தோழி கதை
அலுவலகத்தோழி ஒருத்தி. மிகவும் inspirational character. அந்த கெணத்துல குதி என அவள் சொன்னால் நம்பி குதித்துவிடலாம். அத்தனை நம்பிக்கைக்குரியவள்.
எங்கள் அக்கவுண்ட் விரிவடைந்தபோது பல புது ரிசோர்ஸ்களை வெவ்வேறு ப்ராஜக்ட்களுக்கு எடுத்தோம். எல்லோரையும் அசரவைத்த ஒரு பையனை பல்வேறு அடிதடிக்குப்பின் எங்கள் டீமில் எடுத்தோம். இவள் என்னிடம் வந்து "அந்தப்பையன் நம்ம டீமுக்கு வேணாம். விஷி(மேனேஜர்)கிட்ட சொல்லி எப்டியாவது பண்ணிக்குடு" என்றாள். எனக்குக்குழப்பம். ஏன் என்றதற்கு சரியான பதிலில்லை. விஷியிடம் பேசியதற்கு ஏற்கனவே அவனை projectக்கு tag செஞ்சாச்சு. வேணும்னா சாவி (சாவித்திரி, delivery manager) கிட்ட பேசிக்கோ என்றார். என்ன கடுப்பில் இருந்தாரோ இதை சாவிக்கு எஸ்கலேட் (புகார்) செய்துவிட்டார். சாவித்திரி காரணம் கேட்டு மெய்ல் போட்டார். எனக்கு வந்த ஆத்திரத்தில் இவளைக்காய்ச்சிவிட்டேன்.
"ஒனக்கு என்னதான் ப்ராப்லம்" என்றதற்கு "எனக்கு அந்தப்பேரக்கேட்டாலே அருவருப்பா இருக்கு" என்றாள்.
"த்தூ.. இதுலாம் ஒரு ரீசன். சைக்கோ நாயே, ஒன்னால சாவித்திரி என்னைய ராவப்போறா" என்று பாய்ந்தேன். இருந்த ஆத்திரத்தில் அவள் அழுவதை லேட்டாகத்தான் கவனித்தேன். "என்னாச்சு" என்று எவ்வளவு கேட்டும் பதிலில்லை.
அன்று மாலை அலைபேசுகையில் எங்கெங்கோ கதையை சுற்றி அவளே ஆரம்பித்தாள்...
"எனக்கு 3 மாமாங்க. அம்மாவோட brothers. 2பேர் ரொம்ப நல்லவங்க. 3ஆவது மாமா பேர் தான் அந்த புது பையனுக்கும். எனக்கு அந்த மாமாவ புடிக்கவே புடிக்காது. எப்பப்பாரு என்ன கண்ட எடத்துல தொட்டுட்டு கிள்ளிட்டு இருப்பான். எவ்ளோ சொன்னாலும் கேக்க மாட்டான். ஆனா அவன வீட்ல எல்லாருக்கும் புடிக்கும். அவன் பொறந்தப்புறம்தான் வீட்ல வசதி வந்துச்சாம். அதனால அவன் வெச்சதுதான் வீட்ல சட்டம். ஒரு நாள் நான் மட்டும் வீட்ல தனியா இருந்தப்ப வந்தான். வந்ததுலருந்து எதெதோ பேசிட்டு இருந்தான். திடீர்னு மேல கைய வெச்சுட்டான். நான் அப்ப 7வது தான் படிச்சுட்டு இருந்தேன். எனக்கு பயமாகி வீட்டுக்கு வெளிய ஓடி வந்துட்டேன். பயத்துல 1 வாரம் ஜுரம் வந்து, ஜுரம் அதிகமாகி ஃபிட்ஸ் வந்துடுச்சு. வீட்ல என்னாச்சுன்னு சொல்ல ரொம்ப பயந்தேன். அன்னிலேர்ந்து அவன் வீட்டுக்கு வந்தாலே எனக்கு ஒடம்பு நடுங்க ஆரமிச்சுடும். அவங்கிட்ட பேசவே மாட்டேன். அதுக்கு அவன் எங்கம்மாட்ட உம்பொண்ணுக்கு மரியாத தெரியல, வீட்டுக்கு வரவங்கள வாங்கனுகூட சொல்ல மாட்றா, இனிமே உன் வீட்ல என் கால் படாதுன்னு சொல்லி ப்ரச்சன பண்ணிட்டான். பாட்டிலருந்து அப்பா வரைக்கும் ஒன்னுகூடி என்ன திட்னாங்க.
ஒரு தடவ நான் தூங்கிட்டு இருந்தேன். யாரோ என் ரூம்ல இருக்கமாதிரி தோணி திடீர்னு பதறி எழுந்தேன். அப்ப அவன் என் மேல என்ன பண்ணி வெச்சிருந்தான் தெரியுமா?"
அந்தப்பக்கம் அவள் அழ, இங்கு எனக்கு கை உதறிக்கொண்டிருந்தது. எதுவுமே சொல்லத்தோணாமல் உடைந்த குரலோடு ம்ம் மட்டும் சொல்லிக்கொண்டிருந்தேன்.
"எனக்கு அதப்பாத்ததும் வாமிட் வந்துடுச்சு. அந்த ட்ரெஸ்ஸ குப்பைல போட்டுட்டேன். இதுக்கப்புறமும் சும்மாருந்தா வேற மாதிரி ஆகிடும்னு அவன் wifeகிட்ட சொன்னேன். மாமா தப்பா behave பண்றார்ன்னு. அதுக்கு அவ "அவர மடக்கணும்னு நீ எதக்காட்டுனியோ. நீ ஒழுங்கா பொத்திகிட்டு இருந்தா அவர் ஏன் ஒம்மேல வந்து ஏறப்போறார்னு சொன்னா. எனக்கு செருப்பால அடிச்ச மாதிரி ஆகிடுச்சு.
தாங்கவே முடியாம எங்கம்மாகிட்ட சொன்னதுக்கு, அவந்தான் சின்ன வயசுலருந்து ஒன்னத்தூக்கிட்டே சுத்துவான். ஒன்ன குளிக்க வெச்சது, சாப்ட வெச்சதுலாம் அவன்தான். ஒன்ன மடிய விட்டு எறக்கவே மாட்டான். நீயும் எப்பவும் அவன் கூடத்தான் ஒட்டிட்டு இருப்பன்னாங்க. அதக்கேட்டதும் எனக்கு ஒடம்பு ஃபுல்லா ஆசிட் ஊத்திக்கணும்போல இருந்துச்சு. மறுபடியும் அவர் பிஹேவ் பண்றது சரியில்லன்னதுக்கு, நீ அவனுக்கு கொழந்த மாதிரி. ஒனக்கு ஏன் இப்படி புத்தி போகுதுன்னு என்ன திட்ட ஆரமிச்சுட்டாங்க.
இதுக்கு மேல அங்கருந்தா நான் செத்துடுவேன்னுதான் இந்த locationனுக்கு transfer வாங்கிட்டு வந்துட்டேன். ரோட்ல போற எவனாச்சும்னா செருப்பால அடிச்சு அவன கொன்னுருப்பேன். சொந்தக்காரன்னு சொல்லிட்டு இவனுங்க பண்றதுலாம் கடவுளுக்கே அடுக்காது. எதிர்த்து எதும் சொன்னா familyக்குள்ள ப்ரச்சன வந்துடும்னு நாம பயந்து அமைதியாயிருக்கறத இவனுங்க advantageஆ யூஸ் பண்ணிக்கிறானுங்க. அப்டியே மீறி சொன்னாலும் வீட்டுக்குள்ளயும் புரிஞ்சுக்க மாட்றாங்க.
அவனோட பேர எங்கியாச்சும் கேட்டாலே எனக்கு அந்த நாள் அப்செட் ஆகிடும். இப்ப இந்த பையன பாத்ததும் எனக்கு பத்திகிட்டு வருது,for no reasons. என்னால ஒனக்கு எதும் ப்ராப்லம் வேணாம். நான் ரிலீஸ் வாங்கிக்குறேன். sorry for bothering you" என கால் கட் செய்தாள்.
அடுத்த நாள் நேரே சாவியின் cubeக்கு சென்று சுருக்கமாக விஷயத்தைச்சொன்னேன். மீட்டிங்குகளையெல்லாம் கேன்சல் செய்துவிட்டு இவளை அழைத்து நெடுநேரம் பேசினார். அந்தப்பையனை வேறொரு ப்ராஜக்ட்டில் சேர்த்தார். குடும்பத்தினரே நம்மைப்புரிந்து உதவ மறுக்கும் இந்தக்காலத்தில் சாவித்திரி போல யாரோவாய் இருந்தும் போகிறபோக்கில் வாழ்நாள் முழுக்க நன்றிக்கடன் படுமளவுக்கு உதவி செய்யவும் இருக்கவே செய்கிறார்கள் என நினைத்துக்கொண்டேன்.
தோழி பழையபடி மாறியபிறகு ஒரு நாள் எதேச்சையாக, "சாவி அப்டி என்னதான் சொன்னாங்க, மீட்டிங்கெல்லாம் கேன்சல் பண்ணிட்டு, அவ்ளோ நேரமா?" எனக்கேட்டேன்.
கொஞ்ச நேரம் என்னையே பார்த்தவள், எரிச்சலும் சோகமும் கலந்த குரலில் சொன்னாள், "அவங்களுக்கு சித்தப்பாவாம்".
"அவங்களுக்கு சித்தப்பாவாம்" ----:D
ReplyDeleteஅவங்களுக்கு சித்தப்பாவாம்....... ஹ்ம்ம்
ReplyDeleteஅடக்கடவுளே. என்ன கொடுமை இது. ஒருவர் ஒரு பிரச்சனையோடு வரும் போது அதைக் கேட்கக்கூட விரும்பாத மனிதர்கள் என்னவிதத்தில் உறவினர்கள்கள். எல்லாரையும் விட்டுவிடலாம். அந்தத் தாய்.. அவர்களுக்கும் புரிதல் இல்லையென்றால் என்னதான் செய்ய முடியும்.
ReplyDeleteபெண்குழந்தைகள் மட்டுமல்ல.. ஆண்குழந்தைகள் மீதும் இத்தகைய அத்துமீறல்கள் நடப்பதாகச் சொல்கிறார்கள். கிட்டத்தட்ட இதே போன்றதொரு சூழலில் அலுவலகத்தில் ஒரு நண்பனுக்கு கவுன்சிலிங் செய்ய வேண்டியிருந்தது. யாரிடமும் சொல்ல முடியாததை நம்மளை நம்பிச் சொல்கிறார்களே என்று மனம் யோசித்தாலும்.. அப்படிச் சொல்வது அவர்களுக்கு எதாவது ஒரு வகையில் உதவினால் மகிழ்ச்சி என்று நினைத்துக் கொள்வேன்.
ஆண்டவா... குழந்தைகளைக் காப்பாற்று. பாதுகாப்பான வாழ்க்கையை அவர்களுக்குக் குடு.
சீரழிக்க விரும்பும் தடித்தாண்டவராயன்களை ராயிகளைத் தடுத்து நிறுத்து. அடித்து நொறுக்கு.
குழந்தைகள்னு இல்ல. கல்யாணம் ஆன பல பெண்களுக்கும் இது நடக்குது. நேர்ல சொல்றேன் அந்தக்கொடுமைய
Deleteபலரும் எழுதத் தயங்கும் விஷயத்தைத் துணிச்சலுடன் எடுத்து எழுதியதற்கு என் மனம் நிறைந்தப் பாராட்டுக்கள் முத்தலிப். இந்த மாதிரி சம்பவம் தங்கள் வாழ்க்கையிலோ தங்களின் நெருங்கிய பெண் உறவினர்/தோழி வாழ்க்கையிலோ நடந்ததை/நடப்பதை எந்தப் பெண்ணும் மறுக்கவே முடியாது. என்ன, வெளியில் பகிரங்கமாக பேசமாட்டோம். அவ்வளவு தான். ஏனென்றால் இந்தக் கொடுமைக்கு எந்தத் தரப்பில் இருந்தும் ஆதரவு கிடைக்காது. கடைசியில் கெட்டுப் போவது அந்தப் பாதிக்கப் பட்டப் பெண்ணின் பெயர் தான்.
ReplyDeleteபெண் படும் எத்தனையோ கஷ்டங்களில் இதுவும் ஒன்று!
amas32
நன்றிம்மா. இத எழுதச்சொன்னது அந்தத்தோழிதான். இதப்பாத்துட்டு அடுத்து தப்பான எண்ண த்தோடு நெருங்குறவங்கள ஒதைக்க வேண்டிய எடத்துல ஒதச்சா போதும்னு சொன்னாள். நடக்கும்னு நம்புவோம்.
Deleteதயவுசெய்து யாரும் இதுபோன்றவா்களை மன்னிக்காதீா்கள், கடவுளே(?) நீயும்தான்.
ReplyDeleteஅப்துல்
ReplyDeleteஉங்கள் எழுத்து பதிவுகள் அனைத்தும் முத்துக்கள் - இந்த மாதிரி எழுதி சமுக விஷிப்புணர்வு கொண்டு வரணும். கண்ணில் இருந்து கண்ணீர் வந்து கொண்டே இருக்கு - அதனுடன் எழுதிகிறேன் - அந்த பெண்ணை போல கோடி கணக்கில் பலருக்கு இந்த மாதிரி அனுபவங்கள் - அந்த சுமையுடன் வாழ்நாள் முழுதும் கடக்க வேண்டிய நிர்ப்பந்தம் :((
இதில் முக்கியமாக பார்க்க வேண்டியது பெற்றோரின் கடமைகள் - அவர்கள் தங்கள் பிள்ளைகளை பத்திரமாக வளர்ப்பது மட்டும் அல்லாமல் அவர்கள் உணர்வுகள், சொற்கள், கருத்துகளை மதித்து சம வயது தோழன் தோழியாக மதித்து வளர்க்க வேண்டும். நிறைய பேர் இதில் கோட்டை விட்டு விடுகின்றனர் - நம் சமுகம் இந்த மாதிரி easy preyகளை வதைக்கும் க்ராதகர்களை சிறைக்கு அனுப்ப வேண்டும் - அன்பே சிவம்.
தங்கள் வார்த்தைகளுக்கு நன்றி சார். அறியப்படாத கதைகள் இன்னும் கொடூரமானவை. உங்க வாக்குப்படி இது போல சித்ரவதையின்றி பெண்கள் வாழ வழி
Deleteஏற்படுத்தணும். கடவுள் கண்டிப்பா துணையிருப்பார்
Delete:-( பதிவிற்கு நன்றி!
ReplyDeleteஉங்களுக்கு நகைச்சுவை நன்றாக வரும் என்று எனது அண்ணன் கூற கேட்டு இருக்கிறேன் .ஆனால் அதை தாங்கள் இல்லை என்று கூறியது போல் இருந்தது இது.
Deleteஉண்மை
ReplyDeleteபெத்தவங்க மகள்களின் பேச்சை மதித்து கேட்காததே காரணம்
யாரும் விதிவிலக்கு அல்ல இப்படி ஒரு மோசமான சூழ்நிலையை சந்திக்காமல் வளரும் குழந்தைகள் கொடுத்து வைத்தவர்கள்
இப்போதிருக்கும் & இனிவரும் குழந்தைகள் அனைவரும் உங்க வாக்குப்படி கொடுத்து வைத்தவர்களாகட்டும்
DeleteGood...
ReplyDeleteகுழந்தைப் பருவத்தில் நமது அறியாமையையும் புரியாமையையும் சாதகமாக்கிக்கொண்டு நம் மீது பாய்ந்த நாய்கள் எந்தக் குற்ற உணர்வும் இன்றி இன்னும் நம் கண் முன் சுதந்திரமாக வளைய வருவது கொடுமையிலும் கொடுமை. இந்தப் பயங்கரம் பெண்களுக்கு மட்டுமல்ல.. பல ஆண்களுக்கும் கூட. இப்பதிவைப் படிக்கும் ஒவ்வொரு பெற்றோருக்கும் குழந்தை வளர்ப்பில் தேவைப்படும் கூடுதல் கவனம் பற்றி மனதில் அழுத்தமாய்ப் பதியும். பதிவுக்கு நன்றி
ReplyDeleteமிக மிக முக்கியமான பதிவு. இந்த மாதிரி கொடுமைகளை பற்றி கேட்கும்போது நியூக்லியர் குடும்பமே மேல் என்றே தோன்றுகிறது. இதனை பதிவு செய்ய தங்களை தூண்டிய தங்கள் தோழிக்கு வாழ்த்துக்கள். ஒரு நகைச்சுவை பதிவை எதிர்பார்த்துதான் வந்தேன் என்றாலும் இது போன்ற பதிவுகள் மிக மிக தேவை. தொடர்ந்து எழுதவும். நன்றி!
ReplyDeleteமிக்க நன்றிங்க. தோழிக்கு தங்கள் வாழ்த்தை சொல்லிட்டேன்.
Deleteஉயிர் உள்ள வரை வடுவாய் தங்கிடும்
ReplyDeleteநடு இரவில் தூக்கம் தொலைத்திடும்
நடைபிணமாய் சிலரை மாற்றிடும்
ஒரு கயவனின் நம்பிக்கை துரோகம்!!
True.
Deleteகடைசி லைன் எல்லாருடைய மண்டையையும் நருக்’ன்னு கொட்டியது. சூப்பர் பாஸு!
ReplyDeleteதங்களது பதிவுக்கு என்ன எழுதுவது என்பது தெரியவில்லை. ஏனெனில் படித்த பின் எனது மனது உணர்ச்சிக்குவியலாக அலைமோதிக்கொண்டிருக்கிறது.
ReplyDeleteஏதாவது எழுத ஆரம்பித்தால் எனது எழுத்துக்கள் தரக்குறைவாக ஆகிவிடும் என்பதால்.
வசந்தமாளிகை என்ற படத்தில் சிவாஜி ஒரு வசனம் சொல்வார்
பிடிக்கவில்லை என்றால் விலைமாதாக இருந்தால் கூடத்
தொடக்கூடாது.
கொச்சின் தேவதாஸ்
அதே உணர்வுக்குவியலோடு கடவுள்ட்ட வேண்டிக்கோங்க. இனியும் இந்த கதை எங்கும் நடந்துடக்கூடாதுன்னு.
Deleteசார், உங்களை சந்திக்கமுடியுமா. எப்படி உங்கள் கற்பனைக்குதிரை இப்படியெல்லாம் பறக்கிறதோ!. அதற்க்கு கொள்ளு வைக்கின்றீர்களா, இல்லை கோ6/7 புல் வைக்கின்றீர்களா. நீங்கள் சீக்கிரமே ஒரு புத்தகம் எழுதி, புக்கரோ, பக்கரோ ஏதாவது விருது வாங்க வாழ்த்துகள்.
ReplyDeleteஅது போன்று சில எருமைகள் இருக்கத்தான் செய்கிறது போலும் -//
ReplyDeleteஅத்துடன்
இது போன்ற ஒரு தோழியை எனக்கும் உண்டு என்பதில் எனக்கும் பெருமகிழ்ச்சி ;-))
எனக்கு பெரியப்பா பையன் :(
ReplyDeleteParents should listen their cildren being elder is not a qualifications to talking truth
ReplyDeleteParents should listen their cildren being elder is not a qualifications to talking truth
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteச்சே இப்படி மனுசங்க இருக்க தான் செய்றாங்க.
ReplyDeleteபுரிஞ்சுக்குற மனுசங்க ஏதாவது ரூபத்துல இருந்தா தப்பிச்சாங்க.
அது இல்லைனா திண்டாட்டம் தான். :/ :(