Kindle Books - கிண்டில் நூல்கள்

சோம்பலின் காரணமா செய்யாம விட்டு, பிறகு நண்பரொருவரின் வற்புறுத்தலின் காரணமாத்தான் கிண்டில் ஆரமிச்சது. பிறகு கோவிடு நேரத்துல ஒரு ஞானோதயம் உதிச்சது. திடீர்னு பொட்டுனு போயிட்டா வீட்டுக்கு என்ன செய்யிறது, அவங்களுக்கு உதவித்தொகை எதும் தேவைன்னா சோசியல் மீடியாவுல பிச்சையெடுக்கறாப்ல ஆகிடுமே நண்பர்களுக்குன்னு யோசிச்சு, சரி அதுக்கு பதில் புக்குகள வாங்கி அதன் மூலமா உதவறாப்ல ஒரு ஏற்பாடும் இருக்கட்டும்னு தான் அதுக்கப்பறம் சடசடனு அடிச்சு தள்ளுனது. ஒரு பக்கம் இந்த புனிதமான நன்னோக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் கிண்டில் எழுதறது, அதுவும் வெவ்வேற ஜானர்ல எழுதுறது ஜாலியா இருந்துது. நமக்கு நாமே சேலஞ்ச் வச்சிகிட்டு அதுக்கேத்தாப்ல அப்பப்ப நோட்ஸ் எழுதி அப்லோடுறது நல்ல அனுபவம். இந்த கிபி 2025+ வருடத்துலயும் UX மகா மட்டமா இருக்கற அமேசான, ஒவ்வொரு நாட்டுக்கு ஏத்தாப்ல ஆட்டோ நேவிகேட் ஆகிப்போவாம ஒவ்வொரு புக்குக்கும் ஒவ்வொரு நாட்டுக்கான தனித்தனி லிங்க் போடுறது போன்ற சள்ளைகள் இருந்தாலும் நாம எழுதுறதுக்கு ஒர்ருவாயாயினும் திர்ருவாயா வரதுல ஒரு இது இருக்கத்தான் செய்யுது. 


நாம இதுவரைக்கும் எழுதின கிண்டில் நூல்கள் குறித்த சிறு குறிப்புகள்...


கோரியவர்களுக்கு...: Q&A




இந்தியா: https://www.amazon.in/dp/B087QVKXRM

கனடா: https://www.amazon.ca/dp/B087QVKXRM

அமரிக்கா/உலகம்: https://www.amazon.com/dp/B087QVKXRM

ஃப்ரான்சு: https://www.amazon.fr/dp/B087QVKXRM

👽

மேலும் கோரியவர்களுக்கு: Q&A - II




இந்தியா - https://www.amazon.in/dp/B087ZN6J4Q

அமெ/உலகம் - https://www.amazon.com/dp/B087ZN6J4Q

கனடா - https://www.amazon.ca/dp/B087ZN6J4Q

👽


மீண்டும் கோரியவர்களுக்கு: Q&A Part - 3




இந்தியா: https://www.amazon.in/dp/B088D62GX9
ஆஸ்திரேலியா: https://www.amazon.com.au/dp/B088D62GX9
அமெரிக்கா: https://www.amazon.com/dp/B088D62GX9

👽

Vidaamal Koriyavargalukku



இந்தியா: https://www.amazon.in/dp/B0CKS3637T
அமெரிக்கா: https://www.amazon.com/dp/B0CKS3637T


👽


Quorathavargalukku: எல்லார்க்கும் பெய்யும் மழை




அமெரிக்கா https://www.amazon.com/dp/B0C9XGG42C


அந்தக்காலத்துல பாக்கெட் நாவல்கள்னு வரும். சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேஷ்குமார்துலாம். அவசர அடியா படிச்சுட்டு தூக்கிப்போட்டுடுறாப்ல. அந்த மாதிரி ஆரமிச்ச சீரிஸ்தான் இது. Quora சைட்டுல கடுப்புக் கேள்விகள கேக்கறவனுகளப்பத்தி ஏற்கனவே பல ஸ்தல வரலாறு பாத்துருப்போம். காண்டேத்துறாப்ல கேக்கறவனுகள ரிவர்ஸ் காண்டேத்த எடுத்துக்கொண்ட சீரிய சமூக முயற்சிதான் இந்த கோரா சீரிஸ். ஒரு கட்டத்துல ரொம்ப எஞ்சாய் பண்ண ஆரமிச்சாச்சு. போரடிக்கிறப்பலாம் நாலு கேள்விய எடுத்து அதுக்கு பதில் சொல்லி பப்லிஷ் பண்றது ஃபேஸ்ஸு க்லியரா ஆக்கி உட்டுடுது. கிண்டில அடிச்சு பழக இந்த புக்குகளத்தான் கினி பிக்கா யூஸ் பண்ணிக்கறது. 

👽👽👽

சொல்லிஇருக் கலாம்: quotes




மணிரத்னம் பிசி கிட்ட சொன்னதா சொன்னாப்டி ஒருக்கா, இப்பல்லாம் என்ன படம் வருது மொக்கயா, நாமதான் நல்ல படம் எடுத்து இவங்களுக்கு பாடம் எடுக்கணும் போலன்னு. அப்பிடி ஊரெல்லாம் எங்க பாத்தாலும் கண்டத கோட்ஸா எழுதி அத கலாமய்யா பேர்ல எழுதி உட்டானுக. நானும் எழுதறண்டானு அவர் பேருல எழுதின மொய்யிதான் இந்த சொல்லிஇருக் கலாம் கோட்ஸ். இதெல்லாம் கலாம் சொன்னதுன்னு சொல்லல, சொல்லி இருக்கலாம்னு சொல்றான். தட் கடவுள் இருந்தா நல்லாருக்கும் முமண்ட். 




👽👽👽


றாங் ஆன் சோ மெனி லெவல்ஸ்: wrong on so many levels




சிலது தோணும். ஆனா பப்லிக்கா சொல்ல முடியாது. சொன்னா வெளுத்துருவானுக. ஆனா சொல்லாமயும் இருக்க முடியாது. தொண்டைல முள்ளா சிக்கிட்டு இருக்கும். அப்பிடியாகப்பட்டதலாம் ஒரு பொட்டலமா கட்டி இருக்கறதுலயே அதிக காசு வச்சு கைகழுவியாச்சு. உள்ளுக்குள்ளயே வச்சு கொமையாத மாதிரியும் ஆச்சு. எவனும் படிச்சு லாடம் கட்டிருவானோங்கற பயமும் இல்லாம ஆச்சு. அத மீறி ஒருத்தன் படிச்சு திட்றான்னா பரவால்ல, இவ்ளோ காசு குடுத்து வாங்கறான் நாலு வார்த்தை கேட்டுட்டு போவட்டும், பாவம். எதாச்சும் கேசாச்சுன்னா டிஸ்க்லைமர புக்கு டைட்டில்லயே போட்டுருக்கேன்னு சொல்லிக்கிறலாம். 

👽👽👽


ΨΦ: Psi Phi



ஊராட்சிய தாண்டாதவனுக்கு மாநகராட்சிகள் மேல எப்பவும் ஒரு மையல் இருக்கும்ல. அந்த மாதிரி படிப்பே வராத நமக்கு இந்த சயன்ஸ் மேலயும் சயன்ஸ் பிக்சன் மேலயும் ஒரு இடைவிடாத ஈர்ப்பு இருக்குது. சைன்ஸ் பிக்சன்ல கத தான எழுதுவாங்க நாம கவிதைகளா ட்ரை பண்ணினா என்னனு செஞ்சு பாத்த ஒரு முயற்சி. Sci-fiங்குற ஜானரயே பேராக்கிடலாம், பேரக்கூட சைன்சோட தொடர்புடையதா வெக்கலாம்னு வச்சது. 


👽👽👽

பாப்பா பாட்டு




சில ஆண்டுகளுக்கு ஒரு முறை உறவுகளில் பிரசவங்கள் ஏற்பட, ஆஸ்பத்திரியில் தேவுடு காக்கும்போது கண்பட்ட நிகழ்வுகள் மைண்டுக்குள்ள தவழ்ந்துட்டே இருந்துது. ஆனது ஆச்சு டயபர் மாத்தற செலவுக்காச்சுன்னு அதையெல்லாம் குறுங்குறிப்புகளா ஆக்கினது இது. 

அமெரிக்கா https://www.amazon.com/dp/B0C54FXWRR

👽👽👽


காதல் தோல்வியுற்றோர் ஸ்டோரிஸில் வைக்க அவசர ஸ்டேட்டஸ் 50



யூடூபு முதலிய செயலிகள்ல ஸ்டோரிக்கள்ல வெக்க பாட்டு, படங்கள்னு நிறைய துண்டுகள் கெடந்துது. எல்லாமே ஆடியோ விசுவலா இருக்குதே, எழுத்தாணிப்பூர்வமா நல்லது நாலு ரெண்டு கெடந்தா எய்ட்டீஸ் கிட்சுக்கோ கிரிஞ்சு கும்மலுக்கோ ஆகுமே என்ற பொதுநலன் விழிப்புணர்வு கருதி உண்டாக்கப்பட்ட ஸ்டேட்டஸ்கள். இதை ஸ்டோரியில் வைத்தால் விட்டுவிட்டுப்போன காதலிகள் திரும்பக் கிடைப்பார்கள், விடாமல் துரத்தும் காதலிகள் விட்டுத்தொலைவார்கள் மற்றும் பல நினைத்த நன்மைகள் நடக்கும் என்று பரிசோதித்து விழுப்புரம் அண்ணபூரணியின் அருளால் சத்தியம் செய்யப்படுகிறது. 


👽👽👽


ஜென்செட்: ZenSaid



Fableவகையிலான கதைகளையும் சரி அந்தக்காத நீதிக்கதைகள் டைப்ல இருக்கறத இன்னக்கி contextல எழுதிப்பாக்கணுங்கறது எப்பவும், இப்பவும் இருக்கற ஆசை. அது ரொம்ப விளாட்டுத்தனமா இல்லாம கொஞ்சமாச்சும் சீரியசா, ஆனா சர்காசம்/நகைச்சுவைய தொட்டுகிட்டு எழுதினா எப்புடி இருக்கும்னு முயன்று பார்த்தது. எழுதினதுல கொஞ்சம் திருப்தியானதும். இதே வகைமையில அடுத்து இன்னும் ஆழமா எழுதனுங்கற ஆர்வத்தையும் ஊட்டினது. 


👽👽👽

50 சாம்பல் நிற நிழல்கள்




அடல்ட் கண்டெண்ட்டுனு போனா உள்ள வாடி புள்ள தாரேன், திரும்புடி பூவ வெக்கணும் மாதிரி நெறய இருந்துது. அப்பிடி இல்லாம ஆண்டவர் கமல் சார் மாதிரி ஆங்கிலப் படங்கள தமிழ்ல பிரதியெடுக்கறாப்ல ஒன்னு பண்ணனும்னு fifty shades of greyவ கசக்கிப் பாத்தது இது. அடல்ட் கண்டண்ட்டுன்னு அமேசான் காரன் ஆயரத்தெட்டு வெளாய இழுத்தான். இத அப்லோட் பண்ணிட்டு அப்பறம் அவன் சஸ்பண்ட் பண்ணி, அதுக்கப்பறம் அவங்கிட்ட போராடி இத திரும்ப கொண்டு வரதுக்குள்ள வறண்டுருச்சு. நாக்கு. 


👽👽👽

Avaru Poyittaaru vaadaa: Perunthinai Kurippugal




கடைச்சங்க இலக்கியத்துக்கும் முற்பட்டது காஜிகள் சங்கமம். அத இன்னக்கி காண்டக்ஸ்ட்ல எழுதிப் பாத்தா எப்புடி இருக்கும்னு ஒரு முயற்சி. எழுதிப்பாக்கலாம்னு தான் முயன்றது. ஆனா நமைச் சுத்தி இருக்கவனுக, பாத்துட்ட போலனு ஒரு தேர்ந்த இலக்கிய ஆர்வத்த பொசுக்குனு ஒடச்சிட்டானுக. கல்லுக்குப் பயந்தா காய்க்குமா மரம்னு ஆனது ஆச்சுனு இலக்கியப்பணிய செவ்வனே செஞ்சது இது. ஆங்காங்கே கேள்விப்பட்ட கதைகள் கிசுகிசுக்கள வச்சு கற்பனைய ஊத்த வச்சு வளத்த செடி அவரு போய்ட்டாரு வாடா: பெருந்திணைக் குறிப்புகள். உண்மையிலயே சங்க இலக்கியத்துலயும் இதப் பத்தி எழுதிருக்காங்க. மேலும் ஆர்வமிக்கவங்க பெருந்திணைப் பாடல்களப் படிச்சு உய்யவும். 

Modi https://www.amazon.in/dp/B0CJ85D4J7

Justin https://www.amazon.ca/dp/B0CJ85D4J7

Trump https://www.amazon.com/dp/B0CJ85D4J7



👽👽👽


பருவத்தில் பன்னி


நல்ல மாட்டுக்கு ஒரு... இல்ல, தப்பா ஆரமிச்சிட்டேன். பொதுவா காதலர்கள் காதலிகள்ட்ட தான கிரிஞ்சா, கொயகொயானு ரொமான்சுங்கற பேர்ல பண்ணுவானுக. ஆனா நமக்கு நம்ம மனசுக்கு யாரு புடிக்கிதுகளோ அதுக ஜடைய (அல்லது க்ராப் கட்டிங்க) புடிச்சு இழுக்கறதுதான் ஃபுல்டைம் ஹாபி, டெய்லி ஒர்க்கௌட் எல்லாம். அப்பிடி நம்ம மனசுக்கு புடிச்சதுன்னு ஒன்னு வந்தா அதுகிட்ட என்னலாம் ஓரண்டை இழுக்கலாம்னு கற்பனை குதிரைய த்ச்சல்த்சல் டுர்ர்டுர்ர்னு ஓட விட்டு படைத்த படைப்புதான் பருவத்தில் பன்னி. நல்ல நற்பெயரையும், நீ கடைசி வரை கைதான் எனும் அற்புத சத்திய சாபங்களையும் வாங்கித்தந்த நூல். பர்சனல் ஃபேவரிட்டும் கூட. 

(இந்தியால தூக்கிட்டானுக. ரொம்ப கவுச்சியா இருக்குன்னு.) 

👽👽👽

Tailor Dhuruvan: காத்திரமான டிடக்டிவ் திரில்லர் கதைகள்


எழுதியதிலேயே அதிக காலம், எஃபர்ட் மற்றும் பணச்செலவினங்களை இழுத்து விட்டது இதுதான். ஒரு ஜானர ஃபிக்ஸ் செய்துவிட்டு அதிலிருந்து பிசகாம, ஒவ்வொரு கதையிலயும் ஒரு இல்லாஜிகல் லாஜிக் சேர்ந்தும், கதை மொத்தத்துக்கும் ஒரு இணைப்புச் சரடு கொண்டும், ரெண்டு மூனு லேயர்சுகள் ஒளித்து வைத்தும் பின்னப்பட்டது. கிட்டத்தட்ட 3 ஆண்டு காலம் சிறுகச் சிறுகச் சேர்த்த ஐடியாக்கள். அடித்துத் திருத்தி எழுதப்பட்ட கதைகள். பல பேரோடு கொலாப் செய்த முயற்சிகள். பிரிட்டனிலுள்ள ஷெர்லாக் ஓல்ம்ஸ் மியூசிய வாசலில் வைத்து வெளியிட விசாவெல்லாம் அப்லை செய்து அது ரிஜக்ட் ஆகி தண்டக்கருமம் நூறு பௌண்டு வெள்ளையன் கொள்ளையடித்துக்கொண்ட படைப்பு இது. ஒரு சில பெக்யூலியர் ஐடியாக்கள் தோன்றிய போதும், அதை எழுதியபோதும் மைதுனம்போன்ற இன்பத்தை வழங்கியது. This is my product எனப் பெருமையாகச் சொல்லத்தகும் திருப்தி தந்த கதைகள். ஏகப்பட்ட டெக்னிகல் லிமிட்டேசன்களால் செய்ய நினைத்த சில advanced story narration முறைகள் சாத்தியப்படவில்லை. பின்னொரு காலத்தில் சொல்ல முடியும் என்ற நம்பிக்கையுண்டு. இந்த நூலுக்கு அட்டைப்படம் வரையச்சொல்லி அலைந்ததே ஒரு டார்க் யூமர் சிறுகதை தேத்தும். இதே ஜானரில் மேலும் புதிய ஐடியாக்கள் எழுதிப்பார்க்க ஆவலோடு இருக்கும் நூல். 


👽👽👽

ஙேயிசம்: Ngeism




What a week? Captain, it's just wednesday என ஒரு மீம் இருக்குமல்லவா? அதையே வெவ்வேறு நிலைத்தகவலளவுக்கு குறுக்கிப் பார்த்தால் என்ன எனத் தோன்ற, வாகாக நேரமும் சிக்க, அதில் புனைந்தவை இவை. இதில் பல படித்ததும் கடுப்பாவும். அப்படி ஆனால் ஙேயிசம் ஓர் ஒயின் போல ஒயிலாக உங்களுக்குள் இறங்க ஆரம்பித்து விட்டது எனப் பொருள். பத்து பக்கம் திருப்பியும் கடுப்பாகவில்லையெனில் நீங்கள் இன்னும் தயாராகவில்லை. அப்படியே மூடி வைத்து விட்டு பிறிதொரு காலம் எடுத்துப் படியுங்கள். 


👽👽👽

புழைப்பேச்சு: Puzhaippechu




காஜியாயிருக்கும் போது என்ன செய்வீர்கள்? காஜியாயும் காய்ந்தும் போயிருக்கையில்? காஜிக்கு செலவு செய்ய வக்கில்லாதபோது? காஜி வந்தபின் டெய்லி மொபைல் டேட்டா லிமிட் முடிந்து விட்ட நிலையில்? ஹார்னி அனைத்தையும் உரமாக்கு, காஜி அனைத்தையும் கவிதையாக்கு என முஸ்தீபுடன் பு...னைந்தவை இவை. ச்சீ இத்தனை கச்சாமுச்சாவாய் சிந்திப்பாயா நீ என அம்பிக்கள் சிலர் மண்ணைத் தூத்தவும் வைத்தது. ஆண்டாள் எழுதலாம் நாம் எழுதக்கூடாதா என கங்கணம் கட்டி எழுதிப்பார்த்தவை. ப்யூர் அடல்ட்ஸ் ஒன்லி.