Posts

Showing posts from February, 2022

Social Mafia

Image
சமீபமாக ஒரு குறிப்பிட்ட போக்கு அதிகரித்திருக்கிறது. Dissect செய்து பார்த்தால் அடிமட்டத்தில் அவை நடைபெறுவது எல்லாம் சுய பிழைப்புவாதத்திற்காகத்தான் என்றாலும் இவற்றால் ஏற்படும் social impact அதிகம் என்பதால் இதைக் குறித்துப் பேச வேண்டி இருக்கிறது.  பொதுவாக எந்த மாஃபியாவும் தன்னை மாஃபியா எனக் கூறிக் கொள்ளமாட்டர். அது போலவே இந்த சோசியல் மாஃபியாக்களும். அவர்கள் செய்வதாகச் சொல்வதென்னவோ நெட்வொர்க் & மார்க்கெட்டிங்தான். ஆனால் அதைச் சமைக்கும் விதம்தான் பல்லிளிக்கிறது.  ஆதி காலம் தொட்டே எந்தவொரு தொழிலுக்கும் மார்க்கெட்டிங் தேவைப்பட்டிருக்கிறது. திருவிழாக்கூட்டங்களில் ரேடியோக் குழாய் அறிவிப்பில் தொடங்கி, பிட் நோட்டிஸ், சுவர் விளம்பரம், போஸ்டர், கட்டௌட் என அது காலத்துக்குத் தக்கவாறு evolve ஆகி வந்திருக்கிறது.  பிசினஸ்களின் objective தங்கள் brandடையோ சர்வீசையோ மக்கள் மனத்தில் ஒரு ஓரத்தில் நினைவில் நிறுத்துவது. இதைச் செய்து விட்டாலேயே தொழில் பாதி சக்சஸ். அதற்குத் தான் அவர்கள் மார்க்கெட்டிங்கை நாடுகிறார்கள்.  ஒரு சிறு self test: சட்டென உங்கள் நினைவுக்கு வரும் பெய்ண்ட், டூத் ப்ரஷ், நைட்டி, சமையல் எண

யுகப்புருஷர்

Image
தன் ஆசைநாயகி   மிளகுப்புலால் கேட்டனளே என வாங்கி வரச்சென்ற சந்துரு , தன்  குடிலுக்குத் திரும்பியபோது, அவள் அங்கே இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடையவில்லை .   "எதையேனும் என்னிடம் வேண்டிக்கேட்பதுவும் , அதை நான் வாங்கி வருமுன் மாரீசனாய்  மறைவதுவும் உனது   வாடிக்கையாகிவிட்டது ஜானு"   என்று அவளிடம் கூறுவதுபோல் தனக்குத் தானே கூறியபடி  அவளை  அக்குடிலுக்குள் ஒவ்வொரு இடமாகத் தேடினான் .   அவ்வப்போது அவளை அழைத்தும் பார்த்தான் .   பதில் குரல்   வரவில்லை . குடிலின் வாயிலில் அவளின் பாதுகை அங்கேயேதான் இருந்தது . அப்படியென்றால் அவள் எங்கும் சென்றிருக்க வாய்ப்பில்லை   எனக் கருதி மீண்டும் ஒவ்வொரு அறையாய்த் தேடினான் .   ஒருவேளை தன்னிடம் ப்ராங்க் செய்கிறாளோ?   என்றெண்ணி, " போதும் நின் விளையாட்டு , சில்லிபீஃப் ஆறிவிடின் சவச்சவ   என்றாகிவிடும் . எங்கே மறைந்திருக்கிறாய்? வா என் அகமுடையாளே"   என்றான் . அப்போது அங்கு பதட்டத்தோடு , வியர்த்து மூச்சு வாங்கியபடி அவனின் உடன்பிறந்தான் ஓடி வந்தான் .   'அண்ணா … அண்ணா …' < பலமான