ஆபீஸ்ல அலைபேசி அழைப்புகள் வந்தா ODCக்கு வெளிய போய் பேசுவோம். அன்னைக்கு அடிக்கடி வெளிய போறதும் வரதுமா இருந்தார் ஒரு fresher (பெண்).
“என்னாச்சு? ஒரு மாதிரி இருக்க?”
“ஒண்ணுமில்ல”
இதுங்க ஒன்னுமில்லன்னு சொன்னா ஒரு லோடு மேட்டர் இருக்குன்னு அர்த்தம். கொஞ்ச நேரம் கேப் விட்டு, “என்னப்பா, ரொம்ப டென்சனா இருக்கமாதிரி தெரியுது? எதும் ப்ரச்சனையா?”ன்னு ஆட்டோக்ராப் சேரனின் கேர்டேக்கிங் டோனில் கேட்டதும் கண் கலங்கிவிட்டாள்.
“அட அழாதம்மா கொழந்த, என்ன மேட்டர்னு சொல்லு.”
“நான் சொல்றத யார்ட்டயும் சொல்லக்கூடாது”
“மாட்டேன் சொல்லு”
“ஒங்கள நம்பித்தான் சொல்றேன்”
“விசயத்துக்கு வா”
“சத்தியம் பண்ணுங்க யார்கிட்டயும் சொல்லமாட்டேன்னு”
அவள் கை சாஃப்டாக இருந்தது.
“எனக்கு ஒரு நம்பர்லருந்து தப்புத்தப்பா மெசேஜ் வருது”
“ஓ… யார்ட்டருந்து?”
“தெரீல..”
“என்னன்னு மெசேஜ் வருது?”
“ரொம்ப அசிங்க அசிங்கமா”
“கால் எதும் வந்துச்சா?”
“இல்ல வரல. நா கால் பண்ணாலும் எடுக்கல”
“என்ன மெசேஜ்?”
“சொல்லக்கூச்சமா இருக்கு”
“அப்ப ஃபோனக்காட்டு நானே பாத்துக்குறேன்”
“ம்ம்ஹும்ம்.. வேணாம்.. ரொம்ப அசிங்கமா இருக்கு”
“அட என்னன்னு பாத்தாத்தான யாரு எப்டின்னு ஒரு ஐடியா வரும்?”
“நீங்க யார்கிட்டயும் சொல்லக்கூடாது”
“அட தெய்வமே, சொல்ல மாட்டேன் தெய்வமே. போனக்குடு தெய்வமே”
வரிசையாக SMSகள். X எனும் பெயரில் காண்டாக்ட்டை சேவ் செய்திருந்தாள். பெரும்பாலான மெசேஜ்களில் அவளின் அனாட்டமியையும் அவற்றில் தான் செய்ய விரும்பும் காரியங்களையும் வர்ணித்திருந்தார் அந்த X. “ஒரு ஆங்கிலப்படத்தில் வரும் பார்க் சீனைக் குறிப்பிட்டு, அதுபோல் உன்னை…” என்ற மெசேஜ் மட்டும் கொஞ்சம் தேறியது. மீதி அனைத்தும் மூன்றாம் தர முப்பதாம் தர கெட்ட கெட்ட மெசேஜுகள். அவை அன்னாரின் பாலியல் வறட்சி, கற்பனை வறட்சி, பாலியல் கற்பனை வறட்சி ஆகிய மூன்றையும் பறை சாற்றின.
“இவன Block பண்ணாம ஏன் காண்டாக்ட்ட சேவ் பண்ணி வெச்சிருக்க?”
“யார்னு தெரியாம எப்டி ப்லாக் பண்றது? யாராவது தெரிஞ்சவங்க வெளாடுறதா இருந்தா?”
“ஓ! ஒங்களுக்குத் தெரிஞ்சவங்கள்லாம் இப்டிதான் வெளாடுவாங்களா? அதுவும் வயசுப் பொண்ணுட்ட? குட் குட்”
“கிண்டலடிக்காதீங்க”
“எப்போல்லேர்ந்து இப்டி வருது?”
“ரெண்டு வாரமா”
“யாராருக்கும்னு எதும் கெஸ் பண்ண முடிஞ்சதா?”
“நல்லாத்தெரிஞ்ச யாரோ.”
“எப்டி சொல்ற?”
“என் க்ளாஸ்மேட்ஸ் பேரெல்லாம் தெரிஞ்சிருக்கு.”
~ ~ ~
கண்டபடி மெசேஜ் வந்த அந்த நம்பரை அம்மணியார் Block செய்யாது விட்டதோடல்லாமல், காதல் கொப்புளிக்க மெசேஜ் அனுப்பும் அக்குறுந்தொகைப் புலவர் யார் எனக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற உயர் நோக்கில், தொடர்ந்து இவர் நம்பரிலிருந்தும், இவரின் தோழிகளின் மொபைலிலிருந்தும் அவருக்கு அழைப்புகள் விடுத்திருக்கிறார். போதாக்குறைக்கு, “நீ யார்? தைரியமிருந்தா என் கால அட்டன் பண்ணிப் பேசு”, “அட்டன் பண்ணாம பயந்து ஓடுறியே, நீ உண்மைலயே வீரனா இருந்தா கால் எடு” எனும் குலை நடுங்கச்செய்யும் வீராவேச மெசேஜுகளையும் அவருக்கு அள்ளித்தெளித்திருக்கிறார். இதை ஆஃப்பாயிலிஸம் எனச் சொன்னால் அதை சில புரச்சிப் பெமினிஸ்டுகளும் ஏனைய ஆபாயில்களும் ஆட்சேபிக்கின்றனர்.
~~~
அம்மணி ஆபீசில் வேலைக்குச் சேர்ந்து ஒரு மாதம் கழித்து திடீரென்று இவ்வாறு மெசேஜ் வரத்துவங்கி இருக்கிறது. இது குறித்து இவளின் கல்லூரி வாத்தியார் ஒருவரிடம் அம்மணியார் வருந்திச்சொல்ல, அவர் இவளின் கல்லூரியில் இருந்த அராத்து பையன்களை அழைத்து கண்டித்து விட்டிருப்பதாய்ச் சொல்லியிருக்கிறார். அந்த நொடியே ‘பாகுபலி.. பாகுபலி.. பாகுபலி’ என இவள் மனத்தில் அன்னார் உயர்ந்திருக்கிறார். அவர் கண்டித்ததாய்ச் சொன்ன அடுத்த நாளிலிருந்து மெசேஜுகள் இன்னும் தீவிரம் அடைந்திருக்கின்றன. இதுவரை சரோஜாதேவி ரக பாலியல் மெசேஜுகளை மட்டும் தாங்கி வந்த SMS, தற்போது கொலை மற்றும் ஆஸிட் வீச்சு போன்ற மிரட்டல்களையும் கொண்டிருந்தது.
“அந்த வாத்யார்ட்ட சொன்னியாமே. அவன் பெரிய ஹீரோவா? அவனோட மூஞ்சில இன்னிக்கி 4 மணிக்கு ஆசிட் அடிக்கிறேன். சாயங்காலம் சன் நியூஸ் பாரு. மூஞ்சி வெந்துபோன அவனக்காட்டுவாங்க” என அடுத்த மெசேஜ்.
நாலு மணி கெடு அம்மணியை நிஜமாகவே பாதித்துவிட்டது போலும். மூன்றரை மணியிலிருந்தே அழ ஆரம்பித்து விட்டார். மிகச்சரியாக நான்கே கால் மணிக்கு அந்த வாத்தியார் எதேச்சையாகக் கால் செய்ய, அம்மணியார் நடந்தவைகளைக் கூற, அதற்கு அவர், “அவன் என் நேர்ல வரட்டும் பாத்துக்கறேன்” எனக் கூறியிருக்கிறார்.
இது போன்ற சப்ஜெக்டை ஆல்ரெடி டீல் செய்திருக்கும் அன்புச்செல்வன் மீது ஒரு நல்லபிப்ராயம் இருப்பதால், போலிசுக்குப் போலாம் என ஐடியா கொடுத்தேன். “எங்க வீட்ல தெரிஞ்சா என்ன கொன்னுடுவாங்க. போலிசுக்கு போனா பேப்பர் டிவிலலாம் எம்பேரு வரும். பெரிய ப்ரச்சனையாய்டும்” என மீண்டும் அழுகை.
“ஆமா, ஒங்க செக்சு மெசேஜ காட்றதுதான் மீடியாவுக்கு இப்ப பர்னிங் டாப்பிக். அவனவன் விஸ்வரூபத்துக்குத் தடை போட்டுட்டாங்கன்னு காண்டுல இருக்கான், இவ வேற.”
“நீங்க சீரியஸ்னஸ் தெரியாம வெளாடறீங்க”
“ஆமாமா, அவனுக்கு ஒன்னோட நம்பர் கெடச்சது பத்தாதுன்னு ப்ரென்சோட நம்பர்லருந்து வேற கால் பண்ணிருக்க. நீ மாட்னது போதலன்னு மத்த மொட்டைகளையும் மாட்டி விட்டிருக்க. அவன் அவளுகளையும் டார்ச்சர் பண்ணா என்னடி பண்ணுவ? வெளாடுறாங்களாம்.”
“என் நம்பர அட்டன் பண்ண மாட்றான். அதான் அவங்க போன்லருந்து கால் பண்ணேன். அவன் யார்னு கண்டுபுடிக்க வேணாமா?”
“ஏன் அவனக் கண்டுபுடிச்சு முத்தம் குடுக்கப்போறியா?”
“அசிங்கமாப் பேசாதீங்க”
“ஆமா, நாங்க அசிங்கமாப் பேசுறோம். உன் சாண்ட்விச்சில் என் சாசைத் தெளிக்க வேண்டும்னு மெசேஜ் அனுப்புறாரே உங்க X, அவரு ஐகிரிநந்தினி பாடுறாரு. ஓடிப்போயிரு.”
“இப்ப என்ன பண்றது?”
“Unknown நம்பர்லருந்து வர மெசேஜ் கால ரெஸ்பான்ட் பண்ணாம விட்டாலே பொண்ணுங்களுக்கு பாதிப் பிரச்சன கொறஞ்சுடும். அதுக்கு மேல எதும் தொடர்ந்து வந்தா அந்த நம்பர ப்லாக் பண்ணிட்டாப் போதும். ஆனா அத செய்ய மாட்டீங்க. உங்களோட curiosityயதான் அவனுங்க Baitடா யூஸ் பண்ணிக்கிறானுங்க. They are all just attention seekers. அந்த attention குடுக்காம அவனுகள ignore பண்ணாலே problem solved. கொஞ்சமே கொஞ்சம் அறிவிருந்தாக்கூட இந்த மாதிரி கான்வோக்கள வளர விட மாட்டீங்க. இதச்சொன்னா ஆணாதிக்கம்னுவீங்க.”
“அய்யோ இப்ப என்ன பண்றது?”
“இவ்ளோ நேரம் சொன்னது எதையுமே காதுல வாங்கலல்ல நீ?”
“அது அப்பறம் பாத்துக்கலாம்”
“சரி போலிஸ்ட்ட போவோம். ப்ரச்சன சால்வ் ஆய்டும்”
“போலிஸ்லாம் வேணாம். நீங்க ஒங்க நம்பர்லருந்து அவனுக்கு கால் பண்ணிப்பாருங்க. எடுக்குறானான்னு பாப்போம்.”
“ஒங்க தாத்தா பேரென்ன?”
“எதுக்கு?”
“சொல்லேன்”
“செல்வம்”
“செல்வத்தோட ஆன்செஸ்டர்லருந்து இழுத்து நாரநாரயாக்கேப்பேன் இன்னொருக்கா அவனுக்கு போன் பண்ணனும்னு சொன்னன்னா.”
“போலிஸ்க்குப் போனா டிவில வரும். ப்ராப்லம் ஆகும். வேற எதும் பண்ண முடியாதா?”
“ஒங்க கற்பனக் குதுரய கொஞ்சம் ஓரமா விட்ட போடுறதுக்கு கட்டி போடுங்க. நா சொல்றதக் கேட்டா கேளு. இல்லன்னா ஆள விடு.”
“சரி, எதாருந்தாலும் என் பேரு வெளிய வரக்கூடாது. எங்க வீட்டுக்குத் தெரியக்கூடாது”
“வீட்டுக்குத் தெரியக்கூடாதுன்னு நீங்க சொல்ற வேலை பூராமே அக்யூஸ்டு வேலயாத்தாண்டி இருக்கு. ஒங்களல்லாம் வெளுக்கணும்”
தெரிந்த மேனேஜர் ஒருவரிடம் இப்பிரச்சினையைச் சொன்னதற்கு சைபர் க்ரைமுக்குச் சென்றால் ஒரு வாரத்தில் மேட்டர் முடிந்துவிடும் என்றார்.
சைபர் க்ரைம் ஆபிஸ் எழும்பூரில் இருந்தது. அம்மணியும், அடியேனும், துணைக்கு பல்க்காய் இருந்த ப்ராஜெக்ட் நண்பர் ஒருவரும் காலை 10 மணிக்குச் சென்றோம். சைபர் க்ரைம் புகார்களை கமிஷ்னரே நேரடியாக வாங்குவதாகவும், அதனால் பாதிக்கப்பட்டவரோ / கம்ப்லைண்ட் கொடுப்பவரோ மட்டுமே ஒரு குறிப்பிட்ட எல்லைக்குப் பின் அனுமதிக்கப்படுவர் என்றனர். இவளிடம் கம்ப்லெய்ண்டை எழுதிக்கொடுத்து, என்ன சொல்ல வேண்டும் என்பதையும் டியூசன் எடுத்துவிட்டு “ஜெய் பஜ்ரங்பலி” என வெற்றித்திலகமிட்டு அனுப்பினோம். என்னதான் கம்ப்லைண்ட் கொடுக்க வந்தவராயினும் அத்தனை போலிஸ் காக்கிகள், போலிஸ் வண்டிகளைப் பார்த்தபோது சற்றே கிடுக்கமாய்த்தானிருந்தது. கமிஷ்னர் வர மதியம் இரண்டு மணியாகும் என்பதாகவும் அதுவரை அவளை ஒரு அறையில் அமர வைத்திருப்பதாகவும் கால் செய்தாள்.
“நா வேணும்னா திரும்ப வந்துடவா? எனக்கு பயமாருக்கு”
“நீ கம்ப்லைண்ட் குடுக்காம மட்டும் வந்து பாரு மவளே செத்த நீ”
காலை பட்டினியோடு வந்தது வயிற்றைப் பதம் பார்த்தது. உச்சி வெயில் தாகத்தையும் சேர்த்து வழங்க, கிறுகிறுவென வந்தது. இன்னும் நான்கு மணி நேரம் அங்கே எப்படித் தாக்குப்பிடிக்க என்று தெரியவில்லை.
டாக்டரின் எச்சிலெண்டாலும் மருந்துதான் என்பதற்கொப்ப, கமிஷ்னர் ஆபீசுக்கு வரும் யாரைப்பார்த்தாலும் போலிஸாகவே தெரிந்தது. யாரையுமே ரெண்டு நொடிகளுக்கு மேல் கண்ணுக்குக் கண்ணாகப் பார்க்க தைரியம் வரவில்லை. எப்போதும் நம்மை யாரோ உற்றுப்பார்த்துக் கொண்டே இருப்பதுபோல் ஒரு ப்ரமை.
“தனியாருக்க பயமாருக்கு. முடிஞ்சா வாங்களேன்” எனக் கால் செய்தாள்.
என்னோடு வந்த நண்பனை செல்லச் சொன்னதற்கு, “மச்சி, நா முடி வெட்டல. ஒரு மாதிரி ரௌடி லுக்ல இருக்கேன். நீயே போயேன்” என சீரியஸாகச் சொன்னான். ‘ஹல்க்குன்னு நம்பி ஒரு பீஸ் போன பல்ப்ப கூட்டிட்டு வந்திருக்கிறேன்’ என்பதை அப்போதுதான் உணர்ந்தேன். கமிஷ்னர் ஆபிஸ் இருந்தது எட்டாவது மாடி. ரிசப்ஷன் கீழே க்ரௌண்ட் ஃப்லோரில். அதற்குள் செல்வதற்கும் செக்கிங் இருந்தது. நான் உள்ளே செல்ல முற்பட்டபோது ஒரு சஃபாரி அணிந்திருந்த செக்கிங் காவலர்,
“என்ன விசயம்?” என்றார்.
“கம்ப்லைண்ட் குடுக்க கலீக் போயிருக்காங்க. மேல கூப்புடுறாங்க. அதான்..”
“கம்ப்ளைண்ட் குடுக்குறவங்க மட்டும் தன் உள்ள போகணும். மத்தவங்க அலௌட் இல்ல”
“ஆமா சார். எழுதிக் குடுத்தோம். இப்ப கமிஷ்னர் வர லேட்டாவுமாம். அதான் அதப்பத்தி பேச கூப்புடுறாங்க” என வாய்க்கு வந்ததை உளறினேன். ஆல்ரெடி உதறல் எடுக்க ஆரமித்து விட்டது. எதோ நினைத்தவர், “சரி Bagகத் தொறங்க"” என்றார். உள்ளே வெள்ளைக்காகிதங்கள், Wallet மற்றும் தொ. பரமசிவத்தின் பண்பாட்டு அசைவுகள்.
“இது என்ன புக்கு தம்பி?”
அவர் தம்பி என்றதும் கொஞ்சம் தைரியம் வந்தது. “இது பாத்தீங்கன்னா தமிழ்ல ரொம்ப முக்கியமான புக். தொ. பரமசிவம் எழுதினது” (அன்று காலையில்தான் படிக்க ஆரமித்தேன். முன்னுரையைக் கூட இன்னும் தாண்டவில்லை).
“எதப்பத்தி சொல்லி இருக்கு?”
“நம்ம தமிழர்களோட விழுமியம், அறம், பண்டைய வாழ்க்கை முறை, எதையெல்லாம் இழந்துட்டு வரோம், இப்டி ஒரு நீண்ட ஆய்வு” எனச் சரளமாக ரிப்பன் விட்டேன்.
“நல்லது தம்பி” என்று கூறி உள்ளே அனுமதித்தார். தொ.ப-வுக்கு ஒரு நன்றியைப்போட்டு, நெருப்புடா!!! நெருங்குடா!!! எனும் பிஜிஎம் இல்லாமலேயே கெத்தாக உள்ளே நுழைந்தேன். போலிஸ் கெடுபிடியை ஜஸ்லைக்தட் ஒரு புக்கை வைத்து சமளித்த வீரதீரத்தை 140க்குள் சொல்லியே ஆகவேண்டுமென உள்ளம் பரபரத்தது. சரி மொத்தமா சொல்லிக்கலாம் என ஃப்ரீயாக விட்டுவிட்டேன்.
ரிசப்சனில் வரிசையாக சேர்கள் போடப்பட்டிருந்தன. அதற்கு எதிரே இருந்த டேபில்களில் ஆபிசர்கள் எதெதோ எழுதியபடி இருந்தனர். அங்கே அனுமதி பெற்று எட்டாவது மாடிக்குச் சென்றால் கமிஷ்னரைக் காணலாம். யாரை அணுகுவது என்று குழப்பம் ஏற்பட்டது. எல்லோரும் எதாவது ஒன்றில் பிசியாக இருந்தனர். ‘வாட்டீஸ்த ப்ரொசிஜர் டு கோ டு எய்ட்த் ஃப்லோர் ஆப் தி கமிஷ்னர்’ எனக்கேட்க ஒருவரும் இருப்பதாய்த் தெரியவில்லை. சரி என்னதான் ஆகுதுன்னு பாப்போம் என ஒரு (லேடி) ஆபிசரிடம் சென்று விவரத்தைச் சொன்னேன்.
“கம்ப்லைண்ட் குடுத்தாச்சா” என்றார்.
“காலைலயே குடுத்தாச்சு. அவங்க மேல இருக்காங்க. அவங்கள பாக்கப் போகணும்” என்றேன்.
“கம்ப்ளைண்ட் குடுக்கறவங்க மட்டும்தான் மேல போணும். தோ அப்டி உக்கார்” என்று கூறிவிட்டு மறுமொழிக்குக் கூட காத்திராமல் வேலையில் மூழ்கிவிட்டார். மேற்கொண்டு அவரிடம் எதும் டௌட் கேட்டால் சந்தேக கேஸ் போட்டுவிடுவாரோ என்று பயம் வந்துவிட்டது. பைக்குள்ளிருந்து தொ.பரமசிவன் ப்ப்ப்ப்ர்ர்ர்ர்ர்ர் எனச் சிரித்ததுபோல் தோன்றியது. அங்கிருந்த வெய்ட்டர்ஸ் சேரில் அமர்ந்திருந்தேன்.
மிஸ்ஸிடமிருந்து ஒரு மிஸ்கால் வந்திருந்தது.
“கவலப்படாத, நீ இருக்குற பில்டிங்லயே க்ரௌண்ட் ஃப்லோர்லதான் இருக்கேன். இதுக்கப்புறம் இங்க அலோ பண்ண மாட்றாங்க. நீ கீழ வந்ததும் என்னப் பாக்கலாம். ஒனக்கு கிட்டக்கதான் இருக்கேன். தைரியமா இரு” என மறுகாலிட்டேன்.
கமிஷ்னர் வந்ததும் கம்ப்லைண்ட் வாங்கிக்கொண்டு அனுப்பி விட்டாராம். ஒரு நிமிட வேலை.
“என்ன சொன்னார் கமிஷ்னர்?”
“எதும் இல்ல. பேப்பர வாங்கிட்டு நாங்க பாக்கறோம்னு சொல்லி அனுப்பிட்டார்”
“அவ்ளோதானா?”
“ஆமா. கம்ப்லைண்ட் வாங்கினதுக்கு ஒரு ஸ்லிப் குடுத்தாங்க. எதாச்சும்னா இந்த நம்பர்ல காண்டக்ட் பண்ண சொன்னாங்க" என்று ஒரு acknowledgment receiptடை நீட்டினாள்.
அவளை நண்பனுடைய பைக்கில் ஆபீசுக்கு அனுப்பி வைத்துவிட்டு நான் பஸ் பிடித்தேன். அகோரப் பசி.
அன்று மாலை அந்த வாத்தியார் கால் செய்து தான் மீண்டும் காலேஜ் ரவிடிப் பையன்களை மிரட்டியதாய்ச் சொன்னார். நாங்கள் போலிஸ் கம்ப்ளைண்ட் கொடுத்திருக்கிறோம் என இவள் சொன்னதற்கு, “கம்ப்ளைண்ட்லாம் ஏம்மா? வீண் ப்ரச்சன வரும். நாந்தான் பாத்துக்கறேன்னு சொன்னேன்ல” என்றிருக்கிறார்.
மறுநாள். Xசிடமிருந்து எதும் மெசேஜ் வந்ததா எனக் கேட்டதற்கு எதுவும் வரவில்லை என்றாள். அன்று மதியம் வேறொரு நம்பரிலிருந்து இவளுக்கு ஒரு அழைப்பு வந்தது. பேசியது ஒரு பெண். “நான் தப்பா மெசேஜ் அனுப்பிட்டேன். மன்னிச்சுடுங்க. போலிஸ்க்குலாம் போனா என் வேல போய்டும். blah blah blah.” என அழுது கால் கட்டானது.
அது யாரென்று யோசித்துக்கொண்டிருக்கும்போதே அந்த வாத்தியாரிடமிருந்து மற்றொரு கால் — “என் ஒய்ஃப் தாம்மா இப்டி மெசேஜ் பண்ணிருக்கா. அவ ஒரு சைக்கோ. சரியான சந்தேகப்ராணி. நீ போலிஸ்க்கு போய்ட்டன்னு அவகிட்ட எதேச்சையா சொன்னதும் உண்மைய ஒத்துக்கிட்டா.”
வாத்யார் கால் கட் செய்ததும் மீண்டும் ஒரு கால். அதே பெண்மணி. “அவரு முந்தி மாதிரி எங்கூட பாசமா இல்லம்மா. எப்பப்பாரு ஃபோன்லயேதான் இருக்காரு. யார் யார்ட்டயோ வாட்சப்ல பேசறாரு, வீட்ல எங்கிட்டயோ கொழந்த கிட்டயோ சரியாப் பேச மாட்றாரு. யார்கிட்ட பேசறீங்கன்னாலும் பதில் சொல்ல மாட்றாரு. அவருக்கு தெரியாம போன் எடுத்துப் பாத்தேன். எல்லா மெசேஜும் அழிச்சிருந்துது. உங்கிட்டருந்து வந்த மெசேஜ் மட்டும் இருந்துது. அதான் ஒன்ன பயமுறுத்தி போக வெச்சுட்டா அவர் எங்கிட்ட வந்துருவார்னு பண்ணிட்டேன். தயவு செஞ்சு கேஸ வாபஸ் வாங்கிடும்மா. ப்லீஸ்.” அழுகை.
~~~
நம் victim அம்மணி காலேஜ் இறுதியாண்டு ப்ராஜெக்ட் செய்தது அவ்வாத்தியாரின் கைடன்சிலாம். அப்போதிருந்தே வாத்யாரோடு நல்ல Rapportடாம். வாத்தியார் காதல் திருமணம் செய்தவர். ஓர் ஒரு வயதுக் குழந்தையுமுண்டு. அவரின் மனைவியும் அதே கல்லூரியில் ஆசிரியை. கைடானதில் இருந்து நல்ல நல்ல வாட்சாப் ஃபார்வேடுகளும் தினசரி காலை 5 மணிக்கெல்லாம் குட்மார்னிங் மெசேஜுகளும் அனுப்புவாராம். அவர் மிகவும் நல்ல சாராம்.
~~~
“ஏண்டி காலங்காத்தால அஞ்சு மணிக்கு மெசேஜ் அனுப்பறான். இதுலயே நீ அலர்ட்டாகியிருக்க வேணாமா?”
“குட்மார்னிங் மெசேஜ், மோட்டிவேசன் forwards தான் அனுப்புவாரு. இதுல என்ன தப்பிருக்கு?”
“அவன் மெசேஜ் அனுப்புறது மேட்டரில்ல. எத்தன மணிக்கு அனுப்பறான். அதப்பார். விடிகாலைலகூட ஒன்னத்தான் நெனச்சிட்டிருக்கேன்னு subtleலா சொல்றான். நைட்டு மெசேஜ் பண்ணினா பொண்டாட்டி பக்கத்துல இருப்பா. செருப்பாலயே அடிப்பா. அதனால அவ தூங்கற டைம்ல அனுப்பறான். ஒனக்கு இதுலாம் மைண்ட்ல உதிக்கவே உதிக்காதா?”
“அவரு தப்பா எதுவும் பேசினதேயில்ல. நல்லாத்தான் பேசுவாரு”
“அவரு நல்லதாவே பேசட்டும். ஒரு ஸ்டூடண்ட்கிட்ட, அதுவும் பொம்பளப்புள்ளைட்ட, வாத்தியானுக்கு நடு ராத்திரி அஞ்சு மணிக்கி என்ன பேச்சு? உங்க வீட்ல தெரியுமா இந்த மேட்டரு?”
“தெரியாது.”
“ஏன், சொல்ல வேண்டியதுதான? எங்க சார் நல்ல சார், டெய்லி காலங்காத்தால எனக்கு இந்த நாள் இனிய நாள் மெசேஜ் அனுப்பறாரு, அப்புறம் நாங்க அடிக்கடி பேசிக்கிறோம்னு..?”
“…”
“சொல்ல மாட்டல்ல. அப்ப இதுல எதோ தப்பு இருக்குன்னு ஒனக்கே தெரியுது. தெரிஞ்சும் செய்ற. ஒங்களாலதான் நாட்ல காய்கறி வெல ஏறிட்டே போவுது”
“சும்மா திட்டாதீங்க. நாங்க என்ன பேசினோம்னு தெரியாம தப்பாப் பேசாதீங்க.”
“அம்மாத்தாயே, ஒங்க மிட்நைட் சாட்டுக்கு வக்காலத்து வாங்கி இதுக்கு மேல நீ பேசினா என் வாய் எதாச்சும் சொல்லிடும். அப்டியே கெளம்பு அதான் ஒனக்கு நல்லது.”
~~~
வாத்தியாரிடமிருந்து மேலும் மேலும் போன் கால்கள்.
“இத்தன நாளா வேற நம்பர்லருந்து என் ஒய்ஃப் தாம்மா அப்டி மெசேஜ் அனுப்பிருக்கா. இப்ப நீ போலிசுக்குப் போனா எங்க ரெண்டு பேர் வேலையும் போய்டும். வெளிய தல காட்ட முடியாது. கம்ப்லைண்ட் வாபஸ் வாங்கிடும்மா.”
அம்மணி உடனேயே, “பாவம் எங்க சார். அவங்க ஒய்ஃப் பண்ணதுக்கு அவரோட வேலயும் போய்டும். சின்னக் கொழந்த வேற இருக்கு. வாபஸ் வாங்கிடுவோம்” என்றாள்.
முந்தின தினம் பட்டினியோடு வெய்யிலில் நின்ற எரிச்சல் மொத்தமாக வெடித்தது.
“தப்பு பண்ணாங்கன்னா ஒரு தடவ தண்டன அனுபவிச்சுப் பாக்கட்டும். அப்பத்தான் அடுத்த பொண்ணுக்கு இப்டி பண்றதுக்கு எவனும் யோசிப்பான்”
“இல்ல இவங்க தான்னு காலேஜ்ல தெரிஞ்சா என்னயுந்தான சேர்த்துத் தப்பாப் பேசுவாங்க.”
“இத்தன நாள் பொண்டாட்டிதான் பண்றான்னே இவனால கண்டுபுடிக்க முடியலயாமா? எனக்கென்னமோ பேசுனது அந்தாளோட ஒய்ஃபான்னே சந்தேகமா இருக்கு. இவந்தான் எல்லாத்தையும் பண்ணிருக்கணும். போலிஸ் ஆக்ஷன் எடுக்கட்டும். யார் என்னன்னு ஒரு முடிவு தெரியும்.”
மணிக்கொருதரம் வாத்தி இவளுக்குப் போன் செய்து மனைவி மிகவும் மிரண்டு போயிருப்பதாகவும், அழுதுகொண்டேயிருப்பதாகவும், எல்லாத் தவறுகளுக்கும் தான் மன்னிப்புக் கேட்பதாகவும், கம்ப்ளைண்டை வாபஸ் வாங்கும்படியும் கூறியிருக்கிறார்.
“நாளைக்கு காலைல மொதல் வேலையா கம்ப்லைண்ட் ரிசீட்ல இருக்குற நம்பருக்கு அடிச்சு இந்த மாதிரி நடந்துதுன்னு சொல்லு”
“எனக்குப் பயமா இருக்கு. ஊர்ல எல்லாருக்கும் தெரிஞ்சிருக்குமா?”
“ஆமா, நாளிக்கி தட்ஸ்தமிழ் கவர்ஸ்டோரியே ஒன்னுதுதான்.”
“நாம கம்ப்லைண்ட வாபஸ் வாங்கிடுவோமே”
“நீ வாபஸ்னு மட்டும் இன்னொரு தடவ சொல்லிப்பாரு…”
மறுநாள்.
கமிஷ்னர் ஆபீசுக்கு அழைத்து நடந்தவைகளைக் கூறினாள். ஒரு நேரத்தைக் குறிப்பிட்டு நேரில் வரச்சொன்னார்கள். அதுவரை ஒழுங்காய்ப் பேசியவள், திடீரென “அந்த கம்ப்ளைண்ட வாபஸ் வாங்கிக்கறேன்” என்று தெரிவித்தாள். வந்த ஆத்திரத்தில் பொள்ளேர் என ஒன்று வைக்கலாம் போலிருந்தது. நல்லவேளையாக மறுமுனைப் போலிஸ், “வாபஸ்லாம் முடியாதும்மா. நேர்ல வாங்க” என்றார்.
போனைக் கட் செய்ததும் “ஒனக்காக பாவம் பாத்து பட்னியில வந்து நின்னேம்பாரு, என்ன செருப்பால அடிக்கணும்டி”.
பிறகு நண்பனிடம், “நீயே இதக்கட்டி மேச்சுக்கோ. இனிமே எனக்கும் இதுக்கும் சம்மந்தம் கெடயாது” என்று கூறி நகர்ந்துவிட்டேன்.
பின் அந்தக்கேஸை கண்டுகொள்ளவில்லை. ஒரு வாரம் கழித்து நண்பன் சொன்னான், “அவ ப்ரெண்டோட மாமா போலிஸாம். அவர்கிட்ட சொல்லி கேஸ வாபஸ் வாங்கச் சொல்லிட்டா. அவர் நான் பாத்துக்கறேன்”னுட்டாராம்.
ஃபைல் க்லோஸ்ட்.
~~~
முவ்விரண்டு மாதம் கழித்து ஒரு நாள் அதே நண்பன் சோகமாய்ச் சுற்றிக்கொண்டிருந்தான். (அவன் வேறொரு ப்ராஜெக்ட் மாறி விட்டதால் அவனை அடிக்கடி சந்திக்க முடியவில்லை.)
“என்னடா ஆச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்க?”
“செத்துடலாம்னு தோணுதுடா?”
“ஏண்டா? இன்னும் ஒரு கல்யாணம் கசமுசாவக் கூடப் பாக்கல. அதுக்குள்ள ஏன் சாவணுங்கற?”
“நானும் சந்திரிக்காவும் லவ் பண்ணோம்”
“அடடே! கமிஷ்னர் ஆபிஸ்லருந்து பைக்ல வந்தப்பவே நெனச்சேன். இப்டி எதாச்சும் பத்திக்கும்னு. வாழ்க வளத்துடன். அப்புறம் என்ன ஆச்சு?”
“நீ விட்டுட்டுப்போனதுக்கப்புறம் நா அவகூட இருந்து ஹெல்ப் பண்ணேன்”
“ம்ம்ஹ்ம்”
“அப்போல்லேர்ந்து டெய்லி எங்கிட்ட பேசுவா. ஒருநாள் அவளே லவ் பண்றேன்னு சொன்னா”
“ம்ம்..”
“எனக்கு ஃபஸ்ட்டு தயக்கமா இருந்துது. வீட்ல ஒத்துக்க மாட்டாங்கன்னு. அதனால முடியாதுன்னு சொல்லிட்டேன்”
“அட! ம்ம்ம்”
“டெய்லி நைட் முழுக்க மெசெஜ் அனுப்புவா. என்னத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு அழுவா. அடம் புடிப்பா. நீதான் என் புருஷன்னு சொன்னாடா”
“மேல சொல்லு”
“அப்புறம் நானும் அவள லவ் பண்ணினேன்.”
“கரைப்பார் கரைத்தால்.. ம்ம்.. அப்புறம்”
“நானே கூச்சப்படுற அளவுக்கு நைட்டெல்லாம் ரொமான்ஸாப் பேசுவா. ஒரு தடவ அவ ஃபோன்ல போட்டோஸ் பாக்கணும்னு கேட்டேன். தரமாட்டேனுட்டா. எல்லா ஆப்க்கும் லாக் போட்டு இது என் பர்சனல்னு சொன்னா.”
“interesting.”
“ஒரு நாள் எதேச்சையா அவ ஃபோன பாத்தப்ப வாட்சப்ல ஒரு மெசேஜ். உங்க ப்ராஜக்ட்ல இருக்கானே அர்ஜுன். அவனுக்கு அனுப்பிருக்கா. “BulBul நீ ஏன் ஆபீஸ் வரல? ஒன்னப்பாக்காம இங்க இருக்கவே முடியல. சீக்கிரம் வா புல்புல்” இப்புடி ஆரமிச்சு எங்கிட்ட சொன்ன பாதி மெசேஜு அவனுக்கும் அனுப்பிருக்காடா Bloody Bitch” எனக்கூறி அழ ஆரம்பித்துவிட்டான்.
“தப்பு. பெண்கள அப்டில்லாம் பேசக்கூடாது. ஒவ்வொரு பொண்ணும் சாமிடா” என்று கூறி அவனை டீ சாப்பிட அழைத்துச்சென்றேன்.
~~~
கிழிச்சிருக்கீங்க! இப்படி எல்லாம் நடக்குமா என்று கேட்கவில்லை, நடக்காமல் இருந்தால் நன்றாக இருக்குமே என்று தான் சொல்கிறேன்.
ReplyDeleteamas32
அதே அதே சபாபதே!
DeleteSuper. Muthalib, this is one of your best blog posts.
ReplyDeleteThanks a lot PVR sir.
Deleteமுத்தலிப் ராக்ஸ்..ரொம்ப நாளைக்கு அப்புறும் ரொம்ப சிரிச்சேன்..
ReplyDeleteநன்னீஸ் ஃபைஸல் :-)
Deleteமகிழ்ச்சி�� ரொம்ப நாள் கழித்து முத்தலிப்ராக்ஸ்
ReplyDeleteஅப்போ நடூல கொஞ்சம் டொக்காயிருந்தேன்னு சொல்றீங்க.. ம்ம்ம் ம்ம்..
Delete"இரை"வி! பெயர்க் காரணம்?!😂
ReplyDeleteBAITங்குற அர்த்தத்துல அவங்க இரையாகுறதும், இரையாக்குறதையும் குறியீடா எழுதினது. ;-))))))))
Deleteமரண ரோபில்.. ரொம்ப நாளுக்கு அப்புறம் ஒரு போஸ்டை ரசிச்சு படிச்சேன்... Hats off
ReplyDeleteநன்றிங்க Arunbal.
DeleteAhaa .. Unakkunnu vandhu maatraanga paarren. Nadakkudhu. Nadakkudhu. Unfortunately !!
ReplyDeleteஎல்லாம் டிசைன். Cant help :-(
Deleteசெம மச்சி.... நிறைய குறியீடு நுட்பம் கலாய்... சீக்கிரம் 140 ல எழுத வா..
ReplyDeleteஎன்னது மச்சியா? கிரியங்கில்.. சைடு கேப்ல ஏஜ கொறைச்சுட்டீங்களே.
Deleteஎதார்த்தம் :)
ReplyDeleteஉண்மை :)
Deleteஅருமை!
ReplyDeleteThanks Doc.
Deleteவழக்கம் போல அடி தூள்!!! செம ரைட்டப், நுட்ப கலாய்ஸ்
ReplyDelete:-) Thanks Golappan.
DeleteHI HI super na
ReplyDeleteThanks thambi.
DeleteFirst time reading your posts semmmmaaaaa
ReplyDeleteசுன்னத் கல்யாணம் பத்தி ஒரு பதிவு இருக்கும் தேடி படிங்க. நல்லா இருக்கும்.
Delete'முத்தலிப்ன்னு ஒரு புள்ளாண்டான் இங்கன திரியுமே எங்கடா காணோமே?'ன்னு நேத்துத் தான்யா நெனச்சேன். அதிரடியா வந்திருக்கிறீர்.வாழ்த்துக்கள். அதுசரி, விஸ்வரூபம் காலத்திலிருந்து சட்டென்று கபாலிக்கு தாவி விட்டீரே!
ReplyDeleteநன்னீஸ் ப்ரோ.. நா ஒரு வாச்சி மெக்கானிக். விஸ்வா - கபாலி தாவுறதுலாம் ஈஸி ;-)))
Deleteamazing, just amazing hats off
ReplyDeleteஉங்க பதிவுக எதுவுமே சோடை போகல!
ReplyDeleteவாழ்த்ஸ்!
நந்ஸ்!
DeleteSuper :)👍👌
ReplyDeleteThanks! 🙏🏻
DeleteROFL post bro :))))) Superrr :)
ReplyDeleteThanks Mushroom!
DeleteSuperb muthalib.
ReplyDeleteநன்றிங்க ஆதிமுருகன்.
Delete“தப்பு. பெண்கள அப்டில்லாம் பேசக்கூடாது. ஒவ்வொரு பொண்ணும் சாமிடா. பைனல் டச் ரொபலிக்கா.�� அதைவிட தலைப்பு இரை'வி சூப்பரெ.
ReplyDelete:-) எதோ நம்மளால ஆன டென் பைசா.
Deleteசெம்ம செம்ம கடைசில பெண்களை அப்படியெல்லாம் பேசக்கூடாது ஒவ்வொரு பொண்ணும் சாமிட.......
ReplyDeleteஆசம்
சீரியஸா ஆல் பொண்ணுங்களும் சாமீஸ்தாங்க.
Deletesuper boss! no words.
ReplyDelete"No words" - It spoke. Thanks.
Deleteஎனக்கு அவளவா படிக்கிற பழக்கமெல்லாம் இல்லிங்கோ., ஆனா சிரிச்சி உருண்டுட்டேன். அதுக்கு முழுக்க முழுக்க காரணம் உங்க வார்த்தை ப்ரயோகம்., பட்டய கேளப்பிடீங்க னா. ஆபீஸ்ல உக்காந்து படிச்சிட்டு இருக்குறப்பவே திடீர் திடிர்னு கத்தி சிரிச்சிட்டேன்.. அம்புட்டு ரசிச்சேன்.. ரொம்ப நன்றி னா. தலைப்பு "இரைவி" செம செலக்சன்.
ReplyDeleteஎப்டிலாம் உருண்டிருப்பீங்கன்னு கற்பன பண்ணிப்பாத்தேன். ;-))))))))) Thanks for the words BTW.
Deletesema..
ReplyDeleteஉன் சாண்ட்விச்சில் என் சாசைத் தெளிக்க வேண்டும்னு மெசேஜ் அனுப்புறாரே உங்க X, அவரு ஐகிரிநந்தினி பாடுறாரு. ஓடிப்போயிரு.
ROFL moment
:-)
Deleteஇரைவி வயிறு வலிக்க வச்சுட்டா
ReplyDeleteபசங்களே இரைவிகள் ஜாக்கிரதை
என் நண்பனோட கஸ்டம் ஒங்களுக்கு சிரிப்பாருக்கா? 🔫🔫🔫
Deletesuper sir .. rockingg
ReplyDeleteThanks Althaf!
Deleteமரண பங்கம்....
ReplyDeleteநன்றி ஆளுமையே!
DeleteMarana bangam. :-)))))
ReplyDeleteThanks Arun!
DeleteThis should reach a wide mass......
ReplyDeleteஅரிப்பெடுத்தவர்க்க்களின் அகராதி.....
இரு தரப்பிலும்.......
Parents should be More Responsible......
No we shudnt judge anyone.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteYou have interesting writing skills mutuality... do write more
ReplyDeletemutuality? Is that an auto correct? ;-)
Deleteha ha ha ha... Super bossu... If am correct We met in twitter volunteers group during flood with Bhasu :-))
ReplyDeleteYes we did. This year also rain will come back it seems. Get ready :-)
DeleteYou would have sent this link to that "iraivi" I'm I right muthu? 😂😂
ReplyDeleteSemma interesting bro.
Daaaaai... No i dint send. But "poyirukum"nu guess panren. Any help shalinis niraindha ulagu.
DeleteSemma..!! Nalla senchu irukinga.. :-)
ReplyDeleteNaan edhum seileenga. Im just a yaavaari.
DeleteSuper writing.so fun to read. U have natural talent for narrating .
ReplyDeleteIm humbled. Thanks.
DeleteFirst time reading your Blog.. got redirected from one of my Friends post.. Chumma Theri.. Semma Write up.. :D
ReplyDeleteThanks a lot arun. Appappo Vandhu poi irunga :-)))
Deleteயோவ் முத்தலிப்பு செம்ம . சுன்னத் கல்யாணம் போஸ்ட்க்கு பிறகான அடிபொலி போஸ்ட் இது தான். க்ரேஸி அளவுக்கு செம்ம ரைட் அப்.மை ப்ரீ அட்வைஸ் சிலபல போஸ்ட்கள தொகுத்து புக்கா வெளியிடலாமே.வருங்கால சந்ததி புத்தகத்துல படிச்சி தெளியுமில்ல
ReplyDeleteநந்நீஸ் :-)) நமக்கு மரம்னா ரெம்பப் புடிக்கும். புக்காப் போடணும்னா மரத்த வெட்டணும். எதுக்கு அந்தப் பாவத்த? அதான் ப்லாகுலயே இருக்குல்ல. மக்கள் ஈசியா படிச்சுக்கலாம் :-)))
Deleteசெம...
ReplyDeleteThanks :-)
Deleteஅவசியமான பதிவு. சூப்பர் கலாம்
ReplyDeleteநன்றிங்க. கலாம்னா யாரு? புரியல.
Deleteபின்னி எடுத்துருக்கீங்க..!! செம்ம பங்கம்.
ReplyDeleteசரி "புல்புல்" ஏன் ஆபிசுக்கு வரல??
No comments :-)))))
DeleteAwesome ji...:-)
ReplyDeleteThank you கமால் அன்பின் உச்சம் Ji.
Deleteஇன்று யதேச்சையாக உங்கள் ப்ளாக் பார்த்தேன்
ReplyDeleteரொம்ப அருமையான நடை
அதோடு கூடவே வரும் நகைச்சுவை
எல்லார்க்கும் கை வராது
பாராட்டுக்கள்
எழுத்தை விட்டு விட வேண்டாம்
-ப்ரியமுடன் மதுராந்தகன்
மிக்க நன்றி மதுராந்தகன். எழுத்து என்ன விடாம இருந்தாப்போதும். :-)
DeleteSuper :)
ReplyDeleteThanks :-)
Deleteசெம ரைட்டரே
ReplyDeleteஎன்னது ரைட்டரா? இந்த டகால்ட்டிதான வேணாங்குறது?
Deleteநாலஞ்சு சுஜாதா கதை படிச்ச எஃபக்டு.!!!
ReplyDeleteஎதுக்கு? நான் நன்றி சொல்லுவேன், பின்னாடியே ஒருத்தன் வந்து, நீதான் அடுத்த சுஜாதான்னுட்டு சுத்துறியாமேன்னு என்ன ஒதைக்கவா?
Deleteநாலஞ்சு சுஜாதா கதை படிச்ச எஃபக்டு.!!!
ReplyDeletenaveena sujatha sir
ReplyDeleteKalakal.rofl
ReplyDelete