இனியேனும் திருந்துவார்களா போலிப்பெமினிஸ்டுகள்?
--------
இவனுக ரெண்டு பேரும் ஆதியிலருந்தே தோஸ்துகதாம்போல...
அன்றே கணித்த எஸ்ஸேஸி...
-------
டிட்பிட்: எங்கியேனும் வீஃபீ இண்டர்நெட்டுக்காக ஈமெய்லுகள் கேக்கப்பட்டால், தாராளமாக mailinator.com உதவியை நாடவும். வேலைக்கி வேலையும் ஆச்சு வீடும் வெள்ளையாச்சு என்பதாக, பர்சனல் மெய்ல் செயார் செய்யும் அக்கப்போர்களின்றி, ராஜேஷ்குமார் சுபா பகோபி பாக்கெட் நாவல்கள் போல அங்கைக்கி அங்கே யூஸ் செய்து கடாசிவிட்டுப்லேனேறிவிடலாம்.
நாம் போகும் எந்த ஏர்போட்டிலும் இப்படிக்கேட்டால் இந்த உட்வார்ட்ஸ் க்ரைப் வாட்டரைத்தான் யூஸ் செய்வது.
செக் ரிபப்லிக் நாட்டின் தலைநகரான ப்ராக் எனப்படும் ப்ராகாவுக்கு சமீபத்தில் ஒரு மினி டூர் செல்லப்பட்டது. Flat country நெதர்லந்தை விட்டு, மேடுபள்ளமிக்க (ரோட்டிலல்ல, பூகோள ரீதியில்) ப்ராகைப்பார்த்ததே கொஞ்சம் கண்ணுக்குக் குளிர்ச்சி. லைட்டாக குன்னூர், கோவை மேட்டுப்பாளையம் வைப்ஸ் கொடுத்தது. விலைவாசிகள் நெதர்லாந்தை ஒப்பிடுகையில் நல்ல குறைவு. அப்போதுதான் ஒன்று உரைத்தது. You are not poor, but in the wrong country என்பது. இங்கே 90+ யூரோக்கள் ஆகும் பயணம் அங்கே 20 யூரோக்களிலேயே முடிந்தது கண்ணில் ஜலம் வைப்பதாக இருந்தது.
அந்தூர் டாக்ஸி கேப்களில் பிட்காயினெல்லாம் வாங்குகிறார்கள்.
அங்கே உள்ள கரன்ஸி செக் கொருனா. விலைப்பட்டியலைப் பார்த்து, அதை யூரோவுக்கு மாற்றி, பின் ஐய்யனாருக்குச் செலுத்தி இப்படி ஒவ்வொன்றையும் திரி டிகிரி மேத்தமடிக்̀ஸ் செய்தது பெரும் மூளைக்கு வேலை.
Comparatively அதிகப் பரபரப்பில்லாத அமைதியான ஊர். டூரிஸ்டுகள் சுற்றிப்பார்க்க ஏகப்பட்ட இடங்களுள்ளன. பொதுப்போக்குவரத்து டிக்கட்டும் சல்லிசான விலையே. நெதர்லாந்தைப்போல அன்றாயரை அவிழ்த்துவிடுமளவெல்லாம் இல்லை.
நிறைய டச்சுக்காரர்களே கூட இங்குதான் வீக்கெண்டுக்கு வருகின்றனராம். கம்மி காசு, நிறைய மஜா. நீண்டு பறக்கும் சக்தியுள்ளவர்கள் தாய்லாந்துக்குப் போய்விடுகின்றனர். மிகக்கம்மிக்காசு, ஆகப்பெரும் மஜமஜா.
-
W
Comments
Post a Comment
Pass a comment here...