இரண்டு கொலைக்கேசுகள் என் மீது
இந்நேரம் இருந்திருக்கும். அதுவும் ஒரே நபரைக் கொன்றதற்காக.
”இந்தக்கோழி சின்னதா இர்க்கசொல்லோ
உர்ச்சதே, அதே கோழ்யீ பெர்சா இர்க்கசொல்லோ உர்ச்சதே இதே” என்று Universal Hero என ஆங்கிலத்திலும்
அதற்கிணையான மொழிபெயர்ப்பாய் உலக நாயகன் எனத் தமிழிலும் அழைக்கப்படும் கமல்ஹாசன் (கம’ல’ஹாசன்
இல்லை) கூறியிருக்கிறாரல்லவா, அதே போல என் தங்கையை இருமுறை கொல்லப்பார்த்தேன்.
சம்பவம் : 1
இடம் : எங்கள் அறை
ஊர் : சர்க்கார் தோப்பு, திண்டிவனம்
எதும் கொசுவத்தி? : ஆம்
என்ன? : கூட்டுக்குடும்பம். பெரிய
வீடு, அப்பா, சித்தப்பா, பெரியப்பா, தாத்தா மற்றும் பலர் & குழந்தைகள் அவ்வீட்டில்
இருந்தனர்
நேரம் : கருவாடு & ஆம்லேட்
பொரிக்கும் வாசனை வந்தது. அதனால் மதியமாகத்தான் இருக்கும்.
எல்லா அம்மாக்களும் மும்முரமாய்
அடுப்பங்கரை வேலையிலிருக்க, அப்போதுதான் மதிய உணவுக்கு எங்கள் தாத்தா வீட்டுக்கு வந்திருந்தார். இங்கு எங்க தாத்தா குறித்து சில
வார்த்தைகள் சொல்லியே ஆகணும். நாலு சுவத்துக்குள்ள குழந்தைகள் கீச்மூச்னு சத்தம் போட்டுட்டு
இருந்தா ஏன் இப்டி சத்தம் போடுறீங்கன்னு கோவப்பட்டு அவர் கத்துற கத்து பக்கத்து தெரு
செவிடருக்கும் கேக்கும். That sums it about him. A very unique personality.
அப்பேர்ப்பட்ட
தாத்தா வந்ததால், எதற்கு வம்பு என தன் 0.5 வயதே ஆன தங்கச்சிப்பாப்பாவோடு அறைக்குள்
விளையாடிக் கொண்டிருந்த சமத்துப்பையன் ஒருவன் கதவைச் சாத்தித் தாழிட்டான் (அவன் அன்று
பள்ளிக்கு மட்டம் போட்டதால்தான் தாத்தனைக்கண்டதும் அறைக்குள் தலைமறைவானான் எனவும் சில
செப்பேடுகள் செப்புகின்றன).
எல்லாம்
சரியாகத்தான் போய்க்கொண்டிருந்தது, பாப்பா வீஈஈஈல் என எதற்கோ அலறாதவரை. பாப்பாவின்
வீலைக்கேட்டதும் அம்மா வந்து கதவைத்தட்ட, “புள்ள இருக்குற ரூமு எப்புடி தாப்பா போட்டுச்சு”
என தாத்தா வெளியே கர்ஜிக்க, “முத்தலிபு இருக்கான்” என எதோ ஒரு விஷமி விஷக்கருத்துக்களைப்
பரப்ப, ”டொக் டொக் டொக்” என என் தாத்தா கதவைத்தட்டினார்.
நேராகக்கதவிடம்
சென்று, தைரியத்தையெல்லாம் ஒன்றுகூட்டி கீழே உள்ள தாழ்ப்பாளைத் திறந்தேன்,என்றுதானே நினைக்கிறீர்கள்? அதுதான் இல்லை.
திறந்திருந்த கீழ்த்தாழ்ப்பாளையும் சேர்த்து சிக்கென மூடிவிட்டு வந்தேன். சேஃப்டி ஃபர்ஸ்ட்.
சேதாரம் நெக்ஸ்ட் என்பது சித்தர் வாக்கு.
இந்நேரத்துக்கெல்லாம்
பாப்பா வீலோடு சேர்த்து ரின், ரீகல், வாஷிங் பௌடர் நிர்மா என அலற ஆரம்பித்தாள். பூவோடு சேர்ந்து
நாரும் மணத்தது. ஆம். அவளோடு சேர்ந்து நானும் கண்ணீர் குபுகுபுக்க ஆரம்பித்தேன். இதற்குள்
வெளியே கதவு (அ)தட்டல்கள் அதிகரிக்க, பயந்துகொண்டே கதவினருகே சென்று தைரியமாய்ச் சொன்னேன்,
“கதவத் தொறந்தா அடிப்பீங்க. நாந்தொறக்க மாட்டேன்”. இதைக்கேட்டதும் என் தாத்தா, “இது போன்ற
முன்முடிவுகள் உன் வாழ்க்கையில் எங்கும் உதவாது. நீ தற்போது கொண்டிருக்கும் கொள்கை,
கானல் நீர் போல பொய்யானது. அதைக் கைவிடு. உடனே தாழ் திறக்க கையெடு” என்றெல்லாமா பேசியிருப்பார்?
வந்த சுரீர் கோபத்திற்கு “ஹ்ராம்ல பொறந்தவனே, கதவத்தொறக்குறியா ஒடச்சுட்டு வந்து தலகீழாக்கட்டித்தொங்க
விடவா?” என்றார்.
இதற்குள்
அருகிலிருந்த தாய்க்குலங்களெல்லாம் என் தங்கையைக் காக்கும் பொருட்டு, ”அவர் அடிக்க
மாட்டார். நாங்க கேரண்டி. கதவத்தொற” எனக்கெஞ்சினர். சம்பவத்தில் என்னோடு மோதும் முதல் எதிரியான தாத்தாவின் சமாதான ஒப்புதல் வாக்குமூலம்
வராதது கிலியை வரவழைத்ததால் நான் அசைந்து கொடுக்கவில்லை. ஒரு கட்டத்தில் அவரும் மனமிரங்கி, ”அடிக்க மாட்டேன், தொற”
என்றார்.
”ராஜதந்திர
அகிம்சாமுறையில் தாத்தனை ஜெயித்த குட்டிச்சாத்தனே என இனி எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுவாய்”
என எங்கோ இரு குரல்கள் எதிரொலிக்க, தைரியத்தை வரவழைத்துக்கொண்டு தாழ்ப்பாளைத் திறக்க
முயற்சித்தேன். சனியன் திறப்பேனா என்றது.
இப்போது
நிஜமாகவே பயம் அப்பிக்கொண்டது. வீடு பழங்காலத்து வீடு. தாழ்ப்பாள் அதனினும் பழைய இரும்பாலானது.
எவ்வளவு முயன்றும் ஹெவியாக சிக்கிக்கொண்டதால் திறக்கவே முடியவில்லை. “திறக்க முடியல”
என்று அழுதபடியே கூறினேன். அவர்கள் நம்பத்தயாராயில்லை (ஏற்கனவே பல சிவில் கேஸ் ஹிஸ்டரி
என் மீது. I am a Renowned அக்கீஸ்ட்). எத்தனையோ டேக்டிக்ஸ் செய்தும் தாழ்ப்பாள் திறந்த
பாடில்லை. ”எண்ணெய் விட்டுப்பாரு” என ஒரு கொசக்சி பசப்புகழ் சொல்ல, தேங்காய் எண்ணெயை
தாழின்மேல் ஊற்றினேன். அப்போதும் திறக்காததால், அடுத்த லெவல் இந்நோவேசனாக, எண்ணைக்கடுத்து போடப்படும் பான்ஸ்
பவுடரை எடுத்து அதன் மீது கொட்டினேன். அப்போதும் தாழ் ”பௌ” காட்டியது.
என் தாத்தாவுக்கு
ஹையோ லோவோ, பீபி வந்து மூலையில் குத்த வைத்திருந்தார் போல. “இன்னும் என்ன பண்ணுற?”
என அவர் வெளியிலிருந்து ஸ்டேட்டஸ் அப்டேட் கேட்க, “பவுடர் போடுறேன்” என நான் சொல்ல,
முகத்துக்குத்தான் போடுகிறேன் என நினைத்து கையறுநிலையின் உச்சத்துக்குப்போய் “அடேய், எண்ண ஊத்தச்சொன்னது கதவுக்குடா, ஒனக்கு இல்ல”
என அவர் வீறிட்டுக்கத்த, அவரின் அந்த அல்ட்ராஅலறல்சானிக் சவுண்டிலேயே கதவு திறந்தது.
உள்ளே
பாய்ந்த கூட்டம் தங்கையை வாரி அணைத்துக்கொண்டுபோக (தங்கை மயங்கிவிட்டாள்), சில தாய்க்குலங்கள்
என்னைச்சூழ்ந்து தாத்தாவிடமிருந்து Z+ செக்யூரிட்டி கொடுக்க, பின்னர் நடந்தவை நினைவில்
இல்லை.
~~~~~~~ ~~~~~~~ ~~~~~~~
சம்பவம் : 2
இடம் : அவுட்டோரில் இருந்த முதுமக்கள் தாழி போன்ற மண்
டிரம்
ஊர் : காவாங்கரை, ஊத்துக்கோட்டை
எதும் கொசுவத்தி? : இல்லை
என்ன? : அதான் இல்லன்னேன்ல?
நேரம் : மதிய லஞ்ச் முடிச்சுட்டு ஆண்ட்டீஸ்கள் கண்ணயரும்
/ தாயபாஸ் வெளாடும் நேரம்
நானும்,
தங்கையும், இன்ன பிற ஏரியா சில்வண்டுகளும் ரீங்கரித்துக்கொண்டு சுற்ற, எங்கள் சுற்றல்
நிலை கொண்டது அந்த மண் டிரம் மீது. தண்ணீர் சேகரிக்கும் தொட்டி அது. இப்போதே அனைவருக்கும்
க்ளைமாக்ஸ் டுஸ்ட் தெரிந்திருக்கும் (தெரிஞ்சாலும் பரவால்ல, இந்த அன்கெஸ்ஸபுல் டுவிஸ்ட்ட மட்டும் யார்கிட்டயும் சொல்லிடாதீங்க, ப்ளீஸ்
– முங்குசாமி).
முதலில்
நான் எட்டிப்பார்க்க (அந்தத்தொட்டி என்னைவிட மும்மடங்கு உயரமானது). பின் என் தங்கை
தானும் பார்க்கவேணும் என்றாள். தங்கை சொல்மிக்க மந்திரமில்லை எனக்கருதி, அவளைத்தூக்கிவிட,
உடும்புபோல் அந்தத்தொட்டியில் ஒட்டிக்கொள்வாள் என்று பார்த்தால் உளுந்து போல் உள்ளே விழுந்து விட்டாள்,
அதுவும் தலைகீழாக. என்னால் அந்தத்தொட்டி மீது எக்கவே முடியவில்லை. பிறகெங்கே காப்பாற்ற?
”தட்டிப்பாத்தேன்
கொட்டாங்கச்சி,
தண்ணித்தொட்டிக்குள்ள
எந்தங்கச்சி,
எட்டிப்பாத்தேன்,
என் அன்புத்தங்கச்சி…
ஆளு முழுசா…
உள்ள முழுகிடுச்சி”
என சிச்சுவேஷன்
பாட்டுக்கூட பாடாமல், கடமையே கண்ணாக அங்கு யாரும் வருவார்களா என்று பார்த்தேன். (பார்த்’தேன்’தான்.
பார்த்‘தோம்’ அல்ல. தங்கை விழுந்ததும் சில்வண்டுகள் சிதறி விட்டன). நல்ல வேளையாக அந்தப்பக்கம் ஒருவர்
செல்ல, நடந்ததை அவரிடம் மணிரத்னம் டயலாகாக பிச்சு பிச்சு சொல்ல, அந்தப்புண்ணியவான்
வந்து தங்கையைக் காப்பாற்றினார்.
மயங்கிக்கிடந்த
தங்கைக்கு அக்கம்பக்கத்திலிருந்த பலர் முதலுதவி செய்து விழிக்க வைத்தனர். என் தாய்
மிகவும் துயருற்று அழுதுகொண்டிருந்தார். குற்றவுணர்வு மேலோங்க, அவருக்கு அருகில் சென்று
கூறினேன், ”அதான் பாப்பா பொழச்சுட்டால்ல, அத்தாகிட்ட சொல்லிடாதம்மா”
பின்னிட்டேழ் போங்கோ!! அதுவும் மனமி'ர'ங்கி.. இரங்கல் சம்பவம் நடக்கவேண்டியது.. தப்பிச்சேழ்!!
ReplyDeleteசம்பவம் 1 சூப்பர்... ’”இந்நேரத்துக்கெல்லாம் பாப்பா வீலோடு சேர்த்து ரின், ரீகல், வாஷிங் பௌடர் நிர்மா என அலற ஆரம்பித்தாள்’’ விபுசி, உவேசிக்கள்..
ReplyDelete”முங்குசாமி”.... இவர் “நோஞ்சான்” பட இயக்குனர் தான/??
ரோப்பாலிக்கா :-) :-) :-) :-) :-)
ReplyDeletesema
ReplyDeleteச்ெம்
ReplyDeleteசம்பவத்தை விவரித்த விதம் அருமை...
ReplyDeleteதேர்ந்த எழுத்தாளர்களே உங்கள் எழுத்து முன் பெயில் ஆகிடுவார்கள்! அம்புட்டும் அருமை! #செம!
ReplyDeleteசிரிச்சு சிரிச்சு வயிறு வலி வந்துவிட்டது முத்தலிப். உங்களுக்கும் உங்களைப் போலவே ஒரு மகன் பிறக்க வாழ்த்துகிறேன் :-)
ReplyDeleteamas32
Amen! :)
Deleteஅடேய்... தங்கச்சியக் கொல்லப் பாத்தவனே... :)
ReplyDeleteதிரும்பத் திரும்பப் படித்து விட்டுப் போன நகைச்சுவை வரிகளை சிலாகித்து ரசிக்கிறேன். கிரேசி மோகன் மாதிரி ஆனா வேற ஸ்டைல். வாழ்த்துகள் :-)
ReplyDeleteamas32
கடைசி வரி- அத்தா ...???
ReplyDeleteஎப்பவும் போல சூப்பரு...
@karadi_kathai
முத்தலிபு, வரிக்கு வரி உருண்டு புரண்டு சிரிச்சிக்கிட்டே பாசமலர் சிவாஜி கணக்கா கண்களில் ஆனந்த கண்ணீர் ஆறாய் வழிந்து ஓட ஓட ஓட படிச்சி முடிச்சேன்.... ரொம்ப நாளாச்சு இப்படி அட்டகாசமான நகைச்சுவை எழுத்தை வாசிச்சு.... செம கலக்கல்ஸ் சார்!!! வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ;-) !!
ReplyDeleteSad story but ROFL delivery. HA HA...
ReplyDeleteஹஹஹா. அருமை .
ReplyDeleteஹாஹாஹா :-))))))) செம ப்ரோ
ReplyDeleteExcellent narration; good style and subtle humour bring out the child in everyone. Super.
ReplyDeleteஇடம்: பேர்த், அவுஸ்திரேலியா
ReplyDeleteநேரம் : lunch time
ஒரு கையில் youghurt டப்பா, மறு கையில் கரண்டி, இடையிடையே, clicking mouse..
சிரித்து சிரித்து வயிற்று நோவு..
அதற்கிடையே பக்கத்திலிருந்த அவுஸ்த்ரேலிய பெண்ணின் வினவல்... என்னத்தை சொல்ல அதுவும் ஆங்கிலத்தில்..
"உடும்புபோல் அந்தத்தொட்டியில் ஒட்டிக்கொள்வாள் என்று பார்த்தால் உளுந்து போல் உள்ளே விழுந்து விட்டாள்," Great imagination !!!
Saba-Thambi
:) :) :) :) என் தாத்தாவுக்கு ஹையோ லோவோ, பீபி வந்து மூலையில் குத்த வைத்திருந்தார் போல. “இன்னும் என்ன பண்ணுற?” என அவர் வெளியிலிருந்து ஸ்டேட்டஸ் அப்டேட் கேட்க, “பவுடர் போடுறேன்” என நான் சொல்ல, முகத்துக்குத்தான் போடுகிறேன் என நினைத்து கையறுநிலையின் உச்சத்துக்குப்போய் “அடேய், எண்ண ஊத்தச்சொன்னது கதவுக்குடா, ஒனக்கு இல்ல”
ReplyDeleteஉம்மையெல்லாம் நாலு பேரு கூடுற எடத்துல வச்சு படிக்க கூடாது. தனியா சிரிச்சு அசிங்க பட்டேன்! :) வாழ்த்துக்கள்!
ReplyDelete- Ananth
Office cabin la nijamave vilunthu vilunthu sirichen. Kanneer vanthuruchu. Etho vithiyin vasathal ungal thangai nalla irukanga. :) super. Kastakalathula unga posts padicha manasu lesayi sirichuruvom. Continue nanbare! :) :) :)
ReplyDeleteசெம... செம. :)))
ReplyDeleteபடிக்க முடியாதபடி சிரிப்பினால் கண்களில் கண்ணீர்..பாக்கியம் ராமசாமி கதை படிக்கும் போது இப்படி நடந்தது..
ReplyDeleteசெஞ்ச வேலை தான் கொலை முயற்சி என்றால், எழுதும் எழுதிலுமா... உண்மையிலேயே கொன்னுட்டீங்க போங்க... :)
ReplyDelete“இன்னும் என்ன பண்ணுற?” என அவர் வெளியிலிருந்து ஸ்டேட்டஸ் அப்டேட் கேட்க,
ReplyDeleteஎன்ன சொல்லி பாராட்டுவது...!!! அருமை என்ற வார்த்தை முழு பாராட்டையும் பிரதிபலிக்கவில்லை....!!!
ReplyDeleteகொஞ்சம் போல சோகமா இருந்தா விஜயகாந்த படம் பார்ப்பேன். குதூகலமாகிடுவேன். இப்ப நம்ம முத்தலிப் ப்ளாக் படிக்கலாம்.அன்லிமிடெட் சிரிப்பு :-)) @செசெந்தில்குமார்
ReplyDeleteஅடப்பாவி.... காலங்காலமா பாசமலர்ல இருந்து என் தங்கை கல்யாணி, (தங்கைங்கிற பேர்ல பல படம்) ன்னு ஏகப்பட்ட படம் வந்த மண்னுல சத்தமே இல்லாம எந்த கிளிஷேகும் இடமே தராம நீ ஆகப்பெரிய கொலை முயற்சிகளை செஞ்சிருக்க... பதிவு ச்சும்மா சுந்தர்.சி கலகலப்பு மாதிரி ஜாலியாவே இருந்தாலும் நீ ஒரு கொரிய இயக்குனர் "கிம்டுகிக்"ங்கிறதுல எள்ளளவும் சந்தேகமே இல்ல :-))))
ReplyDelete//உடும்புபோல் அந்தத்தொட்டியில் ஒட்டிக்கொள்வாள் என்று பார்த்தால் உளுந்து போல் உள்ளே விழுந்து விட்டாள்,//
ReplyDeleteசூப்பரப்பு!
BK
செம்ம்ம :)
ReplyDelete@பிழைதிருத்தி: ஆமாங்க, புழல்லருந்து பப்லிஷாகிருக்கும் இந்தப்பதிவு. நல்ல வேளை.
ReplyDelete@ப்ரவீன் :- முங்குசாமியா? யார் அவரு? நோஞ்சான்னா என்ன? நான் இருக்குறது அண்டார்ட்டிக்காலங்க ;-)
@ஏகலைவன்: நன்றிங்க
@ராஜ்குமார்: நன்றி
@முரளிகண்ணன்: நன்றியண்ணே. ஆழ்வார்ப்பேட்டையார் மேட்டருக்கு சாரி ;-)
@கேஎஸ்ஜிஓஏ: நன்றி :-)
@சு.திருநாவுக்கரசு:- அன்புக்கு நன்றி. எழுத்தாளர்கள் எப்பவும் பெயில் ஆக மாட்டார்கள்.
@அமாஸ்: நன்றி அம்மா... கேரளோ மெக்சிக்க ஐயங்கார சிந்திப்பொண்ணு ஒன்னு பாருங்க ;-)
@காட்டுவாசி: அறியாத வயதில் மோட்டிவ் இன்றி செய்த கொலை முயற்சிகள் தவறாகா
@அமாஸ்: மீண்டும் நன்றி அம்மா
@கரடிகதை - அப்பாவை அத்தா என்று அழைப்பர் சில தமிழ் இஸ்லாமியர். சங்க காலத்தமிழ் வார்த்தை
@ரிஷி: என்னது வணக்கமா? இந்த டகால்ட்டியெல்லாம் வேணாம். மனசார வாழ்த்துங்க. அதுவே போதும்.
@முபாரக்: நன்றிங்க
@தேவேந்திரமூர்த்தி: நன்றிங்க
@பிவிஆர்: மிக்க நன்றி சார். ஃபீலிங் வெரி ஹாப்பி
@சபாதம்பி:- அந்த ஆ"ஸ்திரீ"ரேலியை வ்லாஸம்...ஹிஹிஹி
@ஆனந்த்: வித்யாச உருட்டா இருக்கே உங்க கமெண்ட். பாராட்றீங்களா திட்றீங்களான்னே தெரியல.
@ஜெகன்ஜீவா: ப்லாகுலாம் படிக்க அனுமதிக்கிற ஆபீஸ் எதுங்க? ஐடி குடுத்தீங்கன்னா ரெஸ்யூம் அனுப்புவேன்.
@ஆதம் முஹம்மது: நன்றி. உங்க பேர்ல உள்ள குறியீடு அருமை.
@சுசீலா: பாக்கியம் பக்கம் நானா? என் பாக்கியம். மிக்க நன்றி மேடம்.
@கதாசிரியர்: பாஸ்.. நான் எதோ திட்டம்போட்டு செஞ்ச மாதிரி சொல்றீங்க. அயாம் அப்ராணி
@பாரதி: :-) இந்த ஸ்டேட்டஸ் அப்டேட் வேற எங்கியோ படிச்சது. நான் உருவிக்கிட்டேன்
@டிஜி20: வார்த்தைலதான் பாராட்டனும்னு இல்லங்க.. கார்ட், கேஷ் எல்லாம் அக்சப்டட் ;-)
@செசெந்தில்குமார்:- அப்போ என்னையும் காமடி பீஸுங்குறீங்க.. ம்ம்..ம்ம்.. கேப்டன் ஆட்சி வரட்டும். உங்கள கழகம் கவனித்துக்கொள்ளும்
@கர்ணாசக்தி:- கிம்கிடுக் கும்கிடொக்குன்னு எதேதோ சொல்றீங்க. விட்டலாச்சார்யா பாத்து வளந்த பயலுவ நாங்க
@பிகே: நன்றிங்க
@ரசனை: மிக்க நன்றி சித்தப்பு.
சூப்பர் ...
ReplyDeletesuper
ReplyDeletesuper....super....super....
ReplyDeleteசூப்பர்.
ReplyDeleteநேராகக்கதவிடம் சென்று, தைரியத்தையெல்லாம் ஒன்றுகூட்டி கீழே உள்ள தாழ்ப்பாளைத் திறந்தேன்,என்றுதானே நினைக்கிறீர்கள்? அதுதான் இல்லை. திறந்திருந்த கீழ்த்தாழ்ப்பாளையும் சேர்த்து சிக்கென மூடிவிட்டு வந்தேன். சேஃப்டி ஃபர்ஸ்ட். சேதாரம் நெக்ஸ்ட் என்பது சித்தர் வாக்கு
ReplyDelete-----------------
”தட்டிப்பாத்தேன் கொட்டாங்கச்சி,
தண்ணித்தொட்டிக்குள்ள எந்தங்கச்சி,
எட்டிப்பாத்தேன், என் அன்புத்தங்கச்சி…
ஆளு முழுசா… உள்ள முழுகிடுச்சி”
என சிச்சுவேஷன் பாட்டுக்கூட பாடாமல், கடமையே கண்ணாக அங்கு யாரும் வருவார்களா என்று பார்த்தேன். (பார்த்’தேன்’தான். பார்த்‘தோம்’ அல்ல. தங்கை விழுந்ததும் சில்வண்டுகள் சிதறி விட்டன).
என் தாய் மிகவும் துயருற்று அழுதுகொண்டிருந்தார். குற்றவுணர்வு மேலோங்க, அவருக்கு அருகில் சென்று கூறினேன், ”அதான் பாப்பா பொழச்சுட்டால்ல, அத்தாகிட்ட சொல்லிடாதம்மா”
--------------------
கொலை முயற்சி பண்ணீட்டு அதை செம்மயா எழுதிருக்கீங்க . செம்ம . சிரிச்சு முடியல. டுவிஸ்ட் , பாட்டு, பன்ச்.. எல்லாம் செம்ம ... மரண ரோப்பில்
;-) Thank you for ur effort.
Delete