Posts

Showing posts from August, 2014

கொல கொலயாம்...

இரண்டு கொலைக்கேசுகள் என் மீது இந்நேரம் இருந்திருக்கும். அதுவும் ஒரே நபரைக் கொன்றதற்காக.   ”இந்தக்கோழி சின்னதா இர்க்கசொல்லோ உர்ச்சதே, அதே கோழ்யீ பெர்சா இர்க்கசொல்லோ உர்ச்சதே இதே” என்று Universal Hero என ஆங்கிலத்திலும் அதற்கிணையான மொழிபெயர்ப்பாய் உலக நாயகன் எனத் தமிழிலும் அழைக்கப்படும் கமல்ஹாசன் (கம’ல’ஹாசன் இல்லை) கூறியிருக்கிறாரல்லவா, அதே போல என் தங்கையை இருமுறை கொல்லப்பார்த்தேன். சம்பவம்        : 1 இடம்          : எங்கள் அறை ஊர்            : சர்க்கார் தோப்பு, திண்டிவனம் எதும் கொசுவத்தி?   : ஆம் என்ன? : கூட்டுக்குடும்பம். பெரிய வீடு, அப்பா, சித்தப்பா, பெரியப்பா, தாத்தா மற்றும் பலர் & குழந்தைகள் அவ்வீட்டில் இருந்தனர் நேரம் : கருவாடு & ஆம்லேட் பொரிக்கும் வாசனை வந்தது. அதனால் மதியமாகத்தான் இருக்கும்.       எல்லா அம்மாக்களும் மும்முரமாய் அடுப்பங்கரை வேலையிலிருக்க, அப்போதுதான் மதிய உணவுக்கு எங்கள் தாத்தா வீட்டுக்கு வந்திருந்தார். இங்கு எங்க தாத்தா குறித்து சில வார்த்தைகள் சொல்லியே ஆகணும். நாலு சுவத்துக்குள்ள குழந்தைகள் கீச்மூச்னு சத்தம் போட்டுட்டு இருந்

மொனாமி

அப்போது நான் டிப்ளொமா படித்துக்கொண்டிருந்தேன் (நிறைய அப்ரண்டிஸ் இதை டிப்ளமோ என்கின்றனர். அது தவறு. டிப்ளொமா என்பதே சரி). பாலிடெக்னிக் பருவம், காலேஜிலும் சேர்த்தியில்லாது ஸ்கூலிலும் சேர்த்தியில்லாது அவன் இவன் விஷால் பருவமாகும். மேநிலைக்கல்வியில், இரண்டு வருடம் தூக்கமிழந்து, கிரிக்கெட், மானாட மயிலாட, அஞ்ஜான் தலைவா பில்லாபில்லா போன்ற அற்புத காவியங்களை எல்லாம் காணாமல் புறக்கணித்து, பள்ளியில் சக +2 போராளியை மார்க்கில் வென்றெடுக்க முக்கிக்கொண்டிருப்போம்.  இந்நேரம்பார்த்து, செத்துவிட்டார் என நாம் கருதிய வெகுதூரத்து உறவினர் (நன்றி ரைட்டர் சிஎஸ்கே), ஆடி பதினெட்டுக்கு வீட்டுக்கு வந்து, “நம்ம பாப்பாவும் டொல்த்துதான். எல்லா டெஸ்ட்லயும் செண்ட்டம் எடுக்குறா. ஸ்டேட் பர்ஸ்ட் எக்ஸ்பக்ட் பண்றோம். டெந்த்ல உட்டத இப்ப புடிச்சிடணும். மெடிசின்ல ஃப்ரீ சீட் கெடச்சிடும். உங்க பையன் நல்லா படிக்கிறானா?” என்று கேட்ட தருணம், ஆல் சப்ஜெக்டில் அண்டர் 16 எடுத்ததற்காக அப்பா நம் முதுகில் டி20 ஆடி முடித்திருந்த ப்ரேக் டைமாக இருக்கும்.  இது போன்ற எந்தத்தொல்லைகளும் இல்லாதது பாலிடெக்னிக். முதல் வருடம் ஆறேழ