Posts

Showing posts from April, 2014

சில நேரங்களில் சில கடிதங்கள்...

Image
இந்தக்கடிதம் எனக்கு எப்படியோ கிடைத்தது. இரு வேறு மதத்த சேர்ந்த காதலர்களின் கடிதம் இது என் ப்ரார்த்தனையெல்லாம் ஒன்றுதான். அவங்க ஒண்ணு சேந்திருக்கணும். இந்தப்பதிவ அவங்க ரெண்டு பேரும் ஜோடியா படிச்சு அவர்களின் ஒரு ஞாயிறு மாலையை அழகாக்கணும். இன்ஷா கடவுள்.                                   (படங்கள் பெரிதாகத்தெரிய படத்தை க்ளிக் செய்யவும்)    

சுன்னத் கல்யாணம்

  பெரும்பாலானோருக்கு என்னவென்று புரிந்திருக்கும் . புரியாதோருக்கு, சுன்னத் கல்யாணம் இஸ் நத்திங் பட் சர்கம்சிஷன் AKA கு ** கல்யாணம் . இதற்கு ஏன் கல்யாணம் என்று பெயர் வந்தது எனப்புரியவில்லை . இப்போதெல்லாம் சு.க பெரும்பாலும் ஆஸ்பத்திரியிலேயே முடிந்துவிடுகிறது . 90 கள் வரை கிராமங்களிலும் டவுன்களிலும் அது ஒரு விழா போல நடக்கும் . இப்போது 89% குழந்தைகளுக்கு பிறந்த சில நாட்களிலேயே நடத்தி விடுகின்றனர் . முன்பு பெரியவன் ஆன பின்னும் சிலருக்கு நடப்பதுண்டு . எனக்கு மிகத்தெரிந்த ஒரு பையனுக்கு அஞ்சாப்பு ஆனுவல் லீவ்ல நடந்துச்சு ( யார்னு கேக்கப்படாது ). <<<<<< கொசுவத்தி ஸ்டார்ட்ஸ் >>>>>> அது ஒரு இனிய ஞாயிறு . நாங்கள் இருந்தது ஊத்துக்கோட்டை என்னும் சிற்றூரில் . வீட்டின் மாடியில் ஷாமியானா போடப்பட்டு , அக்கம்பக்கத்தினர் , உறவினர் , சுற்றம் சூழ வந்து வீடே கலகலவென்றிருந்தது . ஒரு பக்கம் “ தம்” பிரியாணி தயாராகிக்கொண்டிருந்தது . திடீரென்று கிடைத்த லைம்லைட்டில் தலைகால் புரியாது இரு இளந்தளிர்கள் சுத