பேரூர்

நம்மூர்ல எருமமாட்டுக்காரன் பட்டி, மாட்டுத்தாவணி, யானக்கவுனி, புலியூர், நாகலாபுரம் இப்பிடி அனிமல்ஸ் பேர்ல ஊர்கள் இருக்காப்ல டச்சுநாட்டுலயும் அப்பிடி இருக்குது. dieren, அதாவது அனிமல்சுன்னே ஒரு ஊரு இருக்குது. அதேமாதிரி duiven, புறாக்கள்னு ஒரு ஊரு. எமது தாய்நாடான சிங்கப்பூருக்கு மட்டுந்தான் அனிமல் ப்லானட் டைப் பேருனு பாத்தா ஊர்பூராம் இப்பிடி அவசரத்துக்கு கைல கெடைகலன்னு டக்குனு எதனா ஊர்வன பறப்பன பேரப்புடிச்சு வச்சு உட்ருக்கானுக.


——————————

குவிஸ்ஜிகே கார்னர்:

கே கேங்பேங்கை எப்படிக்கூறலாம்?



——————————

இந்திய சீன மெக்சிக்க க்விசைன்ஸ் புரிகிறது. ஸ்ப்ரிங்ரோலா, கெழங்கான்றதும் புரியுது. அதென்னது புதுச ஜைனுன்னு ஒரு டிஷ்ஷு? வரவர இவனுக அற்றாசிட்டி ஏறிட்டே போகுது. அவனுக பவர் லாபிய வச்சு ஒவ்வொருத்தன் வீட்டுக்குள்ளயும் பூந்துட்டிருக்கானுக. பூமாதேவி குலுங்கிச்சிரிக்கக்குள்ள மக்கள் ழிவித்துக்கொள்வது நல்லது. அவ்ளதான் சொல்ல  முடியும். பைதவே, சுவிகி சம்சா பேக்டரில ஆடர் பண்ண இந்த சம்சா ரொம்பச்சுமார். 




——————————


இந்த லிப்ட்டுகள்ல மேக்சிமம் வெய்ட் போடுறது சரி. அதால எவ்ளோ லோடிழுக்க முடியும்னு தெரியுது. ஆனா அத இத்தன பர்சன்ஸுனு ஏன் போடுறாங்கனு தெரியல. அது இவ்ளோ கேப் கெடைக்கனும்னு சொல்றத இல்ல கேஜிய இத்தன பேருன்னு நபர்படுத்தியிருக்கானுகளா? அப்படித்தான்னா, வெகுவிரைவில் ஒரு ஓக்கு கும்பல் வரும். அது வந்து, 1020/15 = 68. அது எப்பிடி ஒருத்தர் 68 கிலோதான் இருக்கனும்னு நீ சொல்ல முடியும்னு சொக்காயப் புடிப்பானுக. அன்னிக்கி இருக்கு கூத்து. 





பைதவே, இந்த எலிவேட்டர் எவ்ளோ சேப்டியானதுனு அந்த ஓனர் பப்லிக்குல செஞ்சு காட்டின எக்ஸ்பரிமண்ட் ரொம்ப பேமஸ். உய்க: 




----------

எப்ப ஃபுல்பாடி செக்கப் எடுத்தாலும் நாற்காலி, அதாவது ஸ்டூல் டெஸ்ட் மட்டும் அவாய்டுகள் செய்துகொள்வது. இந்த ஒவ்வாமை எப்பைலருந்து ஆரமிச்சதுனு தெரியல. ஆய்னா ஒமட்டிகிட்டு வந்துருது நமக்கு. சுய ஆயா இருந்தாலுமே. ஒருக்கா விஷ்லிஸ்ட் போட்டப்ப, நமக்கு மிகமிகப்பிடித்தமான குழந்தைகளை எழுதறப்ப, ஆய் போகாத, அழுவாத குழந்தைகளா வேணும்னு சொன்னப்ப, ஆய் போலன்னா அதுக செத்துரும்டான்னானுக. சைன்ஸ் படி அது சரிதான்னாலும் நமக்கு சைக்காலஜிப்படி அது என்னமோ ஆவ மாட்டுது. இதுலருந்து எப்பிடி வெளிவரதுன்னும் தெரியல. மாட்டுச்சாணி, ஆட்டுப்புளுக்கை, யான லத்திலாம் ஓகேயிஷாதான் இருக்கு. எதும் ஆவ மாட்டுது. ஆனா மனுசச்சாணி, நாய்ப்பீலாம் ஒரு மாதிரி அவர்ஷன். அதுலியும் மனுச ஐட்டம்லாம் ஓங்கரிச்சுட்டு வரும் பாருங்க. இதுக்காகவே யோசனையாருக்கு, வயசாகிட்டப்ப இப்பிடி மலஜலத்தோட கெடக்கற நெலம வந்துட்டா என்ன பண்றதுன்னு. அப்பிடிலாம் அடுத்தவங்க அள்ளிப்போட்டுதான் வாழனும்னா, பேசாம செல்ப்சூடைடு பண்ண வச்சிருங்க. நினைவிருக்கப்ப இப்பவே சொல்லிட்டேன். 

உச்சா எவ்ளோனாலும் கன்றோல் பண்ண முடியும். போலவே பசியும். அது பாட்டுக்கு ஒன்னு ரெண்டு நாள் கூட தாக்கு புடிச்சிருவேன். ஆனா ஆய் வந்தா மட்டும் ஒரு மாதிரி ரோலக்சாகிடும் சிஸ்டம். இதுவும் ஒரு பயம், வயசானப்பறம் மூமண்ட்டுகள் சுலோவாகி, அப்ப அர்ஜன்ட்டா வந்தா எப்பிடி வேகமா ஓடிப்போறது கக்கிசுக்கு, போறதுக்குள்ள புளுக்குனு வந்துட்டா என்ன செய்யிறதுன்னு. யெஸ், ஓவர்திங்கிங் இஸ் மை பெசல் ட்ரெய்ட்.

எப்பிடியாப்பட்டதாருந்தாலும் ஒரு நாள் வளஞ்சு போகத்தான ஆகணும். அப்பிடித்தான் இந்த வாட்டி பாடி செக்கப்ல ஸ்டூலுக்கு குடுத்துட்டா நல்லதுனு கொஞ்சம் ப்ரெசர் போட்டாங்க. அதுக்கு எதும் பெசல் மெசின் இருந்தாலாச்சும் பரவால்ல. இவனுக ஒன்னுக்குக்கு குடுக்குற அதே டப்பிய தரானுக. அதுல எப்பிடி கொண்டு வர முடியும்? நமக்கு உச்சா போற டப்பிலியே அணு விஞ்ஞானி மாதிரி துலி துல்லியமா ட்ரிப்லெட்ஸ்ல போயி கொணாருவேன். இந்த டப்பால என்ன பண்றது?

ஒரு வழியா, பாத்துரூம்பே இடியறாப்ல ஓங்கரிச்சுட்டு எடுத்து முடிச்சேன். அத விளக்கமா எழுதுனாலே வாமிட் வந்துரும், அதனால அவாய்ட் பண்ணிக்கறேன். எடுத்தது சரி, அத எப்பிடி கொண்டு போறது? அப்பத்தான் ஆதரவுக்கரம் நீட்டி வந்தாப்ல ஆண்டவர். எல்லாத்தையும் முன் கூட்டியே சொல்ற நாஸ்டர்டாமஸ் ஆழ்வார்ப்பேட்டை ஆண்டவர் இதுக்கும் ஒரு வழி கத்துக்குடுத்தது ஞாபகம் வந்துச்சு. பேசும் படம்னாலே எனக்கு இந்த சீன் மட்டும் தான் பசுமரச்சாணி போல மனசுல பதிஞ்சிருக்கு. சரி ஆண்டவர் வழியிலயே பண்ணிருவோம்னு ஒரு நல்ல கைப்பைல போட்டுக் கொண்டு போயி கிப்ட்டு குடுத்தேன். அந்த பையில போட்டுருந்த பேரு மெட்டா குறியீடா அமஞ்சது முற்றிலும் தற்செயல் மற்றும் அழகியல். 





------

💙💚💛💜💟




Comments