Posts

கடன்

  பரந்து விரிந்த அந்தக் களம் கடும் போர்க்களமாகக் காட்சியளித்தது. காரணம் அங்கு போர் நடந்திருந்தது. ஒரு போரை நடந்தது என்றா சொல்வது? போர் என்பது நடப்பதா? அல்லது நிகழ்வதா? அது மனிதக்குலம் தத்தமையே இகழ்வதன்றோ? எங்கு நோக்கினாலும் குருதி. துண்டுகளாக்கப்பட்ட கரங்கள், வெட்டி வீழ்த்தப்பட்டதால் அரையான கால்கள். உருவப்பட்ட குடல்கள், முனகிக்கொண்டிருக்கும் குற்றுயிர்கள். அது சாதாரண களமல்ல, ரணகளம். ஆங்காங்கே சில சிப்பாய்கள் தத்தமது இறுதி மூச்சை விட்டுக்கொண்டிருந்தனர். ஆனால் உச்ச வலியிலும் இறக்கவியலாத பலர், ஒரே மூச்சாகத் தங்கள் உயிரும் போய்விட்டால்தான் என்ன என அரற்றிக்கொண்டிருந்தனர். தண்ணீர் தண்ணீர் என கேவிக்கேவி அழும் குரல்கள் அந்தப் பிரதேசமெங்கும் கேட்டன. அத்தனை பாலைக் களத்தில் எதைக் கொண்டு மோப்பம் பிடித்தனவோ, அதுகாறும் எங்கு ஒளிந்திருந்தனவோ தெரியவில்லை, ஓநாய்களும் நரிகளும் இன்னும் சில காட்டுவிலங்குகளும் குருதி தோய்ந்த சிப்பாய்களின் எஞ்சியிருக்கும் உடல்களைக் குதறிக்கொண்டிருந்தன. அத்தனைப் பெரிய போர் புரிந்து வீழ்ந்து கிடந்த மனித உடல்களை எந்தச் சண்டையும் சச்சரவுமின்றி தங்களுக்குள் பகிர்ந்துண்டு கொண்டிர

Room ஈ

When the soul  lies down in that grass  the world is too full to talk about. Out beyond ideas of  wrongdoing  and  rightdoing  there is a field.  Where all the drivers cancel the uber request immediately  and in the last minute. So let's not meet there. Instead moodify of the bochu and meetify in the homeu.

போகுமிடம்

ஒரு உறவின்முறை தாத்தா. எதோ தொழில் விசயமா கடன் கேட்டுருந்தார். அவருக்கு ஒரு வகையில நன்றிக்கடன் பட்டுருக்கோம்னு எப்பவும் தோணும். தங்கச்சி கல்யாணத்துக்கு டேடி வரல. அவர் ஸ்தானத்துலருந்து சாட்சி கையெழுத்து போட கல்யாண மேடைல கேட்டப்ப யார்ட்ட கேக்கறதுன்னு அப்ப இருந்த பரபரப்புல தெரியல. அப்போதைக்கு கல்யாணத்துக்கு வந்ததுல இவர்தான் குடும்பத்துல மூத்த வயசானவரா இருந்தார். கேட்டதும் நாம்போடுறேன்னு போட்டார். அதுக்கு பதில் மரியாதைய எப்படியாச்சும் செய்யணும்னு நெடுநாளா நெனச்சிட்டிருந்தேன். ஓரிரு வருசம் கழிச்சு அவர் கடனா கேட்டப்ப எதுவும் கேட்காம அவர் கேட்டத குடுத்ததும் தான் நம்ம மனசு கொஞ்சம் ஆறுதல் பட்டுச்சு. கேட்டவர் கடனாத்தான் கேட்டார். ஆறு மாசத்துல குடுத்துடுறேன்னு சொன்னார். நானும் கண்டுக்கல. ஆறு மாசம் ஒரு வருசமாச்சு. ஒரு வருசம் ரெண்டாச்சு. அவர எங்கயாச்சும் பாக்கறப்பலாம் கொஞ்ச நாள்ல குடுத்துடுறேன்னு சொல்லுவார். பரவால்ல இருக்கட்டும் விடுங்கனு சொன்னாலும் கேக்க மாட்டார். சரி எப்ப முடியுதோ அப்ப குடுங்கனு விட்டாச்சு. நடூல உடல் உபாதை காரணமா வேலைய விட்டு ஒரு ஆபரேசன் முடிஞ்சு உடல் தேறினதும் ஒரு வேலைய தேடிட்டிர

To life, to life, l'chaim

அலுவலகத்தில் நம்  உழைப்பைத் திருடுபவனை அடே தேவுடியாப்பயலே எனக் கேட்க முடிவதில்லை குனிந்து நிமிர்ந்து கொங்கிடைக்கோடு காட்டி மேனேஜரிடம் போட்டுக் கொடுப்பவளை அடி அவுசாரியே என இழுத்து ஓர் அறை வைக்க முடிவதில்லை நினைத்த நாளில் நினைத்த நேரத்தில் இன்று எனக்கு ஓய்வு என அறிவிக்க இயல்வதில்லை பைசாப் பெறாத சோசியல் மீடியாச் சண்டைகளில்  பங்கெடுத்து நேரம் போக்கும் சொகுசு கிடைப்பதில்லை படித்து முடித்து வேலைக்குச் சென்று கிரிடிட் ஆனதும்  சொற்ப நேரம் தங்கும் கைநிறையச் சம்பாதிக்கும் வாழ்க்கையில் கிடைத்த ஒரே சுதந்திரம் அவ்வப்போது வாங்கிச் சாப்பிடும் ஆல்பகடாவும் அர்த்த ராத்திரியில்  ரெண்டு ஸ்பூன் வாயிலள்ளிப்போடும்  பால் பவுடரும் தான். 

அதான?

FADE IN   Morning ரதீஷ் கையில் க்ரீட்டிங் கார்ட் . ( ஃபோகஸ் கார்டில் இருக்கவேண்டும் . பின்னே அஜானா நடந்து வருவது அவுட் ஆப் போகசில் மங்கலாக ஃப்ரேமில் வர வேண்டும் ) பிறகு ஃபோகஸ் அஜானாவுக்கு மாற , அஜானா கொஞ்சம் குழப்பம் & “ அய்யோ மறுபடியும் இவனா ” லுக்கை வெளிப்படுத்தி மெதுவாக நடந்து வர வேண்டும் . ———— ரதீஷ் விறுவிறுவென அவளிடம் நடந்து கார்டை நீட்ட வேண்டும் . ரதீஷ் முகத்துக்கு க்ளோசப் - எதிர்பார்ப்பு & ஏத்துக்கோயேன் லுக் . ———— வெடுக்கென அதைப்பிடுங்கி கிழித்துப்போட்டுவிட்டு நடந்துவிடுகிறாள் . FADE OUT ——————————————————— FADE IN Morning பேப்பரில் பெரிய கவிதை ஒன்றை எழுதி அஜானா வரும் வழியில் ( அதே லொகேஷன் ) தயாராய் வைத்திருக்கிறான் ( பேப்பரின் மேல் பக்திக்காக மஞ்சள் குங்குமம் . பிள்ளையார் சுழி , சிலுவை , பிறையோடு கவிதை ஆரம்பிக்கிறது .) பேப்பரை மடிக்க , அஜானா தூரத்தில் வருவது ஃப்ரேமில் வருகிறது . ரதீஷைக்கண்டதும் கொஞ்சம் கோபத்தோடு சற்றே வேகமாக நடந்து வருகிறாள் .   அவளிடம் இவன் கவிதையை நீட்ட , வாங்கிப்படித்துப்பார்