Posts

Showing posts from May, 2014

இருவர்

பண்ணையாரும் பத்மினியும் பார்த்தீர்களா? அந்தப்பண்ணையார் ஜோடியைப்போலவே மிகவும் அன்னியோன்யமான ஒரு ஜோடி. "என்ன கண்ணு... ஏனுங் மாமா..." என அவர்களின் கொங்குத்தமிழ் இருவரையும் இன்னும் innocently romantic ஆக்கியது.  நம் இந்தப்பண்ணையாரின் பத்மினியின் பெயர் தமிழ்செல்வி. செல்வியின் அப்பாவித்தனத்துக்கு முன்னால் கமலா காமேஷையெல்லாம் தாராளமாக தீவிரவாதி பட்டியலில் சேர்த்துவிடலாம். அவ்வளவு உலகமகா அப்பிராணி. கோலப்பொடி வாங்குவது முதல் கோவில் லட்சார்ச்சனை செய்வதுவரை கணவரே     முடித்துக்கொடுத்துவிடுவதால் வீட்டிற்கு வெளியே உள்ள உலகத்தை சட்டை செய்யவும் இல்லை, அது குறித்த அனுபவமும் இல்லை. என்ன தேவையென்றாலும் கணவருக்கு செய்யும் ஒரு தொலைபேசி அழைப்பிலேயே வீட்டு வாசலில் கிடைத்தது. இவருக்கு வீட்டைத்தாண்டி ஒரு உலகம் உள்ளதென்றால் அது கணவர், மகள், மகன் மட்டுமே. அன்பாலே அழகான வீடு என அழகிய மெல்லிசைப்பாடலாக வாழ்க்கை சென்றது. ஒரு காலை, குறிப்பாகச்சொல்லவேண்டுமென்றால் மகன் கல்லூரிக்கு செல்லவிருக்கும் முதல் நாள் காலை, நெஞ்சு வலிக்கிறது என படுத்தவர் வலி முடிந்தும் எழவில்லை. ஒரே நொடியில் மொத்தக்குடும்பத்தையும் ஸ

தோழி கதை

அலுவலகத்தோழி ஒருத்தி. மிகவும் inspirational character. அந்த கெணத்துல குதி என அவள் சொன்னால் நம்பி குதித்துவிடலாம். அத்தனை நம்பிக்கைக்குரியவள். எங்கள் அக்கவுண்ட் விரிவடைந்தபோது பல புது ரிசோர்ஸ்களை வெவ்வேறு ப்ராஜக்ட்களுக்கு எடுத்தோம். எல்லோரையும் அசரவைத்த ஒரு பையனை பல்வேறு அடிதடிக்குப்பின் எங்கள் டீமில் எடுத்தோம். இவள் என்னிடம் வந்து "அந்தப்பையன் நம்ம டீமுக்கு வேணாம். விஷி(மேனேஜர்)கிட்ட சொல்லி எப்டியாவது பண்ணிக்குடு" என்றாள். எனக்குக்குழப்பம். ஏன் என்றதற்கு சரியான பதிலில்லை. விஷியிடம் பேசியதற்கு ஏற்கனவே அவனை projectக்கு tag செஞ்சாச்சு. வேணும்னா சாவி (சாவித்திரி, delivery manager) கிட்ட பேசிக்கோ என்றார். என்ன கடுப்பில் இருந்தாரோ இதை சாவிக்கு எஸ்கலேட் (புகார்) செய்துவிட்டார். சாவித்திரி காரணம் கேட்டு மெய்ல் போட்டார். எனக்கு வந்த ஆத்திரத்தில் இவளைக்காய்ச்சிவிட்டேன். "ஒனக்கு என்னதான் ப்ராப்லம்" என்றதற்கு "எனக்கு அந்தப்பேரக்கேட்டாலே அருவருப்பா இருக்கு" என்றாள். "த்தூ.. இதுலாம் ஒரு ரீசன். சைக்கோ நாயே, ஒன்னால சாவித்திரி என்னைய ராவப்போறா" என்று பாய்ந்தேன

பென்சில்

டுடே டைனா டுமாரோ டெபனட்லி டைரிமில்க் போல, தீபாவளி என்றால் நிச்சயம் 'இது' இருக்கும். 95களின் ஒரு தீபாவளி. நான் 73% அகிம்சாவாதி என்பதால் நமீதாத்தன கரடு முரடு டப்பாஸ்களைத்தவிர்த்து மென்மையான, தன்மையான லஷ்மிமேன வகையறாவான மத்தாப்பு, சங்குசக்கரம், சாட்டை மற்றும் பென்சில்களை வாங்கினேன். முதலிரவு நடக்கும்போது இருப்பதை விட நாளை நமக்கு முதலிரவு நடக்கப்போகுது எனும்போது ஒரு கிளுகிளுப்பு வருமே (அதாவது... வருமாமே (எனக்குத்தெரியாது, சிலர் சொல்லக்கேட்டிருக்கிறேன்)). அதுபோன்றொரு ஜில்பான்ஸ் ஃபீல் தீபாவளி நெருங்குவதை நினைத்து எனக்கிருந்தது. தீபாவளியன்று திணறத்திணற வெடி கொளுத்தினோம். மறுநாள். அப்பா வெளியே சென்றிருக்க, தங்கை super marioவின் ராணியை காப்பாற்றிக்கொண்டிருக்க, அம்மா மதியத்தூக்கம் போட, கலாம் பிறந்த மண்ணிலிருந்து 170கிமீ தள்ளிப்பிறந்த ஒரு குலாம் ரகசிய ஆராய்ச்சியிலிருந்தார். முன்தினம் சிலபல பென்சில் வெடிகள் செல்ஃப் எடுக்காததால் வீசப்பட்டிருந்தன. அப்பாவின் காசு இப்படி கரியாய்ப்போய்விடக்கூடாதே என்ற நல்லெண்ணத்தில் பென்சில்களைப்பொறுக்கி அதிலுள்ள மருந்தை ஒரு தாளில் கொட்டினேன். கோபுரம் பூசு