How do you pee? நட்ட நடு டேட்டிங்கின் நடுவில் இப்படி ஒரு ரேண்டக் கேள்வி கேட்டாள் தட் நண்பி.
சரிநிகர் சமானமாகச் சென்று கொண்டிருந்த டேட்டிங்கில் சர்ர்ர்ரக்கென்று வந்து விழுந்த அந்தக் கேள்வி புரியவில்லை என்பதை விட அதை எப்படி எதிர்கொள்வதெனத் தெரியவில்லை.
What? Come again? என்றேன்.
ஹௌ டு யூ ப்பீ? அழுந்தக் கேட்டாள்.
ஒரு வேளை ஐரோப்பியர்கள் ஃப்லிர்ட் செய்வது இப்படித்தான் போல, நாம் ஆற்றைக்கண்டமா லேக் ஏரியாவைக் கண்டமா என மைண்டில் ஓட, சரி பதிலுக்கு நாமும் ஒரு கணையைக் கண்ணை மூடி வீசுவோம், இது ஃபிலிர்ட்டிங்காக இருந்தால் அதுவே இன்றிரவு பஸ்ட்டு டேட் கோய்ட்டசாக அமைய வாய்ப்புண்டு எனக் கருதி, யு வான் மீ டு டெல், ஆர் யு வான் மீ டூ ஷோ? என்றேன்.
முன் பல் இரண்டும் அதனதன் சைடு துணைப் பற்கள் இர்ரிரண்டுமாகத் தெரிய ஸில்லி எனக்கூறிச் சிரித்தாள்.
(முயல் போல சற்றே நீண்டு அழகாயிருக்கும் அவ்விரு முன் பற்கள். You have a beautiful teeth like bugs bunny எனக் காம்ப்லிமெண்ட் கொடுத்து கட்டுக்கள் வாங்கியது வேறு கதை. அது வேறு சந்தர்ப்பத்தில்.)
(எப்போதெல்லாம் ஸெல்லமாகக் கோபம் கொஞ்ஸ வேண்டுமோ அப்போதெல்லாம் ஸில்லி என்பாள். மத்தியான வெய்யில் மரினாவில் கோன் ஐஸைப் போல உருகும் ஸெவிப்பறை, அந்த ஸில்லியைக் கேட்கையிலெல்லாம்.)
வென் யு ஆஸ்க் சம்திங் லைக் திஸ் அவுட்டாப்த ப்லூ, வாட் கன் ஐ சே? ஐ டோண்ட் கெட் தி காண்டெக்ஸ்ட் அட் ஆல், என்றேன். (கான்வர்சேசன் முழுதும் ஆங்கிலத்தில் தானென்றாலும் வியுவர்ஸ் அண்டஸ்டேண்டிங்குக்காக தமிழில் கொடுக்கப்பட்டுள்ளது. யு கேன் தேங்க் மீ லேட்டர்.)
ஹௌ டு யூ ப்பீ? சிட்டிங் ஆர் வைல் ஸ்டாண்டிங்? என்றாள்.
அதைக்கேட்டதும் ஒரு மலரும் துணைக்கதைக்கு மனது சென்றது.
அப்போது பெங்களூரிலே சம்பளத்துக்கு கணினியைத் தட்டிக்கொண்டிருந்த சமயம். டீமில் ஒரு டில்லிக்காரன் இருந்தான். உயரமாய் வெள்ளையாய் ஸ்பெசல்26ல் ஒரு நடிகன் வருவானே அவனைப்போல. ஒருவாறு எங்கள் இருவருக்கும் சிங்க் ஆகி எப்போதும் அவனோடுதான் சுற்றுவது. அப்போது நான் டெவலப்பராக வாழ்ந்து கொண்டிருந்த காலம். டெவலப்மண்ட், டெஸ்டிங், சர்வர் (அப்போதெல்லாம் டெவ் ஆப்ஸ் எனும் மதம் இல்லை.), டிபி என எல்லா டீமும் ஒரே ஃப்லோரில் இருக்கும்.
நேராக எங்கள் டெஸ்குக்கே வந்து, நாங்கள் வடித்துக்கொட்டும் ரிலீசுகளை நாக்கு மேல் பல்லைப்போட்டு கரித்துக்கொட்டும்கள் டெஸ்டிங் இருந்த ஜடைகள். தோள் நீக்கிய ஆப்பிள் கலர் முதல் கனக்கச்சிதமான அந்த ஆப்பிள்களைப் பாக்கெட்டில் வைத்திருப்பது போன்றது வரை எல்லா வகையிலும் டெஸ்டிங் டீமுக்குஜ் ஜடைகளைத் தேர்ந்தெடுத்து பொறுக்கி வைத்திருந்தார்கள் பெருசுகள்.
அவற்றில் இரண்டு இரட்டைக்குழல் துப்பாக்கிகள் வேறு இருந்தது. எப்போதும் ஜோடி போட்டே செல்லும். இரட்டையரல்ல, இருவரும் டிஸ்டண்ட் ரிலேடிவிட்டிகள், ஆனால் பார்க்க இரட்டையர் போலவே இருக்கும்.
இப்போது டைமெடுத்து சிந்தித்துப் பார்த்தால் ஒருத்தி அச்சு அசல் கத்ரினா கைஃப் போலவே இருப்பாள். நிறத்திலும் ஜாடையிலும். நல்ல செம்ம உயரம். சைஸ் ஜீரோ போல. மாடலிங்குக்கெல்லாம் போகவே வேண்டாம். அவனுகளே வந்து அழைத்துச் செல்வாங்கள். அப்படி ஒரு ஓங்கு தாங்கு. இன்னொருத்தியும் அதே போன்ற உயரம், ஒல்லி, கத்ரினாவின் கலர் ஜெராக்ஸ். அவளின் சாயல் யாரோ ஒருவரைப் போன்ற ஜாடை. அது தொண்டை வரை வருகிறது ஆனால் வாய்க்கு வர மறுக்கிறது. அந்த ஜாடையில்லா ஜடை ஒருக்கா பேசுகையில் நீங்கல்லாம் எப்பிடி இவ்ளோ வெள்ளையாருக்கீங்க, நெழல் கூட ஒளிவீசும் போலயே என எதோ ஒரு வேகத்தில் சொல்லி விட்டேன்.
கம் வித் மி என அழைத்துச்சென்று தட் கத் ரினா கைஃபிடம் விட்டு இவன் நம்மளப் பாத்து என்ன சொல்றாம்பாரு என நாம் சொன்னதை மீண்டும் சொல்ல வைத்து தங்களுக்குள் கிக்கிலி பிக்கிலி என இந்தியோ சிந்தியோ அதில் சிரித்துக்கொண்டதுகள். வாயையும் காஜையும் கட்டுப்படுத்தடா பகலவா என நமக்கு நாமே சொல்லிக்கொண்டோம் அன்று.
அந்த கலர்க்கோழிகள் மட்டுமல்ல, மீதி இருந்த க்யூஏ டீமும் அப்படித்தான். ஆள் பார்க்கும் வரை அள்ளிக்கலாம் போலத் தோன்றும். கொஞ்சமே கொஞ்சம் வாயைத் திறந்தால் போதும் அப்படியே நாலு அப்பலாம் எனத் தோன்ற வைக்கும் இர்ரிட்டேட்டிங் பிறவிகள். சென்ஸ்லசாகப் பேசுவது என்பது ஒரு புறம், அதையே தங்களுக்கெனச் சிலபல அனுகூல அவைலபிலிட்டி உண்டென்பதற்காக அதிகாரமாய்ப் பேசுவர். அதுதான் சுரீரென்று வரும். இத்தனைக்கும் அவை அனைத்தும் முட்டாப்பீசுகள்.
சொல்லப்போனால் டெவெலப்பரிலிருந்து நாம் டெஸ்டிங்குக்கு மாறியதே அவர்கள் பார்த்த வேலையைப் பார்த்துத்தான். காக்காய் ஓட்டுவது இத்தனை எளிதா, இதைச் செய்து எளிதாய்ச் சம்பளம் வாங்குவதை விடுத்து எதற்கு செர்வ்ல்டெட் ஜேஎஸ்பி என மண்டையை அக்கப்போரிடனும் எனட் டெஸ்டிங்குக்குப் பிற்பாடு மாறி விட்டனம்.
நாம் ரிலீஸ் அனுப்ப, எதோ வட்டிக்காசு திரும்பச் செலுத்தாதது போல க்யூபிக்கிலுக்கு வந்து அது சரியில்லை இது சரியில்லை என நொட்டம் சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள். அவர்களிடம் சிலபல காரணங்களுக்காக தந்திர அமைதி காத்துவிடுவேன், ஆனால் அதை வெண்ட்ட வேண்டுமல்லவா, அதை டில்லிக்காரனிடம் வந்து கொட்டினால் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு leave it man, they can't stand and pee என்பான்.
பெண்களைக் கொண்டு அவன் வைத்திருந்த ஒரே மற்றும் ஒட்டு மொத்த மதிப்பீடும் அளவீடும் இதுதான். தே காண்ட் ஸ்டாண்ட் அண்ட் பீ.
அவனின் இந்த ரெஸ்பான்ஸ் இல்லாஜிக்கலாகத் தோன்றினாலும் அப்போதைக்கு ஆங்ரியான மனதை ஆற்றுப்படுத்தியதால் அதை ஏற்றுக்கொண்டு கொப்பளித்த கோபத்தைத் துப்பிவிடுவது.
இப்போது இந்த ஐரோப்பியை கரண்ட் அஃபயரிலே கேட்ட "ஹௌ டு யூ பீ" இவை அத்தனையையும் கிண்டி விட்டது.
வாட் ஹாப்பண்ட், யு ஸோண்ட் ஔட்? என்றவளிடம் நோ நத்திங் எனக்கூறி,
ஐ கேன் எக்ஸ்ப்லைன் யூ, பட் இட்டிஸ் கொஞ்சம் லிட்டில் பிட் காம்ப்லிகேட்டட் என்றேன்.
வாட்ஸ்தட் என்றாள்.
யு சீ, ஐ வாஸ் ப்ராட்டப் இன் அ முஸ்லிம் ஹௌஸ் ஹோல்ட். ஐ’வ் பீன் டாட் அபௌட் ஹௌ டு ஈட், வாட் டு ஈட், ஹௌ டு வாஷ் அண்ட் ஈவன் ஹௌ டு பீ. டூ ஆன்ஸர் யுவர் கொஷின், ஐ ஆல்வேய்ஸ் சிட் அண்ட் பீ. பட் தேரார் மல்ட்டிபில் ரீசன்ஸ் டூ இட் என்றேன்.
வாட்டார் தே என்றாள்.
ஃபர்ஸ்ட் அண்ட் ஃபோர்மோஸ்ட், ஆஃப்டர் பீயிங், வீ ஹாவ் டு க்லீன் இட் ப்ராபர்லி. அதர்வைஸ் இட்ஸ சின். வாட்டர் இஸ் ப்ரிஸ்க்ரைப்ட் டு யூஸ். பட் இஃப் தேரீஸ் நோ வாட்டர், தென் வி கேன் க்லீன் இட் பை அதர் மீன்ஸ், லைக் டிஷூஸ் அண்ட் ஸ்டஃப். அல்டிமேட்லி தேர் ஷுட்ன்'ட் பி எனி லெஃப்ட்டோவர்ஸ். இட் ஹாஸ் டு பி க்லீண்ட் கம்ப்லீட்லி.
இன் மேல் யுரினல்ஸ், வீ கேன் ஒன்லி ஸ்டாண்ட் அண்ட் பீ, அண்ட் இஃப் யூ ஸ்டாண்ட் அண்ட் ப்பீ, வீ கேனாட் ப்பீ வெல், தேர் வில் பி ஸ்டில் சம் ட்ராப்ஸ் லெப்ட் ஔட் அண்ட் வெரி இம்பார்டண்ட்லி தேர் வோண்ட் பி எனிதிங் அவைலபில் டு க்லீன்.
பட் இன் லவேட்டரி, யு கேன் சிட் அண்ட் பீ சோ தட் யு எம்ப்டி யுவர் ப்லாடர் கம்ப்லீட்லி, தேர் வோண்ட் பி எனி லெஃப்ட்டோவர்ஸ் ஆன் த டிப் ஆஃப் த ஃபீனிக்ஸ் பறவை அண்ட் மோர் இம்பார்டண்ட்லி, தேர் வில் பி டாய்லட் ரோல் ஆஸ் வெல், சோ யூ கேன் வைப்பிட் ஔட். ஐ ஆல்சொ கேரி அ வெட் டிஷூ வித் மீ, இஃப் டாய்லட் ரோல் இஸ் நாட் தேர் தென் ஐ வில் யூஸ் மை வெட் டிஷூ என்றேன்.
தட்ச நைஸ் ஹேபிட் என்றாள்.
சரி திடுதிப்புனு ஏன் இந்தக் கேள்வியைக் கேட்ட என ஆங்கிலத்தில் கேட்டேன்.
ஐ லவ் முஸ்லிம்ஸ் ஃபார் திஸ் எக்சாக்ட் ரீசன் என்றாள்.
எது, உக்காந்துட்டு உச்சா போறதா?
இல்ல, சுத்தம் பண்றது.
அப்பிடியா? இம்ப்ரஸ் ஆகற அளவு அதுல என்ன இருக்கு?
இங்க யுரோப்ல ஆண்கள் உக்காந்துட்டு ஒன்னுக்குப் போறதுன்றது ஒரு மாதிரி கேலிக்குரிய விஷயமா பேசுவாங்க. ஆம்பளன்னா அவன் இப்பிடி இப்பிடி இருக்கனும்னு ஒரு எழுதப்படாத ரூல் இருக்கு.
அவன் நின்னுட்டுதான் யூரினல் போகனும். பக்கத்துல ஆள் இருந்தாலும் அதுக்கு கூச்சப்படக்கூடாது. உச்சா போய்ட்டு ஷேக் பண்ணிட்டு அப்பிடியே உள்ள போட்டுக்கணும். அத க்லீன் பண்ணத் தேவை இல்ல. இதெல்லாம் ஆண்மை பெருமையா எடுத்துக்கனும்னு நெனச்சிக்கறாங்க. இப்பிடிப் பண்ணாதவங்கள கேலியும் பேசுவாங்க.
ஓ ரியல்லி? ஐ'வ் நெவர் ஹெர்ட் ஆஃப் இட்.
யா, பிகாஸ் இட்டிஸ் நாட் ஸ்போகன் ஓபன்லி. பட் எவ்ரிபடி நோஸ் அபௌட் இட்.
யு நோ வாட், இங்கருக்க ஆண்கள் யூரின் போய்ட்டு சுத்தம் பண்ணாததால அது உண்டாக்கற பேட் ஸ்மெல், அது சம்மந்தமான உபாதை, நோய்கள்னு நெறய இஷூ அண்டர் கரண்ட்டா போய்ட்டிருக்கு. லேடீஸ் அவங்களுக்குள்ள ப்ரைவேட்டா பேசிக்கிறப்ப அவங்க பார்ட்னர் பத்தின இந்த சுத்தமின்மை கம்ப்லைண்ட்டதான் அதிகமா பேசுவாங்க. எல்லாருமே மறைவுல பேசுற, அதிகம் புலம்புற, ஆனா வெளிய பரவலா தெரியாமையும், யாரும் அக்நாலெஜ் பண்ணவும் மறுக்கற விஷயம் இது. இந்த யூரினல் பிஹேவியர்னாலயே நெறய ரிலேஷன்ஷிப்ஸ்ல பெரிய இஷுஸ் உண்டு இங்க. ஆனா அதே சமயம் இப்பிடிலாம் இருந்தாதான் அவன் ஆம்பளைங்கறாப்ல மனோபாவம் இங்க இருக்கறதால இத எளிதா மாத்தவும் முடியாது. இப்பிடி இல்லாதவங்கள ஸ்கூல்லயே புல்லி பண்ணுவாங்க பசங்க என்றாள்.
இத்துனூண்டு இதுல இத்தாப்பெரிய இதுவா என ஆச்சரியமாக இருந்தது.
சரி, அத ஏன் எங்கிட்ட திடீர்னு எப்புடி போவேன்னு கேட்ட?
ஒரு தடவ ஒரு எஜிப்ஷியன் முஸ்லிம் ப்ரெண்ட் சொன்னா, முஸ்லிம்ஸ்ல யுரின் போய்ட்டு அத சுத்தம் பண்றது கட்டாயம்னு. அத கேட்டதுலருந்து எனக்கு அரப்ஸ் மேல ஒரு க்ரேஸ் வந்துருச்சு. முஸ்லிம்ஸ்னாலே ஒரு ஈர்ப்பு வந்துது என்றாள்.
இதென்னடா இது பச்ச சட்ட போட்டவனுக்கு பரிசுத்தொகை விழுந்தாப்ல என இருந்தது.
இதுதான் சமயம் என்று, யூ சீ ப்ரூஸ், நாட் ஒன்லி இன் திஸ் எங்கதுல இன்னும் ஏகப்பட்டது இருக்கு. அதெல்லாம் தெரிஞ்சா நாங்க தான் வேணும்னு ஒத்தக்கால்ல நிப்ப நீ. என 250எம்மல் வாட்டர் பாக்கெட் விற்க முயற்சித்தேன்.
மை ப்ரெண்ட் ஹாட் டோல்ட். தட்ஸ் ஒய் ஐ லவ் அரப்ஸ் என்றாள்.
என்னதிது ரூட்டு மாறுகிறதே என, ஆனா வெறும் இந்த மூச்சா போறத மட்டும் வச்சு முடிவுக்கு வந்துராத. அரபிலாம் கமகமனு தான் இருப்பானுக. அத நம்பிப்போனன்னா ஒட்டகத்தோட ஒட்டகமா பட்டில கட்டிப்போட்டுருவானுக என்றேன்.
மீண்டும் ஸில்லி எனச் சொல்லிச் சிரித்தாள்.
எனக்கு நீ இப்பிடி க்லீன் ஹேபிட்ஸ் வச்சிருக்கறது புடிச்சிருக்கு. ஆனா என் பையன நா இங்க உள்ள நார்ம் படி தான் வளப்பேன். வாட்டவர் இஸ் பீன் ஃபாலோவ்ட் அஸ் த நார்ம்ஸ், அய்'ல் அலோ ஹிம் ஒன்லி டு டூ தட். பிகாஸ் ஐ டோண்ட் வாண்ட் ஹிம் டு கெட் புல்லீட் இன் ஸ்கூல் என்றாள்.
விடிய விடிய வியாக்கியானம் பேசிட்டு இதென்னது வித்யாவாக்ஸ் பாடுனது விசித்திர பல்லவிங்கறாப்ல அந்தர்பல்ட்டி எனத்தோன்றியது தான்.
ஆனால் இத்தகைய க்ராஸ் கொஸ்டின் கேள்விகள் கேட்பின், அடுத்து கிடைத்தாலும் கிடைக்கவிருக்கும் சிலபல ஸரீர ஸ்வகங்களைப் பாதிக்குமாதலால் அப்படி மேற்கொண்டு எதுவும் கேட்கவில்லை. மாறாக, டூ ஆட் டு திஸ், இஃப் யு ஆர் ரியல்லி ஒரீட் அபௌட் ஹௌ இட் ஸ்மெல்ஸ், டோண்ட் ஒரி, மைன் இஸ் நீட் அண்ட் க்லீன் வித் ஆப்பில் சின்னமன் ஃப்லேவர் என்றேன்.
ஸில்லி எனக்கொஞ்சி (முதல் முறையாய்) தொடையில் அடித்தாள்.
கபீ கபீ மேரே தில்லும்மே…
----
இந்தக் களங்கத்தை ஃப்லஷ் செய்துவிட்டதா விழுப்புரம்?
Comments
Post a Comment
Pass a comment here...