பென்சில்
டுடே டைனா டுமாரோ டெபனட்லி டைரிமில்க் போல, தீபாவளி என்றால் நிச்சயம் 'இது' இருக்கும்.
95களின் ஒரு தீபாவளி. நான் 73% அகிம்சாவாதி என்பதால் நமீதாத்தன கரடு முரடு டப்பாஸ்களைத்தவிர்த்து மென்மையான, தன்மையான லஷ்மிமேன வகையறாவான மத்தாப்பு, சங்குசக்கரம், சாட்டை மற்றும் பென்சில்களை வாங்கினேன்.
முதலிரவு நடக்கும்போது இருப்பதை விட நாளை நமக்கு முதலிரவு நடக்கப்போகுது எனும்போது ஒரு கிளுகிளுப்பு வருமே (அதாவது... வருமாமே (எனக்குத்தெரியாது, சிலர் சொல்லக்கேட்டிருக்கிறேன்)). அதுபோன்றொரு ஜில்பான்ஸ் ஃபீல் தீபாவளி நெருங்குவதை நினைத்து எனக்கிருந்தது.
தீபாவளியன்று திணறத்திணற வெடி கொளுத்தினோம். மறுநாள். அப்பா வெளியே சென்றிருக்க, தங்கை super marioவின் ராணியை காப்பாற்றிக்கொண்டிருக்க, அம்மா மதியத்தூக்கம் போட, கலாம் பிறந்த மண்ணிலிருந்து 170கிமீ தள்ளிப்பிறந்த ஒரு குலாம் ரகசிய ஆராய்ச்சியிலிருந்தார்.
முன்தினம் சிலபல பென்சில் வெடிகள் செல்ஃப் எடுக்காததால் வீசப்பட்டிருந்தன. அப்பாவின் காசு இப்படி கரியாய்ப்போய்விடக்கூடாதே என்ற நல்லெண்ணத்தில் பென்சில்களைப்பொறுக்கி அதிலுள்ள மருந்தை ஒரு தாளில் கொட்டினேன்.
கோபுரம் பூசுமஞ்சள் Adல் ஒரு பெண் குளிப்பாளே, அப்போது frameன் ஒரு ஓரத்தில் இக்காட்சிக்கும் தனக்கும் சம்மந்தமே இல்லை என்பதாக மஞ்சள்தூள் கோபுரம் போல் குவிக்கப்பட்டிருக்குமே, அதுபோல் குவித்தேன்.
---
Client Requirement:
நெருப்பு வைத்ததும் பட்டாசுத்தூளானது ஆயிரம் பட்ரோஸ் மலர்வதுபோல் மெதுவாக, கலர்கலராக, அமைதியாக மலர வேண்டும். கதம் கதம்.
எந்த Project, Client expectationனுக்கேற்ப டெலிவரி ஆகியுள்ளது?
---
முதல் தீக்குச்சி வைத்ததும் எதுவும் ஆகவில்லை. I Nee more emotion என சுத்தமான ஆங்கிலத்தில் தமிழ்மக்களிடம் பாரதிராஜா கூறுவாரே, அதை நினைவுகூர்ந்து ரெண்டு குச்சிகளை சேர்த்துக்கொளுத்தினேன்.
எத்தனை அடி அடித்தாலும் கூட்டணியைவிட்டு விலகுதல் நோப்பா என்ற தா.பாவாய், வெடி என்னைப்போப்பா என்றது. இதுவும் வேஸ்ட்டுபோல என குனிந்து உற்று நோக்கினேன்.
எப்பேர்ப்பட்ட தா.பாவும் ஒரு கட்டத்தில் "ஆமாண்டா நீ கூத்ஸுக்குதான் பொறந்த"என்று படையப்பா அப்பாபோல பொங்கி வெளியேறினாரே, அது போல புஸ்ஸ்ஸ்வ்வ் என ஒரு ஒளிப்ரவாகம் பொங்கி முகத்தில் அடித்தது.
வந்த எரிச்சலில் ஒரே பாய்ச்சலில் பாத்ரூம் சென்று முகத்துக்கு நீராபிஷேகம் செய்தேன். கை நிறைய அழுக்கு கருப்பாய் வந்தது. பின் அம்பியாய் மாறி மெதுவாக தங்கை அருகில் அமர்ந்து எந்த ஸ்டேஜ்ல இருக்க என்றேன்.
"அது வந்துடா..." எனத்திரும்பியவள் அதே கண்கள்
ஜி. சகுந்தலாவாக மாறி வீல் எனக்கத்தினாள். அவளின் wheeலைக்கேட்டு அம்மா ரின் மின்னல்போல் வர, அவருக்கும் என்னைக்கண்டதும் அழுகை. என்ன தெரிகிறது? என கண்ணாடியைப்பார்த்தபோதுதான் புரிந்தது, அழுக்கு என நினைத்து முகத்தோலை வழித்துவைத்திருக்கிறேனென்று. உரித்த கிழங்கு போல் வெளிர்மஞ்சள் நிறத்தில் முகம் இருக்க, முகத்தோல் போனதே என்ற கவலையைவிட அப்பாவுக்குத்தெரிந்தால் முதுகுத்தோல் போய்விடுமே என்ற பயம் அப்பியது.
அப்பா வந்து பார்த்ததும் கண்கலங்கினாலும் தங்கப்ப - தக்கம் சிவாஜியாய் உணர்வுகளை உள்ளடக்கி, வா ஆஸ்பத்திரிக்கு என்றார். மேக்கப்பில்லாது வெளிவரத்தயங்கும் ஈரோயினிகளின் வலி எனக்கு அப்போது புரிந்தது. இந்த அகோரிபாபா மூஞ்சியோடு வர மாட்டேன் என அடம் பிடித்தேன். ஒரு குத்தாலத்துண்டால் முகத்தை மூடி என்னை அழைத்துச்சென்றார். பிற்காலத்தில், முரண் எனும் தலைப்பில்,
"நிர்வாண நடன அழகி
கைது
முகம் மூடியபடி"
என கவிதை எழுத இதுவே வித்தாகும்.
டாக்டர், "நல்லவேளையா நிறைய தண்ணி ஊத்திருக்கான். பெஸ்ட் ஃபஸ்ட் எய்ட்" என்றார். அதெல்லாம் எம்பையன் ரெம்ப டேலண்ட்டுங்க என வியாதிஸ்தர்களுக்கு மத்தியில் எங்கப்பா நாயனம் வாசிக்க, நான் "யோ தகப்பா, நாம இருக்க நெலமைக்கு இந்த வினைல் விளம்பரம் தேவையா?" என நினைத்து அவரை நோக்க, குற்றம், நடந்தது என்ன? விசாரணையைத்துவக்கினர். முடிந்தளவு, அது திட்டமிட்டு நடத்தப்பட்ட சதியல்ல, நான் எதேச்சையா அப்டிக்கா போனேனா, திடீர் திடீர்னு உருளுதாம், வெடிக்குதாம் ரேஞ்சில் கதை விட்டேன். என் தாய் கதையல்ல நிஜம் லஷ்மிபோல சொன்ன உடான்சை உடனே நம்பிவிட்டார். அப்பா, டாக்டர் போன்ற மேதாவிகளை நம்ப வைக்குமுன் தாவு தீர்ந்துவிட்டது.
(உன் தந்தை மேதாவியா எனக்கேட்பவர்களுக்கு... அப்டிலாம் இல்ல, ஆனா அவரு எங்கப்பா.)
வீடு திரும்பியதும் அப்பா முதல் வேலையாக, எல்லா சொந்தக்காரனுக்கும் STD பேசி மேட்டரை BBC செய்தார். அவல் கிடைத்தாலே அம்பது நாள் மெல்லுற மனுசன். அனுஷ்கா கெடைத்தால் விடுவாரா?
திடீரென்று உள்ளூர ஒரு பயம். செத்துவிடுவேனோ என்று. முஸ்லிம்களில் ஒரு நம்பிக்கையுண்டு. யாருடைய இறுதி வார்த்தை லாயிலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரியவன் இறைவனைத்தவிர வேறு
இல்லை) ஆக இருக்கிறதோ, அவர் ஸ்டெய்ட்டாக சொர்கம் செல்வாராம். இலக்கிய ஆர்வத்தைத்தணிக்க சிலபல எண்ணெய்ப்பிசுக்காக பதிப்பிக்கப்பட்ட புத்தகங்களை அப்போது படித்திருந்தபடியால் நாம் நரக லிஸ்டில் இருக்கிறோம் எனப்பயந்து, லா.இயை திரும்பத்திரும்ப மனதுள் ஜெபித்தேன்.
தங்கையை அழைத்து மரண உரை நிகழ்த்தினேன். "பாப்பா (லா.இ)..ஒழுங்கா ஸ்கூல் போணும் (லா.இ)..நான் செத்துட்டா...(லா.இ).. நல்லாப்படிச்சு அத்தா அம்மாவ காப்பாத்தணும் (லா.இ)."
விவரமாக ஒவ்வொரு sentence முடிவிலும் லாயிலாஹ இல்லல்லாவை suffix செய்தேன். சொர்கத்துல அழகழகா பொண்ணுங்க இருக்குமாமே, so dint want to take chances.
1 1/2 மாதம் ஸ்கூல் செல்லவில்லை. பின் கடவுள் அருளால் சிறு தழும்பு கூட இல்லாமல் என் முகம் பழையபடி ஆனது. முகத்தில் பட்டதில் பாதியளவுகூட படாத கட்டைவிரலில் இன்னும் தழும்புள்ளது. ஒருவேளை, "Be careful... ஒன்னச்சொன்னேன்" என God கொடுத்த warning & reminder இதுவோ என அவ்வப்போது நினைத்துக்கொள்வதுண்டு.
அன்று தீர்மானித்தேன். இனி பென்சில்களை கட்டுரை வடிக்கத்தான் பயன்படுத்தனுமே தவிர Crackers வெடிக்க அல்ல என்று. ஆமென்.
Nice bro..
ReplyDeleteநல்ல மொழி வளம்....தடுமாற்றமில்லாத வர்ணனை......மிகவும் ரசித்தேன்..... சிரிக்க சிரிக்க மேலும் வளருங்கள்.....
ReplyDeleteசூப்பர் முத்தலிப்.
ReplyDeleteநன்றி சார். ஐஐடிக்காரர் நட்பு கெடைச்சுருக்குன்னு நண்பர்கள்ட்ட சொன்னா நம்ப மாட்றானுவ :(
Deleteவழக்கம் போல சூப்பர் - ரொம்ப நகைச்சுவையான நடை :)) எழுத்துலகின் வடிவேலு நீங்கதான் :)
ReplyDeleteவடிவேலுவா? அவ்வ்வ்வ்
DeleteSuper.....
ReplyDeleteAnna ,,,semma semma ..i know this story..nan school padikum pothu unga papa enkitta sollirka.. :D :D :D
ReplyDeleteஅடக்களவாணிகளா... பொரணி பேசுறது தப்பு
Deletesuperp
ReplyDeleteஹஹஹா....செம மச்சி....வாழ்த்துக்கள்...
ReplyDeleteSuper
ReplyDeleteஇடுக்கண் வருங்கால் நகுக என்று வள்ளுவன் உங்களுக்காக தான் சொல்லியிருக்காருன்னு நினைக்கிறேன். வலியில் தான் உங்களுக்கு நகைச்சுவை பிறக்கும் போல :-)
ReplyDeleteஅழகு முகத்தை இறைவன் நல்லபடியாக மறுமுறை கொடுத்துள்ளார். எனக்கும் இந்த மாதிரி புஸ்வானம் கையில் வெடித்த அனுபவம் உண்டது. ஒரு மாதம் போல் அவதிப்பட்டேன். வலியை விட்டுவிட்டு மற்ற விஷயங்களை இங்கே பேசியுள்ளது nice :-)
amas32
நீங்க சொல்றதப்பாத்தா wish you many more அடிஉதை ரிட்டன்ஸ் ஆஃப் தி டேன்னு சொல்ற மாதிரி இருக்கு ;) kidding ..
DeleteThanks ma... அழகு முகம்னு சொன்னதுக்கு மதிமாது ப்ப்ர்ர்ரப்போறாங்க டுட்டர்ல.
புஸ்வானம் கையில் எப்டி வெடிக்கும்? நெக்ஸ்ட் கம்பன் வகுப்பில் செய்முறையோடு விளக்கவும் :)
raittu :))
ReplyDeleteரைட்டு..புரிந்தது. அடுத்த பதிவ க்வாலிட்டியா எழுதப்பாக்குறேன்.
Deletesemmmmmmmmmmmmmma
ReplyDeletesema.. writeup.. keep the same track.. dont try write kavithai n all.. this suits u completely..
ReplyDeleteIlaya KARKI nee thaa
இளைய கார்க்கி? தி ஸ் லைன் கார்க்கி சீஸ், திஸ் சேகர் டைஸ்
DeleteYour writeup is like thi.janakiraman, si.su.chellappa, karkibava. Please atleast post one story a week. Love you. - LK.
ReplyDeleteசிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது தல! :)
ReplyDeletefor follow up
ReplyDeleteதெளிவா சொல்லுங்க. வலிக்கிறது வயிறா தலையா? க்ரேட் கன்ஃப்யூசன் ஐ சே
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteசெம பாஸ்
ReplyDeletecuteeee :)
ReplyDeleteஅப்துல் , வரம் வாங்கி வந்தாற்போல எழுதுறீங்க . தா. பா .. முரண் கவிதை .. தங்கை/அப்பா செண்டி என்று பல விஷயங்கள் கவர் பண்ணியிருக்கிறீங்க . வளமான கற்பனை மற்றும் தெளிவான எழுத்தோட்டம். ரொம்ப சந்தோஷம்
ReplyDeleteமிக்க நன்றி வீரு
DeleteArumai..enjoyed your style..yes you are awesome dude
ReplyDelete> அவல் கிடைத்தாலே அம்பது நாள் மெல்லுற மனுசன். அனுஷ்கா கெடைத்தால் விடுவாரா?
ReplyDelete:-)
Your writing reminds of piliral.
பிளிரலுக்கு தெரிஞ்சா கர்ஜிச்சு பொங்கிடுவாரு. அவர் கிட்ட கூட வராது திஸ் ரைட்டப்
DeleteVery hilarious... Enjoyed every line... especially 'Anushka' :)) Keep going and waiting to read more...
ReplyDeleteI also adore anushka like you ranjiscribbles sir
Deleteநானும் இந்த மாறி மருந்து எல்லாம் சேத்து பண்ணேன்..நல்ல வேல எதுவும் பெருசா நடக்கல போல..
ReplyDeleteபட்டாசு நடை. மத்தாப்பு வார்த்தைகள். ஆக மொத்தம் உங்களுக்கு 'தீ'பா'வலி' எங்களுக்கு தீபாவளி. வாழ்த்துகள்.
ReplyDeleteFirst time I m reading your blog. Here after i dont miss.! Rofl post :)) @kattathora
ReplyDeleteஅருமை!! சில எழுத்தாளர்கள் சினிமாவை ஏதோ தீண்டதகாதவையாக பார்க்கும் போது.இடைஇடையே சினிமா வசனங்களை இணைத்து எழுதியது மகிழ்ச்சி.
ReplyDelete-ஆந்தைகண்ணன்
"முத்து" லிப்ஸ்..செம மாப்ள..:))"
ReplyDeleteSo nice.
ReplyDeletesuper ji.....
ReplyDeleteAwesome'a irukunga J!
ReplyDeleteரசிச்சு ரசிச்சு படிச்சேன் :):)எப்படித்தான் இப்படி உவமானம் தோணுதோ உங்களுக்கு :):)
ReplyDeleteshaanthi surendiran
shaan-64
super sir, ஏதிச்சையாக சுன்னத் ஐ படித்தேன் அதிலிருந்து தினமும் உங்களுடைய ப்ளாக் ஐ பார்த்து கொண்டு இருக்கிறேன். தினமும் எழுத ட்ரை பண்ணுங்க
ReplyDeleteஅருமை மருமானே ! எடுத்தாட்கொண்ட உவமானங்கள்தான் நகைச்சுவையை உச்சத்துக்கு கொண்டு செல்கின்றன. ஒவ்வொரு வரியும் சிரிக்க வைத்தன. உங்களுக்கு எழுத்து நடை வெகு இயல்பாக வருகிறது ஆண்டவனின் கருணை இது ஐ மீன் காட்ஸ் கிப்ட். யாராவது மூட் அவுட்டாகியிருக்கும்போது இதை படித்து பார்த்தால் சுகமடைவார்கள். நன்றி வாழ்த்துக்கள் :)
ReplyDeleteரொம்பவும் சிரித்தேன். மிக்க நன்றி சகோ.
ReplyDeleteஉங்கள் facebook a.c பெயரை கொடுக்கவும்.
அப்துல் அண்ணே, எனக்கு வாழ்க்கையிலே ஒரே ஒரு ஆசை கடந்தஐந்தாண்டுகளாக உண்டென்றால், அது கர்கியை போல், பரிசல் சாரைப்போல் ஒரு கட்டுரை அல் சிறுகதையாவது எழுதிவிடவேண்டுமேன்பதுதான். அதனை நீங்கள் போய்ப்பித்துவிட்டீர்கள். யெனெற்றால் 'காண்டாமணி' பற்றி பெ.முருகன் சொன்னதை, யாரோ இவரிடம் நான்கு வருடங்களுக்கு முன் சொல்லி, அதை நம்மிடம் பகிர்ந்திருந்தார். நல்ல வேலை நான் அந்த கதையை படித்தேனோ, எனக்கு வேலை, சாப்பாடு, வீடு எல்லாம் கிட்டிற்று. இல்லையென்றால். அய்யய்யோ. இதைப்போன்று நீங்கள் நிறைய எழுதவேண்டும்... இலக்கியத்திற்கு நீங்கள், கார்கி, பரிசல், கருணா, கேபிள் சங்கர் போன்றவர்களின்o
ReplyDeleteநான் சில வருடங்களாக ப்ளாகையும் தொடர்ந்து வருகிறேன், முன்பே இலக்கியத்தை தொடர்ததைப்போல. ப்ளாகில் இலக்கிய ஆளுமைகளை compare செய்து வைத்துள்ளேன். கல்கி-பரிசல், புலமைபித்தன்-கார்க்கி, ஜெயகாந்தன்-skp கருணா, தி.ஜா-அதிஷா, ஜக்கி சேகர்-பாலகுமாரன், சுந்தர ராமசாமி-கேபிள் சங்கர், எஸ்ரா-தாமிரா, அதேபோல் முத்தலிப்-சுஜாதா.
ReplyDeleteமுத்தலிப் சார், தமிழ் லிட்டரேச்சரில் நான் படிக்க ஆரம்பிக்கவேண்டுமேன்றால், எனக்கு ஒரு பத்து புத்தகங்கள் சொல்லுங்களேன். நான் இதுவரை, படித்தபுத்தகங்களை பட்டியளிட்டுளேன். இலக்கியம் ஒன்றும் அவ்வளவு கடினமில்லயென தெரிந்து கொண்டேன். படித்த புக்குகள்: 'கொத்து பொரோட்டா', 'லெமன் திரியும், மூணு ஷாட் தக்கிலாவும்', 'அழிக்கப்பிறந்தவன்', 'எச்செல்'
ReplyDeleteபாஸு, நல்ல வேளை, நீங்க தாடி-மீசையைபற்றி எழுதலை. எழுதியிருந்தா, அதுக்கும் சொல்லியிருப்பாங்க, இப்படித்தான், எனக்கும் சின்னவயசுல தாடி-மீசை வந்து ஒரு மாசம் அவச்தைப்பட்டேன்னு. ரோப்பிளிக்கு-ரோப்பிளிக்கு-ரோப்பிளிமக்ஸ்.
ReplyDeleteஆமென்
ReplyDeleteLovely... Keep it up...
ReplyDeleteSema Super. Really liked it. You got a nice style of writing.
ReplyDeleteAdhu seri, adhenna Blog "Mutha"-"Liplocks" ? rendum onnudhane!!!
This comment has been removed by the author.
Deletepeeru : muthalib... arabic name
Deletereal rofl. lauughing like a loosu sitting in office.
ReplyDeleteNice sir alluthu
ReplyDeleteஆத்தாடி. கொஞ்சமா எரிஞ்சிருக்கும், வலிச்சிருக்கும்.. அதையும் இவ்வளவு நகைச்சுவையோடு சொல்றீங்க பாருங்க...
ReplyDeleteஇந்த வலியை பத்தி படிக்கும்போது கூட சிரிக்க வைக்க முடியுது உங்களால்
ஹலோ ஜி எங்க போனீங்க சீக்கிரம் வாங்க, இப்பத்தான் இந்த கட்டூரை எனக்கு படிக்க கிடைச்சுது எப்பவும் போல் சிரிப்பப்பப்பு 😃
ReplyDelete