிஸ்ஸாகுதேன்னு உறுத்துச்சு. 

அங்க இருந்த நர்ஸாயாகிட்ட முடிஞ்சுதா கெளம்பலாமான்னு கேட்டேன். இப்பதான் அனஸ்தீசியா குடுத்துருக்கோம் ஆப்ரேஷனுக்கு இன்னும் ஒரு மணி நேரமாச்சும் ஆவும்னாங்க. 
இன்னும் போகியே போடல,  அதுக்குள்ள பொங்கப்பான பொங்கிருச்சுன்னு ஊளயிட்டுட்டுருக்குதுகளா இதுகன்னு அழுது வடிச்ச பாட்டிகிட்ட திரும்பி, 'ஏ கெளவி,  இன்னும் கட்டிங்கே நடக்கலயாம், ஆனா இருந்த ஒரு பாடியும் போச்சேன்னு அழுது ஊரக்கூட்றியா நீ? கடிச்சுவெக்கக்குள்ள ஓடிரு'ன்னுட்டு அங்கருந்து கெளம்பிட்டேன். சரியான அடேய் அடீய் அடடீய் மொமண்ட் ஆகிப்போச்சு.

எல்லாப்புள்ளைக்கும் அனஸ்தீசியா & டிஞ்சர் மாதிரி ஒன்னு போட்டு டோக்கனும் குடுத்துருந்தாங்க. நம்மவருக்கு டோக்கன் நம்பர் எட்டு. 
உன் டோக்கனோ எட்டு
அதனால்தான் உனக்கு இன்று வெட்டு
இப்டி ஒரு கவித சொன்னேன். பேசிக்கல்லி பாய்சுக்கு கொஞ்சம் இலக்கிய பரிச்சயம் கம்மின்றதால யாரும் இத சிலாகிக்கல. #சாரிஜெமோ

ஒன்னவர் கழிச்சு பில்டிங்கே அதிரும்படி ஒரு வீல் கேட்டுச்சு. ரைட்டே! சம்பவம் ஸ்டார்ட் ஆகிருச்சேன்னு ஹாலுக்குள்ள போனேன். அங்க வெய்ட்டிங்லருந்த ஒரு பையன் துறுதுறுன்னு செம்ம ஆர்வக்கோளாறு. கொஞ்சம் விட்டா மகாநதி க்லைமாக்ஸ் கமலாட்டம் அவனே வெட்டிக்குடுத்துருவான்போல. அடக்கவே முடியல.

எல்லா மதர்ஸ் முகமும் வெளுத்துப்போயிருந்துது. வெய்ட்டிங் ஹால்லருந்து உள்ள ஆப்ரேஷன் ரூமுக்கு புள்ளைங்கள தூக்கிட்டு (பறிச்சிக்கிட்டு, to be precise) போனாங்க அந்த ஆயம்மா. அவங்க ஹாலுக்கு வந்தாலே புள்ளைங்க எல்லாம் உச்சஸ்தாயில choir பாட ஆரமிச்சுதுங்க. கற்பாற நெஞ்சு எனக்கே லைட்டா கலங்கிருச்சு. But for the greater good இத ஏத்துக்கிடத்தான் வேணும்னு ஒடம்ப இரும்பாக்கிட்டேன். ஆயம்மா வந்து மருமான பிச்சு கூட்டிட்டுப் போனாங்க. பைஞ்சு நிமிசம். பத்து வருஷமாட்டம் போச்சு. கொஞ்ச நேரத்துல அலறலுக்குன்னே அளவெடுத்து செஞ்ச மருமகனோட ப்ரத்யேகக் குரல் கேட்டுச்சு. அப்புறம் அவன தூக்கிட்டு வந்தாங்க. அவனுக்கு எப்டி இருந்துதுன்னா... இந்தா இந்த போட்டோவாட்டம்...


யெஸ், ஸ்தலம் மட்டும் சிதிலமடஞ்சு ரெட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட் கலர்ல 'மொட்டு ஒன்று மலர்ந்திட மறுக்கும்... கும் கும்'..ன்னு கெடந்துது. ஆத்தாமைல, மச்சாங்கிட்ட 'என்ன மச்சான் இப்பிடி பண்ணிப்புட்டானுங்க'னதுக்கு, விடு மாப்ள, காச்ச மரந்தான் கல்லடி படும்னாரு. அட, இங்க காய்க்க முந்தியே கத்தி பட்டுருச்சேன்னு ஆட்டோ புடிக்க கெளம்பினேன். வீட்டுக்கு வந்தும் பையன் சமாதானமே ஆகவில்லை. 

சாமாதானம் பண்ணியரே புண்ணியர் சமாதானம் 
ஆகமாட்டார் பட்டாங்கில் உள்ளபடி 
எனும் குறளுக்கு ஒப்ப ஒரே ஒப்பாரி.

மூன்று நாள் கழித்து கட்டு பிரிக்க வரச்சொல்லிருந்தாங்க. அப்ப அங்க சுமார் 8-10 வயசு பையனும் வந்துருந்தான். மேல்மருவத்தூர் அம்மா பகவானுக்கு பயணம் போறாப்ல இடுப்புல செவப்புத்துண்டு கட்டிட்டுருந்தான். எங்களுக்கு முந்தி அவன் உள்ள போனதும் கேட்டுது பாருங்க ஒரு சத்தம். அவங்க ரிலேட்டிவ்ஸ் அத்தன பேரையும் கூப்புடுறான், அய்யய்யோ கத்தி கொண்டு வராங்க, அய்யய்யோ புடிச்சு இழுக்கறாங்க, அய்யய்யோ திருகறாங்க அய்யய்யோ சாகடிக்கிறாங்கன்னு  உச்சபட்ச டெசிபல்ல அலறினான். கண்டிப்பா அந்த டாக்டருக்கு காது டமாரம் ஆகிருக்கும். நா உள்ள எட்டிப்பாத்து 'டேய், பச்சக் கொழந்தைங்களே ஒரு வார்த்த பேசாம அழுதுட்டு மட்டுந்தான் போகுது, நீ என்னடா ரன்னிங் கமெண்ட்ரி குடுத்துட்டுருக்க சின்னப்பயலே'ன்னுட்டு ஓடியாந்துட்டேன். ஆனா பாவம் அவனுக்கு கட்டம் கட்டி வெளாண்டுட்டுருந்தாங்க பாஸ். 

பொறவு நம்மாளும் போயி கட்டு பிரிச்சு 'விடியாத இரவென்று எதுவுமில்லை, பிரியாத இடமென்றும் எதுவுமில்லை'ய்ய்னு அழுதுட்டு வந்தார். அடுத்து ஒரு 12 வயசுப்பையன் க்யூல இருந்தான். ஏனோ எனக்கு பலாப்பழ காமடி நெனவு வந்துச்சு. 

இந்த சர்கம்சிஷன எவ்ளோ சின்ன வயசுல பண்றமோ அவ்ளோ நல்லது. சீக்கிரமா ஆறிடவும் செய்யும். கொழந்த பொறந்து ஒரு மாசத்துலருந்தே பண்ணலாமாம். ஒரு வாரத்துல மருமானுக்கு சரியாகி நல்லா ஓடி சேர் மேல ஏறி பொருட்களத் தள்ளி ஒடச்சு விளயாடு பாப்பாவாகிட்டார். சுபம் கபிலவஸ்து.

சம்பவம் நடந்த இடத்தைக்காண இங்கே க்லிக் செய்யவும். (குறிப்பு: மனோதிடம் இல்லாதோர், நெஞ்சுவலியுள்ளோர், கு...ழந்தை மனம் கொண்டோர், லேடிஸ் தவிர்த்துவிடவும்)



Comments

  1. Welcome back.....
    Ha Ha Ha சிரிச்சு வயிறு வலிக்கி

    ReplyDelete
  2. Vayasanalum unga style innum 😂😂😂😂😂😂😂😂😂

    ReplyDelete
    Replies
    1. Thanks you thank you thank you.

      Delete
    2. Ji ithu neengathana illa fake id ya ? https://twitter.com/iammuthalib

      Delete
  3. அல்டிமேட் அ.முத்தலிப். /தொப்பிய போட்டு மூடுறாங்க. தன்னால மூடிக்கெடக்க எடத்த வெட்டி தொறந்து உட்டுர்ராங்க./

    ReplyDelete
  4. ஹஹஹஹஹா ஒவ்வொரு வரியும் ஒரே ரோபுல்ஸ் தான் போங்க :))
    "அடேய்.. குஞ்ச கட் பண்ற ரசீதுல ஒங்களுக்கு என்னடா பீச்சர் இருக்குன்னு எனக்கு ஒரே கன்ப்பீசன்." ஹஹஹஹா :))

    ReplyDelete
  5. யோவ் மாப்ள உன்னோட பையனுக்கு S3 க்கு வெய்டிஸ் நாங்களாம் (S3 சிங்கம் 3 இல்ல.சுன்னத் 3)

    ReplyDelete
    Replies
    1. நமக்கு ஸ்டெய்ட்டா அறுவதாம் S தான் நடக்கும்னு நெனைக்கிறேன் மாம்ஸ்.

      Delete
  6. யோவ் மாப்ள உன்னோட பையனுக்கு S3 க்கு வெய்டிஸ் நாங்களாம் (S3 சிங்கம் 3 இல்ல.சுன்னத் 3)

    ReplyDelete
  7. செம்ம்ம சிரிச்சிக்கிட்டே இருக்கேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றிஸ் பொன்னியில் செல்லன்.

      Delete
  8. மாப்பு ஸ்வீட் ஆவ்சம் கம் பேக்...

    ReplyDelete
  9. சான்ஸே இல்லை.... செம்ம Rofls... சிரிச்சி சிரிச்சி முடியல...
    நானும் அப்போல்லோலருந்து னு தான் படிச்சேன்.. எத பாத்தாலும், எத கேட்டாலும் அப்போல்லோ ன்னே தெரியிது...ஹிஹி

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஆண்ட்ருஸ். இந்த பேருக்கு இப்டி ஸ்பெல்லிங் இப்பத்தான் பாக்கறேன்.

      Delete
  10. சான்ஸே இல்லை.... செம்ம Rofls... சிரிச்சி சிரிச்சி முடியல...
    நானும் அப்போல்லோலருந்து னு தான் படிச்சேன்.. எத பாத்தாலும், எத கேட்டாலும் அப்போல்லோ ன்னே தெரியிது...ஹிஹி

    ReplyDelete
  11. சூப்பர் முத்தலிப்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஆதிமுருகர்.

      Delete
  12. Replies
    1. இது நம்ம ஆடுகளம்!

      Delete
  13. சுன்னத் சம்பவத்த எழுதறதுங்கறது உனக்கு சொந்த க்ரவுண்ட்ல வெளாடறது மாறி...கலக்கல்

    ReplyDelete
    Replies
    1. hahaha.. ஒரு நாலஞ்சு இருந்தா நல்லாருக்கும்ல... ஐமீன்...

      Delete
  14. Arunbal Srinivasan6 October 2016 at 10:47

    தன்னால மூடிக்கெடக்க எடத்த வெட்டி தொறந்து உட்டுர்ராங்க.//

    செம ரோபல்..

    ReplyDelete
  15. Hahahahahah சிரிச்சு சிரிச்சு வயிரு வலிக்குது 😂😂😂

    ReplyDelete
  16. Hahahahahah சிரிச்சு சிரிச்சு வயிரு வலிக்குது 😂😂😂

    ReplyDelete
    Replies
    1. ;-) வயிறு சுருங்கி வயிராய்டுச்சு போல?

      Delete
  17. இன்னைக்கு வருவீங்க நாளைக்கு வருவீங்கனு டெய்லி உங்க ப்லாக்ல விழி வச்சு காத்து கெடந்தேன். பசில கெடந்தவனுக்கு டபுள் மீல்ஸ் கெடச்சாப்ல செமயாருக்கு.

    //நுனிகழர்வுக் கலாச்சாரம்// செம...:)))) யாராவது அந்த கவிஞருகிட்ட சொன்னா நல்லாருக்கும்.

    திருஷ்டி: இதுல டபுள் 'கொ' இருக்கு //ஒன்னோட குதூகலத்துல இன்னுங்கொகொஞ்ச நேரத்துல//

    //தேவேலிப்பி,விளயாடு// இது கரெக்டா, இல்ல தாந்தோன்றி கீபேடானு புரியல

    ReplyDelete
    Replies
    1. நாஞ்சிலாய்க்காத்திருந்ததற்கு நன்றிங்க அச்சு.

      ரெண்டு கொ தாந்தோன்றினால வருது.

      தேவேலிப்பியும் விளயாடும் phoneticsகாக போட்டது.

      Delete
  18. சம்பவ இடம்னதும் தப்பா நெனச்சிட்டேன் :-))))

    சாமாதானம் பண்ணியரே புண்ணியர் சமாதானம்
    ஆகமாட்டார் பட்டாங்கில் உள்ளபடி // சாமாதானம் :-))))))))))) வக்கிரம் ப்ரோ :-)))))))))

    ReplyDelete
    Replies
    1. குறள்ல உள்ள குறியீட கண்டுபுடிச்சது நீ மட்டுந்தான். வக்ரம்னா வேத்துடுமே ஒனக்கு, மூக்கு.

      Delete
  19. /அப்போல்லேர்ந்து/ அப்போலோனுதான் படிச்சேன். :-) சூப்பரப்பு :-)

    ReplyDelete
  20. //மேலயும் மஞ்சக்கலர்ல சொலூஷன் ஊத்தி ஒரு ப்ரௌனிஷ் யெல்லோ ப்லாஸ்திரில சுத்தி இருந்துச்சு. பாக்கறதுக்கு Mini size ஷவர்மா மாதிரி இருந்துது. //
    ஹலோ என்னங்க நீங்க. எதுங்கூட ஒப்பிடறதுன்னு அளவில்லையா. இனி நான் ஷவர்மா சாப்பிடும்போதெல்லாம் இதான் ஞாபகம் வருமே. என்னா வில்லத்தனம். இருந்தாலும் பல் விளம்பர குசும்பு ஆகாது. மொத்தப் பதிவுமே நல்ல நகைச்சுவை.தமிழ்லதான் எழுதியிருக்கீங்களான்னு ஒரு சந்தேகம். விஜயன்

    ReplyDelete
    Replies
    1. ஒருதடவ ஷவர்மா சாப்ட்டு ஜொரம் வந்துடுச்சு. அதனால இனி எவனும் ஷவர்மா திங்கக்கூடாது. அதுக்கு என்னாலான ஒரு மினி உதவி.

      Delete
  21. இப்ப தான் சுன்னத் கல்யாணம் பத்தி கேள்விபடுறேன் சிரிச்சு முடியல ரோபல்'ணே

    ReplyDelete
  22. செம...
    😂 😂 😁 😁

    ReplyDelete
  23. இந்த சம்பவத்தை இப்படி ஒரு நவரசக்காடசியாக காட்டிய நணபரின் ரசனை சூப்பர்......யாரங்கே...இவரையெல்லாம் ஏன் சின்ன, பெரிய திரை தயாரிப்பாளர்கள் கண்டுக்கவில்லை....நஷடம். நமக்குத்தான்.....இருங்க டாக்டர் பாத்துட்டு வந்தர்ரேன்...அய்யய்யோ....வயித்த வலிக்குது மக்கா....

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க. BTW, உங்க பஸ்ல பெஸ்டிவல் டைம்ல டிக்கட்டே கெடைக்க மாட்டுது. கொஞ்சம் பாருங்க.

      Delete
  24. இந்த சம்பவத்தை இப்படி ஒரு நவரசக்காடசியாக காட்டிய நணபரின் ரசனை சூப்பர்......யாரங்கே...இவரையெல்லாம் ஏன் சின்ன, பெரிய திரை தயாரிப்பாளர்கள் கண்டுக்கவில்லை....நஷடம். நமக்குத்தான்.....இருங்க டாக்டர் பாத்துட்டு வந்தர்ரேன்...அய்யய்யோ....வயித்த வலிக்குது மக்கா....

    ReplyDelete
  25. சம்பவ இடம்னு சொன்னதும் நான் பயந்துட்டேன் 😂😂

    ReplyDelete
    Replies
    1. வக்ரமாய் நினைக்காதீர்கள் ப்ரொ.

      Delete
  26. எங்க ஊர்ல இதுக்குன்னு தனி ஹால், டாக்டர் எல்லாம் கிடையாது. பிரைவேட் கிளினிக்லையே செய்வாங்க. ஒரு தடவ நான் போயிருக்கும்போது, இப்பிடி ஒரு ரத்தக்களரி உள்ள நடந்துட்டு இருந்திச்சு. இதே டைப் அலறல், மேலதிகமா "இதுக்கெல்லாம் நீங்க அல்லாஹ்ட பதில் சொல்லியே ஆகணும், என்ன கொல்றாங்களே'னு ஒரே அலறல். வெளில இருந்தவங்க எல்லாமே வெலவெலத்துப் போயிட்டாங்க ����

    ReplyDelete
    Replies
    1. "அல்லாஹ்ட்ட பதில் சொல்லியே ஆகணும்" - இதுதான் real ROFLMAX.

      Delete
  27. "எனக்கு பலாப்பழ காமடி நெனவு வந்துச்சு" Can you write the comedy

    ReplyDelete
  28. Song interlude was astounding

    ReplyDelete
  29. ரொம்ப நாள் கழிச்சு விழுந்து விழுந்து சிரிச்சேன் :D முதல் பாகம் போலவே மரண மாஸ்!

    ReplyDelete

Post a Comment

Pass a comment here...