அண்டர்கரண்ட் என்பார்களே, அதுபோல ஒரு பெரும் அண்டர்கரண்ட் ஸ்லேவரி உண்டாகிக்கொண்டிருக்கிறது. அதுவும் இந்த பத்து பாஞ்சு நிமிச இன்ஸ்டண்ட் டெலிவரி வந்தப்பறம் இது அதிகம் பரவியிருக்கிறதெனத் தோன்றுகிறது.
டெலிவரி செய்ய வரும் நபர்கள் அநியாயத்துக்கு சப்மிசிவாகவும் மன்னிப்புக் கேட்கவும் செய்கின்றனர். கொஞ்சம் அதிக டிப்ஸ் கொடுத்தால் குழப்பமடைந்து அல்மோஸ்ட் கண்ணீர் ஸ்டேஜுக்குச் செல்கின்றனர். வேலையின் உறுதித்தன்மையின்மை, வானளாவிய விலைவாசி, மிகக் குறைந்த சம்பளம், நின்று நிதானிக்க முடியாது, பிழைப்புக்காக ஓடிக்கொண்டே இருக்க வேண்டிய கட்டாயம், இன்ஸ்டா ஆர்டர் போடுபவர்களின் தொடர்ந்த அப்யூசிவ் பிகேவியர் என அவர்களை நவீன கால ஸ்லேவரிக்கு கண்டிஷன் செய்து விட்டிருக்கிறதோ சமூகம் என யோசிக்கத்தோன்றுகிறது.
Havesசுக்கும் Have notsசுக்குமிடையில் ஆகப்பெரும் பள்ளத்தாக்கு உண்டாகியிருக்கிறது. அது தினம் தினமும் வளர்ந்துகொண்டேவும் செல்கிறது. இவை எல்லாம் ஒரு கட்டம் வரைக்கும் தான் இழுவையிலிருக்கும். அளவுக்கதிகமாக இழுக்கப்பட்ட ரப்பர் ஒருகட்டத்தில் பிய்ந்து சிதறும். அன்றைக்கு இருக்கிறது கச்சேரி.
ஆஸ்பத்திரிகளுக்கு எளிதில் செல்லும்வகையில் அவைகளுக்குப் பக்கத்திலிருந்த airbnbயில் அறை வாடகைக்கு எடுத்திருந்தேன். ஆஸ்பத்திரிகளுக்கும் லேபுகளுக்கும் நடந்தே போய்விடலாமென. ஆனால் பொல்லா மழை வந்து எல்லாவற்றையும் சொதப்பிவிட்டது. வீட்டை விட்டு எட்டு வைக்க வேண்டுமென்றால் ஆட்டோவிலோ கேபிலோதான் சென்றாக வேண்டிய கட்டாயம். இதில் சாப்பாடுகள் எங்கத்த? சுவிகியில் ஆர்டரிட்டு டெலிவரி வாங்கும் ஒவ்வொரு முறையும் அவர்களிடம் மன்னிப்புக்கேட்டுதான் சாப்பாடு வாங்கினேன். எமர்ஜன்சி, வேற வழியில்லாம ஆடர் பண்ணேன், தப்பா எடுத்துக்காதீங்க என்று. மன்னிப்பை வாங்கிக்கொள்ளக்கூட நேரமின்றி அடுத்த டெலிவரிக்காக அவதியோடு முழுத்தொப்பலாக நனைந்தபடி விரைந்தனர்.
ஒரு நாள் இரவு பத்தேகாலுக்கு நாமிருந்த அபார்ட்மண்ட் கேட்டில் இரண்டு ஸ்விகியினர் காத்துக்கொண்டிருந்தனர். மழையான மழை. வண்டியிலிருந்து இறங்கக்கூட முடியவில்லை. அவ்வளவு பெருமழை. அவர்களிடம் என்னவென்று கேட்டதற்கு, டெலிவரி குடுக்கணும், ஃபோன் பண்ணா எடுக்க மாட்றாங்க, கால் மணி நேரமா நிக்கிறேன் என்றார். அவர் கையில் இரண்டு பார்சல் இருந்தது. ஒன்று க்ராசரி போலத் தெரிந்தது. மற்றொன்று குழந்தைகள் விளையாடும் எதோ ஒரு போர்டு கேம். எவ்வளவு எகத்தாளமிருந்தால் இந்த வேலை பாப்பான்கள்? அதைப்பார்த்ததும் மண்டைக்கி சுர்ரென ஏறியது. பேசாம கேட்ல வச்சுட்டு போயிருங்க, இதே அட்ரஸ் தான, அவன் வந்து எடுத்துக்கட்டும், அதான் போன் பண்ணா ரெஸ்பாண்ஸ் இல்லீல்ல என்றதற்கு, அவர்கள் கேஷான் டெலிவரி கொடுத்திருப்பதாகவும் அப்படி விட்டுச்செல்ல முடியாதெனவும் கூறினார். அவரைப்போலவே இன்னொரு ஸ்விகி டெலிவரரும் போன் செய்தபடி இருந்தார். குற்றாலத்தில் குளித்ததுபோல தொப்பலாக நனைந்திருந்தனர் இருவரும். இவையெல்லாம் நடப்பது நைட்டு பத்தரைக்கு.
அது ஒரு ஆறு மாடி அபார்ட்மண்ட். நாம் வாடகைக்கு எடுத்திருந்தது மொட்ட மாடி டெரசில் ஒரு ஒற்றை ரூம். ஒவ்வொரு முறையும் சாப்பாடு டெலிவரிக்கு கீழே சென்று வாங்கினேன். அந்த airbnb host அம்மணி அதெல்லாம் போகாதீங்க, ask them to come up and deliver, they have to do it, they will do it, we all get it delivered at doorstep only என்றார். அது எதோ ஒரு பிறப்புரிமை எனும் தொனி அவர் குரலில். எலீட் வடக்கு சேட்டு அம்மணி. மொத்த பில்டிங்கும் கட்டி வாடகைக்கு விட்டு சம்பாதிக்கிறது.
ஆக, அன்றாடங்காய்ச்சிகளாய், பிழைத்திருக்க தெருத்தெருவாய் அலைந்து திரியும் ஒரு பெருங்கூட்டம் உண்டாகியிருக்க, அவர்கள் தலைமீதமர்ந்து உட்காந்து தின்னும் கூட்டமும் பெருமளவில் உண்டாகியிருக்கிறது. இண்ட்ரஸ்டிங் டைம்ஸ் அஹெடு.
--------
ஒரு அசரத்து மவுலானா உசுரக்குடுத்து அதீசுகள யூடூபுல சொல்லிட்டிருக்காப்ல. ஒரு சுலோன் ஆண்ட்டி கமண்ட்டுல ஆட்டோக்ராப் ஓட்டிட்டிருக்கு. இந்த மக்களை மன்னியும் ஆண்டவரே!
-------
இந்த இரண்டிலொன்று நம் வாழ்க்கையில் மிகச்சுளுவாக நடந்தேறு திறங்குகிறது. ஆனால் அது வசதியா அவஸ்தையா என்று இன்றுவரை வரையறுக்க முடியவில்லை. வாயையும் வயித்தையும் கட்ட வேண்டும் என்பார்கள். அதுபோல ஆசனத்தையும் தானே கட்ட முடியனும்? நமக்கு உச்சா எவ்வளவு எச்சாவாய் வந்தாலும் அதைக் கட்டுப்படுத்த முடியும். ஆனால் கக்கா வந்துவிட்டால் சி̀ஸ்டம் ஸ்தம்பித்து விடும். நமக்கும் ஆய்க்கும் உள்ள கதைகளைக் குறித்தே ஒரு ஆய்வுக்கட்டுரை எழுதலாம். அவ்வளவு இருக்கிறது.
தூக்கம். அந்தக் கருமம்தான் வந்து தொலைய மாட்டுது. நாள்பூராம் சோம்பலாகவே இருக்கிறது. ஆனால் படுக்கையில் விழுந்தால் வருவனா என்கிறது. தூக்கத்தின் துக்கம் சொல்லி மாளாது.
-------
le god: ஆழ்ந்த அருந்தவக்கருத்துக்களை நாம் சொல்லிக்கொடுப்போம். எனது படைப்பினர் அதைச் சிந்தித்து ஆராய்ந்து வாழ்க்கையை வண்ணமயமாய் ஆக்கிக்கொள்வர்.
le bhais:
தட் உள்பாவாடைல என்ன எம்ராய்டரி வேண்டிக்கெடக்கு முமண்ட் ஃபார் பாய்ஸ் அகய்ன்...
Comments
Post a Comment
Pass a comment here...