Posts

Showing posts from July, 2014

காருக்கெதுக்கு அச்சாணி?

ஓட்டலில் அடுத்தவர் டேபிளைப்பார்த்து டிட்டோவாய் ஆர்டர் செய்வதில் துவங்கி , தம் பிள்ளைகளை குறிப்பிட்ட ஸ்கூல் / காலேஜில் சேர்ப்பது, கல்யாணத்துக்கு கிலோ கணக்கில் நகை நட்டுபோட்டு (உண்மையிலேயே நட்டு போடுவாங்களா என்ன?) பஃபேங்குற பேர்ல தட்டுல இருக்க பாதி சாப்பாட்ட குப்பைக்கு அனுப்புற வரை கூச்ச நாச்சமேயின்றி அடுத்தவர் செய்வதையே செம்மறியாடாய் நம் மக்கள் செய்வதற்கான காரணத்தை எங்கே தேடுவது? வரதட்சணைக் கொடுமை தலைஸ்டெயிட்டனிங் செய்து கொண்டு ஆடுகிறது என ஒரு பக்கம் குமுறிக்கொண்டே, ”நம்ம சொந்தக்காரனுங்கள்லாம் மூக்கு மேல வெரல வெக்கிற மாதிரி என் வீட்டுக்கல்யாணத்த நடத்துறேன் பார்” என்று வறட்டு கௌரவத்திற்காக, இருக்கும் எல்லா டிசைன் வட்டியிலும் கடன் வாங்கி, பிற்பாடு விழிபிதுங்கி சுற்றுவது ஏன்? விருந்துக்கு வருபவர்கள் மூக்கில் விரல் வைக்க வேண்டுமென்றால் முள்ளங்கியும் மொச்சக்கொட்டையும் போட்டால் போதாது? ஃபன்னி ஃபெல்லோஸ். வீண் பெருமையோடும் பகட்டோடும் சுத்திக்கிட்டிருக்க நம் அனைவரையும், நுகர்வுக்கலாச்சாரமானது, அம்மன் பட க்ளைமாக்ஸ் ரம்யா கிருஷ்ணனாய் மாறி சூலாயுதத்தில் டாஆஆஆஆய் என மொத்தமாய்க்க