Posts

Showing posts from 2020

தாலிloquy

Image
இன்று இதற்கொரு முடிவு எட்டவேண்டும் என்ற நம்பிக்கையோடு பாத்ரூமுக்குள் நுழைந்தேன் நான் . முந்தின வாக்கியம் ‘ நுழைந்தே ’ னிலேயே முடிவு பெற்றிருக்கலாம்தான் . அந்த ‘ நான் ’ தேவையற்றதே . ஆனால் அந்த நானை இந்த நான் அடுத்த வாக்கியத்தில் விளக்கவிருப்பதால் லீடு கொடுக்க வசதியாக இடம்பெற்றது .   அந்த ‘ நான் ’ என்பது பாத்ரூமுக்குள் நுழைந்த , என் ‘ என் கதை ’ யைச் சொல்லிக்கொண்டிருக்கும் நான் . இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நான் அல்ல .   ஏனெனில் , இந்தக்கதையின் ஜானரை வைத்து , சிலர் ( என் [ எழுதிக்கொண்டிருக்கும் நானின் என் ] கணக்குப்படி ஏழு பேர் ), ‘ என்ன பாய் சொந்தக் கதையா ?’ என்று இளித்தபடி வருவர் .   அவர்களைப் புறந்தள்ளிவிட்டு பாத்ரூமுக்குள் நுழைக . தயங்காமல் நுழைக . இன்று உள்ளே வேறு எதுவும் செய்வதாய் இல்லை . மனசு சரி இல்லை .   நான் - ஏதோ ஒரு நான் . பெயரா முக்கியம் ? ஆம் , பெயர் முக்கியம் என்பவர்கள் முரளி , மோகன் , ராகவன் , ஆனந்த் , ஜகன் , சேகர் , குமரன் , ரவி , செந்தில் , சங்கர் , சரவணன் இப்படி ஏதாவது ஒன்றை எடுத்துக்கொள்க .   சற்ற