ஓர் ஊரில் பாட்டி ஒருத்தி வடை சுட்டு விற்று வந்தாள். பாட்டி என்றதும் பாட்டி என நினைத்துக்கொள்ள வேண்டாம். கேயார்விஜயா போல் தகதகவென்றிருந்த பாட்டி. வாழ்ந்து கெட்ட குடும்பம் என்று வாழ்ந்து கெட்ட குடும்பங்களைச் சொல்வார்கள் அல்லவா அந்தக்காலத்தில்? அப்படி ஒரு வாழ்ந்து கெட்ட குடும்பத்திலிருந்து வந்த பாட்டி. இந்தக்காலத்திலெல்லாம் வாழ்ந்து கெட்ட குடும்பத்தைப் பார்த்து, ஒனக்கு ஆவணும்டா என்று சமூகங்கள் சொல்லத் துவங்கிவிட்டதால் வாழ்ந்து கெட்ட குடும்பம் என்ற வழக்கும் வழக்கொழிந்து போய்விட்டது.
எனிவே, அந்த ஊரில் பாட்டி வடை சுட்டு விற்றுக் கொண்டிருந்தாள். இப்படியே போய்க்கொண்டிருக்கும் போது ஒரு நாள்...
அவ்வழியாக பறந்து வந்த காக்கா ஒன்று ஒரு வடையை தூக்கிக்கொண்டு போகலாமென பாட்டியின் தலையையே ஒரு நூறு மீட்டர் உயர வானத்தில் வட்டமடித்துக்கொண்டிருந்தது. சில வெள்ளெழுத்து விஷ்ணுபுர நூலார்வலர்கள் அதைக் கருடனென நினைத்து கருடா கருடா பூப்போடு என இரு கன்னத்திலும் விரல்களால் ஒத்திக்கொண்டிருக்கும் காட்சியை ஈவினிங்குகளில் காண முடியும். அப்படி ஒருநாள் சரி இவ்வளவு வாஞ்சையோடு கேட்கிறார்களே என நினைத்து புலுக்கென்று poop போட்டே விட்டது காக்கா. தன்மேல் பொளிச்சென்று விழுந்ததும்தான் அது காக்கா எச்சமென்று அறிந்து அதுவரை கருடா என பக்ஹ்தியோடு அழைத்த பெரியவர்கள் கண்டாரோலி காக்கா என கருவி நகர்ந்தனர். அன்றிலிருந்து அவர்கள் காக்கா go-around போனால் கண்டுகொள்வதில்லை. கரம்கூப்பித் தொழுவதுமில்லை.
பாட்டியின் வடை மீது கண்கொண்ட காக்கா இப்படி சுற்றிக்கொண்டிருந்ததா? ஒன்டே, அது பறந்து போய் மரக்கிளை ஒன்றில் உட்கார்ந்து கொண்டது என்று சொல்வேன் என்றுதானே நினைத்தீர்கள் அதுதான் கிடையாது. வடை என்பதே ஒரு வகையில் ஈவினிங் ஸ்னாக்கு. அதை மரத்தடியின் கீழ் வைத்தால் விளக்கு யார் பிடிக்க? தனியாய் பேட்டரி விளக்கு வைத்தால் அது ரன்னிங் காஸ்ட்டைக் கூட்டும் என்பதால் ஒரு தெருவிளக்கின் அடியில் அமர்ந்து வடை விற்றுக் கொண்டிருந்தாள் பாட்டி. ஆகவே அந்த காக்காவானது ஒரு எலக்ட்ரிக் லைனில் சென்று அமர்ந்தது.
பொதுவாக அலார்ட்டாக இருக்கும் பாட்டி சற்று அசடாக இருந்த நேரமாய்ப் பார்த்து பாட்டியின் வடையைக் கவ்விக்கொண்டு பறந்தது. பறந்த காக்கை வடையை உண்ணலாம் என ஒரு மரத்தில் அமர்ந்தது.
வெட்னரி டாக்டர் ஒருவர் உடம்பைக் குறைக்கச் சொன்னதால் தினமும் உஸ்க்கு உஸ்க்கு என வாக்கிங் போகும் நரி ஒன்று அந்த வழியாக வந்தது. என்னதான் பிசிக்கல் கான்சியசாக இருந்தாலும் நரிக்கு பாட்டியின் வடையின் மீது எப்போதும் இரு கண். ஒரு நாளில்லை ஒருநாள் வடையைக் கவ்வவேண்டும் என்ற முஸ்தீபோடுதான் சலவாயொழுகச் செல்லும்.
இப்படி இருக்கும் நிலையில்தான் வடையோடு காக்காவை பார்த்துவிட்டது; எத்தனை நாள் காத்திருந்த வடை. நன்கு புடைத்த அவ்வடையைத் தான் எடுத்துக்கொள்ள ஒரு தந்திரம் செய்தது. காக்காவைப் பார்த்து காக்கா, நீ மிகவும் அழகாக இருக்கிறாய். உனக்கு குரலும் கூட அழகாக இருக்கக்கூடும், ஒரு பாட்டுப் பாடு என்றது. சோமீக்களில் கிடைக்கும் ஃபேக் பாராட்டுகளுக்கும் அட்டென்சன்களுக்கும் மயங்கும் காக்கா, நரியின் ஊளை வேலை தெரியாமல், தான் பெரிய பாடகிதான்போல என நம்பிக்கொண்டு, தன் வாயைத் திறந்து "நீ பேச லைட்டா ஆசை கூட வாசம் வீசும் காக்கா தேட" என்று பாட்டுப் பாடவே, வாயிலிருந்த வடை கீழே விழுந்துவிட்டது. Gravity.
கீழே விழுந்த வடையை நரி கவ்வி எடுத்துக்கொண்டு விரைந்து ஓடிப்போனது. அப்போது அங்கு வந்த குடந்தை பார்சல்ஸ் எனும் லாரி ஒன்று நரியை ரோட்டோடு தேய்த்துக் கொன்றது. நரி வாயிலிருந்த வடையும் லாரி டயரில் சிக்கிச் சிதைந்தது. லாரியிலிருந்து அதன் ஓனர் இறங்கி, த்தா யாரு வடைக்கி யார்ரா ஆசப்படுறது என கர்ஜிக்க, லாரிக்குள் பார்த்தால் பார்செல் செய்யப்பட்ட பாட்டியின் வடை.
Comments
Post a Comment
Pass a comment here...