படமும் ப்ராம்ப்ட்டமும் - AI models comparison

வாண்டு ஒன்று படம் வரைந்து வாட்சப்பில் அனுப்பியது. அதை வைத்து AI கருவிகளை சற்று பரிசோதிக்கலாமே எனப் பார்த்ததில் வந்த ரிசல்ட்: 


ப்ராம்ப்ட்: add colors to this drawing done by my niece

படம்:





Claude:




Opus 4.6:




Gemini:



Perplexity:





deepseek:



Chatgpt:



Grok:



meta:





ஒரே படம்தான், ஒரே ப்ராம்ப்ட் தான். வேணுக்குன்னே படத்தை நேராகத் தராமல் சைடுவாக்கிலேயே கொடுத்தேன். Claudeடானது என்னத்தையாச்சும் புடிச்சு அடிச்சு உடுறா எனும் மோடில் தள்ளி விட்டிருந்தது. Opus படத்தைப் புரிந்து கொண்டான், ஆனால் பெய்ண்ட்டிங்கைப் பொருத்தாது படம் ஒரு புறம் பாவம் ஒரு புறம் என்றுவிட்டான். ஆனால் இதில்தான் கோட்டை விட்டானேயொழிய கோடிங்கில் opus 4.6 தெறிக்க விடுகிறான். எப்பேர்ப்பட்ட வேலைப்பாடு. 

Gemini என்ன புரிந்து கொண்டானோ தெரியவில்லை, அதோ அந்த பறவை போல மோடுக்குச் சென்றுவிட்டான். நல்லவேளை, சாதூர்யம் பேசாதேடீ எனப்போகவில்லை ஜெமினி கணேசன். 


Perplexity பிச்சக்காரன் படத்துக்கு பெய்ண்ட் அடிடா என்றால் படத்தின் பாகங்களைக் குறித்துக்கொண்டிருந்தான். காசு கொடுத்தால்தான் படவகைகளைச் சுடுவானாம். பிச்சக்காரப்பய. 


Deepseek: ராஜா சார் பாடல் ஒன்று இருக்கிறது. ஆழமின்னா இன்னா, அது ரொம்ப டீப்பும்மா என்று. அதைப்போலவே டீப் மோடுக்குன் சென்றுவிட்டான். இந்த மலையத் தூக்கி எந்தலையில வைங்க, தூக்குறேன் என்பது போல், படத்தோட டீட்டைல்ச டீட்டைலா சொன்னா அதுக்கேத்தாப்ல ஜட பின்னி பூ வைப்பேன் என்கிறான். படத்தையே குடுத்தாச்சு இன்னம் என்ன வேணுண்டா முட்டாப்பயலே  என்று சொன்னால் அவனுக்குப் புரியாது. ஏனெனில் அவன் சைனீஸ். 


Chatgpt: மற்றவை தந்த அலுப்பில் எதிர்பார்ப்பின்றிதான் இருந்தேன். ஆனால் சட்டென இம்ப்ரஸ் பண்ணி விட்டான். வெறும் ஒரு வரியில் நோக்கத்தை நுணுக்கமாகப் புரிந்து கொண்டு கலர் நிரப்பி கலக்கிவிட்டான். படம் இன்னதென அறிந்தது விடயமல்ல, நீஸு அனுப்பியது என்பதையும், படம் வரையப்பட்ட விதத்தைப் பார்த்து இதற்கு குழந்தைகள் போன்ற கலர் பென்சில் அடிக்க வேண்டும் என்பதையும் கச்சிதமாகப் பிடித்தது ப்ரில்லியண்ட். 


Grok: கொடுத்துச் சிவந்த கரத்தான் போல க்ரோக்கன். வகை வகையாக இன்னும் வேணும்னா இன்னும் வேணுமா என வரிசையாக அவனே எடுத்துக் கொடுத்து அள்ளிக் கொடுத்தனுப்பினான். 


Meta: இவனும் சோடையில்லை. கலர் பென்சில் பேட்டர்னை வைத்து பல் வகைகளில் வரைந்து பல ஆப்சன்களையும் கொடுத்து விட்டான். 


Diverse ரெஸ்பான்ஸ்களை வைத்துப் பார்த்தால் Grok தான் வின்னர். ஆனால் காபாவுக்கு கருப்பு கலர் அடிக்கும் லாஜிக் முதல் கேட்டவற்றை மட்டும் கனக்கச்சிதமாக அளித்த Chatgptக்கே முதல் பரிசு தருவேன். தட் சொல்றத மட்டும் பண்றா, அடுத்தவன் ஐடியால சோசிலிசம் பேசாதீங்கடா முமண்ட். 

Comments