புத்தாண்டுச்செய்தி. உங்களின் 101வது ஐடியாதான் ஒர்க்கௌட் ஆகும். அந்த 101ஐ அடைய நீங்கள் 100 ஐடியாவைக் கொட்டிக் கவுத்தே ஆக வேண்டும். வேற வழியே இல்லை. ஆந்த்ரப்ரூனர்கள் கவனிக்க...
------------
லோக்கல்ல ஒரு பய தெரிஞ்ச பய. சின்னத்தம்பி ப்ரபு மாதிரி கொஞ்சம் அப்பாவி. ஆளப்பாத்தாலே கொஞ்சம் ஸ்பெசல் சைல்ட் மாதிரிதான் தெரிவாப்ல. அவங்கூட இருக்கவனுகல்லாம் ரொம்ப ஓட்டுவானுக பாவம். இந்தப்பையனுக்கு எப்படியும் முப்பது கிட்ட இருக்கும். அவங்க தாத்தா தலைமுறைலியே இங்க வந்து செட்டிலாவிட்டாங்க போல. சில மாசமுன்ன ஒரு நிலா கிரகணம் நடந்துச்சே அப்ப அத பாத்துட்டு வரப்ப இவன் ஒரு மெக்டிலருந்து அந்த சட்டையப்போட்டுட்டு வெளிய வந்தான். ஒரு துருக்கி கபாப் கடைல வேல பாத்தது தெரியும். இங்க மாறினது தெரியாது. எனவே இங்கதான் வேல பாக்கறியானு கேட்டதிக்கு இங்கயும் வேல பாக்கறேன்னான். அடங்கோ ஏண்டான்னதுக்கு என் கேல்ப்ரெண்ட கல்யாணம் பண்ணனும், அந்தப்பொண்ணு இப்ப துருக்கிக்கு அவங்கப்பாம்மாவோட போயிருச்சு (அவங்க முன்னோரும் இங்க வந்து செட்டிலானவுங்க போல. இப்ப பொண்ணோட தோப்பனாரும் அம்மாவும் நாட்ட காலி பண்ணி தாய் நாட்டுக்கே போயிருவோம்னு போய்ட்டாங்களாம்.) அந்தப்புள்ள இங்கயே பொறந்து வளந்தது போல. அதனால துருக்கில யாரையும் பழக்கமில்லாம வீட்டுக்குள்ளயே இருக்குதாம். அஞ்சு வருச ரிலேசன்சிப் போல. இப்ப இங்க அத கூட்டிட்டு வந்து வெக்கனும்னா செலவாகும். அதனால 3 வேல பாத்துட்டிருக்கேன்னான். ஒரு பக்கம் பிரம்மிப்பாவும் பாவமாவும் இருந்துச்சு அவனப்பாக்கைல. அவ்ளோ சூட்டிப்பான பையன்லாம் இல்ல. ஈசியா ஏமாத்திரலாம். எல்லாவனும் கேலி பண்ணி சிரிக்கிற நெலம வேற. அதுக்கு பதில் கூட குடுக்கத்தெரியாது அவனுக்கு பாவம். அவனுக்கு ஒரு வேலைலியே நல்லா காசு சேந்து சீக்கிரம் கர சேரனும்னு லைட்டா வேண்டிகிச்சு மனசு. வானத்துல கிரகணம் முழுசா நீங்கிருந்துச்சு.
------------------------------
இன்ஸ்டாவில் பாத்தியாலே காது ஆடுதுலே என ஆடச்செய்த கண்டண்ட் க்ரியேட்டர்கள். கன்சிஸ்டண்ட்டாக நல்ல கண்டண்ட் பகிரும் சிலர். பாய்களுலகில் என்னவோர் மாற்றம்! கிலிக் பெய்ட் தின்னிப்பண்டாரங்களுக்கு இவை எவ்வளவோ மேல்.
--------------------------------------------------------------------
ரியாலிட்டி!
---------------
கிரியேட்டிவ் மைண்டுகளை உலகம் டீல் செய்யும் அபத்தம்!!!
--------
நிதர்சனம்!இதுவும் நிதர்சனம்!
Comments
Post a Comment
Pass a comment here...