🌕
ஏன் BaeBee இந்த பேய்லாம் இருக்குதா?
என்னய கேட்டா?
இல்ல நாலு எடம் போயிருக்கியே
எதும் பாத்துருக்கியான்னு…
கண்ணாடில
நீ கண்ணாடி பாக்கறப்ப பாத்துருக்கியா?
நான் கண்ணாடி பாத்துட்டுப்போனதும்
அங்கயே பாத்துட்டே நிக்கும்.
நெஜமாவா?
ஒனக்கு பேய்ல நம்பிக்க இருக்கா?
பகல்ல இல்ல.
நைட்ல கொஞ்சம்...
எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம்.
கேளு.
சாத்தான்லாம் மேட்டர் பண்றப்ப moaningல
என்ன சொல்லும்?
அதுங்க oh my godனு சொல்ல முடியாதுல்ல.
Oh my satan oh my satanனு சொல்லுமா?
இல்ல, ரைமிங்கா இருக்கணும்னு
Oh my ghost oh my ghostடா?
நீ வாங்கப்போற.
இரும்மா இன்னும் முடியல.
கடவுள்ஸ் ஜிங்காஸ் பண்றப்ப என்னனு moanனுவாங்க?
Oh my me oh my me?
டேய்ய்ய்ய்ய் 🤣🤣🤣🤣
கடவுள் செக்ஸ்லாம் வச்சுக்க மாட்டார்
ஏன் வெறும் பாக்கறதோட சரியா?
எதே?
பின்ன இல்லியா?
If God can see everyone of us, then he / she / it has
the access to see all our coitus no?
எப்பிர்ரா ஒனக்கு மட்டும் இதுலாம் தோணுது?
God must be semma lucky la?
He can watch it live in all the categories.
Asian, American, Earthian, Inter racial, Inter planetrial,
Intergalactic, animals, amoebaனு எல்லா வெரைட்டிலயும்.
சனியனே ஒன்னோட சேந்து என்னையும்
நரகத்துக்கு இழுத்துட்டுப்போகாத.
Im out of this.
நீ பேசறத கேக்கறதால எனக்கும் நாலு விழும்.
ஹல்லோ, நா ஒன்னும் கடவுள தப்பாலாம் சொல்லல.
அவருக்கு இருக்குற மேன்மை & சக்தியதான் சொல்றேன்.
இல்லாதத எதும் சொல்லலியே.
அவர் அனைத்தையும் பார்ப்பவர்னா
நாம பண்றதையும் பாக்கத்தான செய்வாரு?
அவர மீட் பண்றப்ப கண்டிப்பா கேப்பேன்
என்னனு?
எது உங்க ஃபேவரிட் கேடகரின்னு
நீ நாயடி வாங்கப்போற.
factsச பேசினா சமூகம் அடக்குமுறைகளுக்கு ஆளாக்குது.
டேய் fact is a fact தான்.
ஆனா அத சொல்ற முறைனு இருக்குல்ல.
என்ன வயித்துல சுமந்தவங்க இவங்கனு
அம்மாவ சொல்லலாம்.
தோ வராங்களே இவங்க வயித்துல எப்பவும் கொஞ்சம்
ஆய் இருக்கும்னும் சொல்லலாம்.
ரெண்டும் fact தான் but we prefer the former oneல?
நானா இப்பிடிலாம் சிந்திக்கிறேன்?
இந்த சிந்தனையும் கடவுள் படைச்சதுதான?
ஒன்னப்படச்ச அவர் கைய இன்னேரம் கருக்கிருப்பாரு.
ஆமா நம்ம கான்வோவ பாத்து கைய கருக்குனார்னா
மக்கள் மேட்டர் பண்றதப்பாத்தப்பறம் கைய கழுவுவாரா?
STOPPPPPPPP.
கடவுளே இவன் சொன்ன எந்த வார்த்தைக்கும்
எனக்கும் எந்த சம்மந்தமும் இல்ல.
Grill barbeque பண்றதுன்னா இவன மட்டும் பண்ணு.
Please keep me I'm out of this.
சத்திய சோதனை.
அது சரி, மொதல் நாள் நீ யாருன்னு கேட்டதுக்கு
யக்ஷினு சொன்னியே…
ஆமா
நானும் யக்ஷி கதையெல்லாம் தேடிப்படிச்சேன்.
ஒவ்வொரு நாட்டுலையும் அத எப்பிடிலாம்
கத கதையா சொல்றாங்கன்னு.
Interesting. எல்லா நாட்டுலையும் ஒரு folklore இருக்கு.
நம்ம ஊர் யக்ஷி மாதிரியே.
கடவுள் சாத்தான் மாதிரி இதுவும்
எல்லா கல்ச்சர்லயும் இருக்கு.
This is irrespective of geography, language and religion.
எல்லா கதைலயும் ஒரு ஆச்சரிய ஒற்றுமை
இருக்குறத கவனிச்சேன். அப்பதான் ஒன்னு புரிஞ்சது.
என்னோட…
திடீரென சிவராமனுக்கு ஞாபகச் சிதறல் ஏற்பட்டது. யக்ஷிகள் குறித்து அவன் அனுப்பிய மெசேஜும் தடமின்றி அழிந்தது.
அது சரி, மொதல் நாள் நீ யாருன்னு கேட்டதுக்கு
யக்ஷினு சொன்னியே…
ஆமா
நீ சொன்னன்னு யச்டின்னா என்னனு தேடுனேன்.
அது HD இல்லடா யக்ஷி.
அட டைப்போம்மா.
யக்சின்னா*
யட்சிகள் அதுங்கள பாக்கற எல்லாரையுமே கொன்னுடுமா?
அது அப்டி இல்ல.
யட்சிணிகள் யாரையும் கொல்லாது.
ஆனா அது அந்த மாதிரி ஆயிடுது.
சூரியன ரெண்டே ரெண்டு நிமிசம் வெறும் கண்ல
பாத்துட்டிருந்தாலே கண் குருடாகிடும்ல?
இதுல சூரியன குத்தம் சொல்லுவியா நீ?
மாட்டேன்.
அத கூலர்ஸ் இல்லாம பாக்குறவன தான்
லூசுக்கூதினு சொல்லுவேன்
அது மாதிரிதான் இதுவும். யட்சிகளோட vibeப
உங்களால தாங்கிக்க முடியாம அப்பிடி ஆகிடுது.
உங்களாலயா?
மேடம் அப்ப யாரு? மனுசங்க இல்லியா?
உங்கள as in, ஆண்கள சொன்னேன்.
Okay, அப்ப யட்சிகள்ட்ட
சிக்கி தப்பிச்சவங்க யாருமே இல்லையா?
அப்பிடி சொல்ல முடியாது.
சூரியன் முன்னால கண்கள் பொசுங்கிடும்.
ஆனா நிலாவப்பாரு, சூரியனோட ஒளிய வாங்கி குளிர்விச்சு
தன் தனிப்பட்ட ஒளிய தரும்.
அது மாதிரி ஆட்களும் இருக்காங்க.
யட்சியோட பெரும் சக்திய தாங்கி அதுக்குப் பகரமா
வேற ஒன்ன வெளிப்படுத்துறவங்க.
ஒரு படையல் மாதிரி வச்சுக்கோயேன்.
அது கெடச்சதும் யக்ஷிகள் திருப்தி பட்டுக்கும்.
அவங்க வெளிப்படுத்தின அந்த அருள தங்களோட
சூட்சும உலகத்துக்குக் கொண்டு போயி
கொண்டாடிட்டே இருக்கும்.
அந்த மாதிரி நடந்துருக்கா இதுக்கு முன்ன?
Yes, a lot of times. ஒலகம் முழுக்க.
நம்மூர்ல?
Of course? நடந்துருக்கு.
நீ எத்தனையோ பேர பாத்துருப்பல்ல
இந்தாள்லாம் மனுசப்பிறவியே இல்லன்னு
யாரையாவது நெனச்சிருக்கியா?
Yes, எங்கப்பாவ. நெறய வாட்டி நெனச்சிருக்கேன்.
😂 டேய் அந்த இடித்துரைத்தல் modeல இல்ல.
Somebody’s work or action or art.
That made you believe it is not at all humanly possible.
And my instinct says you’ll say the right answer.
அப்டினு யோசிச்சா ஒரே ஒருத்தர் தான் ஞாபகம் வருது.
இளையராஜா.
அவர் உழைப்பும் படைப்பும்
அந்தாளோடது மாதிரியே இருக்காது.
வேற யாரோ உள்ளிருந்து இயக்குறாங்கனுதான்
எப்பவும் தோணும்.
Bull’s eye!
அவர் யட்சிகளால தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
ஆசீர்வதிக்கப்பட்டவர்.
A chosen one, like Vincent van Gogh.
அவர யட்சிகள் தங்களோட ஒலகத்துக்கு
கொண்டு போயிருக்கும்.
ஆனா அவரோட இசை ஞானத்தோட வீரியம்,
யட்சிகளின் தேவை இதுதான்னு அறிஞ்சு
யட்சிகளின் உலகத்துக்கான பாட்ட படைச்சு
அவங்கள அத தங்கள்உலகத்துக்கு கொண்டு போயி
கொண்டாடிட்டே இருக்க வச்சிருக்கார்.
யட்சிகளின் உலகத்துல எப்பவும்
திரும்பத் திரும்பத் திரும்பத் திரும்பத் திரும்ப
அந்தப் பாட்டு ஓடிட்டே இருக்கு.
யட்சிகளும் ஆடிட்டே இருக்கு.
யட்சிகளோட ஆயிரக்கணக்கான வருஷ காத்திருப்புக்கு
கிடைச்ச படையல் அது.
Hey wait wait…
சந்திரமுகில வர ஜோதிகா மாதிரி இருக்கு
இப்ப நீ சொல்றது.
ஒட்டியாணம் ஜிமிக்கின்னு.
Hahaha.
சரி இதெல்லாம் சொன்னியே அது எந்தப்பாட்டுன்னும்
சொன்னன்னா…
That will be our special song.
We will celebrate by listening it together when we meet :)
Can’t wait to meet you.
நாம மீட் பண்ற டைம் எப்போ வரும்னு இருக்கு.
டைம் ரொம்ப மெதுவாப்போகுது.
நீ எவ்ளோ அவசரப்பட்டாலும் அந்தப்பய மெதுவாதான் வருவான்.
அது மெதுவா வந்து… நாம மீட் பண்றதுக்குள்ள நான்…
கவலப்படாத, மீட் பண்ணாலும் அதான் நடக்கும்
ஒரு பொதுவான அறிவுக்கேள்வி.
சாவறப்ப வலிக்குமா?
அது எதுக்கு சாவறோங்குறதப் பொறுத்து.
இதென்ன கதையாருக்கு? அடிபட்டா வலிக்கத்தான செய்யும்.
அப்பிடித்தான சாவும்?
Also சிலர் தற்கொல பண்ணிக்கிறாங்களே அது ஏன்?
இல்ல. வயிறு முட்ட முட்ட பிரியாணி சாப்புடுறோம்.
மணமும் ருசியுமா அவ்ளோ நல்லாருக்கு.
பீஸ் கேட்டு கேட்டு வாங்கறோம்.
ஆனா ஒரு சின்ன கறித்துண்டு பல்லிடுக்குல மாட்டினா
அத எடுக்குறவரைக்கும் எவ்ளோ அவதி?
பிசிக்கலா பெருசா இல்லன்னாலும்
அது ஒரு மாதிரி உறுத்திட்டே இருக்கும்ல.
கட்டக்கடேசியா நாக்காலயோ குச்சியாலயோ
அந்தத் துண்ட எடுத்ததும் எவ்ளோ பெரிய ரிலீஃப் கெடைக்குது?
ஆமா. அல்மோஸ்ட் ஆர்கசம் அது.
அந்த மாதிரிதான் சிலருக்கு.
உயிரோட இருக்குறது இடுக்குல மாட்டினாப்ல
தோண ஆரம்பிச்சுடும். அவங்க உயிர நெம்பி எடுத்தாலொழிய
அந்த அசௌகரியத்துலருந்து விடுதலை கெடச்சதா தோணாது.
அதான் தொங்கிடுறாங்க. இல்ல தலைய குடுத்துடுறாங்க.
சிலர் அறுத்துக்கறாங்க.
கொஞ்சம் பொறுமையா இருக்கலாம்.
இருக்கலாம்தான். பல் இடுக்குக்கறியவே எடுத்துக்கோ.
தூங்கி எந்திரிச்சா ஒன்னு தானா வாய் கொப்பளிக்கைல வந்துரும்.
இல்லன்னா ரெண்டொரு நாள்ல அதுவே கரைஞ்சுடும்.
Worst case நம்ம பல்லு அதுக்குப் பழகிடும்.
இதேதான் பிரச்சனைகளுக்கும்.
ஆனா அந்த திடீர் temporary அசௌகரியத்த
சிலரால carry பண்ண முடியாது.
அது சரி, அவன் அவன் கண்ணுல மண்ணு உழுந்தாத்தாத் தெரியும்.
ஏன் திடீர்னு கேக்கற? தொங்கப்போறியா?
நா ஏன் தொங்கறேன். இன்னம் பாக்க வேண்டியது எவ்ளோ இருக்கு.
எவ்ளோ இருக்கு?
கன்னிகள் கழியணும். விர்ஜினிடிகள் இழக்கணும்.
சமையக்கட்டுக்கு வந்துட்டியா?
சமையக்கட்டுன்னு சொல்றத விட அடுப்படினு சொன்னா
ஒரு இது இருக்குல்ல?
அதென்னமோ அடுப்படின்னு சொன்னா ஒரு கரேல் படிமம்தான்
மைண்ட்விசுவல் தோணுது.
வீடு வெள்ளையாருந்தாலும் அடிப்படி கருப்பாத்தான் இருக்கும்னு
ஒரு மகான் சொல்லிருக்காரு.
யாரு உங்கப்பாவா?
ஆமா. உங்கம்மாட்ட.
அடிங்.
அது கெடக்குது. அங்க எப்பிடி?
அடுப்படியா இல்ல சமையக்கட்டா?
இங்க சமையக்கட்டுகூட இல்ல.
கிச்சன். Modular கிச்சன். பளபளன்னு மின்னும்.
சொல்றியே தவிர… பாம்ப எடுத்து விட மாட்றியே.
பாம்ப விட வேண்டியது நீடா.
பாம்ப விடுறது என்ன, பாலே ஊத்தலாம்னு பாத்தாலும்
அசஞ்சு குடுக்க மாட்றியே. வீடியோ காலுக்கே
தண்ணி குடிக்க வேண்டி இருக்கு.
பொறு. பால் என்ன, தயிரே கடையலாம்.
கண்டிப்பா கடையணும். வார்த்த மாறக்கூடாது.
மத்த ரெடி பண்ணு. மத்தத அப்பறம் பண்ணலாம்.
அடடே பார்த்திபன்சார் நீங்களா?
போடா பொரிக்கி.
சரி, சாவப்பத்தி நீ என்ன நெனைக்கற?
சாவுன்னதும் தான் ஞாபகம் வருது. You are such a killer beauty.
நாம மேட்ச் ஆன அன்னக்கே சொல்லிருந்தா
வழியிறாப்ல இருக்கும்னு சொல்லல.
ப்ச். Try something better. Why are you lowering your standards?
இதுக்குத்தான் சொல்லல.
சரி சொல்லு சாவப்பத்தி நீ என்ன நெனைக்கற?
இப்பத்திக்கி எதுவும் நெனைக்கல. என்னப் பொருத்தவரை
பொதுவா அது கொஞ்சம் மர்மமானது type of thingie.
எல்லாரும் அறிஞ்ச, ஆனா ரகசியம்.
At times I feel like it is a key to something or somewhere
எதையோ தொறக்கற சாவி.
அல்லது எதுலையோ நம்மள போக வைக்கிற துளை.
ம்ம்.. Interesting.
மரணம் ஒரு மாதிரி cleanser.
தெருவுல இருக்க சின்ன பள்ளத்துக்குள்ள அடிக்கிற காட்டாற்று வெள்ளம்.
ஊர்ல பேய் மழை பேயுறப்ப பாத்துருக்கியா?
ஊரையே கவுத்துப்போடுற வெள்ளம் வரப்பதான் ஆண்டுக்கணக்கா காணாத
குப்பை, கூளம், பழசு, பட்டை எல்லாம் அடிச்சுத் தொவச்சு வெளிய வரும்.
எல்லாக் கழிவும் மொத்தமா வெளியேறும்.
மரணமும் அப்பிடித்தான்.
Just imagine, அதோட force எந்தளவுக்கு இருந்தா செத்ததும்
ஒடம்புல இருக்குற மலம் மூத்திரம் saliva ஏன் விந்துகூட வெளியேறிதுன்னு.
அப்பேர்ப்பட்டது மரணம்.
Few will even moan and groan, at once during death.
இந்த டாப்பிக்க, அதுவும் இந்த நேரத்துல கேட்டாலே திகிலாருக்கு.
பயப்புடுறியா குமாரே?
ச்ச ச்ச. நமக்கு இதெல்லாம் பாத்து பயமில்ல.
புலி, சிங்கம், பல்லி. இதுங்களுக்கு மட்டுந்தான்.
பல்லியா? 😂😂😂
பல்லியப்பாத்து பயப்படறவனாடா நீயி?
பயம்னுலாம் இல்ல.
அதென்னமோ அதப்பாத்தாலே ஒரு டிஸ்கஸ்டிங் கலந்த...
பயம்
அப்படி முழுதாய் சொல்ல முடியாது.
😂😂😂😂
ﮩ٨ـﮩﮩ٨ـ♡ﮩ٨ـﮩﮩ٨ـﮩ٨ـﮩﮩ٨ـﮩ٨ـ____________
Most time ghost is a wish.
A Grief, Anger, Guilt. A memory, A Day Dream, A Secret.
A ghost can be a lot of things
Just not the way we think.
I've seen a lot of ghosts.
Most time ghost is a wish.
But most times, ghosts are regrets and failings.
Ghosts are guilt, ghosts are secrets
I've lived with ghosts since I was a kid.
But they can't be told. Somethings can't be told.
You don't tell everyone everything you see right?
Ghosts are a dream, you live them. Can't be told.
They are secret stories.
And every time someone tells one of these stories,
We turn into stories.
பேய பாத்துருக்கியான்னு கேட்டல்ல,
When I said I've never seen a ghost, that's not exactly true.
அவன் தூங்கிப்போனதும் அவள் அனுப்பிய மெசேஜுகள் அவன் கனவில் காட்சிகளாய் எதிரொளித்தன.
எதிரொளித்து முடிந்த போது இந்த மெசேஜுகள் தன்னைத்தானே டிலிட் செய்துகொண்டன.
Comments
Post a Comment
Pass a comment here...