ஒன்னுமில்லை

 என்னாச்சு என்கிறீர்கள்?


என்னாச்சு என்று சொன்னால் சரியாகிடுமா?


இல்லை சரியாக்கிடுவீர்களா?


இதோ கைக்கெட்டும் தூரத்தில் இருந்தும்


எடுத்து அருந்தவியலா


தண்ணீர்க்குவளையை ஏதேனும் ஒரு 


மந்திரக்கரம் எடுத்துக்கொடுத்தால் தேவலை.


உங்களால் முடியுமா?


முடியாதல்லவா?


அப்படியானால் என்னாச்சு எனாதீர்கள். 


உங்கள் கெட்வெல்சூன்கள், 


டேக்கேர்களை


உங்களுடனே வைத்துக்கொள்ளுங்கள்.


உங்கள் வார்த்தை வாதைகளைக் கொண்டு வராதீர்கள்.


இந்த உஷ்ணமிகு நோயைவிட 


உடலை அதிகம் கொதிக்கச் செய்வது 


உங்கள் வார்த்தைகளே


வெறும் வார்த்தைகளே.


வேதனைக்கு மருந்திடமுடியா வார்த்தைகளை


அனல் தகிப்புக்கு ஒத்தடமிடமுடியா வார்த்தைகளை


மயங்கிச் சரியும் தலையைத் 


தாங்கிப்பிடிக்கமுடியா வார்த்தைகளை


ஒரு வாய்த் தண்ணீர் புகட்டமுடியா வார்த்தைகளை


எட்டாகச் சுருட்டி சூத்துக்குள் சொருவிக்கொள்ளுங்கள்


உங்களின்


அவ்வார்த்தைகளுக்குத் தோதான இடம் அதுவொன்றே.


Comments