அசஞ்சிகை4

 Goals


----


தாம் படிக்கவியலாத படிப்புகளை, தாம் அடைய முடியாத பதவி, வேலைகளைத் தங்கள் பிள்ளைகள் எப்படியேனும் அடைந்தே ஆக வேண்டுமென ப்ரெஷர் போட்டது முந்திஜ ஜென் பெற்றோர்கள். தற்போது சோமீயின் தயவினால் ஒரு மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. தாம் அடைய முடியாத (15 நிமிடப்) புகழைத் தாம் பெற்றதுகள் (மூலமாக) அடைந்துவிட எல்லாக் கொரங்காட்டித் தனங்களையும் செய்ய வைக்கின்றன இந்த ஜென் பெற்றோர்கள். எங்கு போய் முட்டுமோ தெரியவில்லை. 


----

அவ்ளதான் வாழ்க்க.



-----


இன்றைக்கு ஒரு மீட்டிங். நாம் பணி செய்யும் கடையின் ஓனரோடு. அடுத்தடுத்த மீட்டிங்குகளால் ஒன்றை முடித்து அடுத்த ரூமுக்குச் செல்ல சில நிமிடத்தாமதங்கள் ஏற்படும். டீமாக லேட்டாக நுழைகையில் சாரி ஃபார் தி டிலே என்றோம். அதற்கு பதிலளிக்கும் வகையில் யூ கேன் சே தாங்ஸ் ஃபார் யுவர் பேஷன்ஸ் இன்ஸ்டெட் என்றார். ஏனெனக் கேட்டதற்கு, தட் சௌண்ட்ஸ் மோர் பாசிடிவ் தேன் சேயிங் சாரி என்றார். 


அலுவலகங்களில் பேசும்போதும் மெயில் தட்டும்போதும் கடைபிடிக்கக்கூடிய alternate phrasesகள் குறித்து என்றோ எங்கோ ஒரு ஃபார்வர்ட் போஸ்ட் படித்தது நினைவுக்கு வந்தது. 


ஒரு சொல், அணுகுமுறையை, சிந்தனையை, செயலை paradigm shift போல முற்றாக மாற்றக்கூடியது. ஒருவரைத் தொடர்புகொள்ள நமக்கிருக்கும் ஒரே சாதனம் சொல். அது குறித்து இலக்கியங்களும் சாஃப்ட்ஸ்கில் டிரெய்னிங்குகளும் பர்சனாலிட்டி, செல்ஃப் டெவலப்மண்ட் புக்குகளும் திரும்பத்திரும்பத் திரும்பக் கூறியுள்ளவற்றை சொல்லி மாளாது.


சொல் ஏன் முக்கியம்? 

சொல் மட்டுமே அல்லது சொல் ஒன்றே ஒருவரின் எண்ணத்தை, ஆளுமையை, குணத்தை, பர்சனாலிட்டியைக் கோடிட்டுக் காட்டிவிடும், அல்லது அம்பலப்படுத்திவிடும்.

அதைச் சரியாகப் பயன்படுத்தத்தெரியாவிடில், நம் உள்ளெண்ணங்கள் சரியாக இருப்பினும் நாம் சொல்லும் முறை தவறாகிப்போனால் நாமும் தவறாகவே கருதப்படுவோம். 


சிந்தித்துப்பாருங்கள், நாம் பேசாததால் வரும் துன்பத்தைக் காட்டிலும் பேசியதால் மாட்டிய சிக்கல்களே அதிகமிருக்கும்.


பொதுவாகவே எல்லோருக்கும் சொற்சிக்கனம், சொற்கவனம் இருக்க வேண்டுமென்ற போதிலும் தனக்கென ஒரு அஜண்டா இருப்பவர் இன்னுமதிக கவனத்தோடு பயன்படுத்தவேண்டும். ஒரு லட்சியவாதியின், ஆளுமையின் சொல் மட்டுமல்ல, அவரின் மௌனம் கூடப் பேசும், பேசுபொருளாகும். ஆகவே எதைப் பேசுகிறோம், எப்படிப்பேசுகிறோம், ஏன் பேசுகிறோம் என்ற பலவகைச் சிந்தனைகள் கொள்ளவேண்டும் பேசுமுன்னும் பேசும்போதும். பேசிவிட்டு சிந்திக்கும் நிலை இருப்பவன் பேசாமல் ஊமையாகவே வாழ்ந்துவிடலாம். முன் சொன்னதுபோல பேசுவதால் வரும் துன்பத்தைவிட பேசாமல் வருவது சற்று குறைவாகவே இருக்கும்.


பொதுவாழ்க்கைக்கு வருபவர்களுக்கு மிகமிகமிக முக்கியம் சொற்கள். Unfortunately, ஆடியோ பாடியோ நடித்தோ அவர்களால் மக்களோடு தொடர்புகொள்ள முடியாது. எனவே சொல் ஒன்றே வழி. அது மட்டுமே ஆயுதம். அதை ஏன் ஆயுதம் என்கிறோமென்றால், ஆயுதத்திற்கு ஆள் பேர் தெரியாது. தப்பான இடத்தில் தப்பான வகையில் வீசினால் ரத்தக்காவும் ஏன் உயிர்ப்பலிகூட வாங்கிவிடும். சரியான முறையில் பயன்படுத்தினால் உயிர்காக்கும் ஆயுதமாகவும் இருக்கும்.


கலைஞரின் பேச்சுகள் குறித்து எண்ணற்றோர் வியந்தோதியுள்ளனர். அவரின் சமயோசிதம், நுணுக்கம் பற்றியெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோம். கோபிநாத் கூறிய ஒரு சம்பவம் உண்டு. பத்திரிகையாளர் சந்திப்பில் ஏதேனும் ஒரு கேள்விக்கு பதிலுரைக்க மேலும் சில நொடிகள் வேண்டுமென்றால் கேள்வி கேட்டு முடித்ததும் என்ன? திரும்பச் சொல்? என்பது போலக் கேட்க "ஆங்?" என்பாராம் கலைஞர். அந்தப் பத்திரிகையாளர் மீண்டும் கேள்வி கேட்கும் நேரத்தில் பதிலை யோசித்துக் கூறுவாராம். இப்படித் தன் மௌனத்தைக் கூட தனக்குச் சாதகமாக்கத் தெரிந்தவரே தலைவர் எனப்படுவார். 


போலவே, சுஜாதா எழுதியிருப்பார். இலக்கணத்தைக் கற்றுக்கொள்ளுங்கள். பிறகு மீறுங்கள் என்று. எனவே எதையேனும் கட்டுடைக்கவோ அல்லது மீறவோ துணிவதற்கு முன், அவ்விடயத்தை ஏன் எதற்கு என முழுதாக அறிந்து அதை மீற வேண்டும், அல்லது வழமையை மாற்ற வேண்டும். இல்லாவிட்டால் சமீபத்தில் ஒரு மேடையில் ஆனது போல அவர்களே இவர்களே எனத் தேவையில்லாமல் சொல்லப்போவதில்லை என ஒவ்வொருவரின் பெயர் குறிப்பிட்டு அவர்களே சொல்லுவதன் வரலாறு, நோக்கம் அறியாத தற்குறியாகிவிடுவோம்.


ஒரு தலைவன் சொல்லும் சொல் மட்டுமல்ல, அவன் சொல்லாத சொல்லும் அவனைக் குறித்து சொல்வனவே. மயிறு எனச் சொல்லவந்து, வேண்டுமென்றே நிறுத்தி முடி எனக்கூறிவிட்டால் தான் ஒரு கூல்காகாவாகத் தெரிவோம் என நினைக்கலாம், அது தற்குறிகளின் சுதந்திரம். ஆனால் அறிவுசார் மக்கள் அப்படிப்பட்டவர்களைத் தக்க இடத்தில் நிறுத்துவார்கள்.


பலரை வைத்து பஞ்ச் ஸ்க்ரிப்ட் எழுதி பல நாட்கள் உருப்போட்டு, மேடையில் மனப்பாடம் செய்தவனவற்றை யார் வேண்டுமானாலும் ஒப்பிக்கலாம். பதிந்து ஒப்பிக்க ஒரு டேப்ரிக்கார்டர் போதும். ஒரே ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு போதும், சந்தி சிரித்துவிடும்.


ஏன் ஒரு பிறவி அதைக் கண்டு மட்டும் பின்னங்கால் பிடரி பட வெருண்டோடுகிறது எனத் தெரியுமா? கூடிய விரைவில் தெரியவரும். தெறித்து ஓடப்போவதை மக்கள் பார்க்கத்தான் போகிறார்கள்.

Comments

Popular posts from this blog

சுன்னத் கல்யாணம்

சுன்னத் கல்யாணம் ரிட்டன்ஸ்

பென்சில்