To life, to life, l'chaim

அலுவலகத்தில் நம் 

உழைப்பைத் திருடுபவனை

அடே தேவுடியாப்பயலே எனக் கேட்க முடிவதில்லை

குனிந்து நிமிர்ந்து கொங்கிடைக்கோடு காட்டி

மேனேஜரிடம் போட்டுக் கொடுப்பவளை

அடி அவுசாரியே என இழுத்து ஓர் அறை வைக்க முடிவதில்லை

நினைத்த நாளில்

நினைத்த நேரத்தில்

இன்று எனக்கு ஓய்வு என அறிவிக்க இயல்வதில்லை

பைசாப் பெறாத

சோசியல் மீடியாச் சண்டைகளில் 

பங்கெடுத்து நேரம் போக்கும்

சொகுசு கிடைப்பதில்லை

படித்து முடித்து

வேலைக்குச் சென்று

கிரிடிட் ஆனதும் 

சொற்ப நேரம் தங்கும் கைநிறையச் சம்பாதிக்கும்

வாழ்க்கையில் கிடைத்த ஒரே

சுதந்திரம்

அவ்வப்போது வாங்கிச் சாப்பிடும் ஆல்பகடாவும்

அர்த்த ராத்திரியில் 

ரெண்டு ஸ்பூன் வாயிலள்ளிப்போடும் 

பால் பவுடரும் தான். 



Comments