சின்னச்சிறுமி

சிறுமி ______க்கு கதை வரிப்பதில் மிகுந்த ஆர்வம். அவள் கற்பனை வரிகளில் அமைத்த கதையை அவளின் பெற்றோர் இருவரிடமும் காட்டினாள். 

அவளை வாரி அணைத்து உச்சி முகர்ந்து முத்தமிட்ட பெற்றோர், அக்கதையை பள்ளியில் அனைவரிடமும் சென்று காட்டும்படி கூறினர். 

கதையின் முதல் வரி இப்படித் துவங்கியது. காடுகளில் கடும் வறட்சி நிலவ, அருந்த நீர் கிடைக்காத பல விலங்குகள், யானை, கவரிமான், புலி, மாடு, வரிக்குதிரை உள்ளிட்ட எண்ணற்ற விலங்குகள் நீர் தேடி ஊருக்குள் படையெடுத்தன. 

சாரிசாரியாக வந்த அந்த விலங்குகளை விரட்டி விட வேண்டுமென மக்கள் வரிந்து கட்டிக்கொண்டு விரைந்தனர். 

அவர்களில் முதல் ஆளாய் நின்று விலங்குகளை விரட்ட நின்றவள் ஈசுவரி. அவளின் இந்த வீர பராக்கிரமத்தை எத்தனை வரிகளில் வடித்தாலும் அடங்காது. 

ஆனால் ஒரு கட்டத்தில் விலங்குகளின் கூட்டம் அபரிமிதமாகப் பெருக, அவற்றைப் பார்க்க, அக்கம் பக்கத்து ஊர்களிலிருந்தெல்லாம் வரும் மக்களின் வரிசையானது அதிகமாக, ஒரு பக்கம் விலங்குகள், மறுபக்கம் மனிதத்தலைகளென அந்த இடமே உவரிபோலத் தோன்றியது. 

மக்களில் சிலர் இந்த விலங்குகள் படையெடுப்பை வெறுத்தாலும் சிலர் யானைகளின் பின் சென்று அவை போடும் விட்டை முதலியவற்றை தங்கள் தலைகளிலும் தேய்த்து, அப்படிச் செய்தால் ஐஸ்வரியம் வரும் எனத் தங்களுக்குள் சொல்லிக்கொண்டனர்.

பக்தி முற்றிய சில பெண்கள் அம்மனை நோக்கி, பரமேஸ்வரி, பிரகேஸ்வரி, பிருந்தாவனேஸ்வரி, மாகேஸ்வரி, புவனேஸ்வரி, அங்காளேஸ்வரி எனத் துவங்கி பாடல்களைப் பாடினர். 

ஆண்கள் தங்கள் பங்குக்கு தாயுமானவரிடம் முறையிட்டு இந்தச் சிரமத்திலிருந்து தங்களை விடுவிக்க வேண்டினர். 

குழந்தைகள் உள்ளவர்கள் தங்கள் புதல்வரிடத்திலும் புதல்வியிடத்திலும் கூட வேண்டிக்கொள்ளும்படி கட்டாயப்படுத்தினர். 

சிலர் கடவுளாலெல்லாம் இது சாத்தியப்படாது என தேவரிடத்தின் வேண்டத்துவங்க, இந்த நேரத்திலும் ஜாதியா என சிலர் ஆத்திரப்பட்டனர்.

வீட்டில் சும்மா உறங்கிக்கொண்டிருந்த சோம்பேறி ஆடவரிடம் ஊருக்கு எதாச்சும் பண்ணு எனக்கூறி அனுப்பி வைத்தனர். 

பகைவரிடத்திலும் அன்பு செய்ய வேண்டும் எனக் கூறும் சாத்விக நபர்கள் கூட அன்று மானந்தான வேட்டி சட்ட மத்ததெல்லாம் வாழ மட்ட வரிப்புலிதான் தோற்பதில்லையடா என கத்தி கபடாக்களை எடுத்துக்கொண்டு புறப்பட்டனர். 

இதைக் கண்டு விலங்குகள் மிரளத் துவங்கி, நாலாப்பக்கமும் சிதறி ஓட, பயந்து போன பலர் முட்டுச்சுவரில் ஏறித் தப்பிக்கப்பார்த்தனர். 

அரண்ட விலங்குகளுக்கு, நல்லவரிடம் நல்லதாகவும் கெட்டவரிடம் வேறு விதமாகவும் நடந்து கொள்ள வேண்டுமென்ற அறிவா உண்டு?

அவைகள் வெருண்டு ஓடும் வழியில் எதிர்வரக் கண்டவரிடமெல்லாம் பாய்ந்தது.

நமக்கு இந்த தறிகெட்டோடும் விலங்குகளை அடக்கும் பவரில்லை என அவர்கள் உணர்ந்தபின், கிடைக்கும் சந்து பொந்துகளிலெல்லாம் ஓடி ஒளிந்தனர். 

இப்படிப் போன கதையைத் தன் வகுப்பிலுள்ளோரிடம் விவரித்தாள் சிறுமி ________. 

Comments

Popular posts from this blog

சுன்னத் கல்யாணம்

சுன்னத் கல்யாணம் ரிட்டன்ஸ்

இரைவி