Posts

Showing posts from May, 2016

ஐலேட்சா ஐலெட்சா… - 2/2

இதோட முந்தின பார்ட்ட படிக்க “ இங்க கிலிக்குங்க ” மற்றொரு நாள், மற்றொரு ஓட்டல்ல ‘எழுதுற’ பரிச்ச. கிட்டத்தட்ட மூணு மூணர மணி நேரம். பரிச்சை ஆரம்பிக்கிறதுக்கு ஒரு மணி நேரம் முன்னமே போய்டணும்னு மெய்ல்ல சொன்னாங்க. நா புலூ & கருப்பு கலர்ல ஒரு பேனா, ஒரு பென்சிலு, பெரிய அழிலப்பர் ஒன்னு எடுத்துட்டுப் போனேன். இன்னைக்கு இன்னும் பெரிய கூட்டம் வந்துருந்துச்சு. தினுசு தினுசா திமுசு திமுசா ஆல் வயஸு, ஆல் சைஸுல லேடிஸ் வந்துருந்தாங்க. ஜென்சுகளும் ஆங்காங்கே காணப்பட்டதா நியூஸ்7 செய்திக் குறிப்பு சொல்லுது. அங்க இருந்த இன்விஜிலேட்டரம்மா முடியட்டும் விடியட்டும் Ad மாதிரி திரும்பத் திரும்ப “ரெஜிஸ்டர் பண்ணாதவங்க பண்ணிக்கங்க, ரெஸ்ரூம் போறவங்க போய்க்கங்க, எக்சாம் ஹாலுக்குள்ள போனதும் ரெஸ்ட்ரூம் போக அனுமதி இல்ல”ன்னு சொல்லிட்டே இருந்தாங்க. ஒரு கட்டத்துல ஒவ்வொருத்தர்ட்டயும் தனித்தனியா ரெஸ்ரூம் போறிங்களான்னு கேக்க ஆரமிச்சிட்டாங்க. கொஞ்சம் விட்டா பஸ்ஸு கெளம்பு முந்தி டயரத் தட்டிப் பாக்குற டிரைவராட்டம் எல்லார் அடி வயித்தயும் தட்டிப்பாத்து பாத்ரூமுக்கு அனுப்பிருவாங்களோன்னு எனக்கு டுர்ராகிருச்சு.  போதாக்

ஐலேட்சா ஐலெட்சா…

Image
“IELTS எழுதப்போறேன்” என ஒன்றுவிட்ட தங்கை ஒன்றிடம் சொன்னபோது, “ஓ ஐலெட்சாண்ணா.. எழுது எழுது ஆல்திபெஸ்ட்” என்றாள். “என்னது ஐலெட்சா?” என்றதற்கு, “ஆமாண்ணா, அத அப்டிதான் சொல்லணுமாம், என் ப்ரெண்டு ஒருத்தன் எழுதினான். அவன் சொன்னான்” என்றாள். “வெளிநாடு போயிருப்பானே” எனக்கேட்டேன். “இல்லண்ணா, 6.5தான் எடுத்தானாம். மறுபடியும் எழுத ப்ரிப்பேர் பண்றான்” என்றாள். அய்யீயெல்ட்டீயெஸ் எனும் டங்டுஸ்டரைவிட, ஐலெட்ஸ் கேட்ச்சியாக இருப்பதால் அதையே டைட்டிலாக வச்சாச். தங்கை சொல்மிக்க மந்திரமில்லை. “ஆமா… நீ எதுக்கு இப்ப இந்த எக்சாம் எழுதப்போற?” எனக் கேட்பீர்களென்றால், நா ஒரு விஷயத்த எப்பப் பண்ணுவேன் எப்டி பண்ணுவேன்னு யார்க்கும் தெரியாது. ஆனா பண்ணக்கூடாத நேரத்துல கரெக்டா பண்ணுவேன். ‘ The International English Language Testing System (IELTS) is the world’s most popular high stakes English-language test, for study, work and migration, with more than 2.2 million tests taken each year’ என்பதாக, பழவேற்காடு ஏரியில் கண்டெடுக்கப்பட்ட செப்புத் தகடு ஒக்கட்டி செப்பிஸ்துந்தி. வெளிநாட்டுக்கு, படிக்கவோ வேல செய்யவோ அ