Posts

Showing posts from October, 2022

காதல்...

(நேரம் பகல் சுமார் 11:30ish)  "எங்கப்பா எது சொன்னாலும் அத நம்பாத, சீரியசா எடுத்துக்காத."  "எத்தனவாட்டிடா அதையே சொல்லுவ? இன்னும் எத்தன ஃப்லோர் ஏறனும்?" "நாலாவது மாடின்னு சொன்னன்ல."  அந்த 7G ரெயின்போ காலனித்தோற்ற கட்டடங்களில் ஒன்றில் படியேறினர் இருவரும்.  நான்காம் மாடியில் ஒரு அரக்கு நிறக்கதவுக்கு முன் போடப்பட்டிருக்கும் கருப்பு இரும்புக் கேட்டைத் திறந்து கதவைத் தட்டினான் சரவணன்.  "இரு நாம்போறேன்" என உள்ளிருந்து அவனின் அப்பாவின் குரல் கேட்டது. (Imagine படவா கோபி) ஒரு கதவைத் திறந்தார் கோபி. வெளியே மகன் சரவணன் நின்றுகொண்டிருந்தான். கோபியின் கையில் காய் நறுக்கிக்கொண்டிருந்த கத்தி.  'என்ன?' எனக்கேட்பதைப்போல் தலையை (மற்றும் புருவத்தை) மட்டும் அசைத்தார்.  இவர் வழியை மறித்துக்கொண்டிருக்க, "ம்மா" என சற்றே கடுப்பில் வெளியிலிருந்தே சத்தமாக அழைத்தான் சரவணன். "ஏ வசு, எதோ பிச்சக்காரன் வந்துருக்கான் பாரு. எதாச்சு பழசு இருந்தா போடு" எனக்கூறியபடி அங்கிருந்து நகர்கிறார். ஒரு பழுப்பு நிற ரௌண்ட் நெக் பனியன், நீல நிற லுங்கி சகிதம் நடு ஹாலில

டாட்டூ

தொடர்தீயில் நன்கு காய்ந்து கிடக்கும் தோசைக்கல்லில் தெளிக்கப்பட்ட நீர், துடிதுடித்து ஆடுவதை ஸ்லோ மோஷனில் பார்ப்பது போலிருந்தது, அவனின் ஒவ்வொரு சீண்டலுக்கும் இசைந்து அவளின் உடல் துடித்தது. ஒரு மிக நீண்ட பெருமூச்சு விட்டாள்.  "Is this sigh your cigarette after sex?" '(இ)ஹ்ஹும்' என நொடிப்பொழுது சிரித்தாள். டாட்டூக்களினால் நிறைந்த அவளின் வயிறு அச்சிரிப்பை ஒருதரம் கக்கி அடங்கியது.  "வெளிய மட்டும் தெரிஞ்சா..." எனப் பேசத்துவங்கியவனை "ப்ச்" எனக் கண்டித்து நிறுத்தினாள்.  "I'm sorry" என்றான். "பெரிய தங்கக்கூண்டுல வாழ்ந்துட்டிருக்கல்ல?" எனப் பேச்சை மாற்றியவனிடம் "ப்ச், cliché" என்றாள். பக்கத்தில் குப்புறப் படுத்திருந்தவளை இழுத்து தன்மேல் இட்டுக்கொண்டான்.  "நசுங்குதே வலிக்குதா?" "அதுங்ககிட்டயே கேளு."  கேட்டான். "ஸ்ஸ்...இப்ப வலிக்குது" என்றாள். "அவுஹ்ங்சொஹ்ங்க்ட்ம்" "என்னது? அதுலருந்து வாய எடுத்துட்டு சொல்லு." "வலிக்குதுன்னு அதுங்க சொல்லட்டும்" என்று மீண்டும் தொடர்ந்து

மூங்கையான்

அந்த நாள் மற்ற எல்லா நாட்களைப்போல்தான் துவங்கியது. அதே ஆரஞ்சுச் சூரியன், அதே பால் பாக்கெட் வினியோகம், பீச்சிலும் பார்க்கிலும் நடை பயிலுனர்கள், கூட்டமெடுக்கும் ட்ராஃபிக், ஏறிக்கொண்டே இருக்கும் பரபரப்பு. எல்லோருக்கும் ஏறக்குறைய அதே தினம் தான். மம்மக்கருக்கு மட்டும் கூடுதலாய், பொண்டாட்டி ஓடிப்போயிருந்தாள்.  பொதுவாக இப்படியான வகையில் ஏதேனும் சம்பவம் நிகழ்கையில், அதனால் நேரடியாகப் பாதிக்கப்படுபவர் மீது அனைவருக்கும் இரக்கமும் பரிதாபமும் வரும். அவனுடைய சொந்தத் தம்பியோடே ஓடிப்போயிருந்ததால் அந்த இரக்கக் கொடுப்பினைகூட அவனுக்கு முழுதாகக் கொடுத்து வைக்கவில்லை. உச்சுக் கொட்டி குசலம் விசாரிப்போரில் பலருக்கு இதழோரத்தில் ஓர் ஏளனச் சிரிப்பும் இருந்தது.  அது ஒரு சாவு விழுந்த வீடு போல இருந்தது. தனது அறையில், கைகளைக் கோத்தும் பிசைந்தபடியும் எதிலும் சிந்தனையற்றுப்போன நிலையிலும் அனைத்து சிந்தனையும் மண்டைக்குள் குழப்பிய நிலையும் கட்டிலில் அமர்ந்திருந்தான். நெற்றியைச் சுருக்கியபடியே வெகுநேரம் இருந்ததால் புருவத்தின் மத்தியில் வலித்தது. உடல் முழுவதும் சூடாக இருந்தது.  மம்மக்கர் அதிர்ந்தே பேசாதவன். சொல்லப்போனால்