இதுக்கு பருத்தி மூட்ட...
-------
படத்தோட மொதல் ஸ்லைடே இப்பிடி ஆரமிச்சா அது கேப்டனோட படம் என்றறிக...
பக்கத்தூட்டுக்காரன் வளக்குற பூன என்னய கிளி வளக்குற சுதந்திரத்துலருந்து தடுக்குதுன்றாப்ல இயக்குநர் ராம் ஒரு ப்ரொமோவுல சொல்லிருப்பாப்ல. அந்த மேரி நமக்குப் புடிச்ச வீடியோகேமக்கூட பொதுவெளியில பிரீயா சொல்ல முடியாதளவுக்கு சமூகத்த அசிங்கம் பண்ணி வச்சிருக்கானுக யூக்நோஹூ. ஒரு காலத்துல 16 பிட் கேம்சுல அடிக்சன். நாளு கெழமனு இல்லாம வெளாண்ட பருவம். அதுல நமக்குப் புடிச்சதுன்னா சூப்பர் மேரியோ (இப்பவும் பல வருடங்களுக்கு முன் சில ரசிகைகள் தங்களுக்கிருப்பது சூப்பர் மேரியோ மூக்கு எனச் செல்லம் கொஞ்சுவதுண்டு. நல்ல வேளையா அதுகல்லாம் கல்யாணமாகி வாட்சப்புல க்ரே டிபிக்கி மாறிட்டுதுக.)
ஒரு சுபயோக வெள்ளிக்கிழமையில சூப்பர் மேரியோவை முழுதாக முடித்த தற்பெருமை நமையே சாரும். 8X4 வது உலகத்துல ப்ரின்சச போயி காப்பாத்துனதும் சின்ன பொக்கே குடுத்து மறுக்கா ஒலகம் ரீவைண்டு ஆகிரும். அப்ப அந்த நத்தையெல்லாம் மில்ட்றி கேப் போட்டு இன்னம் ஹார்டா வெளாட்டு துவங்கும்.
சூப்பர் மேரியோக்கு அடுத்தாப்ல பாத்தா பாம்பர்மேனுன்னு ஒரு வெளாட்டு. ஒனக்குப் புடிக்காமயானு சில மைண்டுகள் நினைக்கக்கூடும். அவர்களைத்தான் சீழ்பிடித்த சமூகத்தினர் என பஸ்ட்டு பேராவில் ராவியிருந்தேன். சும்மா டம்மு டும்முனு பாம் போட்டுக்கொண்டு வெளாடுவது நல்ல விளையாட்டு. ஆனால் அதை முடித்ததில்லை. ரீசண்டாக ஒடம்பு சரியில்லாமக் கிடந்த போழ்து உருப்படியாக எதையும் செய்ய மனம் லயிக்கவில்லை. அப்போது கிட்டத்தட்ட 30 வருடங்கள் கழித்து இந்த கேமை ஆடுவோமே எனத் தேடியதில் கேமும் கிடைத்தது. ஜாய்ஸ்டிக் இல்லாது லேப்டாப்பில் விளையாடச் சற்று பழக வேண்டி இருந்தது. அப்புறம் ஒத்து வந்து விட்டது. அருணாசலம் படத்தில் க்ராண்ட் டேடி ரஜினி டேடி ரஜினியை உஃப்ஃபு உஃப்ஃபு என ஊத விட்டது போல அடாது கேமை விடாது விளையாண்டதில் அம்பது ஸ்டேஜில் இந்த கேமும் முடிந்தே விட்டது.
ரோஜா பட கடேசி டயலாகு போல, ஒரு தீவிரவாதியை மனுசனா மாத்திருக்க எனும் டயலாகோடு கேமும் நிறைவடைந்தது.
Comments
Post a Comment
Pass a comment here...