கதைக்கு...
பேய்கள் மேல் உங்களுக்கு நம்பிக்கை வருவதற்கு என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை. எனக்கு அவற்றின் மேல் நம்பிக்கை உள்ளது. பேய்கள் குறித்து மக்கள் மத்தியில் நிலவும் அத்தனை விஷயங்களும் நிஜம். இந்த நிஜங்களுக்கு இன்னும் வலுசேர்க்கிற வகையில் இன்னும் ஒரு விஷயம் கூறுகிறேன். பேய்கள் எந்த ரூபமும் எடுக்கும். உங்கள் கனவு அல்லது கற்பனைகளின் வீச்சுக்கள் நெருங்க மறுக்கும் ரூபமும் பேய்கள் எடுக்கும். பேய்களில் நல்ல பேய்களும் உண்டு, கெட்ட பேய்களும் உண்டு. கெட்ட பேய்கள் மற்றவர்களை பயமுறுத்தி, பயப்படும் ஜீவன்களைத் தங்களின் ஆளுகைக்குக்கீழ் அடிமைப்படுத்தி வைக்கும். நல்ல பேய்கள் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் ஏனைய பேய்களுக்கும்கூட உதவ நினைக்கும். எந்த வித சந்தர்ப்பத்திலும் தனக்கு ஆபத்து ஏற்படும் நிலையிலும் மற்றவர்களுக்கு உதவ நினைக்கும். இயல்பிலேயே, பேய்கள் தங்களை, தங்களின் இருப்பை மற்றவர்களுக்கு பகிரங்கப்படுத்தத் தயங்கும். அதே நேரத்தில், நல்ல பேய்கள், சிலபல குறிப்புகள் மூலம் தங்களைப்பற்றி சூசகம் கூறும். ஆழ்ந்த அறிவுள்ளவர்கள் இந்த சூசகங்கள் மற்றும் குறிப்புகளை வைத்து பேய்களை எளிதில் உணர்வர். ஆதி