꧁❦ₒ••▫꒷ₒ︶❦∙·▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫꧁❦❧•~ ஷி ~•❧❦꧂▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫·∙❦︶ₒ꒷▫••ₒ❦꧂

 🌕





அந்த டான்ஸ் பாரின் வாசலில் மிகச்சரியாக 10 மணிக்கு நின்றான் சிவராமன். பௌர்ணமி விளக்கோடு போட்டி போட்டு அந்தக்கட்டடத்தின் விளக்குகள் பற்பல நிறங்களை அந்தப் பகுதிக்கே தெளித்து கோலம் போட்டபடி இருந்தன. அத்தனை வகை உடைகளிலும் நவயுவதிகள் வலம் வந்து கொண்டிருந்தனர். அவர்களுக்குள் ஹவ்வா எங்கேனும் தட்டுப்படுகிறாளா எனத்தேடியபடி அவளுக்கு மெசேஜ் அனுப்பினான். 

Hey I reached, wru?

I’ll be there by 12ish. 
First meetingகுக்கே பேய் டைம்லதான் வருவியா?

It’s too early. They’ll start around midnight only.

சரி நா உள்ள போயி பராக்கு பாக்கறேன்.

Done. 

பப்பின் வாசலிலிருந்தவன் புன்சிரிப்போடு வரவேற்று, அனுமதி டிக்கெட்டை ஸ்கேன் செய்து, "Go straight, take the stairs at left sir, enjoy the night" என வாழ்த்தி வழியனுப்பினான். படியேறி இரண்டாவது தளத்துக்கு வந்ததும் ஒரு போர்டில் அன்றைய இரவாட்டத்தின் பெயரும் அதற்குப் பக்கத்தில் ஒரு அம்புக்குறியும் போடப்பட்டிருந்தது. அந்த போர்டைச் சுற்றி பல்வண்ணக்கண் சிமிட்டும் LEDகள்.




பார்ட்டி ஹாலின் கதவைத் திறந்ததும், உள்ளிருந்து பேரிசை, மதுவாடை, உற்சாகத்தின் பெருங்கூச்சல், பல்நிற ஒளி இவையனைத்தும் இருக்கும்  என நினைத்த சிவராமனுக்கு ஏமாற்றம். இவை ஏதுமின்றி, அவ்விடத்தை இரவுக்குத் தயாராக்கிக்கொண்டிருந்தனர் Bartenderகளும் Bouncerகளும்.


'தேட்டர்ல படம் பாக்கபோறப்ப White screen to White screen பாக்கற பழக்கம் இங்கயும் வந்துருச்சு.  
கொஞ்சம் யர்லியா வந்துட்டமோ? இவள்ட்ட சொன்னா அதுக்கும் எதாச்சும் மொக்க குடுப்பா.'   

'இன்னேரம் இத நெனச்சதே அதுக்கு மூக்கு வேத்துருக்கும். மெசேஜ் வந்தாலும் வரும்' என   நினைத்துக் கொண்டிருக்கும்போதே மொபைலின் vibration motor கிர்ர்க் என்றது.



வாங்குனியா 💡? எத்தன வாட்ஸ்?
அதெல்லாம் இல்ல
ஆம்பியன்ஸ் சுத்திப்பாக்கலாம்னு தான் சீக்கரமா வந்தேன்
இல்லாத மீசைல மண் ஒட்டிருக்கு பார்.
😱 மீச ஷேவ் பண்ணிருக்கது எப்பிடி தெரியும்?
மீச மட்டுமில்ல நீ எங்கெங்க ஷேவ் பண்ணிட்டு
வந்துருக்கன்னு எல்லாம் எமக்குத் தெரியும்.
Adinggggggggggg


நட்ட நடுவில் dance floor. அதைச் சுற்றி நான்கு மூலைகளிலும் பார். ஒவ்வொரு பாரிலும் நீர், பெட்ரோல், 

மண்ணெண்ணெய், கோக் என அனைத்து நிறங்களிலும் மது நிறைந்த போத்தல்கள். பார்டெண்டர் டேபிளில் 

வரிசையாக மதுவைக் கொப்பளிக்கும் குழாய்கள். நயத்தோடு அடுக்கப்பட்ட கண்ணாடிக் குவளைகள். ஜீன்ஸ் 

பேண்ட்டும் டக்-இன் செய்த கருப்பு டிசர்ட்டும் அணிந்த இளம்பார்பெண்டிர்கள். Popeye கார்ட்டூனில் வரும் 

Plutoவைப்போல ஆஜானுபாகுவான பௌன்சர்கள். எல்லோர் காதுகளுக்குள்ளும் சிறிய பச்சை நிற ஒளி உமிழும் இயர்ஃபோன் சொருகப்பட்டிருந்தது. 


Dance floorரின் மத்தியில் சிறு மேடையிட்டு அதில் DJ நின்றிருக்க, DJவைச்சுற்றி electronic போர்டுகள் 

அதன் சுவிட்சுகள் மற்றும் DJவை நெருங்காதபடிக்கு பாதுகாப்புத் தடுப்புக் கம்பி, Ceilingகில் ஆயிரம் 

கலர்க் கண் முளைத்தது போல் ஒளிரும் விளக்குகள். அவ்விடத்தைத் துழாவித் துழாவி அலசிக் கொண்டிருந்தன. 


ஒவ்வொரு விளக்குக்குள்ளும் ஆயிரம் எதிரொளிக்கும் விழி (reflectors) பதிக்கப்பட்டு அவை ஒளியைப் 

பேரொளியாக்கி விளக்குகள் அறை முழுதும் தன் தலையைச் சுழற்றிச் சுழற்றி நோட்டம் விட்டுக் 

கொண்டிருந்தன. அந்தச்சூழல் முற்றிலும் வேறு உலகமாய்த் தெரிந்தது சிவராமனுக்கு. பூமிக்குள் 

புதையுண்ட இருள் பொதிந்த ரகசிய உலகம். 



பப் முழுக்க இருளும், இருளைக் குத்தித் துளைக்கும் பல்நிறக் கதிர்களும் அதி வேகத்தில் ஆடிக் 

கொண்டிருந்தது. ஒரு இடம் ஒரே நேரத்தில் அத்தனை இருட்டாகவும் அத்தனை நிறங்களோடும் இருந்தது.



ஒளிக்கற்றை துளைக்காத ஏனைய இடங்கள் முழுக்க அழுத்தமான காரிருள் சூழ்ந்திருந்தது.  

சீலிங் விளக்குகளுக்குக் கீழே, மாபெரும் திரையில் ஒளிப்படங்களும் ஒளி ஓவியங்களும் ஓடிக்கொண்டிருந்தன.


டிஜே பாடல்களை ஒலிக்கவிட்டான். 


Dance ஹாலின் சீலிங்கில் இருபுறமும் பூதகண ஸ்பீக்கர்களால் அடுக்கப்பட்டு Guardian angelபோல் 

தோற்றமளித்த இரண்டு பெரும் ஸ்பீக்கர்கள் இசையைப் பேரொலியாக்கி அலறத்துவங்கியது. இசையில் bass அதிர்வுக்குத்து வருகையிலெல்லாம் முகத்தில் குப்குப்பென்று காற்று ஊதியது. 


இதற்குள் அங்கு நன்றாகவே கூட்டம் சேர்ந்து விட்டது. ஹாலுக்குள் நுழைவோர், கதவு திறக்கப்பட்டதுமே 

ஆடத் துவங்கி, இசைக்கொப்ப கழுத்தையும் கால்களையும் தோள்பட்டைகளையும் கைகளையும் ஆட்டிக் கொண்டே நுழைந்தனர். சிலரின் நடனம் அவர்கள் dance floorருக்குள் நின்றபடியே வழுக்கிக் கொண்டு செல்வது போலிருந்தது.


இருளும் இசையும் புகையும் மதுவும் போட்டி போட்டுக்கொண்டு ஆடின. சிவராமன் மொபைலை எடுத்து,



எப்ப வருவ?

In some time. Are you enjoying it?
என்னத்த எஞ்சாய்மெண்ட்.
எல்லாவனும் ஜோடியா ஆடிட்டிருக்கான்.
நான் வெறுங்கைய வீசிட்டு நிக்கறேன்.
Get a beer man. Locally brewed.
நா வர்ற வரைக்கும் அத கைல புடிச்சுட்டு இரு.
அதயா? எத?
DEI. Beerர புடிக்க சொன்னேன்.
பழக்கதோஷத்துல அத புடிச்சுட்டு நின்னுடாத.
பௌன்சர்ஸ் காதப்புடிக்கிறாப்ல கொத்தா தூக்கி
வெளிய போட்ருவாங்க.


Ading. நீ வர வரைக்கும் இது, வந்ததும் எத புடிக்க?

கைக்கு வாகா எது கெடைக்குதோ அது.

நீ வா. இன்னைக்கு ஒரு புடி







DEIIIIIIIIIII 😌😌😌😌

நேரம் செல்லச் செல்ல, மதுவின் கைங்கர்யத்தால் inhibitionகள் விலக, அங்கே புதிய உறவுகள் நொடியில், இடையில், இடியில் உண்டாகிக்கொண்டிருந்தன. 

ஒவ்வொருவரைக் கடக்கும் போதும் ஐரோப்பிய பெர்ஃப்யூம் மணத்தது.

ஏசி அறையின் வெளியே காத்திருப்போருக்கு, அவ்வறையின் கதவு திறந்து 

மூடப்படும் போதெல்லாம் சில நொடிப்பொழுது ஏசியின் குளிர்விக்கப்பட்ட காற்று வீசுமே, 

அப்படி ஒரு ரம்மியம், கடப்போர் மீதிருந்து வீசும் தற்காலிக பெர்ஃப்யூம் வாசத்தில்.



நியான் லேசர் விளக்கின் மந்திரத்தால் பலரின் ஆடைகளும் ஷூக்களும் லேஸ்களும் இன்னும் 
சிலரின் பற்களும் கூட ஒளிர்ந்தன. எங்கெங்கும் சிரிப்பு, காதல், காமம். அதீத இசையொலியால் 
பேசும் அனைவரும் இரைந்து கொண்டிருந்தனர். அப்போதும் புரியாத சிலர், சொன்னதையே 
திரும்பச் சொல்லிக் கொண்டும் சைகையினால் காட்டிக் கொண்டுமிருந்தது ஏனோ funny (கேலி)யாகப்பட்டது சிவராமனுக்கு. 

மூவரடங்கிய ஒரு பெண் குழுவில் குழந்தைமுகப் பெண்ணொருத்தி கோணலாக கேலியாக ஆடி ஒவ்வொரு அசைவுக்கும் வெடித்துச் சிரித்துக் கொண்டிருந்தாள். ஆடல் சிரிப்பு அசைவு சிரிப்பு குதிப்பு சிரிப்பு. அவளால் கட்டுப்படுத்த முடியாத சிரிப்பு. எதைப்பார்த்தாலும் சிரிப்பு. என்ன செய்தாலும் சிரிப்பு. அவளைக் கண்டவர்க்கெல்லாம் தொற்றிக் கொள்ளும் அக் contagious சிரிப்பு.

அவ்விடத்தில் கூட்டம் இன்னும் அதிகரித்தது. கூட்டத்திலிருக்கும் நட்பைத் தேட, 
ஒருவருக்கொருவர் வீடியோ கால் செய்து, தாமிருக்கும் இடத்தை அடையாளமாகக் காட்டி 
ஒன்று கூடினர். 

இசைச் சங்கிலிக் கோர்வையில் அடுத்த இசையாக 

Dark Techno (Infraction - Almost Evil) இசை ஒலிக்க ஆரம்பித்தது. 


அங்கு ஆடும் ஒவ்வொரு ஜோடியையும் குழுவையும் தனியரையும் நோட்டமிட்டுக்கொண்டே 
பியரைப் பருகினான். பியரின் குளுமை க்லாசைப் பிடித்திருக்கும் விரல்களில் ஊடுருவியது. 
அவ்விடத்தில் எல்லாமே அதீதமாகத்தான் இருந்தது. 

எதுவுமே மிதமாக இல்லை. குளிர், மணம், மது, உற்சாகம். எல்லாமே அதீதம். அதீதம்.

இளங் கன்னி ஒருத்தி தன் மொபைலில் யாருக்கோ அதிவிரைவு மெசேஜ் அனுப்பிக் கொண்டிருந்தாள். அவள் கட்டை விரல்கள் keypadல் நர்த்தனமாடியதைப் பார்க்கையில் பெரும் பசியிலிருந்த இரு கோழிகள் தமது அலகால் வேகவேகமாக சிதறிக் கிடக்கும் அரிசிமணிகளைக் கொத்துவதைப் போலிருந்தது.

இந்தக் காட்சிகளுக்குள் லயித்துக் கொண்டிருந்த சிவராமன் திடீரென அந்த மணத்தை உணர்ந்தான். 
அச்சூழலுக்குச் சற்றும் பொருந்தாத, முற்றிலும் வேறுபட்ட மணம். 

அவனைச் சுற்றிலும் கமழ்ந்த மணம். மல்லிகை மணம். இல்லை அது மல்லிகையல்ல, அன்னாசி? அல்ல. ஊதுபத்தி அல்ல, தண்ணீர்ப்பாசி அல்ல, சந்திரிகா சோப் அல்ல வேறு ஏதோ ஒன்று இவையெல்லாம் கலந்த ஒன்று. 

முதன்முறையாக இந்த மணத்தை ஒருமுறை காட்டுக்குள் trekking போனபோது உணர்ந்திருக்கிறான். 

அங்கு பூத்திருந்த கையகல நிஷாகந்தியிலிருந்து கமழ்ந்த மணம்.

ஸ்பீக்கர்கள் அப்பாடலில் வரும் bassசுக்காக சற்றே கம்ம, அவன் காது மடல்களுக்குப் பின்னால் ஒரு 
மென்சூடான காற்று, யாரோ ஊதியது போலிருந்தது. 

திடுக்கிட்டுத் திரும்பிய சிவராமன் முன் ஹவ்வா தோன்றினாள்.

அத்தனை ஸ்பீக்கரிலிருந்தும் Almost Evilலின் உச்ச இசை வெடித்தது.


°°°°°°。°°°°°°°°°°。°°°°°




அவர்கள் பேச வாய் திறக்கும் போதெல்லாம் அவ்விடத்தின்

பல்லாயிர வண்ண வண்ண ஒளித் துகள்கள்

அவர்கள் ற்ளின் மேல் ட்டு அலையலையாய்த் தழுவிச் சென்றது. 

SOOOO... FINALLYYYY

YEAH FINALLY


அந்த இரைச்சல் மிகுந்த இடத்தில், அடுத்தவருக்குக்

கேட்க வேண்டுமென்றால் அலறித்தான் பேச வேண்டி இருந்தது.


HOW'YOU?

நீயே சொல்லுப்டிருக்கேன்னு... எனத் தன் வெள்ளை நிற ஆடையை விரித்துக்காட்டினாள்.



அவளை மேலிருந்து கீழ் ஒருமுறை பார்த்து, மீண்டும் கீழிருந்து மேலே பார்க்கத் துவங்கி, பார்வையை அவள் மார்பில் நிலைத்தி, 'ரொம்ம்ம்ப நல்லாவே இருக்கு' என்றான். 

செல்லமாக அவன் இதயத்தில் ஒரு குத்து விட்டாள். 

ஏன் இந்த பப் சூஸ் பண்ண? 


காரணமாதான். Wait for it.

எதும் சர்ப்ரைசா?


Wait for it Man! எனச்சொல்லி அவன் கைகளுக்குள் ஒரு சிறிய பொருளை "Keep it" எனத் திணித்தாள். 

"என்னது இது?"

"The Song of the night. Meant for our celebration. கேக்கறப்ப குடு"

"Okay" என அதை வாங்கித் தனது pantடின் பின் பாக்கெட்டில் சொருகினான்.

ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் அடுத்த பாடலின் துவக்கம் இசைபோடு 

கோக்கப்பட்டு இசைச்சங்கிலி இடைவிடாது தொடர்ந்தது. ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு 

புறத்திலிருந்தும் கூச்சல் பிளந்தது. அவரவரருக்கான ஃபேவரிட் பாடலை டிஜே விளையாடுகையிலும் 

ஒவ்வொரு புறத்திலிருந்து உற்சாகக் குரல்கள் கூவின.

கையில் கண்ணாடி மதுக்குவளைகளோடும் இடைகளோடும் துள்ளிக்கொண்டிருந்தது கூட்டம். 

அவ்வப்போதும் அடிக்கடியும் துணையின் இதழைத் துவைத்துக் கொண்டும்.


எதப்பாக்கறதுனே தெர்லியே...


அப்ப பாக்கதான் வந்தியா? 


"அது வந்து…" என்றவனை “வா ஆடலாம்” என அவள் இழுக்க, 


FANAAAAAAAAA என உச்சஸ்தாயியில் ரஹ்மான் அங்கிருந்த அத்தனை  பிரம்மாண்ட ஸ்பீக்கர்களிலிருந்தும் ஒலித்தார். 


ஆச்சர்ய அதிர்ச்சியில், ஆங்கிலத்தில் சொல்வதானால், 

சிவராமன் freaked out, "ஏய்ய்ய்ய்ய் நம்ம தமிழ் பாட்டு" என உற்சாகக்குதியிட்டான். 


[Note: For better experience, STOP reading further, start playing fanaa now. Listen it in headphones preferably. Listen to it twice. Listen again for the third time and continue reading.] 


Boosted Bass அவ்விடம் முழுவதிலும் இசையால் காற்றைக் குத்தியது. 

ரிதத்துக்கேற்றபடி மொத்தக் கூட்டமும் தொடர் குதியிட்டது. 

Guardian angelகள் போல் dance floorரின் இரு புறமும் நிறுவப் பெற்றிருந்த 

ஸ்பீக்கர்களிலிருந்து வந்த ரிதவொலியில் அவ்விடம் முழுதும் அதிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ந்தது... 


♫⋆。♪ ₊˚♬ ゚.



[Note: to experience the 'அதிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ந்தது' effect, open your hand and place the palm close to your mouth and read the word அதிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ந்தது aloud]


♫⋆。♪ ₊˚♬ ゚.


     யாக்கை திரி    காதல்   சுடர்   fanaaaaaaaa      ஜீவன் நதி    காதல்   கடல்    fanaaaa



கூட்டத்தோடு கூட்டமாய் கைகளை மேலெழுப்பி எம்பி எம்பிக் குதித்தாடினார்கள் இருவரும்.


இசையோ இரவோ மதுவோ வரியோ அவளின் இயைவோ சிவராமனை அவளிடம் இன்னும் 

நெருங்கச் செய்தது. அடக்கி வைத்திருந்த காமம் கொஞ்சம் கொஞ்சமாக வெறியாகக் கிளம்பியது. 


இசையின் அசைவுக்கேற்றாற்போல் இருவரின் இடைகளும் இசைந்து, 

மகுடிக்குக் கட்டுப்பட்ட அரவம் இரண்டு படமெடுத்து ஆடுவது போல் வளைந்து நெளிந்து ஆடினர்.


தொடுவோம் 


தொடர்வோம்


படர்வோம்


மறவோம்

துறவோம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

தொடுவோம்

        தொடர்வோம்


படர்வோம்

       மறவோம்

இறவோம்


ஜென்மம் விதை காதல் பழம் லோகம் த்வைதம் காதல் அத்வைதம் சர்வம் சூன்யம்



காதல் பிண்டம் மானுடம் மாயம் காதல் அமரம்



திடீரென சிவராமனை இறுக்க்க்க்க்க அணைத்து உதட்டோடு உதடு புதைத்தாள் ஹவ்வா.

உலகத்தின் காதல் எல்லாம் ஒன்றே ஒன்று அது

உள்ளங்கள் மாறி மாறி பயணம் போகும்


கிறுகிறுத்துப்போனான். 


அத்தனை அழுத்தமான ஒன்றை கால்தவறிக் குப்புறக் கீழே விழுகையில் கூட அவன் 

உதடுகள் அனுபவித்ததில்லை. 


அவள் அவனை முத்தமிடவில்லை.  முத்தம் உறிஞ்சினாள். 


நீர்த் தொட்டிக்குள்ளிருந்து வெளியே எடுத்துப் போட்ட மீனொன்று துடிப்பது போல் 

அவளின் முத்தங்கள் அவன் முகம் முழுவதிலும் வெடித்தன. 


அந்தக் கொத்துக் கொத்தான முத்தத்தில் அவனின் உயிரை உறிஞ்சிக் கொள்ளும் முஸ்தீபு தெரிந்தது.


டிஜே மீண்டும் இவ்வரிகளை ஒலியதிரவிட்டான்.


உலகத்தின் காதல் எல்லாம் ஒன்றே ஒன்று அது

உள்ளங்கள் மாறி மாறி பயணம் போகும்


 


முத்தத்தில் விட்டவைகளை

கண்களால் உறிஞ்சிக் கொள்வதுபோல்

மிகமிகமிகமிக நெருக்கமாக, கூர்மையாக அவன் கண்களை நோக்கினாள். 


"அப்டிப்பாக்காத.

Black hole எல்லாத்தையும் உள்ள இழுத்துக்குமாம்.

Even light can’t escape it.

உன் கண்ணு கருப்புக்குள்ள போயிடப்போறேன்."

என எதையோ பிதற்றி வைத்தான். 


மீண்டும் ஒரு இழு.

முன்னிலும் அதிக இறுக்கம்.

முன்னிலும் ஆழமான அழுத்தமான பெருமுத்தம். 


🎶… FANAAAAAAAAAAAAAAA…🎶 


அகிலம் அதிரும் அத்தனை பேரிரைச்சலிலும் 

நிசப்தம் நிலவியது போலிருந்தது சிவராமனுக்கு. 

ஒற்றை முத்தத்தின் வினை. 


அதை முத்தம் என இத்தனைச் சிறு சொல்லால் குறிப்பிடுவது 

அம்முத்தத்திற்குச் செய்யும் அவமரியாதை.


ஆடிக்கொண்டே அந்தக்கூட்டத்தைக் கடந்து பார்டெண்டரிடம் சென்றனர். 


அங்கிருந்த அபரிமித ஒலியால் இவர்கள் சொல்வது பார்டெண்டருக்குச் சரியாய்க் கேட்கவில்லை. 

தொலைவிலிருந்து பார்த்தால் அவர்கள் இருவரும் டேபிலுக்கு இப்புறமிருந்து பார்டெண்டரை 

காச்மூச்சென்று கத்துவதுபோலிருந்தது. 


சிவராமனின் ஜீன்சுக்குள் கைவிட்டு அவன் மொபைலை எடுத்து அவன் கரத்தையெடுத்து அவனிடம் 

கைநாட்டு வாங்கினாள். மொபைல் தன்னைத் திறந்துகொண்டது. 

அதில் 2 shots என எழுதி பார்டெண்டருக்குக் காட்டினாள்.


அவன் புமுறுவலோடு மதுவை எடுக்கத் திரும்பினான். 


சிவராமன் மொபைலை வாங்கி Water???

என அடித்து பார்டெண்டரிடம் காட்டினான். 









அவன் ஒரு தண்ணீர் பாட்டிலை எடுத்துக்கொடுக்க, இரண்டுக்காகவும் 

தனது அட்டையை பார்டெண்டன் நீட்டிய கையடக்க மிசினில் ஒத்தியெடுத்தான். 


வேற எதுவும் வேண்டுமா? என ஹவ்வா சைகையில் கேட்க, 

அவன் மொபைலில் எழுதி அவளிடம் காட்டினான். 




அவனது bumமை, BP பரிசோதிக்கும் கருவியைப் பிசைவதுபோல் ஒரு முறை பிசைந்து உதட்டில் 
மீண்டும் ஒரு முத்தம் அளித்தாள்.

ஷாட்ஸை பார்டெண்டர் நீட்ட, அதை வாங்கி, 
"For the night, for you, for us. For every fuck left for the night"
என்று இருவரும் cheers சொல்லி ஒரே கல்ப்பில் விழுங்கினர்.


எரிமலைக் குழம்பிலிருந்து ஒரு ஸ்பூன் அள்ளிக் குடித்தது போல் தொண்டையிலிருந்து 
பெருங்குடல் வரை ஷாட் இறங்கிய ஒவ்வொரு மில்லிமீட்டரிலும் அனல் காந்தியது சிவராமனுக்கு.

Dance floorரில் உற்சாகத்துள்ளல் வேறொரு பரிமாணத்துக்குச் சென்றது. 

ஆட்டத்தில் உக்கிரம் கூடியது. 


சிவராமனின் இறுக்கமான ஜீன்சில் மீண்டும் கைவிட்டாள். 


"நீ ஒவ்வொருக்கா" என ஆரம்பித்து அவன் சொல்ல வந்தது அங்கிருந்த கூச்சலில் கரைந்து போனது.


WHAT?? என ஆடிக்கொண்டே இவள் கேட்டது அவனுக்கும் கேட்கவில்லை. ஆனால் 
அவள் முகத்தை வைத்துக் கண்டுகொள்ள முடிந்தது. 


Wait எனச் சைகை காட்டி, அவள் காதுக்கு மிக அருகில் தனது உதட்டை எடுத்துச் சென்றான். 
அத்தனை நெருக்கத்தில் அவளின் கன்னத்திலிருந்து வெளிப்பட்ட auraவின் வெம்மை 
இதமாக இருந்து ஏதோ செய்தது.

காதுக்கருகில் சென்று, “நீ ஒவ்வொருக்கா…” என உரக்கச் சொன்னான். 

அவள் உடன் இவன் காதுக்கு அருகில் வந்து.. நா ஒவ்வொருக்கா? என மறு கேள்வி கேட்டாள். 
அப்போது அவள் கன்னம் உரசியது. அது குழந்தையின் கன்னத்தைப்போல் மிருதுவாக இருந்தது. 

இச்சந்தர்ப்பம் தந்த தைரியமா, அல்லது மதுவின் கைங்கரியமா, அல்லது இந்திரியத்தின் உந்துதலா 
தெரியவில்லை, இதைப் பயன்படுத்தி மீண்டும் மீண்டும் அவள் கன்னத்திற்கு அருகில் சென்றும், 
கன்னத்தில் உரசியும், தான் சொல்ல வந்ததை வார்த்தை வார்த்தையாய்ப் பிய்த்துக் கூறினான். 
அவள் கன்னத்தில் உரசையிலெல்லாம் நாசி முழுதும் அவள் வாசம் ஏறியது. 

“நீ ஒவ்வொருக்கா…”


“நா ஒவ்வொருக்கா..?”


“ஜீன்சுக்குள்ள கைவிடுறப்பையும்”


“ம்ம்ம்??"


“வேற எதையோ புடிக்கப்போறன்னு நெனச்சேன்"


“ஆவ்வ்தான்…”


அவள் சொன்னது இவனுக்கு விளங்கியது.

இருப்பினும் மீண்டும் கன்னமுரசி,

என்னதே…? எனக்கேட்டான்.


“ஆசதான்…” என மீண்டும் கூறினாள். 


பதிலுக்கு இவன், “ஆமா ஆசதான்” என்றான்.


இருவருக்குள்ளும் உஷ்ணம் பரவ இன்னும் நெருங்கி ஆடினர்.

அங்கு இருந்த அனைவரும் அனைவரோடும்

இப்படி எதற்கோ கட்டுப்பட்ட ஒரு நெருக்கத்தில்தான் இருந்தனர்.


அவன் ஜீன்சுக்குள் கைவிட்டு அவன் மொபைலை எடுத்து,

சடசடவென அதில் டைப் செய்து காட்டினாள். 


“Music sounds better with you.”


பதிலுக்கு ஃபோனை வாங்கி,

Everything feels என டைப் செய்ய ஆரம்பித்தவன், 

பாதியில் நிறுத்தி, மொபைலைப் பாக்கெட்டில் வைத்து,

"Everything seems like a dream to me" அவள் காதுக்குள் ஓதினான்.


"Really?" - அவள்


"ஆமா கிள்ளிப்பாத்துக்கணும்" - அவன்


"கிள்ளிக்கோ" என்று தனது bodiceசைச் சற்று கீழே இழுத்தாள். 

சுருக்கங்கள் சற்றுமின்றி, எண்ணெய்ப் பளபளப்பு கொண்ட அவளின் முலையின் 
அடர்மருதாணி நிற காம்பு வட்டத்தைக் கண்டு திக்கு முக்காடிப்போனான். 

ஒரு ஒரு ரூபாய் நாணயத்தை அடையாளமாய் வைத்து 
வட்டம் போட்டது போல், 
circumferenceசில் பிசிறுகள் ஏதுமற்று, 
pixel perfect வட்டமாக, 
நல்ல பாம்பின் தோல் மினுமினுப்பில் இருந்தது அவளின் areola.

அதைக் கண்டதும் அவனின் முதுகுத்தண்டு 100Kவோல்ட் ஷாக் வைத்தாற்போல் 
சிலிர்த்தது. உடலின் ரோமங்கள் அனைத்தும் ஒரு நொடி எழுந்து அமைந்தன. 

தன்னிடம் தூக்கி வீசப்பட்ட கருவாட்டுத் துண்டை, தரைதொடுமுன் அதை அந்தரத்திலேயே 
பாய்ந்து கவ்வும் பூனையைப் போல அவளின் areolaவைப் பல்படக் கவ்வினான்.

⚡️

ஆம்ஸ்டர்டாமின் கால்வாய்களில் ஒன்றில் அவர்கள் இருவரையும் சுமந்து மிதந்தபடி அமைதியாகப் 
படகு ஒன்று நகர்ந்து கொண்டிருந்தது.


"ஒண்ணு கவனிச்சியா? நமக்கே நமக்குன்னு காத்திருந்தாப்ல

எல்லா பாலத்துலையும் சிக்னல் பச்சைலருக்கு.

ஒருவேள boatsசுக்குத்தான் priorityயோ?" என்றான்.


"When the deadly meets holy, இந்த வழி மட்டுமில்ல,

you can even pass through galaxy" என்றாள்.



"இந்த அட்மாஸ்பியரே ஒரு மாதிரி bizarreரா இருக்கு.

அஞ்சு டிகிரி இருக்குமா குளிர்?

நைட்டுன்றதாலயே அதிகமா குளுருது போல.

செம்ம அமைதியா இருக்கு.

இந்த boat போற சத்தம் கூட கேக்கல.

ஒருவேள என் காது செவிடாகிருச்சானு தெரியல.

I think I'm high." என்றான்.


"Yes you are high. துடுப்பு போடுறதுல ஒரு knack இருக்கு.

அப்பிடி போட்டா தண்ணி சத்தம் கேக்காது." 


"நீ துடுப்பு போடுறதப்பாத்தா எதோ ரெண்டு கைலயும்

வாள் சொழட்டுறாப்ல இருக்கு."


அவன் சொன்னதைக் கேட்டு அவள் புன்முறுவினாள். 

"It looks like your face is reflecting the moon.

எதோ அதோட லைட்ட வாங்கி amplitude பண்ணினாப்ல.

Your face is literally glowing."

மீண்டும் சிரித்தாள். 


"ரொம்ப ஒளள்ர்ரேனோ? I’m sorry I’m too confused.

ஒரு அம்ஞ்சு செகண்ட் முன்னதான் பப்ல இருந்த ஞாபகம்.

இப்போ எதோ சினிமால சீன் கட்டான மாதிரி

டக்குனு இங்கருக்கோம்.

I don’t even remember when and how we ended up here.

I think I got a memory slip."

"Matrix படம் பாத்ததில்லியா நீ?" சிரித்தாள்.

என்னது?

Nothing.

அமைதியான முகத்தில் சிரிப்பை ஒட்ட வைத்ததுபோல அவள் முகத்தின் சிரிப்பு இருந்தது. அதிலிருந்த அமானுஷ்யத்தை அறியும் அறிவுத் தெளிவை அவ்விரவின் மதுக்களின் பயனாலும் அலைமோதும் ஆர்மோன்களின் தயவாலும் இழந்திருந்தான் சிவராமன். மெக்கானிகல் கரங்களிரண்டு செயல்படுவது போல் துடுப்பு போடப் பட்டுக் கொண்டே இருந்தது.



ஊரைக் கடந்து வனத்துக்குள் அந்தக் கால்வாய் ஓடை புகுந்தது. சலனமேதுமின்றி அந்தப்படகும். ஒரு பக்கம் அடர்ந்த மரங்கள் கொண்ட பெருங்காடு. மறுபுறம் கண்ணுக்கெட்டிய தூரம் வரை சதுப்பு நிலம். 
வானில் supermoon பௌர்ணமி. எரிகல்லொன்று பூமிக்குள் நுழைந்தாற்போல் வெளிச்சம் இருந்தது அப்பகுதியெங்கும். படகு ஒரு கரையோரம் ஒதுங்கியது.

சிவராமன் இறங்குவதற்காக, ஹவ்வா தன் கரத்தைக் கரையிலிருந்து நீட்டினாள்.

"ஓய் நீ எப்போ எறங்குன? 
What the fuck is happening with me?"

எனக் கூறிக்கொண்டே, குழப்பத்தை நீக்கும் பொருட்டு தன் உள்ளங்கையைக் கொண்டு தன் பக்கவாட்டுத் தலையை இடித்தான்.

"Come." 

நீட்டிய அவள் கைப்பிடித்து படகிலிருந்து கீழிறங்கினான். 

வனத்துக்குள் அவனை அழைத்துச் சென்றாள் ஹவ்வா. 


"How do you know this place? 
இதுக்கு முன்ன வந்துருக்கியா? 
எதோ ஹாலிவுட் பட graphicsல பாத்த மாதிரி இருக்குது. 
This place is surreal."

"ம்ம்"

இடைவிடாது, அதிகுளிர்ந்த காற்று வீசியபடி இருந்தது.
அந்தக்காடு முழுவதிலும் மரங்களுக்கிடையே இருந்த வெளியின் வழியே நிலா தன் வெளிச்சத்தை உமிழ்ந்து 
கொண்டிருந்தது.

"What’s the time now?" சிவராமன் கேட்க,


"4.18" என்றாள்.


தன் வாட்சைப் பார்த்த சிவராமன்,

"அட ஆமா! எப்பிடி மினிட்ஸ் துல்லியமா சொன்ன?"


பதிலேதும் கூறாமல் முன் நடந்தபடியே இருந்தாள்.


மாயச்சங்கிலியொன்று தன் கழுத்தில் கட்டப்பட்டு

தன்னை இழுத்துச் செல்வதுபோல் உணர்ந்து அவளைத்

தொ

ர்

ந்

து


ந்

தா

ன்.


அந்தப் பகுதிக்குச் சற்றும் பொருத்தமில்லாத



ஒரு மரம்



அங்கே தனித்திருந்தது.



அம் மரத்திற்கென்றே ஏற்பாடு செய்யப்பட்டது போல

நிலவொளி அதன் மேல் வீசிக் கொண்டிருந்தது.


ஹவ்வா அம்மரத்தை நோக்கி நடந்தாள். 


"அந்த மரம் மட்டும் வித்தியாசமாருக்கு. என்ன மரம் அது?"


"Alstonia scholaris" திரும்பிப் பார்க்காமல் பதில் கூறியபடி நடந்தாள்.


மரத்தை நெருங்க நெருங்க ஹவ்வாவின் நடை வேகம் கூடியது. 


அவளைப் பின் தொடர்ந்த சிவராமனுடைய வேகமும்.


தூரத்திலிருந்து பார்க்க அவர்களிருவரும் விரைவு hovercraftடில்

மிதந்து செல்வது போல் இருந்தது. இருவரும் மரத்தையடைந்தனர்.

அங்கே சென்றதும் திரும்பி, அவனை முத்தமிட்டாள்.

அவன் உயிர்மூச்சு

அந்த முத்தத்தின் வழியே

உறியப்பட்டது போலுணர்ந்தான்.


காலின் பெருவிரல் நுனியை ஒரு நரம்பில் கட்டி

உடலுக்குள்ளிருந்து வாய் வழியே

வெளியே இழுப்பது போல இருந்தது அவனுக்கு.

அவனை இறுக்க்க்க்கி அணைத்தாள்.


நிஷாகந்தி மணம் அப்பகுதியெங்கும் கமழத்துவங்கியது.


அவனோடு முத்தவுடலுறவு கொண்டாள். தான் வேறு ஏதோ உலகில் இருப்பதைப் போலுணர்ந்த சிவராமன்,

சுற்று முற்றும் பார்த்து,

"என்ன இந்த எடம் பகல் மாதிரி இவ்ளோ வெளிச்சமா இருக்குது.

நிலாவுலருந்தா இவ்ளோ லைட்?"


"ஆமா."


"நிலாவப் பாத்தா கண்ணே கூசும்போல" 


"அப்ப என்னப்பாரு"


சிவராமன் அவளைப் பார்த்தான்.


ஹவ்வா தன்னை வெளிப்படுத்தினாள். 





🌕


˚⋆。゚☁︎⋆⁺₊⋆ ☀︎ ⁺⋆。☁︎⋆。  ゚‧₊˚*ੈ✩‧₊˚⋆。゚☁︎。⋆。 ゚☾ ゚。⋆✩‧˚


"கம்ப்லைண்ட் பண்ணவன் ஒரு ஒரு மணிநேரம் கழிச்சு கால் பண்ணிருக்கலாம். எனக்கு டூட்டி மாறிருக்கும். I have not planned for this death. I was having breakfast and here we are." 

[Ik heb deze dood niet gepland. Ik was aan het ontbijten en hier zijn we dan.]


சற்று எரிச்சலுடன் கூறினார் Politie Officier Luuk. 


கொலை நடந்த இடத்தை forensic, doctor டீம்களுடன் சேர்ந்து Luuk ஆராய்ந்து கொண்டிருந்தார், detective Michiel உடன்.

"மொதல்ல கால்  வந்ததும் இது எதோ சத்தமா மியூசிக் கேட்ட நியூசன்ஸ் கேசுன்னு நெனச்சேன். இதெல்லாம் வழக்கமா நடக்கறதுதான். Without getting permission, காட்டுக்குள்ள இல்லீகலா பார்ட்டி பண்றப்ப போதைல இப்பிடி சத்தமா பாட்டு கேக்குறது ரொம்ப ருடீன். But this, I
was totally not prepared 
for it, Ik heb nog nooit zoiets in mijn leven gezien." 

"I can never forget this body. கண்ணு வானத்த நோக்கிட்டே...  பொதுவா இறந்து ரெண்டொரு நாளுக்கு அப்பறம் தான் கண்ல இந்த மாதிரி bees மொய்க்கும். But here..."

"The smell of this body is so unique compared to other dead bodies I've seen, and I can remember it even in my dreams. Nothing else smells like this. It's going to take a few days for me to unsee what I saw, unsmell what I smelled. Both doctors and forensic experts have certified this as an unnatural death. It appears that someone with a fetish for death has committed this act, resembling an art and craft."

"Forensicகு எந்த எவிடன்சும் கிடைக்கல. ஒரு சொட்டு ரத்தம் கூட ஒடம்புலையோ, இல்ல பாடிய சுத்தியோ இல்ல. அந்த பாடிலருந்து மொத்த ரத்தமும் pump பண்ணி எடுத்த மாதிரி இருக்கு."

"அந்த பாடி எப்பிடி அங்க வந்துது, யாரும் வேற எடத்துல கொன்னு இங்க வந்து போட்டுருக்காங்களானும் தெரியல. There is no trace of anyone walking around the tree and the spot. 
ஒரு கால்தடமோ இல்ல வேற எந்த தடயமோ இல்ல."

"கம்ப்லைண்ட் என்ன? நைட்டு முழுக்க அந்தக்காட்டுல இருந்து ஒரே பாட்டு சத்தம் கேட்டுதுன்னுதான?"

"அவ்ளோ interior காட்டுக்குள்ளருந்து, இவ்ளோ தூரம் தள்ளி இருக்குற வீட்டுக்கு பாட்டு கேட்டுருக்குன்னா எவ்ளோ பெரிய music system வேணும். அதக் கொண்டு வந்த காராச்சும் இருக்கணும்ல. அது கூட அங்க இல்ல. Car வந்துட்டுப்போன tyre marks கூட இல்ல. Or boatல வந்திருந்தா யாரும் நடந்து வந்த கால் தடம். There is literally nothing." 

"Officer Luuk, கம்ப்லைன்ட் பண்ணவங்க ஒரே பாட்டுக்களா கேட்டுச்சுனு சொன்னாங்களா or

ஒரு பாட்டே கேட்டுட்டு இருந்துச்சுன்னு சொன்னாங்களா?" Detective Michiel கேட்டார். 

கம்ப்லைண்ட் ரிப்போர்ட்டை எடுத்துப்பார்த்த ஆபிசர் லூக், "ஒரே பாட்டு திரும்பத் திரும்ப ஓடினதா தான் சொல்லிருக்காங்க. அந்தப் பாட்டோட மொழி என்னனு புரியலன்னு மென்ஷன் பண்ணிருக்காங்க."


அவர்களிருவரும் எதுவும் தடயம் கிடைக்குமாவென சுற்றி இருக்கும் 

இடங்களைப் பரிசோதிக்க ஆரம்பித்தனர்.


"Officer Luuk, this reminds me of a Dutch folklore ‘The white women of Montferland’.


லூக்குடன் சேர்ந்து அவ்விடத்தைப் பரிசோதித்துக் கொண்டிருக்கையில் டிடக்டிவ் மிஷ்யேல் 

அந்த நாட்டுப்புறக் கதையைச் சொல்லத் துவங்கினார்.

"Montferlandட சேந்த Gert van Beekனு ஒரு விவசாயி ஒரு நாள் அவரோட ஃபேவரிட் பப்ல 

உக்காந்து சாயங்காலம் ஆரமிச்சு ரொம்ப நேரம் நெறய குடிச்சிட்டிருந்தார். 

மொடாக்குடி குடிச்சுட்டு, நிறை போதைல பப்புலருந்து கெளம்பறப்ப, அங்கருந்த கொல்லர் 

ஒருத்தர், Gertகிட்ட, இப்ப கெளம்பாத, இன்னக்கி நெறஞ்ச பௌர்ணமி, இன்னக்கி 

நைட் காட்டுல வெள்ளை யட்சி நடமாடும். அதனால நைட் பப்லயே தங்கிட்டு பகல்ல கெளம்புனு சொன்னார்.

அதக் கேட்டு சிரிச்ச அந்த விவசாயி, கொல்லர ஏளனமாப்பாத்து கேலி செஞ்சார். 

"யட்சி மட்டுமில்ல, எந்தப் பொட்டச்சியும் என்ன எதுவும் செய்ய முடியாது"ன்னு குடி போதை 

தந்த அகங்காரத்துல சொன்னார். 

அப்படியே என் எதிர்ல யட்சி வந்தாலும் நா பயப்பட மாட்டேன், அது ஒன்னோ, ஒம்போதோ, நூறோ, 

அது கூட நைட்டு முழுக்க டேன்ஸ் ஆடுவேன்னார். 

போதைல தட்டுத்தடுமாறி, அந்த பார் கதவ தொறந்துட்டு வெளிய போனார். காட்டுல குறுக்கு வழியா 

போகலாம்னு போறப்ப திடீர்னு அந்த எடத்த வெண்பனிமூட்டம் சூழ்ந்துச்சு. 

மரங்களுக்கு மத்தியில இருந்து மூனு வெள்ள உருவம் வெளிப்பட்டு அந்த விவசாயி பக்கத்துல 

வந்துச்சாம். மொதல்ல மங்கலா தெரிஞ்ச அந்த மூனு பனி உருவமும் கிட்ட வர வர பெண்ணா மாறுச்சாம். 

முழு போதைல இருந்த அந்த விவசாயிய அந்த மூனு பெண் உருவங்கள்ல ஒரு உருவம் 

கையப் புடிச்சு இழுத்து, என் கூட டான்ஸ் ஆடுன்னு சுழற்றுச்சு. 

திடீர்னு அந்த பெண்ணுருவம் அவர இறுக்கமா இழுத்து இன்னும் வேக வேகமா சுழல 

ஆரமிச்சிது. அப்பத்தான் அந்த விவசாயிக்கு பயம் வந்துது. 

அந்த உருவத்தோட இறுகின பிடியில இருந்து தன்ன விடுவிச்சுக்க எவ்ளவோ போராடினாலும் 

அவரோட ஒடம்ப அவரால கட்டுப்படுத்தவே முடியல. அதனால நைட்டு முழுக்க அந்த கொடூரமான 

யட்சி கூட அவர் டான்ஸாட கட்டாயப்படுத்தப்பட்டார். 

மறுநாள் காலைல ஊருக்குப் பக்கத்துல இருந்த காட்டுக்குள்ள அவரோட பிணம் கிடந்துது. 

நைட் முழுக்க ஆட வைக்கப்பட்டதால அவரோட சக்தியெல்லாம் இழந்து உடல் வத்திப்போயி 

ஆஜானபாகுவான அவர் வெறும் எலும்பும் தோலுமா கெடந்தார். 

அவர் ஒடம்புலருந்து ஒரு மோட்டர் வச்சு ரத்தத்த எறச்சாப்ல அவரோட உடல் முழுசும் உலர் திராட்சை 

மாதிரி கெடந்துது. 

அவர் முகத்துல மிரட்சியும் பயமும் கெஞ்சலும் கலந்து இருந்துது. 

கண்கள் ரெண்டும் திறந்தே மேல்நோக்கிப் பார்த்தபடி இருந்துச்சாம். அவர் கண்ண தேனீ சைஸ் 

ஈக்கள் ஆக்ரோஷமா மொய்ச்சுட்டு இருந்துது. அந்த துர்மரணம் நடந்தப்புறம் மக்கள் 

அந்தக் காட்டுக்குப் போற எல்லா வழியையும் அடைச்சுட்டாங்க. 

பௌர்ணமி நைட்ல யாருமே வீட்ட விட்டு வெளியவும் வரதில்ல.

இங்க இவனோட பாடிய பாத்ததும் எனக்கு அந்தக் கதைதான் ஞாபகம் வருது."
சொல்லி முடித்தார் 
officier மிஷ்யேல். 

"May be இவன் போதைப்பொருள் எதுவும் அளவுக்கு மீறி எடுத்திருக்கலாம் இல்லையா?  அதனால நைட்டு முழுக்க கன்றோல் இல்லாம ஆடி இப்பிடி செத்துருக்கலாம்." என்றார் ஆபிசர் லூக்.

"நைட்டு முழுக்க ஓடின பாட்டு எப்பிடி கம்ப்லைண்ட் பண்ண கால் பண்ணதும் திடீர்னு நின்னுருக்கும்? 

"ஸ்லீப் மோட் மாதிரி எதும் இருக்கலாமோ?" தன்னைத்தானே கேட்டுக்கொண்டார் Luuk. 

"By the way எங்க கேட்டீங்க அந்த நாட்டுப்புறக் கதைய? Very interesting." Luuk கேட்க,  

"அது மத்தவங்களுக்கு தான் நாட்டுப்புறக் கதை, எங்களுக்கு பரம்பர கதை." என்றார் Michiel. 

"What do you mean?"

"Yes officier, அந்த யட்சி கொன்ன Gert van Beek எங்க Great grand கொள்ளுத் தாத்தா."

"WHAT? Are you serious?" 

"Yes, he was my ancestor. I'm Michiel van Breek"

 

அவர் சொன்னதைக் கேட்டு அதிர்ந்த ஆபிசர் லூக்கின் காலில் ஒரு சிறிய பொருளொன்று தட்டுப்பட்டது.


மெலிந்த தீப்பெட்டி அளவே இருந்த பழைய ipod ஒன்று. 


"என்னது இது antique பீசெல்லாம் கெடக்குது" என அதை எடுத்த ஆபிசர் லூக், நாணய அளவிலிருந்த அதன் play பொத்தானை அழுத்தினார். 

அழுத்தியதும், அங்கிருந்த அத்தனை மரங்களிலுமிருந்தும் ஒத்திசைந்த ஒலியுடன் அந்தக் காடு முழுவதும் எதிரொலிக்கத் துவங்கியது...

Comments