புத்திசாலி காகம்

அது ஒரு வெயில் காலம். எப்படிப்பட்ட வெயில் காலம் என்றால் எந்த வருஷமும் இல்லாத அளவு இந்த வருஷம் வெயில் கொளுத்துதில்ல கோய்ந்தா என கோய்ந்தாக்கள் சக கோய்ந்தாக்களிடம் உச்சுக்கொட்டிக்கொண்டே வியர்த்துக்கொட்டும் ஒரு கொடும் வெய்யில் காலம். 

அப்போது அங்கே தாகம் கொண்ட காகம் ஒன்று தண்ணீர் தேடி அலைந்தது. அலைந்தது என்றால் நடந்து அலைந்தது என்று பொருளல்ல, பாடித்திரிந்தது. அட, டைப்போ ஆகிவிட்டது, பறந்து திரிந்தது.

வெய்யில் காலத்தில் சிறிய குளம் குட்டைகள் எல்லாம் ஏற்கனவே வற்றிப்போய் இருந்தன என்று நினைப்பவர்கள் அபிஷ்டுவாகவே இருக்க முடியும். குளம் குட்டைகள் ஏரிகள் நீர்த்தேக்கங்களெல்லாம் எங்கே இருக்கின்றன வற்றிப்போக? அவை எல்லாம் முதலைகளின் முதலீட்டில் கம்யூனிட்டி கேட்டுகளாகக் கேடுகெட்டுப்போய் ஆச்சே வருடம் முப்பது நாப்பது. 

அதனால் காகம் தண்ணீர் தேடி வயல்வெளிகளின் மேல் பறந்தது. அங்கும் தண்ணீர் கிடைக்காதது அல்ல கறுப்புக் காமடி, அங்கு வயல்வெளியே இல்லாததே சாக்லேட் டார்க் காமடி. எனவே அருகில் இருந்த ஒரு ஊருக்குள் சென்றது. ரோடு வழியாகச் சென்றால் டோல் வசூலிப்பார்கள் என்பதால் வானத்திலேயே சொய்ங் எனப் பறந்தது. சற்று சோர்வாகவே பறந்தது எனவும் லாம். 

நீண்ட நேரத்திற்குப் பிறகு, ஒரு பண்ணையில் மரத்தின் அடியில் பானை ஒன்று இருப்பதை காகம் பார்த்தது. உடனே காகம் கீழ்நோக்கிப் பறந்து மரத்தில் உட்கார்ந்தது. பின் வேகமாக சென்று பானையின் உள்ளே எட்டிப் பார்த்தது. அதில் ஒய்ட் கலரில் ஒரு திரவம் இருந்தது. பானையில் கள்ளு என்று எழுதப்பட்டிருந்தது. அதில் செண்டர் லெட்டர் ள் மட்டும் இன்வர்ட்டடாக இருந்தது. கள் உள்ளிட்ட மதுக்கள் குடிப்பது ஹராம் என்பதால் வேறு பானை தேடிப் பறந்தது.

சொல்லி வைத்தாற்போல் அருகே மற்றொரு பானை. அதில் சிறிதளவு தண்ணீர் மட்டுமே இருந்தது. மீதி இருந்த தண்ணீர் கள்ளுக்குக் கலக்க பயன்படுத்தியிருக்கக்கூடும் (கள்ளிலும் கலப்படம் பாலிலும் கலப்படம் கள்ளிப்பால் மட்டுமே துல்லியம்).

காகம் பானையின் விளிம்பில் உட்கார்ந்து கொண்டு உடம்பை வளைத்து தண்ணீர் குடிக்க முயன்றது. தண்ணீரை காகத்தால் எட்ட முடியவில்லை. பின் பானையை தள்ளி சாய்க்க முயன்றது காகம். பானை மிகவும் கனமாக இருந்ததால் தள்ள முடியவில்லை.

நேரம் ஆக ஆக தாகம் கூடிக் கொண்டே போனது. என்ன செய்வது என்று யோசித்தது காகம். பானையின் அருகில் சிறிய பல்ப்பக்குச்சிகள் கிடப்பதைப் பார்த்தது.  அதனருகிலேயே ஒரு சிலேட்டும். 

அதில்,




என ஒரு கணக்கும் எழுதப்பட்டிருந்தது. 

உடனே அதற்கு ஒரு திட்டம் தோன்றியது.

பலப்பக்குச்சிகளை ஒவ்வொன்றாக அலகால் கொத்தி தூக்கி சிலேட்டில் எழுதத்துவங்கியது 
காக்கா.


என்ன ஆச்சரியம், காக்கா கணக்கு போடப்போட தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக மேலே வந்தது. விட்டதா காகம், மேலும் அந்த ப்ராப்லத்தை ஆர்வமுடன் தொடர்ந்து சால்வ் செய்தது. 



இப்போது கொஞ்சம் கொஞ்சமாக அன்றி எக்ஸ்பொனன்ஷியலாக தண்ணீர் மேலே வரத் துவங்கியது. சற்று உள்ளே மண்டையை விட்டால் நீர் எட்டிவிடும் உயரத்திற்கு வந்துவிட்டது. தற்போது தாகமா காகமா கணிதமா என திரீ பாடி ப்ராப்லம் தோன்றினாலும், ஆனது ஆச்சு அஞ்சு நிமிசம் என கணிதத்தை முடித்துவிட்டே குடித்துவிடுவோம் என்ற முடிவெடுத்த காகம் மேலும் சம்மை செம்மையாகத் தொடர்ந்தது. சிலேட்டுக்குச்சிகள் தீரத் தீர பிராப்லமும் தீர்ந்துகொண்டே வர, நீரும் ஊர்ந்துகொண்டே இருந்தது.




சீக்கிரமாகவே தண்ணீர் காகம் குடிக்கும் அளவுக்கு மேலே வந்தது. தன் தாகம் தீர காகம் தண்ணீர் குடித்தது. மகிழ்ச்சியுடன் அங்கிருந்து பறந்து சென்றது. 

என்னடா சம்மு முடிவதற்குள் காகம் பறந்துவிட்டதே என எண்ண வேண்டாம், ஆல்ரெடி சம்சம் போல தண்ணீர் பானையில் பெருக்கெடுத்துவிட்டதால் வேறு வழியின்றி தண்ணீர் குடித்து பறந்தது காகம். காக்காவுக்கே அத்தனை கணித்திறன் இருக்கையில் கதை படிக்கும் நமக்கு இருக்காதா? அந்த கடைசி ஸ்டெப்பைப் போட்டு கணிதத்தையும் கதையையும் ஃபினிஷ் செய்க சகாக்காக்களே. 


Comments