சிங்கம் மார்க் பீடி

 GOATK!



--------

AIனால பெருந்தலைகளே உருண்டுட்டிருக்கு. பொதுமக்கள் உசாராக இருப்பது நல்லது. 





--------

இங்க போவணும். பகிட் லிஸ்ட்ல சேத்தாச்சு.






----------


வெற்றிதான் நமக்குக் கிடத்த தோல்வி கைஸ்!



------

கண்ணதாசன் ஒரு புக்குல சொல்லிருப்பாப்ல, நடிகையின் கணவனாய் இருப்பது சிங்கம் மார்க் பீடியில் லேபிலாய் இருப்பது போல. பீடியை யார் பிடித்தாலென்ன, லேபிலில் இருப்பது சிங்கம்தானேன்னு.


தட் கதை பிகேம் ரியல் வித் மேக்கினிந்தியா.








-------

நல்ல தலகாணி, நல்ல டீ, நல்ல பர்ஃப்யூமப்போல நல்ல மணி ட்ரான்சரையும் தேடுறதுலயே வாழ்க்க கழிஞ்சிடும் போல. 

ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு ரேட்ல போட்டு தொவைக்கிறானுக. ரீசண்ட்டா யார் மூலமோ தெரிய வந்தது இந்த டப்டப்செண்டு ஆப். இப்ப வரைக்கிம் இது ஒருவேள ஸ்கேமோன்னும் தோணிட்டே தான் இருக்கு. ஏன்னா, எந்த ட்ரான்சர் ஃபீசும் எடுக்க மாட்றான். ஒடனே அனுப்பி வச்சிர்ரான். அத விட பெரிய சந்தேகம், கூகுல்ல எவ்ளோ காட்டுதோ அதவிட அதிக காசு குடுக்கறான். அதுதான் இவம்மேல சந்தேகமாவே இருக்குது. இதுவரைக்கிம் நாலஞ்சு தடவ காசனுப்பிட்டேன். எல்லாமே சுபமா அமஞ்சுருச்சு. எந்த காசுமே எடுக்காம இவனுக்கு எப்பிடி கட்டுபடி ஆகுதுன்னு தான் தெரியல. இல்ல ஒருவேள ஊபர் ஓலாலாம் ஆரம்பிச்சப்ப ஒர்ருவாய்க்கி ட்ரிப்பு குடுத்தானுகளே, அப்பிடி ஒரு மேட்டரான்னும் தெரியல. சரி ஆனது ஆச்சு, அருவியில தண்ணி நிக்கற வரை குளிச்சுக்க வேண்டிதான். 

இந்த ரைட்டப் எழுத முன்ன தான் இன்னொன்னும் பாத்தேன், ஒரே யூரோவா இருந்தாலும் எந்த நாட்டுலருந்து அனுப்பறமோ அதுக்குத்தக்கன வெவ்வேற ஃபாரெக்ஸ் அமௌண்டு காட்றான். ஒருவேள இதுலதான் எதோ கமிசன் கெடைக்கிது போல. நெதர்லாந்து லக்சம்பர்கில் இருக்கும் நபர்களுக்கு இது ஒரு நேநோ பிசினஸ் வாய்ப்பு. 





அதே தேதிக்கான ஒவ்வொரு நாட்டின் கன்வர்ட் மதிப்பு. 













மொதல்ல ஆப்போட வெறும் லிங்குதான் போடலாம்னு யோசிச்சேன். ரெஃபரல் பண்ணா என்னாகுதுனு ஒரு A/B testing பண்ணனும்னு ரெஃபரல் லிங் போட்டுருக்கேன். ரெடீம் கோடு ABDULMUT72லருக்க 72 என் வயசோ பொறந்த வருசமோ இல்ல. மைண்ட் யூ. 

https://taptapsend.onelink.me/Lrab/appreferral

Redeem Code: ABDULMUT72

---------------





---------------

to whomsoever it may concern...




Comments