Posts

Showing posts from July, 2023

꧁❦ₒ••▫꒷ₒ︶❦∙·▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫꧁❦❧•~ ஷி ~•❧❦꧂▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫·∙❦︶ₒ꒷▫••ₒ❦꧂

Image
  🌕 அந்த டான்ஸ் பாரின் வாசலில் மிகச்சரியாக 10 மணிக்கு நின்றான் சிவராமன். பௌர்ணமி விளக்கோடு போட்டி போட்டு அந்தக்கட்டடத்தின் விளக்குகள் பற்பல நிறங்களை அந்தப் பகுதிக்கே தெளித்து கோலம் போட்டபடி இருந்தன. அத்தனை வகை உடைகளிலும் நவயுவதிகள் வலம் வந்து கொண்டிருந்தனர். அவர்களுக்குள் ஹவ்வா எங்கேனும் தட்டுப்படுகிறாளா எனத்தேடியபடி அவளுக்கு மெசேஜ் அனுப்பினான்.  Hey I reached, wru? I’ll be there by 12ish.  First meetingகுக்கே பேய் டைம்லதான் வருவியா? It’s too early. They’ll start around midnight only. சரி நா உள்ள போயி பராக்கு பாக்கறேன். Done.  பப்பின் வாசலிலிருந்தவன் புன்சிரிப்போடு வரவேற்று, அனுமதி டிக்கெட்டை ஸ்கேன் செய்து, "Go straight, take the stairs at left sir, enjoy the night" என வாழ்த்தி வழியனுப்பினான். படியேறி இரண்டாவது தளத்துக்கு வந்ததும் ஒரு போர்டில் அன்றைய இரவாட்டத்தின் பெயரும் அதற்குப் பக்கத்தில் ஒரு அம்புக்குறியும் போடப்பட்டிருந்தது. அந்த போர்டைச் சுற்றி பல்வண்ணக்கண் சிமிட்டும் LEDகள். பார்ட்டி ஹாலின் கதவைத் திறந்ததும், உள்ளிருந்து பேரிசை, மதுவாடை, உற்சாகத்தின் பெருங்கூச்சல்