அசஞ்சிகை-2

அலுவலகில் ஒரு மெக்சிகனோடு லஞ்சின்போது பேசிக்கொண்டிருக்கையில் எங்கெங்கோ சென்ற டாப்பிக் எப்படியோ பழமொழியில் வந்து நின்றது. அது ஏன் பழமொழியில் வந்து நின்றதென்றால் பாட்டியோடு பேசுவது எத்தகைய ப்லிஸ் என்பதை அவனிடத்தில் கூறும்போது, பட்டியிடம் பேசினால் எப்படியும் சில நிமிடங்களுக்கொருமுறை அதுவரை நான் கேட்டேயிராத ஒரு புதுப் பழமொழியைக் கூறிவிடுவார். எல்லாக் கதைகளுக்கும் டாப்பிக்குக்கும் அது சம்மந்தமாக ஒரு பழமொழி வைத்திருப்பார். பேசிக்கொண்டிருக்கும் சம்பவத்தை இறுத்துப் பிழிந்ததுபோல் சொல்லும் அந்தப் பழமொழி என்றேன். அவனுக்குப் பாட்டி இல்லாததால், அவன் நாட்டுப் பெருசுகளும் பழமொழிகள் சொல்வதுண்டு என்றான். 

அப்போதுதான் இந்தக்கேள்வி உதித்தது. When was the last time you heard a proverb during a conversation? அவனும் நானும் மேலும் அந்த லஞ்ச் டேபிலிலிருந்தவர்களும் யோசித்துப் பார்த்தால் கடைசியாக அப்படி கேட்ட ஞாபகமே யாருக்கும் இல்லை. தற்போது 99.99 சதவிகிதம் யாருமே பழமொழியை நேர்ப்பேச்சிலும் சரி, வேறு வகைப்பேச்சிலும் பயன்படுத்துவதில்லை என்பது புரிந்தது. )கவனித்திருக்கிறீர்களா? பழமொழியை சொல்லித்தான் கேள்விப்பட்டிருப்போம். யாரும் அதை எழுத்தில் பயன்படுத்(திய/துவ)தில்லை)

பின் மனிதர்களின் பேச்சுக்கள் எப்படியெல்லாம் ஒலிமாறி தற்போது உருமாறிக்கொண்டிருக்கிறது என்பது குறித்து பேசத் துவங்கினோம். தற்போது மீம்களாகவும், எமோஜிக்களாகவும், பட, சீரிஸ் பஞ்ச்களாகவும் பேச்சுக்கள் மாறியதைப் பற்றிப் பேச்சு போனது. இன்னும் ஐந்தாறு வருடங்களில் பழமொசிகள் முற்றாக அழிந்துபோகிவிடும் போலத் தோன்றுகிறது. பழமொழி எனும் கலையே முதுமை கண்டு இறப்பது போலத் தோன்றியது. அது மனதை sad ஆக்கிவிட்டது. 

"All good things must come to an end."

------------------------------------------------------------------------------------------------------------------------------

கிபி இரண்டாயிரம் வாக்கில் யாஹூ சேட்டிங் இருந்தது. அதில் வெள்ளைக்காரர்களோடு பேசுகையில். எங்க ஊர்லயும் பிஸ்துகள் உண்டு என சீன் போட ரஹ்மான் துண்டிசைகளை அனுப்புவதுண்டு. அதை வைத்து நாங்கள் கெத்து எனக் காட்டவும், அப்போது ரஹ்மேனியாக்காக நான் இருந்ததால் ரஹ்மானை உலக அரங்கில் இடம்பெறச் செய்யவேண்டும் என்ற முஸ்தீபும் இதைச் செய்வதுண்டு. 

காலங்கள் உருண்டோட, தற்போது அப்படி ஏனையவரை வாய்பிளக்க வைக்க திரிஷ்யத்தைக் கையிலெடுத்தாயிற்று. ரஹ்மான் மீசிக்கும் பம்பாய் தீமைத் தவிர ஏனையவற்றைக் கேட்டால் ஐரோப்பியர்கள் கலாய்த்து விடுகின்றனர். (தெய்வத்துக்கே இந்த நிலையா!!!)

யாருக்கேனும் பட சீரிஸ்களில் அதுவும் கேடிராமாக்களில் ஆர்வமிருந்தால் சட்டென திரிஷ்ய சஜசனை நீட்டிவிடுவது. இதுவும் சுலோ பர்னிங்தான். ஆனால் டுவிஸ்ட் உங்களால் யூகிக்கவே முடியாது என ஆர்வத்தைத் தூண்டி விட்டுவிடுவது. 

இப்படிச் செய்யும் வியாபாரத்தில் அவர்கள் மைண்ட்புலோவாகி வருகையில் எதோ அந்தக் கதையே நான் எழுதியதுபோல் கிரிடிட் எடுத்துக்கொள்வதுண்டு. 

சரி லேடிசிடமும் சீன் போடுவோமென்று ஒரு கேடிராமா வெறியையிடம் திரிஷ்யம் பார்க்கச் சொல்ல, அந்த மங்குனியும் படம் பார்த்து மைண்ட்புலோவாகி வந்தது. பைதவே அந்த வெறியைக்கு குழந்தை உண்டு, பாய்பிரண்டும் உண்டு. பொதுநலச்செய்திக்காக. 

படத்தைப் பற்றி சிலாகித்துப் பேசியபடி வந்தது ஆனாலும் அந்த பையனோட அம்மாவுக்கு பையன் மேல பாசம்லாம் இருந்த மாதிரி தெரியல என்றது. 

வாட்ட்ட்ட்? அங்க நடந்த அத்தன அப்யூஸ் மேன்ஹேண்ட்லிங்கும் அந்த அம்மானால தான, பையன் மேல இருந்த பாசத்துலதான் அவ அத்தனையும் பண்ணினா என்றேன். 

பையன் மேல மே பீ பாசம் இருக்கலாம். ஆனா அதுக்குன்னு அவ சோகமாலாம் இல்ல என்றது. 

எப்படி என்றேன். 

அது வர்ற சீன்கள பாரு ஹேர் கர்லிங்லாம் பண்ணிருக்கு. பையன் செத்துப்போன துக்கத்துல இருக்க அம்மா இப்பிடித்தான் மேக்கப் ஹேர் கர்ல், கலரிங்லாம் பண்ணுவாங்களா, என்ன போங்கு இது என்றது. 

திரிஷ்யத்தை எத்தனையோ பேர் எத்தனையோ விதங்களில் க்ராக் செய்திருக்கிறார்கள். ஆனால் இது....

நான் மைண்ட்புலோ ஆகி நின்றேன். 










----------------------------------------------------------------------------------------------------------------------


அவ்வப்போது கர்நாடக சங்கீத பைத்தியம் பிடிக்கும். மணிக்கணக்கில் ஷேக் சின்ன மௌலானா முதல் கதிரி கோபால்நாத், ஹரிபிரசாத் சௌராஸ்யா வரை கேட்டுக்கொண்டிருப்பதுண்டு. 

அப்படி சமீபத்தில் கேட்டபோது இந்த எண்ட் கிரிடிட் கண்கவர்ந்தது. 

டைட்டிலிங் செய்தவன் வெளிநாட்டுக்காரன்போலும். அவன் Iயை Lஎனக் கருதி அப்படியே டேட்டா எண்ட்ரி செய்துள்ளான். 

இத்தனைப் போராட்டங்களினாலும் சமூக முன்னெடுப்புக்களினாலும் ஒழிக்க முடியாத ஜாதியை ஓர் ஒற்றை டைப்போ ஒழிக்காவிடிலும் ஒளித்தவரை அம்மட்டிலும் மகிழ்ச்சியே. 


----------------------------------------------------------------------------------------------------------------




வள்ளலாரின் அணையா ஜோதி போல, திருவண்ணாமலை மற்றும் இன்னபிற கிரிவலம், நடைபயணம் போகும் இடங்களில் இதை நம்மூரிலும் முயலலாம். வாக்குக்கு வாக்கும் ஆச்சு, வாட்டுக்கு வாட்டுமாச்சு. 

Comments