கதைக்கு...



பேய்கள் மேல் உங்களுக்கு நம்பிக்கை வருவதற்கு என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை. எனக்கு அவற்றின் மேல் நம்பிக்கை உள்ளது. பேய்கள் குறித்து மக்கள் மத்தியில் நிலவும் அத்தனை விஷயங்களும் நிஜம். இந்த நிஜங்களுக்கு இன்னும் வலுசேர்க்கிற வகையில் இன்னும் ஒரு விஷயம் கூறுகிறேன். பேய்கள் எந்த ரூபமும் எடுக்கும். உங்கள் கனவு அல்லது கற்பனைகளின் வீச்சுக்கள் நெருங்க மறுக்கும் ரூபமும் பேய்கள் எடுக்கும். பேய்களில் நல்ல பேய்களும் உண்டு, கெட்ட பேய்களும் உண்டு. கெட்ட பேய்கள் மற்றவர்களை பயமுறுத்தி, பயப்படும் ஜீவன்களைத் தங்களின் ஆளுகைக்குக்கீழ் அடிமைப்படுத்தி வைக்கும். நல்ல பேய்கள் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் ஏனைய பேய்களுக்கும்கூட உதவ நினைக்கும். எந்த வித சந்தர்ப்பத்திலும் தனக்கு ஆபத்து ஏற்படும் நிலையிலும் மற்றவர்களுக்கு உதவ நினைக்கும். 

இயல்பிலேயே, பேய்கள் தங்களை, தங்களின் இருப்பை மற்றவர்களுக்கு பகிரங்கப்படுத்தத் தயங்கும். அதே நேரத்தில், நல்ல பேய்கள், சிலபல குறிப்புகள் மூலம் தங்களைப்பற்றி சூசகம் கூறும். ஆழ்ந்த அறிவுள்ளவர்கள் இந்த சூசகங்கள் மற்றும் குறிப்புகளை வைத்து பேய்களை எளிதில் உணர்வர். ஆதி முதல், நல்ல பேய்கள், தங்களின் பலம், திறம், சக்திக்குட்பட்டு மக்களிடம் எவ்வகையிலேனும் தங்களைக்குறித்த செய்திகளை, நிஜங்களை பரப்பி வந்துள்ளது. ஓலைச்சுவடிகள், மக்களுக்கு வரும் கனவுகள், சித்த ரகசியங்கள், அசரீரிகள் ஆகியவற்றின் மூலம் அவை மக்களிடத்தில் பேசும். ஏன் இத்தனை கஷ்டப்பட்டு இந்த பரப்புரை வேலையை அவை செய்ய வேண்டும்? தீயவர்கள் துர்சக்திகளின் உதவியை வைத்து தீமையைப்பரப்பி கெட்ட பேய்களின் வலிமையை அதிகரித்து ஏழுலகிலும் தீயசக்திகளின் அரசை நிறுவ அல்லும்அல்லும் கடும் முயற்சி செய்துவருகின்றனர். ஆகவே, மக்களை நன்மைகளின் பக்கம் திருப்பவும், அவர்களுக்கு மத்தியில் துர்சக்தி பரவுவதைத்தடுத்து, நற்சக்தியும் நன்மைகளும் ஏற்பட, நல்ல பேய்கள் எதிர்முயற்சி எடுத்துள்ளன. தீமையின் கரம் ஓங்கி அநீதி தலையெடுக்கிற வேளையில், நீதியை மீண்டும் நிலைநிறுத்தவேண்டியது நன்மையின் மீது கடமை. 

இந்தக் கலியுகத்திலும் அத்தகைய தேவை உதித்துவிட்டது. இந்த கலியுகமெனப்படும் வலையுகத்திலே தீம்பேய்களின் ஆட்டம் ஆரம்பித்துவிட்டது. அதை அடக்க, முற்றிலும் ஒழித்துக்கட்ட ஒன்றுகூடவேண்டியது மக்களின் கடமை. ஆகவே இந்தச்செய்தியை உங்களுக்கு அறிவிக்கும் அவசியம் எனக்குள்ளது. இதை ஏன் நீ கூறவேண்டும்? அதைக்கூற உனக்கு என்ன தேவை, தகுதி அல்லது அருகதை உள்ளது என நீங்கள் கேட்கவிரும்புவீர்கள். ஆரம்பத்திலேயே கூறியது உங்களுக்கு நினைவிருக்கும் என நம்புகிறேன். மறந்தவர்களுக்கு, முன்னர் கூறியவற்றின் சில குறியீடுகளை மீண்டும் கீழே தருகிறேன். படித்துத் தெளியுங்கள்.

பேய்கள் குறித்து மக்கள் மத்தியில் நிலவும் அத்தனை விஷயங்களும் நிஜம். பேய்கள் எந்த ரூபமும் எடுக்கும். உங்கள் கனவு அல்லது கற்பனைகளின் வீச்சுக்கள் நெருங்க மறுக்கும் ரூபமும் பேய்கள் எடுக்கும். இயல்பிலேயே, பேய்கள் தங்களை மற்றவர்களுக்கு பகிரங்கப்படுத்தத்தயங்கும். அதே நேரத்தில், நல்ல பேய்கள் சிலபல குறிப்புகள் மூலம் தங்களைப்பற்றி சூசகம் கூறும். ஆழ்ந்த அறிவுள்ளவர்கள் இந்த சூசகங்கள் மற்றும் குறிப்புகளை வைத்து பேய்களை எளிதில் உணர்வர். (பேய்களுக்கு ”இவை” இல்லை என்று மக்கள் மத்தியில் நம்பப்படும் ஒரு விஷயம் உள்ளதே. “அவை” என்னவென்று அறியும் கணத்தில், ”அவை”, எழுத்துவடிவிலும்கூட, நீங்கள் படிக்கும் இந்தக்குறிப்பு வரும்வரையில்கூட இடம்பெறவில்லை என்பதையும் அறியும் கணத்தில், என்னை நீங்கள் உணர்வீர்கள்.)

Comments

  1. இப்போவே கண்ணக் கட்டுதே மொமென்ட்

    ReplyDelete
    Replies
    1. திஸ் ஜஸ்ட் டீசர்.மெய்ன் பிச்சர் இன்னும்கொடூரமா இருக்கும்

      Delete
    2. திஸ் ஜஸ்ட் டீசர்.மெய்ன் பிச்சர் இன்னும்கொடூரமா இருக்கும்

      Delete
  2. :)

    main picture vanthuchannu paarka vanthen.teaser laiyethaan irukku.

    ReplyDelete
    Replies
    1. பிலிம் தீந்து போச்சு... கொடாக் கம்பெனிட்ட சொல்லி தயாரிக்க சொல்லிருக்கு.. வந்ததும் படத்த ரிலீஸ் பண்றோம்.. மூனாவது நாளே சக்சஸ் மீட் கொண்டாடுறோம்..

      Delete
  3. nxt update epa bro...

    ReplyDelete
  4. உங்கள மீட் பண்ணப்போ கால் தரையில நிக்குதானு பாக்க மறந்துட்டேன் மாம்ஸ்:))

    ReplyDelete
  5. உங்கள மீட் பண்ணப்போ கால் தரையில நிக்குதானு பாக்க மறந்துட்டேன் மாம்ஸ்:))

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete

Post a Comment

Pass a comment here...