கடவுள் வந்திருந்தார்
சராசரிக்கும் சற்று அதிக உயரம்
மாநிறமும் சொல்ல முடியாது
வான் நிறமும் சொல்ல முடியாது
கருமையும் அல்ல
அப்படி ஒரு நிறத்தோல்.
முகத்தில்
எப்போதும் தவழும்
சீனியர் என்டிஆர் சிரிப்போ
கேயார்விஜயா புன்னகையோ மட்டும் மிஸ்ஸிங்
கடவுள் வரும்போது
ஓலா ஆட்டோவில் வந்திருப்பார் போல
உர்ரென்று இருந்தார்
ஒரு நிதியமைச்சர் போல
Comments
Post a Comment
Pass a comment here...