காதோரம்...

மின்னலாம் கடைகள்ல வேலைல இருக்கப்ப மனிதப்பதர்கள அவாய்ட் பண்றதுக்கு காதுல எட்போன மாட்டிக்கிறதுண்டு. பாட்டு கேக்காட்டியும் மாட்டிகிட்டா யாரும் கிட்ட வந்து பேசவோ பன்னு குடு டீ குடுன்னு தொந்தரவோ செய்ய மாட்டாங்க. அதையும் மீறி பண்றவங்களுக்கு திருமூஞ்சிய ஒருக்கா காட்டினா அத்தோட நம்ம பக்கமே வரமாட்டாங்க. பீயிங் ஏன் ஏசோல் கிவ்ஸ் அல்டிமேட் பீஸ் மெனி ய டைம்.


இப்ப வெளிய நடந்து போறப்பயும் அப்டிதான் பண்றது. கூட எஸ்டாவா என்ன பண்றதுன்னா எட்போன ஆன்ல வச்சுக்கிடுறது. நாய்ஸ் கேன்சலிங் வெளியுலக ஒலித்தொந்தரவுகள ரத்து செஞ்சு பேரமைதிய மெய்ண்டன் பண்ணுது. குளுருக்கும் இப்பிடி காதுபொத்தி எட்போன் நல்லா இதமாருக்கு. 


இது நமக்கு உண்மைலியே ஆச்சரியம் தான் எப்பிடி ஜஸ்ட் காத்த பொத்திகிட்டா குளுர மறுக்குதுன்னு. அது எப்பிடினு எப்பிடியும் நானும் ஜிபிடிட்டதான் தேடி நானே கண்டுபுடிச்சாப்ல காப்பி பேஸ்ட் பண்ணப்போறேன், அதுக்கு நீங்களே செஞ்சுக்கிடுங்க. எனக்கு டோக்கனாச்சும் மிச்சவாவும். அது மட்டுமின்றி கியூரியாசிட்டுதான் உயரப்பறக்கும் சிட்டு. அதனால அத அடிக்கடி றெக்கய விரிச்சு ஒசரப்பறக்க விடுங்க. பறக்க மறுத்தா கல்லெடுத்து அடிங்க. ஆக்டிவா இருங்க.


-=-=-=-=-=-=-

நல்லா


இப்பிடி இருந்த ஒருத்தங்கிட்ட கதபேசிட்டிருக்கப்ப அவனோட பிறப்பு, தோற்றுவாய் எல்லாஞ்சொன்னான். பிறந்து வளந்தது எல்லாம் ஐரோப்பாவிலே எனக்கூறி மென்மேலும் கதைகள் சொன்னான். ஆனா என்னோட தாத்தா பாட்டி சீனத்துலருந்து இங்க வந்து செட்டிலானவிங்கனு சொன்னதும், ரேசிஸ்ட்டாக சௌண்ட் பண்ணக்கூடாது என்ற எச்சரிக்கையுணர்வோடிருந்த மை ஆஸ் சொன்ன பதில், "ஓ ரியல்லி..?"


-=-=-=-=-=-=-

எவால்வ்யூசன். 





----

சுமூத் & சுமார்ட்!





-----

இந்த திருட்டு காப்பி யூடூபு சேனலனுங்க ஏற்கனவே இருக்க வாட்டர் மார்க்க மறக்கிறேன்னு ஃப்ரேம் முழுக்க ஸ்டிக்கர ஒட்டி உட்டுர்ரானுக. அடுத்து மெல்லத்திறந்தது கதவு அமலா கண்ணு மாதிரி ஆகப்போவுது படங்கள். 







Comments