Posts

Showing posts from September, 2024

சின்னச்சிறுமி

சிறுமி ______க்கு கதை வரிப்பதில் மிகுந்த ஆர்வம். அவள் கற்பனை வரிகளில் அமைத்த கதையை அவளின் பெற்றோர் இருவரிடமும் காட்டினாள்.  அவளை வாரி அணைத்து உச்சி முகர்ந்து முத்தமிட்ட பெற்றோர், அக்கதையை பள்ளியில் அனைவரிடமும் சென்று காட்டும்படி கூறினர்.  கதையின் முதல் வரி இப்படித் துவங்கியது. காடுகளில் கடும் வறட்சி நிலவ, அருந்த நீர் கிடைக்காத பல விலங்குகள், யானை, கவரிமான், புலி, மாடு, வரிக்குதிரை உள்ளிட்ட எண்ணற்ற விலங்குகள் நீர் தேடி ஊருக்குள் படையெடுத்தன.  சாரிசாரியாக வந்த அந்த விலங்குகளை விரட்டி விட வேண்டுமென மக்கள் வரிந்து கட்டிக்கொண்டு விரைந்தனர்.  அவர்களில் முதல் ஆளாய் நின்று விலங்குகளை விரட்ட நின்றவள் ஈசுவரி. அவளின் இந்த வீர பராக்கிரமத்தை எத்தனை வரிகளில் வடித்தாலும் அடங்காது.  ஆனால் ஒரு கட்டத்தில் விலங்குகளின் கூட்டம் அபரிமிதமாகப் பெருக, அவற்றைப் பார்க்க, அக்கம் பக்கத்து ஊர்களிலிருந்தெல்லாம் வரும் மக்களின் வரிசையானது அதிகமாக, ஒரு பக்கம் விலங்குகள், மறுபக்கம் மனிதத்தலைகளென அந்த இடமே உவரிபோலத் தோன்றியது.  மக்களில் சிலர் இந்த விலங்குகள் படையெடுப்பை வெறுத்தாலும் சிலர் யானைகளின் பின் சென்று அவை போடும

பசித்தபொழுது...

Image
சிறுகுடலைப் பெருங்குடல் கொஞ்சம் கொஞ்சமாக விழுங்குமளவுப் பசி ராஜிவுக்கு.  தலையும் கிறுகிறுத்தது. சுட்டெரிக்கும் வெய்யில் சுட்டெரிக்கையிலேயே கண்கள் இருட்டுவதென்றால் என்னவென்று புரிந்தது. கைகால்கள் தளர்ந்து இருமினால் சுருண்டு விழுந்துவிடும் நிலையில் இருந்தான்.  இதற்குமேலும் தாங்காது எனும் நிலையில் தவழ்ந்தபடி அடுக்களைக்குச் சென்று டிராயரைத் திறந்தான்.  குப்பைகள் குப்பைகள் மேலும் குப்பைகள் என இருக்க, அவற்றுக்கு மத்தியில் ஒரு யம் ரேமன்.  ஜப்பானிய உடனடி ரேமன்.  அதை எப்படி செய்வது எனும் செய்முறையைப் பார்த்தான்.  தோராயமாகத் தெரிந்தது. அல்லது மங்கலாகத் தெரிந்தது. பசி மயக்கம்.  தனது நுண்ணுணர்வையெல்லாம் கூர் தீட்டி. முதலில் என்ன செய்வது என்று பார்த்தான்.  டப்பாவின் வாயைக் கொஞ்சமாகத் திறந்து அதற்குள்ளிருந்த பொடிகளை வெட்டி, படத்தில் சுட்டிக்காட்டியது போலவே உள்ளே தூவினான். பின் அடுத்து என்ன போட்டிருக்கிறது என உற்று நோக்க,  அதில் கொதிக்கும் நீரைக் கொட்ட வேண்டுமெனப் போட்டிருந்ததைக் கண்டபோதுதான் நீரைக் கொதிக்க வைக்கவேண்டுமென்பதுவே உரைத்தது அவனுக்கு. பசி வந்தால் பத்திருபது நூறு நூற்றைம்பதும் பறந்து போகும

உச்சி வகிடெடுத்து...

 "டேய்... ப்ரெக்னண்ட்டா இருக்கப்பயும் ரொமான்ஸ் பண்ணலாமா என்ன?" "ரொமான்ஸ் பண்றதுல என்னடி ப்ரக்னன்சி ப்ரசிடன்சி?" "ரொமான்ஸ்னா அது இல்லடா, ர்ர்ரொம்ம்மான்ஸ்ஸ்ஸ். அதச் சொன்னேன்" "எது சினேகா விஜய போடக்கூப்ட்டத சொல்றியா?" "ச்சைக். அதக்கூட இப்பிடி அசிங்கமாத்தான் சொல்லுவியா?" "சரி எது சினேகா விஜய இடுப்பு பரிவர்த்தனைக்கு அழைத்தார்களே அதைக் கூறுகிறாயா?" "ரோக். அந்த நேரத்துல அப்பிடி பண்றதுலாம் ஓகேவா?" "யாருக்கு எனக்கா? எனக்கு எப்பண்ணாலும் ஓகேதான் ஒனக்கு கெச்சப் ஊத்தறப்பகூட ஃபைன் ஒன்லி" "மூதேவி, அப்பப்போயி எப்பிடி பண்ணுவாங்க? கசகசனு இருக்காது?" "கைல புடிச்சிட்டிருக்க என்ன கசகச?"  "ச்சீய்க்க்க் அன்னீசியா இருக்கும்."  "அப்ப வாய்ல வச்சுக்க."  "ஒத்தா ஒனக்கு அவ்ளோதான் லிமிட்டு." "புக்குக்குள்ள மயில் வச்சா குட்டிபோடுமானு வந்தவ. ஆயகலைகள நம்மட்டயே கத்துட்டு இப்ப நம்மகிட்டயே கம்பு சுத்துற. பேசு பேசு." "ப்ச் சொல்றா டுங்கா ப்ரெக்னன்சி நேரத்துல அப்பிடி பண்ணலாமா?"

பாட்டி வடையை சுட்ட கதை

ஓர் ஊரில் பாட்டி ஒருத்தி வடை சுட்டு விற்று வந்தாள். பாட்டி என்றதும் பாட்டி என நினைத்துக்கொள்ள வேண்டாம். கேயார்விஜயா போல் தகதகவென்றிருந்த பாட்டி. வாழ்ந்து கெட்ட குடும்பம் என்று வாழ்ந்து கெட்ட குடும்பங்களைச் சொல்வார்கள் அல்லவா அந்தக்காலத்தில்? அப்படி ஒரு வாழ்ந்து கெட்ட குடும்பத்திலிருந்து வந்த பாட்டி. இந்தக்காலத்திலெல்லாம் வாழ்ந்து கெட்ட குடும்பத்தைப் பார்த்து, ஒனக்கு ஆவணும்டா என்று சமூகங்கள் சொல்லத் துவங்கிவிட்டதால் வாழ்ந்து கெட்ட குடும்பம் என்ற வழக்கும் வழக்கொழிந்து போய்விட்டது.  எனிவே, அந்த ஊரில் பாட்டி வடை சுட்டு விற்றுக் கொண்டிருந்தாள். இப்படியே போய்க்கொண்டிருக்கும் போது ஒரு நாள்...  அவ்வழியாக பறந்து வந்த காக்கா ஒன்று ஒரு வடையை தூக்கிக்கொண்டு போகலாமென பாட்டியின் தலையையே ஒரு நூறு மீட்டர் உயர வானத்தில் வட்டமடித்துக்கொண்டிருந்தது. சில வெள்ளெழுத்து விஷ்ணுபுர நூலார்வலர்கள் அதைக் கருடனென நினைத்து கருடா கருடா பூப்போடு என இரு கன்னத்திலும் விரல்களால் ஒத்திக்கொண்டிருக்கும் காட்சியை ஈவினிங்குகளில் காண முடியும். அப்படி ஒருநாள் சரி இவ்வளவு வாஞ்சையோடு கேட்கிறார்களே என நினைத்து புலுக்கென்று poop ப

கடவுள் வந்திருந்தார்

  கடவுள் வந்திருந்தார் சராசரிக்கும் சற்று அதிக உயரம் மாநிறமும் சொல்ல முடியாது வான் நிறமும் சொல்ல முடியாது கருமையும் அல்ல அப்படி ஒரு நிறத்தோல். முகத்தில்  எப்போதும் தவழும் சீனியர் என்டிஆர் சிரிப்போ கேயார்விஜயா புன்னகையோ மட்டும் மிஸ்ஸிங் கடவுள் வரும்போது ஓலா ஆட்டோவில் வந்திருப்பார் போல உர்ரென்று இருந்தார் ஒரு நிதியமைச்சர் போல

புத்திசாலி காகம்

Image
அது ஒரு வெயில் காலம். எப்படிப்பட்ட வெயில் காலம் என்றால் எந்த வருஷமும் இல்லாத அளவு இந்த வருஷம் வெயில் கொளுத்துதில்ல கோய்ந்தா என கோய்ந்தாக்கள் சக கோய்ந்தாக்களிடம் உச்சுக்கொட்டிக்கொண்டே வியர்த்துக்கொட்டும் ஒரு கொடும் வெய்யில் காலம்.  அப்போது அங்கே தாகம் கொண்ட காகம் ஒன்று தண்ணீர் தேடி அலைந்தது. அலைந்தது என்றால் நடந்து அலைந்தது என்று பொருளல்ல, பாடித்திரிந்தது. அட, டைப்போ ஆகிவிட்டது, பறந்து திரிந்தது. வெய்யில் காலத்தில் சிறிய குளம் குட்டைகள் எல்லாம் ஏற்கனவே வற்றிப்போய் இருந்தன என்று நினைப்பவர்கள் அபிஷ்டுவாகவே இருக்க முடியும். குளம் குட்டைகள் ஏரிகள் நீர்த்தேக்கங்களெல்லாம் எங்கே இருக்கின்றன வற்றிப்போக? அவை எல்லாம் முதலைகளின் முதலீட்டில் கம்யூனிட்டி கேட்டுகளாகக் கேடுகெட்டுப்போய் ஆச்சே வருடம் முப்பது நாப்பது.  அதனால் காகம் தண்ணீர் தேடி வயல்வெளிகளின் மேல் பறந்தது. அங்கும் தண்ணீர் கிடைக்காதது அல்ல கறுப்புக் காமடி, அங்கு வயல்வெளியே இல்லாததே சாக்லேட் டார்க் காமடி. எனவே அருகில் இருந்த ஒரு ஊருக்குள் சென்றது. ரோடு வழியாகச் சென்றால் டோல் வசூலிப்பார்கள் என்பதால் வானத்திலேயே சொய்ங் எனப் பறந்தது. சற்று சோர

ஒன்னுமில்லை

 என்னாச்சு என்கிறீர்கள்? என்னாச்சு என்று சொன்னால் சரியாகிடுமா? இல்லை சரியாக்கிடுவீர்களா? இதோ கைக்கெட்டும் தூரத்தில் இருந்தும் எடுத்து அருந்தவியலா தண்ணீர்க்குவளையை ஏதேனும் ஒரு  மந்திரக்கரம் எடுத்துக்கொடுத்தால் தேவலை. உங்களால் முடியுமா? முடியாதல்லவா? அப்படியானால் என்னாச்சு எனாதீர்கள்.  உங்கள் கெட்வெல்சூன்கள்,  டேக்கேர்களை உங்களுடனே வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் வார்த்தை வாதைகளைக் கொண்டு வராதீர்கள். இந்த உஷ்ணமிகு நோயைவிட  உடலை அதிகம் கொதிக்கச் செய்வது  உங்கள் வார்த்தைகளே வெறும் வார்த்தைகளே. வேதனைக்கு மருந்திடமுடியா வார்த்தைகளை அனல் தகிப்புக்கு ஒத்தடமிடமுடியா வார்த்தைகளை மயங்கிச் சரியும் தலையைத்  தாங்கிப்பிடிக்கமுடியா வார்த்தைகளை ஒரு வாய்த் தண்ணீர் புகட்டமுடியா வார்த்தைகளை எட்டாகச் சுருட்டி சூத்துக்குள் சொருவிக்கொள்ளுங்கள் உங்களின் அவ்வார்த்தைகளுக்குத் தோதான இடம் அதுவொன்றே.