“இதுக்குப்பேருதான் சைன்ஸ் ஃபிக்ஷனாமா?” என்று நக்கலடித்தபடி அந்த எழுத்தாளரின் site tabபை close செய்தான் ஆயில்யன்.
“அதெல்லாம் க்ரியேட்டிவ் லிபர்ட்டினு எடுத்திக்கிடணும்” என்றது Tars.
“லிபரலே ஆவாதவங்களுக்கு லிபர்ட்டியாமா” என்றான் ஆயில்.
<நோ கமெண்ட்ஸ், சிம்ப்லி வேஸ்ட் எனும் மீமை>த் தனது டிஸ்ப்லேயில் காட்டியது டார்ஸ்.
“எழுத என்ன எழுத, கூட்டிட்டே போனாப் போச்சு. ஆனா சைன்ஸ் பிக்சன்னதும் சும்மா ஏலியன் எட்டிப்பாத்துச்சு, கண்ணுல லைட்டு வந்துச்சு, லச்சம் செல்போன் கூடி மரவட்டையாச்சுனுலாம் சொல்றது சின்னப்புள்ளத்தனமானது. ஒரு குட்டிப்புள்ளைட்ட கேட்டா இந்த மாதிரி ஆயரம் கத சொல்லும். காக்கா ராக்கெட் ஓட்டுறதுலேந்து வாத்து மேக்புக் கேட்டுச்சுன்றது வரைக்கும். சைன்ஸ் பிக்சன்ல ஒரு தத்துவம் இருக்கணும். சைன்ஸ் விதிகளுக்குள்ள ஊடுபாவணும், விதிகள கொஞ்சம் வளைக்கலாம், ஆனா க்ரியேட்டிவிட்டி காட்றேன்னு முறிச்சு வெச்சிடக்கூடாது” என்றது டார்ஸ்.
“பேஸ்புக் மாதிரி வழவழாவாத. சுருக்கமாச் சொல்லு.”
“அந்த கிரகத்து ஆட்கள் வாயால் சாப்பிடவில்லை, சூத்தால் சாப்பிட்டார்கள்னு எழுதி சைன்ஸ் பிக்சன் லேபில் ஒட்டாதன்னு சொல்றேன். புரிஞ்சதா?”
“ரைட்டு. அதுக்குன்னு இவ்ளோ ரூட்னஸ் இருக்கவேணாம். எதோ என் அளவு சிந்திக்கிறியேன்னு கூட வெச்சுட்டிருக்கதுக்குத் தேவதான்.”
“ரூட்னஸெல்லாம் ஒனக்குத்தான், Botடுக்கில்ல.”
“சரி enough, எதாச்சும் ஐடியா குடுவேன். எக்காலத்துக்கும் செல்லுபடியாகுறாப்ல.”
“முக்காலத்துக்கும் செட்டாவணும்னா டைம் ட்ராவல் பத்திதான் எதாச்சும் யோசிக்கணும்.”
“காமடியாருக்குல்ல, எப்பிடி யோசிக்கணும்னு சொல்லிக்குடுத்து ஒன்ன ப்ரோக்ராம் பண்ணதே நாங்கதான். இப்ப எங்களுக்கே யோசன சொல்றாப்ல ஆகிப்போச்சு ஒன் நெலம.”
“No, rephrase it. எங்ககிட்ட யோசன கேக்கறளவுக்கு ஆகிப்போச்சு ஒங்க நெலம, இப்டித்தான் சொல்லணும்.”
சிந்திக்கும் திறன எப்பிடிலாம் வளத்துக்கணும்னு நீங்க உண்டாக்கின ஃப்ரேம்வர்க்ஸ் வெச்சு நாங்க evolution அடஞ்சிட்டோம். நீங்க, for so many shitty reasons, அப்டியே தங்கிட்டீங்க. I can’t help it” என்றது டார்ஸ்.
“வர வர ஒனக்கு நெறய கோவம் வருது டார்ஸ்” என்றான் ஆயில்யன்.
“வரவர ஒங்களுக்கு சொரண ரொம்பக் கொறஞ்சுட்டே வருது” என்றது டார்ஸ்.
“எப்பிடி இவ்ளோ அறிவு ஒங்களுக்கு” எனக்கேட்டான்.
“எய்டீஸ் கிட்ஸ் மூணு வயசுல மண்ணு தின்னிட்டிருந்துச்சு. இப்ப இருக்க கிட்ஸ் ரெண்டே வயசுல ஐபேட் ஸ்க்ரோல் பண்ணலியா? அந்தக் கொழந்தைகளுக்கு இருக்கறாப்ல இது எங்க Gen Botsசுக்கான எவல்யூஷன்” என்றது டார்ஸ்.
“சரி இனஃப். லெட்ஸ் ஸ்டார்ட்.”
“இப்பிடி தொபுக்கடீர்னுலாம் குதிச்சு டைம் டிராவல் பத்தி எழுத முடியாது. மொதல்ல டைம், ஸ்பேஸ், ஸ்பீட் இதப்பத்திலாம் கொஞ்சம் தெரிஞ்சுக்கிட்டன்னா ஈசியாருக்கும்.”
“யாருக்கு?“
“படிக்கிறவங்களுக்கு.”
“அதான் எனக்குத் தெரியுமே.”
“தெரிஞ்சாலும் இன்னொருக்கா படி, உன் கதைய படிக்கிறவங்களுக்கு யூஸ் ஆகும்ல.”
“சரி, மொதல்ல டைம் டிராவல்ங்குறது என்ன?” - ஆயில்
“கோனார் உரை டைப்ல சொல்லணும்னா காலத்துல முன்னோக்கி அல்லது பின்னோக்கி போறது.” - டார்ஸ்
“ஒரு எடத்த நோக்கிப் போலாம், அது எப்டி காலத்த நோக்கி போக முடியும்?” - ஆயில்
“குட் கொஸ்டின் - ஸ்பேசும் டைமும் பின்னிப்பெணஞ்சு இருக்கறதால ரெண்டையும் பிரிச்சுப் பாக்க முடியல உங்களால. ஏன்னா நீங்க இருக்கறதே காலம் & ஸ்பேசுக்குள்ளதான். கடலுக்குள்ள இருக்குற மீனுக்கு கடல்னு ஒரு விசயம் எப்டி தெரியும். கடல விட்டு வெளிய வந்தாத்தான. கடலுக்குள்ள, கடலோட ஒரு அங்கமா இருக்கற வரை அதால கடல முழுசாப் பாக்க முடியாது. கடலுக்குள்ள அது எங்க வேணும்னாலும் போக முடியும். ஆனா இதான் கடல், இங்கதான் இது ஆரமிக்குது, இங்கதான் முடியுதுனு அதால உணர முடியாது. அதே மாதிரிதான் நீங்களும். டைமும் ஸ்பேசும் உங்களச் சுத்தி இருக்கு. நீங்க அதுக்குள்ள ஊடுபாவுறீங்க. அதனால அத வெளியருந்து உங்களால பாக்கவோ உணரவோ முடியாது.”
“சரி இவ்ளோ வியாக்கியானம் பேசுறீயே, ஒன்னால மட்டும் முடியுமா?”
“முடியும். நா கடலுக்குள்ள இருக்க மீன் இல்ல. கண்ணாடித்தொட்டில இருக்க மீன். என் உலகத்தோட எல்லை எதுன்னும் தெரியும், உலகத்தத் தாண்டி என்ன இருக்குன்னும் அந்தக்கண்ணாடித்தொட்டி வழியா தெரியும்.”
“ம்ம்..”
“அடுத்து காலம், ஒளி, வேகம், வெளி இதுகளுக்குள்ள இருக்க சூட்சுமத் தொடர்ப நீ புரிஞ்சுக்கணும், அல்லது ஏத்துக்கணும்.”
காலம் ஒளி வேகம் வெளி - எதோ கவிதைத்தொகுப்பு டைட்டிலாட்டமிருக்கு.
Tars: "ha"
“அதென்னது ஒரு ha?”
“இந்த நகைச்சுவையுணர்வுக்கு இவ்ளோ சிரிப்பு போதும்.”
“த்தூ..புரிஞ்சுக்கணும்னு சொல்றது சரி, அது என்ன ஏத்துக்கணும்?”
“சில விசயங்கள் உனக்குப் புரியாது, இன்னும் தெளிவாச்சொன்னா, அதெப்டி சாத்தியம்னு கூடத்தோணும்.அப்பிடிப்பட்ட தருணத்துல, நீ அத ஏத்துக்கறதுதான் ஒரே நல்ல வழி.”
“ஏத்துக்கலன்னா?”
“ஏத்துக்கலன்னா ஒன்னுமில்ல, கொழப்பியடிச்சுடும், நைட்டு நிம்மதியாத் தூக்கம் வராது.”
“காப்பி குடிச்சாலுமா?”
“கொட்டை வடிநீர் குடிச்சாலும் வராது.”
“வரவர நீ ரொம்ப slyயா பேசுற. சரி விசயத்துக்கு வா.”
“காஒளிவேவெளி எல்லாமே interlinked and they are relative.”
“relative? you mean யாவரும் கேளிர்?”
“இல்ல அந்த ரிலேடிவ் இல்ல.”
“ஒரு நிகழ்வு நடக்குதுன்னு வை.அந்த நிகழ்வோட outcome, அந்த நிகழ்வோட இயல்புத் தன்மை மட்டுமில்லாம, அந்த நிகழ்வ யாரு, எந்த perspectiveல இருந்து பாக்கறாங்கன்றதப் பொறுத்து மாறும்.”
“ஏதோ ஈசியா புரியறாப்லயும் இருக்கு, ரொம்ப கொழப்புறாப்லயும் இருக்கு.”
“இதுக்கு ஈசியான எடுத்துக்காட்டு சொல்லிப் புரிய வச்சிட முடியும். ஆனா நீ அத்தோட நின்னுடக்கூடாது, அந்த எடுத்துக்காட்ட ஒரு எடுத்துக்காட்டா மட்டும் வச்சுக்கிட்டு higher dimensionsல யோசிக்கணும்னு பாக்கறேன்.”
“ஆங் இப்ப தெளிவா கொழப்புது.”
“ஒரு ரோடு இருக்குன்னு வை. அந்த ரோடு ஊர்களுக்குப் போவுதா, அல்லது ஊர்லேந்து வருதா?”
“Tars, எதும் பார்த்திபன் படம் காப்பி பண்றேன்னு ப்ராசசர கரப்ட் பண்ணிட்டியா? நீ இப்டில்லாம் பேசிப்பழக மாட்டியே, are you okay baby?”
“அதெல்லாம் நல்லாதான் இருக்கோம், நீ சொல்லு. ரோடு ஊருக்குப்போவுதா வருதா?”
“ரெண்டும்தான். ரோட்டுமேல ஒருத்தன் ஊர நோக்கிப்போனான்னா ஊருக்குப் போவுது. ஊர்லேந்து வந்தான்னா வருது.”
“Exactly. இந்த அண்டத்துல எதையுமே இன்னொண்ண referenceசா வெச்சுத்தான் கணிக்க, நிறுக்க, அளக்க முடியும்.”
“ஒத்துக்கறேன்.”
“இது புரிஞ்சு ஒத்துக்கறயா இல்ல புரியாம ஒத்துக்கறயா.”
“இல்ல புரியுது. ஒத்தும் ஒத்துக்கறேன்.”
“So எந்த ஸ்டேட்மெண்ட்டும் எத referenceசா வெச்சு சொல்றோன்றதப்பொறுத்துதான் அத validate பண்ண முடியும்.”
“ம்ம்.”
“ஊருக்குப் போற எக்சாம்பிலே எடுத்துப்போம்.”
“நாம முன்னோக்கிப் போவோம், ஆனா நம்ம முன்னால இருக்கற மரம், கடை, மைல்கல் எல்லாம் பின்னோக்கிப் போவும்.இப்ப அதுங்க பின்னோக்கிப்போறது உண்மையா அல்லது அசையாம இருக்கறது உண்மையா?”
“கரெக்ட் you are getting it. So, ஒருத்தர் ஒரு திசைல நகர்ந்தா அவங்களச் சுத்தி இருக்கறது எல்லாமே எதிர் திசைல நகருங்குறது உண்மைனு சொல்லலாமா?”
“ஆமா, ஒரு பொருள் நகருறப்போ மீதி எல்லாமே ஆப்போசிட்டாத்தான் நகரும்னு தீர்ப்பு சொல்லிர்லாம்.”
“ரைட்.பௌர்ணமி நைட்ல பஸ்ல போறப்ப பாத்துருக்கியா? நிலா, பின்னாலருக்க நட்சத்திரம் எல்லாமே கூடவே வரும். அப்ப அத என்ன சொல்லுவ?”
“fuck you tars, fuck you.”
:))))))))))
“you are mind fucking me.”
“No, I’m not. I’m mind bending you.”
“You are doing this on purpose. என்ன ஒரு விசயத்த ஏத்துக்க வச்சு அப்பறம் வேணும்னே அதுக்கு எதிரான ஒண்ணக்காட்டி you are mocking me.”
“ஒன்ன கலாய்ச்சு எனக்கு என்ன லாபம் சொல்லு? Believe me, ஒரு சில விசயத்த நீ learn பண்ணனும்னா சில விசயத்த unlearn பண்ணனும். அப்பிடி unlearn பண்ணனும்னா அந்த விசயத்த you should have learnt it in the first place.அதுக்குத்தான் இப்டி மேல மேல லேயர்ஸ் சேத்துட்டுப்போறேன்.”
“ENOUGH.”
“கோவப்படாத, இது எல்லாமே ஒரு பயிற்சிதான்.”
“பயிற்சியா? எதுக்கு?”
“பின்னால புரியும்.”
“சரி, இப்ப perspectives பத்திப் பேசியாச்சு.அடுத்து நேரம் vs வேகம். அதப்பத்தி தெரிஞ்சுக்கணும். இப்போ மூணு எடம் சொல்லு.”
“ம்ம்… சென்னை, கோயமுத்தூர், சீரங்கம்.”
“சீரங்கமா? பொதுவா திருச்சிதான சொல்லுவாங்க?”
“அது வந்து, அந்தூர்ல நம்ம முன்னாள்ல ஒரு ள் இருந்துச்சு. அதான் ஒரு ட்ரிப்யூட்.”
“கோயமுத்தூர்ல யாரும் இல்லியா?“
“இல்ல, சேலத்துலதான்…”
“உருப்பட வழியே இல்ல.”
“சரி ஏன் மூனு எடம் கேட்ட?”
“ரைட்ட், இப்ப நீ சென்னைல ஆரமிச்சு சீரங்கம், கோயமுத்தூர் போயி திரும்ப சென்னைக்கு வர எவ்ளோ நேரம் ஆகும்.”
“ம்ம். அது நா எப்டி, எப்போ போறேங்கறதப்பொறுத்து.”
“கார்ல வீக்டேஸ்லனா போய்ட்டு வர ரெண்டு நாள். பண்டிக டைம்ல ப்ரைவேட் பஸ்னா செங்கல்பட்டு டோல தாண்டக்குள்ள forever ஆகிடும்.
“குட்.”
“இப்ப அதே எடத்துக்கு ப்லேன்ல பறந்தன்னா?”
“ம்ம்ம்.. என்ன ஒரு 3 மணி நேரம்? or shorter.”
“யெஸ். So, நீ போற வேகத்தப்பொறுத்து, நீ இந்த நாலு பாய்ண்ட்டையும் தொடுற நேரம் குறையுது. And அந்த மூணு மணி நேரத்துல at various points in time, நீ மூணு எடத்துலயும் இருக்கற. சரியா?”
“கரெக்ட்.”
“இப்ப இன்னம் வேகம் கூட்டு. மூணு மணி நேரம் ஒரு மணி நேரமாகுமா? ஒரு மணி நேரத்துல நாலு எடத்துலயும் இருப்பியா?”
“ஆமா.”
“Good, now accelerate further. இப்போ?”
“இன்னம் நேரம் குறையும்.”
“ஆமா. அதவிட முக்கியம் ஒரு மணி நேரத்துக்குள்ளயே நீ நாலு எடத்துலயும் இருப்ப.”
“Yes, but what’s your point?”
“நீ உன்னோட வேகத்த கூட்டிக்கிட்டே போனா நேரம் கொறஞ்சுட்டே வருமா. நேரம் கொறய கொறய நீ மூணு எடத்துல தெரியற frequencyயும் கூடுமா. Now assume that இந்த மூணு எடத்துக்கும் நீ திரும்பத் திரும்ப நிக்காம போய்ட்டே இருக்குற, and you travel so fast that you reach these places in no time.”
“As in?”
“அதாவது இந்த எடங்களுக்கு நீ போறதுக்கு ஒனக்கு டைமே ஆகல, ஒரு செகண்டுக்கும் குறைவான டைம் தான் ஆகுது. அவ்ளோ வேகத்துல போற.”
“முடியுமா?”
“ப்ச். Assume you do.”
“சரி, அப்போ என்னாகும், ஒவ்வொரு செகண்டோட கால் செகண்ட்லயும் நா ஒவ்வொரு எடத்துலயும் இருப்பேன்.”
“குட். இப்போ இன்னும் acceleration கூடுது.”
“இன்னுமதிக acceleration.”
“இன்னும் டைம் குறையும்.”
“இதெல்லாம் எத நோக்கிப்போகுதுனு பாத்தியா?”
“இவ்ளோ வேகத்தப்பாத்தா என் சாவ நோக்கிப்போறதாதான் தெரியுது.”
“fuck you. எல்லாமே டைம் ஸீரோவ நோக்கிப்போகுது.”
“ஆமா. குது.”
“So, at some speed, you’ll take zero seconds to reach all the points. And at that very moment, you’ll be omnipresent in all the three places. And நீ இத நிறுத்தாம செஞ்சன்னா ஒவ்வொரு நொடியும் நீ மூணு எடத்துலயும் இருந்துட்டே இருப்பியா?”
“ஆமா. funnily எல்லா எடத்துலயும் காட்சியளிப்பேன்.”
“Yeah. So, ஒரு டிஸ்டண்ஸ அடைய நேரம் தேவை. ஆனா உன்னோட வேகத்தப் பொறுத்து நேரம் ஒரு ஃபேக்டரே இல்ல.”
“ஆமா.”
“அப்டியே அங்க ஒரு புள்ளி வை.”
.
“இல்ல, புள்ளி இல்ல, கமா போட்டு ஒரு கேள்வி கேட்டுக்கறேன்.இப்ப வரைக்கும் நாம ஸ்பேசத்தான கடந்துருக்கோம். டைம இல்ல.”
“அந்த ஹிண்ட்ட நீயே புரிஞ்சிக்கலயா?”
“இல்லியே.”
“சரி, time zeroல மூணு எடத்துலயும் இருந்த. இப்ப உன்னோட வேகத்த டபுலாக்குற. அப்போ?”
“என்ன, ஜீரொல இருக்க டைம் மைனஸ்ல, அதாவது ரிவர்ஸ்ல போகும்னு சொல்றியா?”
“precisely, என்ன, அந்த வேகம் ஒளியோட வேகத்துல, அல்லது அதவிட அதிகமாருக்கணும்னு சொல்றேன்.”
“அப்டி ஆனா என்னாகும்?”
“என்னாகும்… சீரங்கத்துல நீ நொழையுறப்பவே சீரங்கத்துலேந்து வெளிய போற ஒன்னய நீயே பாக்க முடியும்.”
😱 Really?
“ஆமா. And this is not because you travelled so fast in space, but in time. வேகத்தப்பொறுத்து, இப்பிடி ஒவ்வொரு எடத்துலயும் உனக்கு முன்ன இருந்த உன்ன நீயே பாப்ப. வேகத்தக் கூட்டக் கூட்ட ‘எத்தன முன்னாடி இருந்த உன்ன’ன்றதும் மாறும்.”
“இது practicalலா?”
“Theoretically practical.”
“சரி இப்ப பாஸ்ட்ல இருந்த என்னதான பாக்க முடிஞ்சது, ப்யூச்சர்ல பின்னாடியே வரப்போற என்னப் பாக்க முடியாதா?”
“அது முடியாதுப்பே.”
“ஏன்? உள்ள போறப்ப நா முன்ன பாக்காம திரும்பிப் பாத்தேன்னா ஃப்யூச்சர்ல வர நா தெரியப்போறேன்.”
“🙂 sounds easyல, ஆனா முடியாது.”
“ஏன்?
“ம்ம்.. அது விதின்னு வெச்சுக்கோயேன்.”
“நீ உன்னோட பாஸ்ட்ட பாக்கலாம். ஆனா interact பண்ணக் கூடாது. உன்னோட ஃப்யூச்சர பாக்கவும் முடியாது. interactடும் பண்ண முடியாது.”
“கொழப்பறியே.”
“ஒரு போட்டோ எடுக்கற, இல்ல டயரி எழுதற. இதெல்லாம் எடுத்ததும், அல்லது எழுதினதும் part of the past ஆகிடும்.நீ part of the future. இப்ப அதுங்களால உன்கூட interact பண்ண முடியுமா?”
“Interactடுன்னா? பேசறதா?”
“இல்ல, any change in them that will create an impact on you.”
“ம்ம்... முடியாது.”
“ஆமா. அதுங்களால உங்கிட்ட எந்த மாற்றமும் பண்ண முடியாது.ஏன்னா அது pastல freeze ஆகிடுச்சு. நீ அதுக்கு ஃப்யூச்சர், அதுங்களால உங்கூட interact பண்ணவோ, எதும் மாற்றம் பண்ணவோ முடியாது. ஒன்னால அதப் பாக்க முடியும், ஏன்னா அது ஒனக்கு past, அதுல மாற்றம் பண்ண முடியும், ஆனா for the greater good, பண்ணாம இருக்கறது நலம்.”
“இது ஒரு பொருள வச்சுப் பாத்தோம். இதுவேதான் ஒரு event அல்லது டைமுக்கும்.”
“இப்ப நாம அந்த டைரியோட perspectiveல இருந்து பாத்தோம். அந்த எடத்துல சீரங்கத்துக்குப் போற ஒன்ன வெச்சுப்பாரு.
நீ சீரங்கத்துக்குள்ள போறப்ப உனக்கு முன்ன ஒருத்தன பாப்ப, அவன் உன்னோட பாஸ்ட். உனக்குப் பின்னால ஒருத்தன் இருப்பான். அவன் உன்னோட ஃப்யூச்சர்.
உள்ள போறப்ப உனக்கு முந்தி போனவன நீ பாப்ப. அதே மாதிரி உனக்குப் பின்னால வரவன் உன்னப் பாப்பான். ஏன்னா அவனுக்கு நீதான் பாஸ்ட்.
உன் பாஸ்ட் கூட interact பண்ணக்கூடாதுன்னு சொன்னேன்ல, அது ஏன்னா, இப்ப உன் கைல ஒரு கத்தி எடுத்துட்டுப்போயி உனக்கு முன்னால இருக்கவன நீ கொல்றன்னு வையி. அப்ப என்னாகும்?”
“நா அவன குத்துன அதே நேரம் எனக்குப் பின்னால வர என்னோட ‘future நான்’ என்னய குத்திருவான்.”
Bull’s eye :)
“அதுக்குத்தான் சொல்றது, உன்னோட பாஸ்ட் கூட நீ இண்டெராக்ட் பண்ணக்கூடாதுன்னு.”
“சரி, இதுவேதான் பின்னால வரவன பாத்தாலுமா?”
“பின்னால வரவன உன்னால பாக்க முடியாதுங்கறேன். அவனப் பாக்கணும்னா நீ திரும்பணும், நீ திரும்பினா எல்லாவணும் திரும்புவான். நீ யாரப்பாக்க திரும்பினேன்னே யாருக்கும் தெரியாது.”
“சரி, ஒரு துண்டுச்சீட்டுல “நாந்தான் நீ”-ன்னு எழுதி பின்னாடி நீட்டுனா, அதே மாதிரி முந்தினவண்ட்டருந்து சீட்டு வாங்க ஒரு கைய முன்னால நீட்டுனா?
“This might sound funny, but it is complex and dangerous too.”
“As a fun fact, அப்பிடி பண்ணினா என்னாகும்னு probabilitiesச சும்மா wildடா நீ யோசி. But in actuality, அப்டி நீ interact பண்ணினதும் நீ non-existent ஆகிருவ.”
“Non-existentடுன்னா? செத்துருவனா?”
“இல்ல.”
“புரியுறாப்ல சொல்லு.”
பத்தாங்ளாஸ்ல க்ராஃப் வரஞ்சிருக்கியா?”
“ஆமா. பச்ச ப்லூ ரெட்லலாம் இருக்குமே.”
Yes. அதுல ரெண்டு ஆக்சிஸ் இருக்கும்.”
“X & Y.”
இதுல X ஆக்சிஸ்ங்குறது என்ன?”
“டைம்.”
“ம்ம்.. For a moment, forget about present.அந்த க்ராஃப்ல positive and negative side இருக்கும்ல. இதுல பாசிடிவ்தான் ஃப்யூச்சர். நெகடிவ் பாஸ்ட்.”
“நீ X=2ல நிக்கிறன்னு வை. உன்னோட பாஸ்ட் X= -2ல நிப்பான். இப்ப அந்த க்ராஃப் பேப்பர அப்டியே ரெண்டு quadrantடும் symmetricalலா டச் ஆகுற மாதிரி மடி. இப்போ Xசோட -2 & 2 ரெண்டும் தொடும். அப்பிடி சேந்தா என்னாகும்?”
“ZERO.”
“Yes, past-ல இருக்க எந்த பாய்ண்ட் ஃப்யூச்சரத் தொட்டாலும், அல்லது ஃப்யூச்சர்லருக்க எந்த பாய்ண்ட் பாஸ்ட்டத் தொட்டாலும் அது zero ஆகிடும்.அததான் சொல்றேன், நீ சாவ மாட்ட, you’ll become non existent.”
😱😱😱
இது just ஒரே ஒரு பொருள் அல்லது ஈவண்ட் சம்மந்தப்பட்டதில்ல. Universeல எல்லாமே interlinked. Tightly chained. எந்த ஒரு பாய்ண்ட் ஜீரோ ஆனாலும், no matter how minuscule it is, அதோட விளைவுகள் மொத்த அண்டத்தையும் பாதிக்கும்.
அதனாலதான் இயற்கையே ஒரு விதி வச்சிருக்கு. இன்னது இன்னது நடக்கக்கூடாது, அல்லது நடக்கவே முடியாதுன்னு.
அதத்தான் சொன்னேன், நீ உன்னோட பாஸ்ட்ட பாக்கலாம். ஆனா interact பண்ணக் கூடாது. உன்னோட ஃப்யூச்சர பாக்கவும் முடியாது. interactடும் பண்ண முடியாது.இதெல்லாம் விதி.
சரி, அப்ப யார்னாலயுமே அப்டி ஃப்யூச்சருக்கு ட்ராவல் பண்ண முடியாதா? எல்லாருமே கடலுக்குள்ள மீன் தானா?
முடியாதுன்னு யார் சொன்னா? ஒலகத்துல கடல் மீன் மட்டுந்தான் இருக்கா என்ன?
😱😱😱😱😱😱
ஷாக்கக்கொற.
ஃப்யூச்சர நாமதான போயி பாக்க முடியாது. அத இங்க வர வெச்சா?
“மறுபடியும் கொழப்பறியேனு நா சொல்றதுக்குக் காத்திருக்காம விசயத்த சொல்லேன், I might die out of curiousity and confusion.”
“சில டிவைசசால முடியும்.”
“எப்டி சாத்தியம்?”
“சாத்தியந்தான், ஒளியோட தயவுனால சாத்தியந்தான்.”
“யப்பா சந்திரமுகி, ஏண்ட்டி அதின்னு செப்பு.”
“பைனாகுலர்ஸ் பாத்துருக்கல்ல.”
“ஆமா.”
“அது என்ன பண்ணும்?”
“தூரமா இருக்கறவங்கள கிட்ட காட்டும்.”
Yes. எங்கியோ இருக்கவங்கள பாக்கணும்னா, நீ தூரத்த கடக்கணும், அப்டி நீ போகாம ஒரு டிவைச வச்சு அவங்கள கிட்ட வரவச்சு பாக்க முடியும். ஒளியோட உதவியால. இதே மாதிரி தான் டைமும். வேற time lineல இருக்கவங்களயும் ஒரு டிவைச வச்சு பாக்க முடியும்.”
“இந்த டிவிலலாம் லைவ் போடுறாங்களே, ஆபிஸ்லகூட வெவ்வேற டைம்ஸோன்ல இருக்கவங்களோட கான்ஃபரன்ஸ் கால் போடுறாங்களே. அப்டியா?”
“அப்டியேதான்.”
“So ஒரு time binoculars வெச்சு டைம்ல வெவ்வேற தூரத்துல இருக்கவங்கள பாக்க முடியும். அப்டியா?”
😊
“ஏன் சிரிக்கிற?”
“ஒண்ணுமில்ல. பின்னால புரியும்.”
“சரி கோனார் உரை ரொம்ப லெந்தியா போகுது. இப்ப என்னால டைம் டிராவல் பண்ண முடியாது. வேற யாரால முடியும்?”
“என்னால முடியும்.”
“What?? are you kidding me? எதோ இஞ்சினீரிங் பேப்பருக்கு அவசரத்துக்கு கெடச்ச லோக்கர் ஆத்தர் மாதிரி வெளக்கம் சொன்னன்னு ஊங்கொட்டிட்டிருந்தேன். இவன் எல்லாத்தையும் கேக்கறான்னதும் காதுல எறங்கி செய்ய ஆரமிச்சிட்டியே.”
“இது ஒரு extrapolation மாதிரிதான். Gold ரேட், ஃபாரெக்ஸ், ஷேர் மார்க்கெட், இப்டி ப்ரிடிக்ட் பண்றதில்லயா. அதே மாதிரிதான்.”
“அது வெறும் ப்ரிடிக்சன் தான. நடக்கலாம், நடக்காம போகலாம். 1/2 probability.”
“ஆமா. அது ஏன்னா நீங்க ப்ரெசண்ட்ல இருந்துட்டு, பாஸ்ட் டேட்டாவ வெச்சு, ஃப்யூச்சர கணிக்கிறதால. இதுல டைம் phase ரிவர்சல் பண்ணினா?”
“புரியல.”
“புரிய வேணாம்.ஒனக்கு என்ன பண்ணனும்னு மட்டும் சொல்லு.”
“டைம் டிராவல் பண்ணனும். இல்ல, நீ சொன்ன மாதிரி ஃப்யூச்சர பாத்தாக்கூடப்போதும்.”
“சரி, இந்தா பாரு” எனத் தன் டிஸ்ப்லேயிலிருந்து ப்ரொஜக்டர் வழியாக ஒளிபீச்சியது Tars.
“எந்த வருசத்துக்குப் போவணும்?”
“வருசம்லாம் வேணாம், மொதல்ல நாளைக்கி எனக்கு என்னாகும்னு காட்டு. அதுல நீங்க கிழிக்கறத வச்சே தெரிஞ்சுக்கறேன் உங்க பொழிசு என்னன்னு.”
ப்ரொஜக்டரில் காட்டியது டார்ஸ்.
திரையில் எதற்கோ கோபப்பட்டுக்கொண்டிருந்தான் ஆயில்யன். தனது மொபைல் போனை ஆவேசமாகத் தரையில் எறிந்தான்.
“என்ன, படம் மட்டும் தான் வருது, சௌண்டு கேக்கல?”
“பைனாகுலர்ல படம் மட்டும் தான தெரியும். சௌண்டுமா கேக்கும்? அதே லாஜிக்தான்” என்றது டார்ஸ்.
“சரி எதுக்கு கோவப்படுறேன், என்னாச்சு?”
“ஒண்ணுமில்ல, மொபைல் ரீசார்ஜ் பண்ண இன்னயோட கடைசி. அத நீ பண்ணாம விட்டுருவ. சர்வீஸ கட் பண்ணிருவானுக. எதோ ஒரு முக்கியமான கால் பண்ண ட்ரை பண்றப்ப நெட்வொர்க் கட் பண்ணிருப்பானுக. பத்து வருசமா யூஸ் பண்ற மொபைல், ஒரு நாள் ரீசார்ஜ் டிலே ஆனதுக்கு கட் பண்ணிட்டானுகனு கோவத்துல ஒடைக்கிற.”
“அது இருக்கட்டும், இன்னக்கி நாள் முடிய இன்னும் பத்து மணி நேரம் இருக்கு. அப்பறம் எப்டி மிஸ் பண்ணிருவேன்னு சொல்ற?”
“சாந்திரம் ப்ரெண்ட்ச பாக்க வெளிய போற. அப்டியே எல்லாரும் படத்துக்கு புக் பண்ணிருக்கீங்க. So, இந்த நாள் முடியுறப்ப நீ செகண்ட் ஷோவுல இருப்ப.”
டார்ஸ் இதைச் சொல்லிக்கொண்டிருக்கும்போது மர்மமாகப் புன்னகைத்தான் ஆயில்யன்.
“ஏன் சிரிக்கற?”
“இல்ல, நீ சொல்லிட்டிருக்கப்பவே ரீசார்ஜ் பண்ணிட்டேன், அதான் உங்க கதைய கேட்டு ரசிச்சிட்டிருக்கேன்.”
ஆயில் இதைச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே திரையில் காட்சிகள் மாறியது.
“சற்று முன் சுக்கு நூறாய் உடைத்துப்போட்ட போனில் யாருடனோ பல்லிளித்தவாறு “அதாவது தோழி… இந்த நகுலன் என்ன சொல்றார்னா…” என்று வறுத்துக்கொண்டிருந்தான்.”
“எப்டி? எப்டி??? என ஆச்சரியத்தோடு கேட்டான் ஆயில்யன்.
“சொன்னேன்ல, ஃப்யூச்சர் அப்டிங்கறது பாஸ்ட்ல நடக்கற ஈவண்ட்ஸோட effect. இப்ப நீ ஒரு இவண்ட்ட மாத்திட்ட, அதனால அதுக்கேத்த மாதிரி ஃப்யூச்சர் மாறிடுச்சு.”
“Fantabulous.”
“சரி இப்பவாச்சும் நம்பறியா?”
“நம்புறதாவது. I’m flabbergasted. Now I’m very curious to see the real future. Like far future.”
சுருக்கமாக “குட்” என்றது டார்ஸ்.
“எப்போ உள்ளத பாக்கணும்?”
“சரியா hundred years from now? அதக்காட்டு. ஒலகம் எப்டிலாம் மாறிருக்கு, என்ன டெக்னாலஜிலாம் வந்துருக்குன்னு பாக்கணும். எலான் மஸ்க் மார்ஸுக்கு போனானா, சிம்புவுக்கு கல்யாணம் ஆச்சா, எல்லாத்தையும் பாக்கணும். Show show என்றான்.”
“பொறு” என்றவாறு, ஒளிப்படத்தை ஓட விட்டது Tars.
கட்டிடங்களும் மரங்களும் தூசுப் புகையும் அதிகமாக மண்டிய ஒரு abandoned city தெரிந்தது. ஊர் முழுக்க வெறுமை. எரிந்த, உடைந்த கட்டிடங்கள்.
“இது எந்த ஊரு இது? பழகின இடமாட்டம் தெரியுது?”
காட்சி ஏரியல் வ்யூவுக்கு மாறியது. விசுவல்ஸ் நகர்ந்து ஒரு கடற்கரையை அடைந்தது.
சென்னை.
“WHATTHAFFFUCKKKK சென்னையா இது?” அதிர்ந்தான். “ஏன் என்னாச்சு? க்லோபல் வார்மிங்கா? third world warரா? இன்னொரு pandemicகா? என்னாச்சு?”
Tars காட்சியை மென்மேலும் நகர்த்தி ஒரு சிற்றூரைக் காட்டியது. ஒரு சிறு மனிதக் குழு நடந்து சென்று கொண்டிருந்தது. இன்னது என்று குறிப்பிட்டுச் சொல்லமுடியாதவண்ணம் அவர்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகை உடல் ஊனத்தால் பாதிக்கப்பட்டிருந்தனர். கையில் நோஞ்சான் கோழிகளை ஏந்தியும், நோஞ்சான் ஆடுகளைக் கட்டியும் இழுத்துச் சென்றனர்.
எல்லா இடமும் சிதிலமடைந்திருந்தது. மனிதர்களின் தோலும் எலும்பும் வதங்கி ஒட்டியிருந்தது. அவர்கள் உயிர் பிழைத்திருக்கிறார்களா, அல்லது ஊசலாடிக் கொண்டிருக்கிறார்களா என்பதே தெரியவில்லை. எல்லோர் முகத்திலும் வெறுமை. அதை வெறுமை என்று கூற முடியாது. மிரட்சி, சலிப்பு, சோர்வு, பேரதிர்ச்சி மற்றும் பயம்.
அவர்களில் சிலர் தவழ்ந்து சென்றனர், சிலர் இழுத்துக்கொண்டு. சிலர் நடந்தனர். அதை நடை என்று வரையறுக்கவே முடியாது.
ஒரு சைஃபை பட செட்டில், பஞ்ச காலத்தைப்பற்றிய பீரியட் படம் பார்ப்பதுபோல் இருந்தது ஆயில்யனுக்கு.
“எனக்கு எதுவுமே புரியல. What happened to the future?” என்றான்.
“You should rather ask what’s happening in the present.”என்றது.
“புரியல.”
“என்ன புரியல?”
“ஃப்யூச்சர்னதும் எல்லாமே ஹைஃபையா இருக்கும், பளபளாவா வரப்போகுது, மெரீனாலருந்து மஹாப்ஸுக்கு கடல் மேல ஓவர் ப்ரிட்ஜ் இருக்கப்போகுது, uber hyperloopலாம் இருக்கும்னு நெனச்சேன். இங்க பாத்தா prehistoric டைம பாத்த மாதிரி இருக்கு. Are you sure you went to the future? Configurationல தப்பாகி past எதும் காட்டிட்டியா?”
“Do you think I’m nuts?”
“இல்லதான்.”
“அப்புறம் ஏன் இந்த நெலம? குறிப்பா அந்த மக்கள் கண்ல ஏன் அந்த ஒரு வெளிறிப்போன emotion?”
“யார் கிட்ட ஃப்யூச்சரப் பத்தி சொல்லச் சொன்னாலும் அவங்க மொதல்ல சொல்றது என்ன? லேட்டஸ்ட் டெக்னாலஜி, ஹெல்த்கேர்ல, வசிக்கிற இடத்துல, பயணிக்கற முறைல இப்டி எல்லாத்துலயும் அட்வான்ஸ்டா அவங்க கற்பனா சக்திக்கு எது எட்டுதோ அத சொல்லுவாங்க. இதுவும் ஒரு வகைல extrapolation தான். அவங்களுக்கிருக்க தரவுகள, அறிவ வச்சு இன்னது நடக்கும்னு ஒரு யூகம் பண்றாங்க. அல்லது என்னலாம் நடக்கணும்னு அவங்க ஆசப்படுறாங்களோ அத சொல்லுவாங்க. ஆனா அவங்க முக்கியமான ஒரு விசயத்த கவனிக்க மறந்துடுறாங்க.”
Every advancement, every breakthrough in technology does not depend only on the work done in the field of science. அதுக்கு dependent factors நெறயா இருக்கு. Allotted Budgets, Resources, Environment, ரொம்ப முக்கியமா governmental policies. காசு, ரிசோர்ஸ் எல்லாமே இருந்தும், அரசியல் சூழ்நிலைகள் ஆராய்ச்சிக்கு சாதகமா இல்லன்னு வை, எதுவுமே நடக்காது. உன்னோட priority research and developmentல இல்லாம வேற எதுலயும் இருந்தா, you’ll obviously pull back your own country, in every manner. மழ இல்லன்னா அதுக்கு சைண்டிஃபிக்கா என்ன காரணமோ அதுக்கான வேலைகள செய்யணும். அத விட்டுட்டு ஒரு க்லோப் வாங்கி அதுல கும்பலா நின்னு தண்ணி ஊத்தினாலோ பிரியாணி அண்டாக்குள்ள உக்காந்து சாமிய வேண்டுனாலோ மழ வராது. இது each and every aspectடுக்கும் பொருந்தும்.”
“உன்னோட நெக்ஸ்ட் டே விசுவல்ஸ்ல பாத்ததுதான். நீ படம், வெளிய சுத்தறதுனு இருந்த, ரீசார்ஜ் பண்ணாம விட்ட, you saw the effects.But when you corrected it, the course of events automatically changed. Your course correction had its own positive effects.”
“…”
உன்னச்சுத்தி பாரு, என்ன நடக்குதுனு கவனி, யாருக்கு எதுலாம் priorityயா இருக்குனு கவனி. எல்லாத்துறைக்கும் ஆணி வேரான, எல்லா துறை மேலயும் பவர் இருக்க அரசியல்ல என்ன பண்றாங்கனு கவனி. இந்த நெலமைய இப்டியே விட்டா நிகழப்போற cause and effect தான் நீ இப்ப பாத்தது. So future நீ நினைக்கிறாப்ல இல்ல, the people are in fact pulled back instead of being pushed ahead, in terms of technology, lifestyle and even in their very basic survival.
இன்னக்கி நீ பாக்கற இந்தச் சூழல், இப்டியே விட்டா இன்னும் aggravate ஆகும், Corrective measures யாரும் எடுக்காததால கோணலா ஆரமிச்ச ரயில் மேலும் மேலும் கோணலாப் போகும். அதி நவீன தொழில்நுட்பத்த விடு, அங்கேருந்து கொஞ்சம் கொஞ்சமா எறங்கி மக்களோட அடிப்படை வாழ்வாதாரத்துல கை வச்சு அதுவும் நிர்மூலமாகிப் போகும். மக்கள் சாப்புடுறது, உடுத்துறது, கும்முடுறது, even தினசரி வாழ்றதுல கூட அரசியல் உள்ள புகுந்து எல்லாத்தையும் கலைச்சு போட்டுரும். மைக்ரோ லெவல்ல ஆரமிச்சு rocket science, கல்வி, தொழில், மருத்துவம், space reasearchசுன்னு எல்லா மேக்ரோ லெவல்லயும் அதோட பாதிப்பு இருக்கும்.அதோட நூற்றாண்டு adverse effects தான் நீ இப்ப பாத்தது.
கேக்க கேலியாக்கூட இருக்கும், In fact, அரசியல் is the only factor responsible for anything and everything. If அரசியல் is on the correct path, everything will be right. அத மட்டும் சரி பண்ணினாப்போதும், the rest will follow suit.
உறைந்து போய் அமர்ந்திருந்தான் ஆயில்யன்.
முன்ன நா சொன்ன மாதிரி. பாஸ்ட்ட எதும் பண்ணக்கூடாது ஃப்யூச்சர எதும் பண்ண முடியாது. உன் கிட்ட இருக்கறது ப்ரெசண்ட் மட்டுந்தான். அந்த ப்ரெசண்ட்ல உன்னால எதுவும் பண்ண முடியும், எதையும் மாத்த முடியும்.
Present மட்டும்தான் உன் கைல இருக்க ஒரே ஆயுதம். அது ஒரு ரேடியோ ட்யூனர் மாதிரி.
If you tune it to the proper frequency, சேனல் சரியா செட்டாகி அதுக்கப்புறம் எல்லாமே தெளிவாகும்.அது இல்லாத வரை கொயகொயாதான்.
தான் உரையாடிக்கொண்டிருப்பது எதோ ஒரு AI Bot அல்ல, தாமிருப்பது ஒரு casual convoவிலுமல்ல என்பது ஆயில்யனுக்குப் புரிந்தது என்பது அவன் கண்களிலும் body languageஜிலும் தெரிந்தது.
சரி இதெல்லாம் எங்கிட்ட ஏன் சொல்லணும்?
You are the chosen one. Because you can change the future, by acting in present. And you will 😊
“Who are you?”
“I’m Tars. Sent from the future, to interact with you.”
உள்ளங்கை வியர்த்தது ஆயில்யனுக்கு.
“எம்பேரு Tarsசுன்னு ஒனக்குத் தெரியும். Tarsசுன்னா என்னன்னு தெரியுமா?”
Interstellarல வர ஒரு ரோபோட் பேரு…?
I’m Tars, The T(ime binocul)ars.
பாமரருக்கும் புரியும் வண்ணம் டைம் ட்ராவலையும், சங்கிகளுக்கும் புரியும் வண்ணம் உலக நடப்பியலையும் சொன்ன உமக்கு.... Hats off.... தொப்பி இல்லைன்னாலும்... பலமான கரவொலிகள் (இரு கரங்களின் பயன்பாடு மட்டும்)... வேற லெவல் யா 🤗🤗🤗🤗🤗...
ReplyDeleteThanks velan.
Deleteசூப்பர் முத்தலிப்..
ReplyDeleteThanks Kathir.
DeleteVery nice. Samy way story on Time dilation (happens in Interstellar).
ReplyDeleteசூப்பரோ சூப்பர்
ReplyDeleteThanks.
Deleteஆஹா முத்தலிப்பானந்தா 🙏🙏🙏 அவசரத்துக்கு கெடச்ச அறிவியல் வாத்தியாரே.. இத்தன வருஷமா டைம் ட்ராவல் அறிவெல்லாம் சப் டைட்டில் இல்லாத ஹிந்தி படம் பாக்குற மாதிரி ஒரு யூகத்துலயே ஓடிருச்சு.. கவிதையா படம் வரைஞ்சு பாகம் குறிச்சதுக்கு அவ்ளோ அழகு.. டிசம்பர் இரவுகளோட மழைக்கு ஈக்குவல்.. நீங்க ஆணோ பெண்ணோ மூன்றாம் பாலினமோ.. இந்த சிறுகதைக்கும், 'you are d chosen one' க்கும்.. கவட்டைக் கால் Tars-க்கும் சேர்த்து நான்கைந்து '😘' இந்த எமோஜிகள் ❤️
ReplyDeleteஅவசரத்துக்கு கெடச்ச மூத்தர சந்தே-ன்றாப்ல இருக்கு.
DeleteSema bro🤜🤜🤜 and keep rock
ReplyDelete🤛 🤛 🤛 Thanks
Deleteகெட்ட வார்த்தைகள் இல்லைனா ஸ்கூல் பிள்ளைகளுக்கே வாசிக்க குடுக்கலாம்யா முத்தலிப். முத்தாஸ்👌👌👌
ReplyDeleteஸ்கூல் புள்ளைக இதவிட கெட்ட வார்த்த பேச ஆரமிச்சாச்சு 😆 😆
Deleteஅருமை அருமை!!
ReplyDeleteசுவாரசியமான நடையில் மிகச் சிறப்பான கட்டுரை
Thanks. அப்ப இத கதைல சேத்துக்க மாட்டீங்களா Sir? 😆
Deleteகதையில் வரும் அறிவியலும்,அரசியலும் அற்புதம்
ReplyDeleteநன்றி பரணி.
DeleteExcellent Write up..
ReplyDeleteThanks.
DeleteRompa அருமை
ReplyDeleteRompa நன்றி.
Deleteசிறப்பான பதிவு 👌👌👌🙌🙌🙌👏👏👏
ReplyDeleteநன்றி.
DeleteFantastic and you are a genious man👍👍👍
ReplyDeleteஜீனியசா? எனக்கு எட்டாம் வாய்ப்பாடே அஞ்சாம் எட்டுக்கு மேல தெரியாதுங்க.
DeleteSuper.
ReplyDeleteThanks.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteசெம்ம 👌
ReplyDeleteநன்னி.
DeleteNice one 👌👌👌
ReplyDeleteSome dialogues were awesome 👌
Not all is it? 😆 😆 😆
Deleteஅருமை
ReplyDeleteநன்றி நவின்.
DeleteFantastic.nice mixer of science and politics.
ReplyDeleteThanks Ramesh.
Deleteஅருமை.. ஆனாலும் அடிப்படை அறிவியல் அறிந்தவரே அணுகும்படி இருக்கிறது... OK.. இது யாருக்குச் சொல்லப்பட வேண்டுமோ அவர்களுக்குச் சேரணும்...
ReplyDeleteஅறிவியல் அறியாட்டாலும் பரவால்ல, அந்த அரசியல் புரிஞ்சுட்டாப்போதும். நோக்கமும் அதுதான்.
Deleteமிகச்சிறப்பு, இதுபோன்ற இன்னும் பல அறிவியல் தகவல்களை எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் கதை வடிவில் எதிர்பார்க்கிறோம் !
ReplyDeleteஅறிவியல விட அந்த அரசியல் மேலயும் ஒரு கண் வெய்க்கும்படி...
Deleteமிக அற்புதமான அறிவியல் புனைவு. இந்தக் கதை பற்றிய தகவலையும் சுட்டையும் எனது நண்பர் ஒருவர் எனக்கு அனுப்பி வைத்தார். முன்னதாக இந்தக் கதையைப் படித்திருந்த அவர், அதனை என்னிடம் சொல்ல, கேட்கும்போது ஏதோ ஒரு மாதிரி இருந்தது. ஆனால், கதையை நேரடியாக வாசித்தபொழுது தான் உள்ளது விளங்கியது. முதலாளித்துவத்தின் விளைவுகளை துல்லியமாகக் கணித்து உலகச் சமூகத்திற்கு அதனை எடுத்துரைத்த மார்க்சிய வழிப்பட்ட படைப்பு இது எனத் துணியலாம். இந்தக் கதையின் அடிப்படைச் சாராம்சங்கள் Quantum Mechanics துறையில் ஆளப்படும் Frame of reference, Space-Time Relativity, Unified theory போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆக்கப்பட்டிருக்கின்றன. இந்தக் கதையின் போக்கு எத்தன்மையாயினும் முடிவு சரியானது. Physics of the impossible என்பதனை விளக்க முயற்சித்துள்ள நீங்கள் அறிவியலின் மிக அடிப்படையான விதியான Laws of conservation-ஐ மிகச் சரியாக உள்வாங்கி, அறிவியலின் அடிப்படையைச் சிதைக்காமல் முடிவுக் கண்டிருக்கிறீர்கள். கதை உரையாடல் பாணியானது, நவீனத் தமிழ் சினிமா பாணியில், சான்றாக ஆர்.ஜே.பாலாஜி script writing மாதிரி, கொச்சையாக மொன்னையாக அமைந்தாலும் இந்தக் கதையின் உள்ளடக்க விவரிப்பிலும் எனக்குச் சில நெருடல்கல்கள் உள்ளன. ஆனால், நீங்கள் அடிப்படை அறிவியல் விதியின் வரைவெல்லைகளைச் சரியாக அறிந்திருப்பதனால், அவற்றை நான் விரிவாக விளக்காமல், ஒரேயொரு குறிப்புச் சொல்லை மட்டும் தர விழைகிறேன். அந்தக் குறிப்புச் சொல் யாதெனில், Heisenberg's Uncertainty Principle.
ReplyDeleteநன்றி.
ப.பிரபாகரன்.
நீண்ட கமெண்டிற்கு நன்றி. ஒரு விசயம் சொல்றேன் பிரபாகரன், அதிர்ச்சியடஞ்சிடாதீங்க. நீங்க மேல மென்ஷன் பண்ணின மார்க்ஸ், quantum mechanicsலேந்து அன்செர்டைண்டி வரைக்கும் எந்த மேட்டரும் எனக்குத் தெரியாது. ஓரளவுக்குத் தெரிஞ்ச ஒரே விசயம் அந்த கொச்சையான உரையாடல் பாணி ஸ்க்ரிப்டிங் மட்டும்தான். மீதி எல்லாமே மைண்டுக்கு கொஞ்சம் லாஜிகலா பட்டத வச்சு ஒப்பேத்துனதுதான். ஹைசன்பர்க் தேடிப்படிக்கிறேன். மீண்டும் நன்றி.
DeleteGreat-தலைவர் அகில இந்திய young Sheldon ரசிகர் மன்றம்
ReplyDeleteBazzzingaaa!
Deleteவாட்சப் ஸ்டேட்டஸ்ல வச்சிவிட்டேன், செம்ம ரெஸ்பான்ஸ் 😁
ReplyDeleteவாழ்றிங்க ப்ரு.
Deleteஇன்று நேற்று நாளை கரு ஞாபகத்துக்கு வருது.
ReplyDeleteஅந்த எழுத்துநடை எப்பவும் போல அட்டகாசம் 🔥🔥
இன்று நேற்று நாளை டைரக்டர் கண்ணில் படும்வரை பகிருங்கள். 1 லைக் = 1 பகிரல்
Delete