நினைக்க நினைக்க ஆச்சரியமாக இருக்கிறது
How is that the infiniteness of sky doesn't make anyone go crazy?
நேரத்துக்குத் தக்கன, ஒளிக்கு ஏத்தாப்போல நிறம் மாறுற
அந்த சேலைய எப்பிடி பிரம்மிக்காம இருக்க முடியுது?
அந்த வானத்துணி எப்பிடி இன்னும் கிழியாம இருக்குது?
நான் விட்ட பட்டத்துலயோ
அத நோக்கி எறிஞ்ச கல்லுலயோ
பறக்கற ஏகப்பட்ட ப்லேனு
குத்திக்கிழிச்சுட்டுப் போற ராக்கெட்டு
வல்லூறு கொசு கோழின்னு எதாலயுமே அதுல ஒரு சின்ன கிழிசலக்கூட ஏற்படுத்த முடியல
ஒரு திரை மாதிரி எப்படி எப்பவுமே பூமிகூட கூடக்கூட வருது?
அத அண்ணாந்து பாக்கறப்பலாம் ஆச்சரியப்படுத்தலயா?
கழுத்தது வலிக்கற வரைக்கும் பாத்துட்டே இருக்க வெக்கலியா?
வானம்னா எல்லாமுமா வானம்?
பட்டுச்சேலைக்கி ஜரிக பார்டர் போட்டாப்ல கலர்கலரா மாறுற வளிமண்டலம்
பார்டர கழிச்சு மிச்ச சேல முழுக்க பொட்டுப்பொட்டா வெச்சாப்ல அண்டவெளி
ஊருலகம் பைத்தியம்னு நெனச்சுக்கிட்டாலும் பரவாயில்லன்னு வச்ச கண்ணு எடுக்காம வானத்தையே பாத்துட்டு இருக்கச்சொல்லுது ஒடம்புக்குள்ள இருக்குற துண்டு வானம்
எல்லாமே எல்லாருமே அங்கருந்துதான வந்தோம்
அங்கயேதான் திரும்பவும் போறோமா?
அங்க இருக்கறது நிறமிலா வானமா
இல்ல எல்லையில்லா நிறங்கள தன்னகத்தே நிறைச்சிட்டிருக்க வானமா?
ஏன் வானத்தப்பத்தி யாருமே கேள்வி கேக்கறதில்ல?
அந்த வனாந்திர அந்தரத்த பாத்து உள்ளங்கால் கூசலியா?
காரோட்டி இல்லாத கார் படு வேகத்துல இல்லாத ரோட்டுல எதிர்ல எது வரும்னே நிச்சயமில்லாத பாதைல எத நோக்கிப்போகுதுனே தெரியாத ஒரு திசைல போய்ட்டே இருக்குதே
அதப்பாத்தா யாருக்கும் பயம் வரலயா?
எல்லாரும் குடிச்சிருக்கீங்களா? இல்ல அந்த யோசனையே இல்லையா?
இல்ல செத்துகித்து போயிட்டீங்களா ஏற்கனவே?
Comments
Post a Comment
Pass a comment here...