⌘+C ⌘eVa

எவ்வளதான் தேவா மேல காப்பி பேஸ்ட் குத்தச்சாட்டுக்கள் இருந்தாலும், தப்பான வாட்ச்சி கூட ஒரு நாளைக்கி ரெண்டுவாட்டி சரியான டைம காட்டும்னு அவர் மேல ஒரு நன்னம்பிக்கை கார்னர் இருந்துட்டு தான் இருக்குன்னது, அவரோட கம்போசிசன்ல ஆல்டைம் பேவரிட்ல ஒரு சாங்குன்னா அது இதுதான்..



இவ்ளோ ப்ரீஸியா தமிழ்ல பாடல்களரிது. அதுவும் சாக்சபோனுன்னா நமக்கு எஸ்டா விருப்பம் வேற. முன்ன ஒருக்கா வெள்ளக்காரனுகளுக்கு நம்மூரு பாடல்கள அறிமுகப்படுத்தறேன்னு போட்டுக்காட்ட, இது இன்னின்ன பாட்டு மாதிரி இருக்குன்னு அவனுக சொல்லி அடி வாங்கப்பாத்தேன். அதனாலயே பகிர்றத நிப்பாட்டிட்டேன். ஒருநாளில்ல ஒரு நாள் தேவாசாரையும் அறிமுகப்படுத்தனும், பொறுக்கி எடுத்து ஆத்தண்டிக் பாட்ட மட்டும் போட்டுக்காட்டனும்னு இருந்தேன். அதுல காலமெல்லாம் காதல் வாழ்க பாட்டும் ஒன்னு. ஒக்காலி என்னாமாதிரி வேலைப்பாடுய்யானு அவர்மேல மம்மேனியா மதிப்பு வந்ததுல இந்தப்பாட்டும் ஒன்னு. 

சமீபத்துலதான் தெரியவந்துது, இதுவும் ஜெராக்ஸ் மிசின்ல போட்டெடுத்ததுன்னு. 


ஒருநாளில்ல ஒருநாள் தேவாவோட சேந்து ஒர்க் பண்ணனும்னு ஆச இருக்கத்தான் செய்யுது. ஆனா அது கம்போசிங்கா இல்லாம வெறும் கத கேக்குறதுக்கா ஆக்கிக்கனும் போல. 


--------

இது தற்செயலா, இல்ல இந்திய ரயில்வேல ஒரு புள்ள பக்கத்துல பையனுக்கு சீட் அலாகேட் ஆகாதமாதிரி அல்காரிதம் எழுதிருக்கானுகனு சொன்னானுகளே, அதே மாதிரியானு தெரியல. இன்ஸ்டாமார்ட்டுலயோ ப்லிங்கிட்டுலயோ விஸ்பர் ஆடர் போட்டது லேடிஸ் மூலமா டெலிவர் பண்ணானுக. இது தற்செயல்னா அது ஓகே. ஆனா இதுக்குன்னு மெனக்கெட்டு கோடெழுதிருந்தா அது தேவையில்லாததுன்றது நம் நிலைப்பாடு. 




-----

ஐரோப்பாவுல பல நாடுகள்ல ஓப்பன் புக் ஷேரிங் ஷெல்ஃபுகள் இருக்கும். யாரும் அவங்க படிச்ச, மத்தவங்களுக்கு ஷேர் பண்ணனும்னு நெனைக்கற புக்குகள கொணாந்து வெக்கலாம். அத தேவப்படுற யார் வேணா இலவசமா எடுத்துக்கலாம். நோட்டு புக்குலருந்து பழங்கால புக்குக வரை, அல்மோஸ்ட் எல்லா மொழியிலயும் கூட சமயத்துல இருக்கும். இது வரைக்கும் அதுல ரேஷனாலிட்டி சம்மந்தமா எந்த புக்கும் பாத்ததில்ல. ஆனா இவனுக பாருங்க என்னா வேகமா செயல்படுறானுகன்னு. ஆச்சரியமா இருக்கு, அவங்க வீரியமும் உழைப்பும். சூப்பர்ஸ்டிஷன் மேல நம்பிக்கை இருக்குறளவுக்கான ஒரு மொரட்டு வேகம் ஏன் ரேஷனல் ஆளுகட்ட இல்லன்றதே ஒரு ஆய்வுக்குரிய மேட்டர்தான். 




Comments