அப்போது நான் டிப்ளொமா படித்துக்கொண்டிருந்தேன் (நிறைய அப்ரண்டிஸ்
இதை டிப்ளமோ என்கின்றனர். அது தவறு. டிப்ளொமா என்பதே சரி). பாலிடெக்னிக் பருவம், காலேஜிலும்
சேர்த்தியில்லாது ஸ்கூலிலும் சேர்த்தியில்லாது அவன் இவன் விஷால் பருவமாகும்.
மேநிலைக்கல்வியில், இரண்டு
வருடம் தூக்கமிழந்து, கிரிக்கெட், மானாட மயிலாட, அஞ்ஜான் தலைவா பில்லாபில்லா போன்ற
அற்புத காவியங்களை எல்லாம் காணாமல் புறக்கணித்து, பள்ளியில் சக +2 போராளியை மார்க்கில்
வென்றெடுக்க முக்கிக்கொண்டிருப்போம்.
இந்நேரம்பார்த்து,
செத்துவிட்டார் என நாம் கருதிய வெகுதூரத்து உறவினர் (நன்றி ரைட்டர் சிஎஸ்கே), ஆடி பதினெட்டுக்கு
வீட்டுக்கு வந்து, “நம்ம பாப்பாவும் டொல்த்துதான். எல்லா டெஸ்ட்லயும் செண்ட்டம் எடுக்குறா.
ஸ்டேட் பர்ஸ்ட் எக்ஸ்பக்ட் பண்றோம். டெந்த்ல உட்டத இப்ப புடிச்சிடணும். மெடிசின்ல ஃப்ரீ
சீட் கெடச்சிடும். உங்க பையன் நல்லா படிக்கிறானா?” என்று கேட்ட தருணம், ஆல் சப்ஜெக்டில்
அண்டர் 16 எடுத்ததற்காக அப்பா நம் முதுகில் டி20 ஆடி முடித்திருந்த ப்ரேக் டைமாக இருக்கும்.
இது
போன்ற எந்தத்தொல்லைகளும் இல்லாதது பாலிடெக்னிக். முதல் வருடம் ஆறேழு சப்ஜெக்ட். ரெண்டாம்
வருடத்திலிருந்து செமஸ்டருக்கு 3 பேப்பர்தான். டைம்பாஸ் விகடனோ, வண்ணத்திரையோ கூட கொஞ்சம்
அர்த்தபுஷ்ட்டியாக இருக்கும். ஆனால் இந்த செமஸ்டர் புத்தகங்கள் திடீரென்று இளைத்த எஸ்பீபி
சரணப்போல மரண ஒல்லியாக இருக்கும் (அதில் கூட அரியர் வைக்கும் அரிய மூலிகைகள் அடங்கிய
அமேசிங் காடு பால்டெக்னிக் என்பது வேறு விஷயம்).
இஞ்சினியராகி
பெட்ரமாக்ஸ் லைட்டேதான் செய்யப்போகிறேன் என்பவர்கள் நல்லதொரு பாலிடெக்னிக்கில் சேர்ந்தால்
சென்னை அமிர்த்தா தரும் செவன் ஸ்டார் வாழ்க்கை இல்லாவிடினும் முதலுக்கு மோசமில்லாது
சுமாரான வாழ்க்கை நிச்சயம் கிடைக்கும். பாலி முடித்தால் இஞ்சினியரிங் கல்லூரியில் நேரடியாக
இரண்டாமாண்டு சேரலாம். அடித்தளம் உறுதியாயிருந்தால் இஞ்சி. பேப்பர்களை எளிதில் புரிந்து
கொள்ள முடியும்.
போர் அடிக்குதுல்ல? சரி நிறுத்திப்பம்.
சரியான கரியர் கைடன்ஸ் வேண்டுவோர் அண்ணன்கள் முரளிகண்ணன் & வா. மணிகண்டன் அவர்களை
அணுகுக. நாம கொரளி வித்தை பக்கம் ஒதுங்குவம்.
எனது
ஏழெட்டு காதல்களில் மிக முக்கியமான ஒன்று என் பாலிடெக்னிக் கல்லூரி வாழ்வில் உதித்தது.
வேதம்புதிது அமலாவைப்போல் படிய தலைவாரி (தலையெல்லாம் எண்ணெய்ப்பிசுக்கு…), பார்பி பொம்மை
போன்ற முகச்சாயலில் ஒரு பெண் படித்தாள். பெயர் சுவேதா என வைத்துக்கொள்வொம். அவளைக்கண்டதும்
எனக்கும் என் நண்பன் தினேஷுக்கும் ஆற்றொணாக்காதல். நாங்கள் காதலிப்பதைப்பார்த்ததும்
ஒரு மும்முனைப்போட்டிக்கு சும்மா இருந்த, காதல் ஆர்மோன்கள் உடம்பில் சுரக்கவே சுரக்காத
செந்தில் (இவனைப்பற்றித் தனியாகப் பதிவிடுகிறேன்) என்பவனும் களத்தில் குதித்தான்.
இவ்விடத்தில் மூவர் குறித்த சிறு குறிப்பு:
தினேஷ்:- நல்லா படிப்பான். வெள்ளையாய்
இருப்பான். எப்போதும் கெக்கெபெக்கேவென்று சிரிக்கும் இளித்த வாய். கையெழுத்து அழகாய்
இருக்கும். ஓரளவுக்கு நல்ல பையன். பொதுவாய் பெண்களுக்கு பிடிக்கும் அத்தனை குணநலன்களும்
ஒருங்கே அமையப்பெற்றவன்.
முத்தலிப்:- மேலே உள்ள பாய்ண்ட் ஒவ்வொன்னுக்கும்
எதிர்ச்சொல் போட்டுக்குங்க.
செந்தில்:- No Comments, Simply
waste.
ஒரு
மாலை, ஆஸ்டல் அறையில் அரட்டையடித்துக்கொண்டிருக்கும்போது தான் சுவேதாவைக் காதலிப்பதாய்
தினேஷ் என்னிடம் சொல்ல, “நானும்தான்” என நான் சொல்ல, “அப்டின்னா நானுந்தான்” என செந்தில்
சேர, அங்கு ஆரம்பித்தது எங்கள் முக்கோண ட்ரைலாஜி. முன்பே சொன்னதுபோல தினேஷுக்கு எக்கச்சக்க
”+” பாய்ண்ட்ஸ். இதற்கெல்லாம் மேலாக, அவன் சுவேதாவின் க்ளாஸ்மேட் (ஈசீ டிப்பாட்மெண்ட்).
நானும் செந்திலும் ற்றிப்லீ. எந்த எஸ்ட்டா முயற்சியும் செய்யாவிட்டாலும் தினேஷுக்கு
எளிதில் சுவேதா செட்டாகிவிட சாத்தியங்கள் இருந்ததால், நானும் செந்திலும் கூட்டமைத்தோம்.
எங்கள் திட்டக்குழு எடுத்த தீர்மானங்களாவன:-
(செந்தில் எழுதியவை)
- முதலில் சுவேதா தினேஷைக் காதலிப்பதிலிருந்து தடுக்க வேண்டும்
- இதனால் ஏற்ப்பட்ட அந்த காதலன் இல்லா இடைவேலியை, நாங்கள் நிறப்ப வேண்டும்
- தினேஷை ரூல்ட் அவுட் ஆகிய பின் முத்தலிபும் செந்திலும் போட்டியிட்டு எங்களில் தகுதியானவர் சுவேதாவை காதலியாக்க வேண்டும்.
- இந்த போட்டி சுவேதாவிர்கு தெரியாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
- அவளின் க்ளாஸ்மேட்டான தினேஷ் இதுகுறித்து அவளிடம் எதுவும் சொல்ல கூடாது. அவன் இவ்விஷயத்தில் ஜெண்டில்மேனாக நடக்க வேண்டும்.
(இதோடு குழுவின் ஏனைய மெம்பரான நான் சேர்த்தது)
செந்தில் முதலில் தமிழை ஒழுங்காக எழுதக்
கற்க வேண்டும். வரிக்கொரு ஸ்பெல்லிங் மிஸ்டேக். வேஸ்ட்லாண்ட்.
சுவேதாவை
சந்திக்க வேண்டி அவள் படித்த மேத்ஸ்-2 டூஷனுக்கு நான் சென்றேன். நன்றாகப்படிப்பவனாயினும்,
தன் மடிக்கு மோசம் வந்துவிடக்கூடாதென்று தினேசும் கண்காணிக்க அங்கு சேர்ந்தான். டூசனுக்குலாம்
யார் வருவா அசிங்கமா என்று சோம்பேறிச்சிங்கம் செந்தில், ”இவருக்கு பதில் இவர் என்று”
தனக்கு பதில் வேறொரு நண்பனை அனுப்பி இருந்தான். அவனுடைய வேலை, நானோ தினேசோ சுவேதாவிடம்
பேசும்போது வெக்கமேயில்லாமல் இடையில் புகுந்து கண்டதையும் பேசி அவளை காண்டாக்கிவிட்டு
இதன் காரணமாகவே அவள் எங்களிடம் பேசுவதைத் தவிர்க்க வைப்பது. இதையும் மீறி அவ்வப்போது கிடைக்குப் கேப்பிலெல்லாம்
கொரங்கு சேட்டை செய்து சுவேதாவிடம் காண்டக்ட் சர்ட்டிபிகேட்டில் “நன்று” என வாங்கியாயிற்று.
பின், என் காதலை அடுத்தகட்டத்திற்கு நகர்த்த,
1)
சுவேதா
நீ வலம்வரும் நாட்களில்
கூச்சப்பட்டு சூரியன்
வெளியே வராதா?
2)
’சு’த்தமான
’வே’ள்வித்தீயில் உருவான வெள்ளைத்
’தா’மரை நீ!
3)
‘சு’ற்றும் பூமி, தன்
ஆ’வே’சத்தை ஒரு நொடிநிறுத்தும், உன்
பந்’தா’வான அழகைக்கண்டு!
இதுபோல பல வார்த்தைகளைப் பல்வேறு பர்முட்டேசன் காம்பினேசன்களில் கோர்த்து நூறுகவிதைகள் (ஒரே இரவில் எழுதியவை என்று கேப்ஷனிட்டு) அவளிடம்
கொடுத்தேன். சிரித்துக்கொண்டே வாங்கிக்கொண்டாள் (அய்யோ! கில்லிங் ஸ்மைல் அவளுடையது.
பல்லுதான் கொஞ்சம் அபூர்வசகோதர அப்பு கமல்போலிருக்கும்).
பயத்தில்
இரண்டு மூன்று நாட்கள் டூஷன் செல்லவில்லை. மேத்ஸ் வாத்தியிடம் ”சார் இவன் பாலியல்தூண்டல்
செய்கிறான்” என்று வழக்கு எதுவும் கொடுத்துவிட்டால் என் கதை அம்பேல். 3 நாள் கழித்து
தினேஷிடம் கூறி தன்னை வந்து சந்திக்கச்சொன்னாள். அதை தினேஷ் என்னிடம் வந்து சொன்னபோது
நானும் செந்திலும் கொடுத்த ஏளனப்பார்வையை தினேஷால் எழுபத்திரண்டு வயதுவரை மறக்க முடியாது.
அதற்குப்பின் அவன் பாடு, அல்சீமர் பாடு.
செந்திலுக்கு
இதில் என்ன உற்சாகம் என்றால், நான் ஜெயித்தால் அது அவனும் 50% ஜெயித்தது போல ஆகும்.
ஒரு கட்டத்தில் அவள் எங்களுக்கு கிடைக்காவிட்டாலும் சரி, தினேஷுக்கு கிடைத்துவிடக்கூடாதென்று
எங்களுக்குள் ஒரு ரகசிய எலீட் ஜெண்டில்மேன் அக்ரீமெண்ட் போட்டுக்கொண்டோம்.
பயம் கலந்த ஒரு இதுவோடு அவளைச்சந்திக்கச்சென்றேன்.
”என்ன ஸ்வேதா? கூப்ட்டியாமே? தினேஷ் சொன்னான்”
“ஏன் டூஷன் வரதில்ல?”
“கொஞ்சம் வேலையிருந்துச்சு”
“கவிதையெல்லாம் படிச்சேன். நெஜமாவே ஒரே
நைட்ல எழுதினதா?”
“ஆமா”
“எப்டி முடிஞ்சுது?”
“அது அப்டிதான். ஒரு விஷயம் ரொம்ப புடிச்சா
இதுலாம் ஈசி”
சிரித்தாள். இல்லை… ஸிரித்தாள்…
“இத நானே வெச்சுக்கட்டுமா? உன் நியாபகமா?”
இதைக்கேட்டதும், அப்போதெல்லாம் தமிழகத்தில் மின்வெட்டுகள்
இல்லாத காரணத்தால் மிகத்தாராளமாக பத்தாயிரம் மெகா வாட் பல்ப் எரிந்தது என்னைச்சுற்றி. வித்யாசாகரின்
“ஒரே மனம்” பாடல் டால்பி அட்மாஸில் ஒலித்தது (அட்மாஸ் மட்டும் அப்போ இருந்துச்சா எனக்கேட்போரே,
உங்களுக்கெல்லாம் ஒன்று சொல்லிக்கொள்கிறேன். கேள்வி கேக்குறது ஈசி சார். பதில் சொல்லிப்பாருங்க
தெரியும்).
“நீயே வெச்சுக்கோ. எல்லாமே உனக்குத்தான்”
(இந்த எல்லாமேக்குள் நானும் அடக்கம் என்பதை என்கோட் செய்து அனுப்பினேன். சரியாக டீகோட்
செய்து புரிந்துகொண்டாளா என்று தெரியவில்லை).
சந்திப்பு முடிந்து, பிரியும்போது ஒரு
காகிதம் கொடுத்தாள்.
அதில் என்னமோ எழுதியிருந்தது.
“என்ன இது?”
“இதுக்கு அர்த்தம் கண்டுபிடிச்சு சொல்லு”
”ஏன்?”
“கண்டுபிடிச்சுட்டு வா. அப்புறம் சொல்றேன்”
வெண்ணிறாடை மூர்த்தி இஸ்லாண்ட் எஸ்டேட்டைத்தேடும்
அதே சீரிய முயற்சியில் நானும் இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன், அந்த துண்டுச்சீட்டு
வார்த்தையின் பொருளை…
Monami.
athenna ஆற்றொணாக்காதல். ???
ReplyDelete
ReplyDelete(இதோடு குழுவின் ஏனைய மெம்பரான நான் சேர்த்தது)
செந்தில் முதலில் தமிழை ஒழுங்காக எழுதக் கற்க வேண்டும். வரிக்கொரு ஸ்பெல்லிங் மிஸ்டேக். வேஸ்ட்லாண்ட்.
u mean wasteland?
HA HA AH
Monami......?
ReplyDelete....?
Monami?
ReplyDeleteArtham therijatha illaya?
thalaye vedichidum pola irukku? seekiram sollidunga muthalib
Mon ami - My friend in French :-)
Deleteavar kettahu thundu cheetil ulla vasagathin arthathai! monamiyouda arthatha illa !!!
Deletenambitten ..muthalib...
Delete@ibrahim.
adhe... adhe....
ivlo visyam nadanthirka poly la ? Naa ennoma umma umma ma padala thaan neenga moonu varashamum virumbu kettukitu irundhadha ninechen. enna oru appavi thanam.
ReplyDeleteஅன்பின் குல் பாய். பரஸ்பரம் பழைய கொசுவர்த்திகளை மறந்துவிடுவோமாக. ஆமென். (இல்லாவிட்டால் என் பங்குக்கு நானும் சிலபல மேட்டர்களைப்பேச வேண்டிவரும். எப்படி வசதி?)
Deletemonami -- "mon ami" means my friend...
ReplyDeletecool bro.... itha short filma edukalamae????
ReplyDeleteFantastic.... வாவ் செம்ம முத்தலிப்...
ReplyDeleteவழக்கமான பட்டாசு வெடி சிரிப்போடு, நல்ல நகைச்சுவையான காதல் கதை
இதோட முடிஞ்சுதா ? அப்புறம் இதை தொடரலயா ?
The End.
Delete